Saturday, March 12, 2011

துணை

 பகுதி 1


அப்போதுதான் முடித்திருந்த அந்த ப்ராஜக்டை சரி  பார்த்துக்
கொண்டிருந்த சுமதியை யாரோ பார்க்க வந்திருப்பதாக ப்யூன்
வந்து கூற ஆச்சரியத்தில் ஆழ்ந்தாள்.அலுவலகம் தேடி தன்னை
பார்க்க வரும் அளவிற்கு யாராக இருக்கும் என யோசித்தாள்.
அம்மாவும் அப்பாவும் சொந்த ஊரில் ஒரு கல்யாணத்துக்கு
போயிருக்கிறார்கள்.பின் யாராக இருக்க முடியும் என்ற யோசனையுடனே
வரவேற்பு அறைக்கு வந்தவள் அங்கு அமர்ந்திருந்த அவனைக் கண்டதும்
திகைத்தாள்.இவனா? இவன் எப்படி இங்கு? எதற்கு?

இவளைக் கண்டதும் ஒருவித ஆர்வமாய் எழுந்த அவன்,  "எப்படி
இருக்க சுமி?" என்றான்.

"என்னை சுமின்னு கூப்பிடற அளவுக்கு நமக்குள்ள இப்ப எந்த
உறவுமில்லை.இங்க எதுக்கு வந்தீங்க?வந்த விஷயத்தை மட்டும் சொல்லிட்டு கிளம்பலாம்" 

"இல்லை அப்படி ஒரு வரில ஒரு வார்த்தைல எல்லாம் சொல்லிட்டு
போற  விஷயமில்லைமா,கொஞ்சம் பேசணும் ப்ளீஸ்"

நமக்குள்ள பேசற அளவு எந்த விஷயமும் இருக்கறதா எனக்கு படலை.
அனாவசியமா நேரத்த வீணாக்காம  என்ன சொல்லணுமோ அதை சொல்லிட்டு போங்க.எனக்கு நிறைய வேலை இருக்கு" என்றாள்
கடுப்புடன்.

"ப்ளீஸ் புரிஞ்சுக்கோ.இங்க வச்சு எதையும் பேச முடியாது.கொஞ்சம் வெளில வந்தியானா விவரமா பேசலாம்"

"நினச்ச நேரத்துக்கு உங்களோட வர இதென்ன நீங்க நடத்தற
ஆபீசா? இப்பல்லாம் வர முடியாது.வேணும்னா சாயங்காலம் ஆபீஸ்
முடிஞ்சதும் வந்து பாருங்க.அப்ப என்ன சொல்லணுமோ சொல்லிட்டு போங்க என்று கூறி விட்டு மடமடவென உள்ளே சென்றாள்.

உள்ளே வந்து அமர்ந்து வேலை பார்க்க ஆரம்பித்தாளே   தவிர மனம் அதில் செல்லவில்லை.மீண்டும் மீண்டும் பழைய விஷயங்களையே சுற்றி
சுற்றி ஓடியது.

எதற்காக வந்திருப்பான்?இனி என்ன இருக்கிறது இருவருக்கும்?
எல்லாம் முடிந்தே இரண்டு வருடங்களான பிறகு?

எவ்வளவு முயன்றும் தடுக்க இயலாது மனம் பின்னோக்கியே ஓடியது.
ஐந்து  வருடங்களுக்கு முன் சுமதிக்கும் விசுவிற்கும் திருமணம்
நடந்த போது அவளும் மற்ற பெண்களைப் போலவே  பல கனவுகளுடனும் எதிர்பார்ப்புகளோடும்தான் அந்த பந்தத்தில் காலடி எடுத்து வைத்தாள்.

ஆனால் இந்த திருமணத்தில் விசுவிற்கு எந்த உடன்பாடும் இல்லையோ என்ற சந்தேகம் முதல் நாளே தோன்றும் அளவிற்கு விசுவின் நடவடிக்கைகள் இருந்தன.அவளிடம் அவன் சுமுகமாகவே நடந்து கொள்ளவில்லை.ஒரு புதுமண தம்பதிக்குள் இருக்கக் கூடிய குதூஹலம்
அவர்கள் வாழ்வில் இடம் பெறவே இல்லை.

விசுவைப் பொறுத்த வரையில் அவன் பாட்டுக்கு வருவான் போவான்.
சாப்பிடுவான்.தூங்குவான்.இவளிடம் முகம் கொடுத்து பேசுவது குறைவுதான்.அதுவும் ஏதாவது வேலை வாங்குவதற்குத்தான் அந்த
குறைவான பேச்சும் நடக்கும்.மாமியாரோ இதையெல்லாம் கண்டும் காணாமலும் இருந்து விடுவாள்.

காரணம் புரியாமல் தவித்த சுமதிக்கு காரணத்தை தெரிந்து கொள்ளும் சந்தர்ப்பமும் வாய்த்தது.ஒருநாள் காய் வாங்கிக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தவளுக்கு தாய்க்கும் மகனுக்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தை காதில் விழுந்தது.

"எத்தனை நாள்தான்டா இப்பிடி பிடிவாதம் பிடிப்ப? "

"நானா உன்னை கல்யாணம் பண்ணி வைன்னு கெஞ்சினேன்.
நான்தான் முன்னாடியே தெளிவாத்தான  சொன்னேன்.பண்ணிக்கிட்டா
அத்தை  பொண்ணு புவனாவைத்தான் பண்ணிப்பேன்னு.நீதான் பணத்துக்கு ஆசைப்பட்டு இவளை என் தலையில கட்டின"

சுமதி  தன் காலடியில் பூமி நழுவி தன்னை உள்ளிழுக்கும்
உணர்வில் உறைந்தாள்


                                                                                                                           தொடரும்....

22 comments:

சி.பி.செந்தில்குமார் said...

முதல் மழை

சி.பி.செந்தில்குமார் said...

>>>>
சுமதி தன் காலடியில் பூமி நழுவி தன்னை உள்ளிழுக்கும்
உணர்வில் உறைந்தாள்

தொடர்கதைகள் நிறைய படிப்பீங்க போல.. நல்ல லகுவான நடை

எல் கே said...

அட தொடர்கதையா ?? நல்ல கொண்டுவந்து ஒரு எதிர்பார்ப்போடு நிறுத்தி இருக்கீங்க, . காத்திருக்கிறேன்.

Chitra said...

ராஜி, நீங்க தொடர் கதையை கொண்டு போகிற விதம், ரொம்ப நல்லா இருக்குதுங்க... பாராட்டுக்கள்!

ADHI VENKAT said...

அடுத்த தொடர் கதையா! கடைசி வரிகள் ரொம்ப நல்லா இருக்கு ராஜி.
தொடருங்கள்.

RVS said...

சன் டி.வி சீரியல் வெள்ளிக்கிழமை முடிக்கறா மாதிரி முடிச்சீங்க.. அற்புதம் ராஜி! ;-))

இப்படி நாம எல்லோருமே தொடர் கதை எழுத ஆரமிச்சாசுன்னா படிக்கற எல்லோரும் காலி பண்ணிட்டு போயடப்போறாங்க.. அடுத்த எபிசோட்ல நான் நிச்சயம் முடிச்சுடறேன் சாமி! ;-))

வை.கோபாலகிருஷ்ணன் said...

தொடரை ஆரம்பித்த விதமும்,
கொண்டு சென்ற நடையும்,
[புவனா ஒரு கேள்விக்குறி? யாக]
ஒரு எதிர்பார்ப்புடன்
கொண்டு நிறுத்தியுள்ள
பாங்கும், தங்களை ஒரு
சிறந்த படைப்பாளி என்பதை
அடையாளம் காட்டுவதாகவே
உள்ளது.

மட்டில்லா மகிழ்ச்சி எனக்கு.

மேலும் தொடர வாழ்த்துக்கள்.

CONGRATULATIONS. ALL THE BEST! vgk

raji said...

@ஆர் வி எஸ்

சன் டி வி சீரியல்?ஐயோ! கதை அவ்வளவு கேவலமாவாயிருக்கு?

R. Gopi said...

ஆரம்பம் ஜோரா இருக்கு. கதை முடியட்டும். அப்புறம் கமென்ட் போடறேன்:-)

ஆச்சி ஸ்ரீதர் said...

சமீப நிலநடுக்கத்தின் விளைவில் கடைசி வரிக்கான மேற்கோள் அமைந்துள்ளதா ? எதிர்பார்ப்பு அதிகரிக்கும் வகையில் முடித்துள்ளீர்கள்.

சக்தி கல்வி மையம் said...

ஆகா.. தொடர்கதை..
அருமை..

Yaathoramani.blogspot.com said...

ராஜி
புலிவாலை (கதைக்கான கரு) கையில் பிடித்திருக்கிறீர்கள்
ஜெயித்தது புலியா நீங்களா என்பதை
கடைசியில் சொல்லி விடுகிறேன்
நல்ல துவக்கம்
நல்ல நடை
தொடர வாழ்த்துக்கள்

சிவகுமாரன் said...

RVS பதிவுக்கு போட்டியா ?
பலே பலே
தொடர் நல்லா போகுது

நிரூபன் said...

வணக்கம் சகோதரி, இன்றைய சமூகத்தில் பணத்திற்கு ஆசைப்படும் பினாமிகள் பற்றியும், இனிய வாழ்வை விட ஒரு பெண்ணை இழந்தாவது பணத்திற்காக உறவினரைத் திருமணம் செய்ய வேண்டும் என நினைக்கும் மனித மன உணர்வுகளையும் கதையில் சித்திரித்துள்ளீர்கள். அடுத்த பகுதிக்காக ஆவலுடன் வெயிட்டிங்.

சாந்தி மாரியப்பன் said...

நல்ல ஆரம்பம், அடுத்தபகுதிக்காக வெயிட்டிங் .

நிலாமதி said...

கதை வாசிக்க வித்தியாசமாய் இருக்கு . தொடர்ச்சியை காணும் ஆவலுடன்........

raji said...

@சி பி செந்தில்குமார்

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

@எல் கே

கருத்துக்கு நன்றி.அடுத்த பகுதி இன்று வரும்

@சித்ரா

நன்றி சித்ரா

@கோவை2தில்லி

நன்றி ஆதி.எல்லாம் உங்களின் ஊக்கம்தான்

@வை கோபாலகிருஷ்ணன்

தங்களின் கருத்துக்கு நன்றி.தங்களது ஆசிவாதத்தால் நடக்கிறது

@கோபி ராமமூர்த்தி

கதை முடியட்டும் கவனிச்சுக்கறேங்கறீங்களோ?பயமாருக்கே

@திருமதி பி எஸ் ஸ்ரீதர்

இருக்கலாம் ஆச்சி.அதன் பாதிப்பு நம்மில் யாருக்குத்தான் இருக்காது.
எதிர்பார்ப்பை இன்றும் வந்து தொடருங்கள்

@வேடந்தாங்கல்
நன்றி

@ரமணி

புலி ஜெயித்தால்(கதையின் கரு) அது என்னை ஊக்குவிப்பவர்களின் வெற்றிதானே?

நன்றி

@சிவகுமாரன்

100 ஆவது பின் தொடர்பவரா வருகை தந்ததுக்கு
மிக்க நன்றி

ஆர் வி எஸ் சாரோட எல்லாம் போட்டி போட முடியுமா?
அவர் எங்கே நான் எங்கே?

நான் பாட்டுக்கு எனக்கு தோணிணதை எழுதறேன்.
வம்புல மாட்டி விட்டுட போறீங்க!!


@நிரூபன்
நன்றி

@நிலாமதி

நன்றி.இன்று தொடர்ச்சி

வெங்கட் நாகராஜ் said...

அட தொடரா? ஆரம்பமும் முதல் பகுதியின் எதிர்பார்க்கவைக்கும் முடிவும் நன்று.

தொடரும் நண்பர்கள் 100 ஆனதற்கு வாழ்த்துகள். மகிழ்ச்சி!

'பரிவை' சே.குமார் said...

ரொம்ப நல்லா இருக்குதுங்க... பாராட்டுக்கள்!

Unknown said...

very much frightened.please don't take this risk.

இராஜராஜேஸ்வரி said...

சுமதி தன் காலடியில் பூமி நழுவி தன்னை உள்ளிழுக்கும்
உணர்வில் உறைந்தாள்//
சரியாய் தொடரவிட்டிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

குறையொன்றுமில்லை. said...

ராஜி நான் இன்னிக்குத்தான் வந்து எல்லாபகுதியையும் படிச்சிண்டு இருக்கேன். சுவார்சியமா கொண்டு போரீங்க.அடுத்தபகுதியை எதிர் பார்க்கவைக்கும் எழுத்து. வாழ்த்துக்கள்.

Post a Comment