நான் இதுவரையில் சினிமா விமர்சனம் என்று எழுதியதில்லை.சிறிது நாட்களுக்கு முன் "மெரினா" என்ற படத்தைப் பார்த்து நொந்து போயிருந்த வேளையில் இந்த படத்தை (தோனி) பார்க்க நேரிட்டது.அதுதான் என்னை எழுத தூண்டியது.உண்மையில் "மெரினா" படம் பார்க்க செல்லும் முன் சக பதிவர் திரு கோபி அவர்கள் எழுதிய விமர்சனம் படிக்க நேரவில்லை.படித்திருந்தால் சென்றிருக்க மாட்டேன்.அவர் எழுதிய விமர்சனம் படிக்க இங்கே செல்லவும்.
முதல்வராக வரும் மீசை மழிக்கப் பட்ட சரத்பாபுவிற்கு இப்பொழுதுதான் வயோதிகத் தோற்றம் ஒரு வழியாக வந்து விட்டது
பிரகாஷ்ராஜின் மகனாக நடிக்கும் ஆகாஷ் கோமா ஸ்டேஜில் அசத்தி இருக்கிறான் என்றே சொல்லலாம்.தந்தை சொல்வதற்காக கிரிக்கெட்டை விட்டு ட்யூஷன் செல்ல நேரும்போதும், தங்கையிடம் டேட்டாக்கள் சொல்லும்போதும் நல்ல வெளிப்பாடு.
அந்த வகையில் தோனி பார்க்க நேரிட்டதில் "மெரினா"வின் கடுப்பு குறைந்தது.
சற்று தாமதமான விமர்சனமாக இருப்பினும் பகிர நினைத்த விமர்சனம்
பிரகாஷ்ராஜ் - கே பி' ஸ் டச்
பிரகாஷ்ராஜ் - கே பி' ஸ் டச்
தோனி திரைப்படம் - பிரகாஷ்ராஜ்"ஸ் டச்
"ஷிக்ஷானாச்யா எய்ச்சா கோ" என்ற மராட்டிய மூலத்தை தழுவி எடுக்கப் பட்ட
படமாக இருப்பினும் பிரகாஷ்ராஜ் தனது இயக்கத்தாலும் நடிப்பாலும் திரைப்படத்தை தூக்கி நிறுத்தியுள்ளார் என்றே கூறலாம்
குழந்தைகளுக்கு, அவர்களின் விருப்பத்திற்கு மாறாக எந்த விஷயத்தையும் திணிப்பது நல்ல பலனளிக்காது என்ற ஒன்லைன் ஸ்டோரியை திரைப்படமாக தந்திருக்கிறார்கள்.படிக்கும் பிள்ளைகள் இருப்பவர்கள் கட்டாயம் படத்தை ஒருமுறை பார்க்கவும். ஹிந்தியின் 'தாரே ஜமீன் பர்' சற்று ஞாபகம் வருவது போல் இருந்தாலும் அதிலிருந்து வித்தியாசப் பட்ட படமே.

கணக்கும் இயற்பியலும் வராத, ஆனால் கிரிக்கெட்டில் ஆர்வமுடைய ஒன்பதாம் வகுப்பு படிக்கும் தாயற்ற பிள்ளையை பிரகாஷ்ராஜ் தந்தையாக கையாளும் விதமும் அதே பிள்ளை பள்ளியின் கெடுபிடிக்கு ஆளாகும் விதமும் நன்றாகவே படமாக்கப் பட்டிருக்கின்றது.ரிஜிஸ்டிரார் ஆஃபீசில் வேலை செய்யும் சுப்பு என்ற மிடில் க்ளாஸ் பாத்திரமாக பிரகாஷ்ராஜ் நன்றாகவே சோபித்திருக்கிறார்.பிள்ளையிடம் முதலில் கனிவாக இருப்பதும் படிக்கவில்லை என்றானதும் கோபமடைவதும் 'நீயா நானா' ஷோவில் குமுறுவதும், பிள்ளை நன்றாக ஆகிவிட மாட்டானா என்று தவிப்பதுமாக பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்.ஆனால் பள்ளியில் கத்துவது போன்ற இடங்களில் சற்று ஓவர் ஆக்டிங்காக இருக்கிறதோ என்ற எண்ணம் வராமல் இல்லை.
அண்டை வீட்டுக்காரராக வரும் ராதிகா ஆப்தே, மராட்டிய அழகு.கண்களே உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தி விடுகிறது. நம் தமிழ் சினிமா இவருக்கு மீண்டும் வாய்ப்புத் தருகிறேன் பேர்வழி என்று டூ பீஸ் ட்ரஸ் போட்டு டங்கு டக்கா என்று ஆட விட்டு ஒரு நடிகையை கொலை செய்யாதிருத்தல் நலம்.
ஒரு சில காட்சிகளே வந்தாலம் நாசர் வழக்கம் போல் தன் இடத்தை இருத்திக் கொள்கிறார்.கனி பாயாக வரும் முரளி ஷர்மா வாய்ப்பை நன்றாக உபயோகித்திருக்கிறார்.சக ஊழியராக மொபைல் கடன் வாங்கிப் பேசும் பாத்திரம் நகைச்சுவைக்காக என்றால் சத்தியமாக ரசிக்க இயலவில்லை.
முதல்வராக வரும் மீசை மழிக்கப் பட்ட சரத்பாபுவிற்கு இப்பொழுதுதான் வயோதிகத் தோற்றம் ஒரு வழியாக வந்து விட்டது
பிரகாஷ்ராஜின் மகனாக நடிக்கும் ஆகாஷ் கோமா ஸ்டேஜில் அசத்தி இருக்கிறான் என்றே சொல்லலாம்.தந்தை சொல்வதற்காக கிரிக்கெட்டை விட்டு ட்யூஷன் செல்ல நேரும்போதும், தங்கையிடம் டேட்டாக்கள் சொல்லும்போதும் நல்ல வெளிப்பாடு.
என்னதான் க்ளைமாக்ஸ் பன்ச்சாக இருக்க வேண்டும் என்று நினைத்திருந்தாலும், கல்விமுறையை மாற்ற வேண்டும் என்பதற்காக பதினேழாம் வாய்ப்பாட்டை உதாரணமாகக் கொண்டு முதலமைச்சரை நட்ட
நடு வெட்ட வெளியில் கேள்வி கேட்பதும் பேசுவதும் லாஜிக் இல்லாமல்
தோன்றுகிறது.
மொத்தத்தில் குழந்தைகளை கோலுக்கு ஆடும் குரங்காக பெற்றோரும் பள்ளியும் நடத்தலாகாது என்பது நன்றாக வெளிப்பட்டிருக்கிறது.
இந்த படம் வெளி வந்த தினத்தின் முன் தினம் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஆசிரியையை கத்தியால் குத்திக் கொன்றான் என்ற செய்தி வந்தது.
அதீத செல்லம் என்றாலும் அதீத கண்டிப்பு என்றாலும் இரண்டுமே குழந்தைகளை மன நிலை பிறழ வைக்கும் வாய்ப்புடையதே என்பதை பெற்றோர்களும் கல்வி நிறுவனங்களும் உணர்ந்தால் சரி.
20 comments:
பிரகாஷ்ராஜ் நடிக்கும் கதாபாத்திரங்கள் யாவும் எனக்கு மிகவும் பிடிக்கும்.
இந்த படம் இதுவரை நான் பார்க்கவில்லை.
பொதுவாக படங்களே இப்போதெல்லாம் [அதுவும் தியேட்டருக்குப்போய்] பார்ப்பதில்லை.
தங்கள் விமர்சனம் நன்றாக எழுதப்பட்டுள்ளது.
பாராட்டுக்கள்.
வாழ்த்துகள்.
பதிவுக்கு நன்றிகள்.
vgk
அதீத செல்லம் என்றாலும் அதீத கண்டிப்பு என்றாலும் இரண்டுமே குழந்தைகளை மன நிலை பிறழ வைக்கும் வாய்ப்புடையதே என்பதை பெற்றோர்களும் கல்வி நிறுவனங்களும் உணர்ந்தால் சரி.
முத்தாய்ப்பான வரிகள் ..சிறப்பான ஆய்வுடன் விமர்சனப் பகிர்வுக்கு பாராட்டுக்கள்..
//அதீத செல்லம் என்றாலும் அதீத கண்டிப்பு என்றாலும் இரண்டுமே குழந்தைகளை மன நிலை பிறழ வைக்கும் வாய்ப்புடையதே என்பதை பெற்றோர்களும் கல்வி நிறுவனங்களும் உணர்ந்தால் சரி//
முத்தான முத்தாய்ப்பு.. விமர்சனம் அருமை.
அருமையான விமர்சனம்
விமர்சனம் மிகவும் அருமை.
எனக்கும் பிரகாஷ்ராஜின் நடிப்பு பிடிக்கும்.ஆனால் அவர் சில சமயங்களில் ஓவர் ஆக்டிங் செய்துவிடுவார் அதுதான் கஷ்டம்..
//அதீத செல்லம் என்றாலும் அதீத கண்டிப்பு என்றாலும் இரண்டுமே குழந்தைகளை மன நிலை பிறழ வைக்கும் வாய்ப்புடையதே என்பதை பெற்றோர்களும் கல்வி நிறுவனங்களும் உணர்ந்தால் சரி//
சிறப்பான கருத்து.
அருமையான பதிவு.
வாழ்த்துகள்.
மிக அருமையான விமர்சனம் ராஜி..:)
விமர்சனம் சும்மா நச்சுன்னு இருக்கு....!!!
பிரகாஷ்ராஜின் நடிப்பு எனக்கும் பிடிக்கும். அபியும் நானும் எனக்கு பிடித்த திரைப்படங்களில் ஒன்று.
உங்க எழுத்தில் திரை விமர்சனமும் நடுநிலையான விமர்சனமாய் நன்றாக இருக்கிறது ராஜி.
வாய்ப்பு கிடைத்தால் இந்த படத்தை பார்க்க முயற்சிக்கிறேன்.
ட்ரைய்லர்கள் மட்டும் பார்த்தேன்,இனி படம் பாக்கும்போது உங்க நினைவும் வரும்.
விமர்சனம் அருமை
நல்லாவே ரசிச்சதைப் பகிர்ந்திருக்கீங்க. பிரகாஷ்ராஜை நான் மிக ரசித்த படம் ‘அபியும் நானும்’. இதுலயும் அதுபோல ரசிக்க முடியும்னு உங்க விமர்சனம் படிச்சப்புறம் தோணுது. பாக்கறேன்...
ஆனால் குழந்தைகளை கண்டிக்கவேண்டியது அவசியமாகிறது. நரிக்குடியில் கூட 12ம் வகுப்பு மாணவன் ஆசிரியரிடம் சென்னையைப்போன்ற சம்பவம் நடந்துவிடும் ஜாக்கிரதை என மிரட்டியுள்ளான்.
தாராளமாக நீங்கள் தொடர்ந்து விமர்சனமும் எழுதலாம்
பாரபட்சமில்லாமலும் அதிகமாகத் தெரிந்ததைப் போல
காட்டிக் கொள்ளாமலும் விமர்சனக்கள் வருவது
இப்போது அரிதாகி வருகிறது
நான் எப்போதும் பிரகாஷ்ராஜ் தயரிப்பில் வரும்படங்களைத் தவறாது
பார்த்துவிடுவேன்.அது நிட்சயம் சமூகப் பொறுப்புணர்வுடன்
கூடிய படமாகத்தான் இருக்கும்
பகிர்வுக்கு நன்றி.வாழ்த்துக்கள்
நேற்றுத்தான் இந்தப் படத்தைப் பார்த்தேன். இன்றைய சூழலில் மிகவும் தேவையான படம். பிரகாஷ்ராஜின் நடிப்பு சில இடங்களில் மிகை. நீயா நானா நிகழ்ச்சியில் அவர் அழுதுகொண்டே பேசுவதைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. கருத்துவெளிப்பாட்டின் உச்சத்தில் இப்படி கவனக்குறைவாக இருந்திருக்கிறார்களே என்று வருத்தமாக இருந்தது. மற்றபடி எடுத்துக்கொண்ட கருவும், அதைப் படமாக்கிய விதமும், பலதரப்பட்ட மனிதர்களின் குணாதிசயத்தைக் காட்டியவிதமும் மிகவும் பிடித்திருந்தது. இந்த ஆதங்கத்தைதான் ஆஸ்திரேலியப் பள்ளிகள் பற்றிய என் பதிவுகளிலும் குறிப்பிட்டுக்கொண்டிருக்கிறேன். எப்படியோ மாணவர்களுக்கு ஒரு நல்ல வழி பிறந்தால் நன்மைதான்.
அழகானத் தெளிவான விமர்சனத்துக்கு மிகவும் நன்றி.
அட ராஜி சினிமா விமர்சனம் முதல் முறை என்பது நம்ப முடியவில்லை. அருமை.
நானும் படம் பார்த்தேன், நியாமான விமர்சனம்! படத்தில் மிகப்பெரிய பலம் இளையராஜவின் இசை!
நல்ல விமர்சனம் சகோ... முதல் முறை விமர்சனம் என்றாலும், நடுநிலையான விமர்சனம்....
நான் இதுவரையில் சினிமா விமர்சனம் என்று எழுதியதில்லை
அப்படி தோன்றவில்லை.. முதல் முறை போல அல்லாமல் தேர்ந்த விமர்சனமாய்..
பின்னூட்டமளித்து ஊக்குவித்த அனைவருக்கும் நன்றி
Post a Comment