Thursday, February 24, 2011

யாமறிந்த மொழிகளிலே.....

உலக மொழிகளில் மிகவும் தொன்மையும் சிறப்பும் வாய்ந்தது
தமிழ் மொழியே என்பதற்கு ஒரு சிறு உதாரணம்:

எண்கள்-       (தமிழ்) -  (ஆங்கிலம்)

1 - ஒன்று-  ஒன்

10 -பத்து-   டென்

100 -நூறு- ஹண்ட்ரட்

1000 - ஆயிரம்- தௌசண்ட்

10000 - பத்தாயிரம்-டென் தௌசண்ட்

100000  - நூறாயிரம்- ஹண்ட்ரட் தௌசண்ட்

1000000 -பத்து நூறாயிரம்- ஒன் மில்லியன்

10000000 -கோடி- டென் மில்லியன்

100000000 -அற்புதம்- ஹண்ட்ரட் மில்லியன்

1000000000 -நிகற்புதம்- ஒன் பில்லியன்

10000000000 -கும்பம்- டென் பில்லியன்

100000000000 -கணம்- ஹண்ட்ரட் பில்லியன்

1000000000000 -கர்ப்பம்- ஒன் ட்ரில்லியன்

10000000000000 -நிகர்ப்பம்- டென் ட்ரில்லியன்

100000000000000 -பதுமம்- ஹண்ட்ரட் ட்ரில்லியன்

1000000000000000 -சங்கம்- ஒன் ஜில்லியன் (zillion )

10000000000000000 -வெள்ளம்- டென் ஜில்லியன்

100000000000000000 -அன்னியம்- ஹண்ட்ரட் ஜில்லியன்

1000000000000000000 -அர்ட்டம்-    ????????????????

10000000000000000000 - பரர்ட்டம்- ?????????????????

100000000000000000000 -பூரியம் -  ?????????????????????

1000000000000000000000 -முக்கோடி- ??????????????????????

10000000000000000000000 -மகாயுகம்- ????????????????????????????


ஹைய்யா!!!!!!!! நம்ம தமிழ் தமிழ்தான்!!!!!!!!

தமிழன்டா!!!!!!!!!!!!!!!

32 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஆஹா, அருமை!
என்றோ, எங்கேயோ, எப்போதோ, எதிலோ படித்து, மகிழ்ந்து பிறகு மறந்தும் போன விஷயம்.
நினைவூட்டியதற்கு உங்களுக்கு மகாயுகம்
1000000000000000,00,00,000 நன்றிகள் உரித்தாகுக!

raji said...

'ஐயோ! ஒரு வாரமா இவ தொல்லை இல்லாம இருந்ததே
வந்து தொலைச்சுட்டாளா????'

அப்டின்னு நினைக்கறவங்களுக்கு-

"வேற என்ன செய்ய?எல்லாம் உங்க தலை எழுத்து"

'அட!வந்துட்டாங்களான்னு' நினைக்கற அப்பாவிகளுக்கு
(அப்டி யாருமே இல்லையா?)-

வந்துட்டேன்ல!!!!!!!!!!

Arun Ambie said...

பள்ளிக்கூடத்துலயே கணக்குப் பாடத்த ஒப்பேத்தி வெச்சவன் நான். டிகிரில கூட புள்ளியியல் தேர்வில் தியரி எழுதி பாஸ் செய்தவன். இப்படி நம்பர் நம்பரா போட்டு வெச்சுட்டு தமிழு தமிழுதான்னு பெருமைப்பட்டா??? தென்னாடுடைய சிவனே போற்றி!!!

வை.கோபாலகிருஷ்ணன் said...

//'அட!வந்துட்டாங்களான்னு' நினைக்கற அப்பாவிகளுக்கு (அப்டி யாருமே இல்லையா?)-//

ஏன் இல்லை, நான் இருக்கிறேன்.

எவ்வளவு முறை திரும்பத் திரும்ப “மனக் கோட்டை கட்டாம மணற் கோட்டை பார்க்கலாமா...” வையே பார்த்திருப்பேன் தெரியுமா?

பெரியதொரு திருவிழாக் கும்பல் ஒன்றில் காணாமல் போன என் குழந்தை திரும்பிக் கிடைத்தது போல மகிழ்ச்சி, இன்று எனக்கு ஏற்பட்டுள்ளது.

என்னைப்போலவே இன்னும் எவ்வளவு பேர்கள் உங்கள் வலைப்பூவுக்கு வருகை தந்து, உங்களைக் காணாமல் ஏமாறிப் போனார்களோ?

RaaKu saamy said...

இறங்குமுக இலக்கங்கள்

1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்

அளவைகள்
நீட்டலளவு

10 கோன் - 1 நுண்ணணு
10 நுண்ணணு - 1 அணு
8 அணு - 1 கதிர்த்துகள்
8 கதிர்த்துகள் - 1 துசும்பு
8 துசும்பு - 1 மயிர்நுணி
8 மயிர்நுணி - 1 நுண்மணல்
8 நுண்மணல் - 1 சிறுகடுகு
8 சிறுகடுகு - 1 எள்
8 எள் - 1 நெல்
8 நெல் - 1 விரல்
12 விரல் - 1 சாண்
2 சாண் - 1 முழம்
4 முழம் - 1 பாகம்
6000 பாகம் - 1 காதம்(1200 கெசம்)
4 காதம் - 1யோசனை
பொன்நிறுத்தல்

4 நெல் எடை - 1 குன்றிமணி
2 குன்றிமணி - 1 மஞ்சாடி
2 மஞ்சாடி - 1 பணவெடை
5 பணவெடை - 1 கழஞ்சு
8 பணவெடை - 1 வராகனெடை
4 கழஞ்சு - 1 கஃசு
4 கஃசு - 1 பலம்
பண்டங்கள் நிறுத்தல்

32 குன்றிமணி - 1 வராகனெடை
10 வராகனெடை - 1 பலம்
40 பலம் - 1 வீசை
6 வீசை - 1 தூலாம்
8 வீசை - 1 மணங்கு
20 மணங்கு - 1 பாரம்
முகத்தல் அளவு

5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி
பெய்தல் அளவு

300 நெல் - 1 செவிடு
5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி
5 மரக்கால் - 1 பறை
80 பறை - 1 கரிசை
48 96 படி - 1 கலம்
120 படி - 1 பொதி
இவ்விலக்கங்கள் பயன்படுத்திய முறைகள், கணக்கியல் அளவுகள், இவை எதற்கு பயன்படுத்தப்பட்டது என்பதெல்லாம் இன்று எம் முன்னே விரியும் கேள்விகளாகவே உள்ளன


தமிழ் மாதம்
தை - சுறவம் ( 30 ) ( 14 jan - feb 12 )
மாசி - கும்பம் (30 ) ( 13 feb - 14 mar )
பங்குனி - மீனம் ( 30 ) ( 15 marc - 13 Apr )
சித்திரை - மேழம் (31 ) (14 Apr - 14 May )
வைகாசி - விடை (31) (15 May - 14 Jun )
ஆனி - ஆடவை (32 ) ( 15 Jun - 16 Jul )
ஆடி - கடகம் ( 31 ) ( 17 Jul - 16 Aug )
ஆவணி - மடங்கல் (31 ) (17 Aug - 16 Sep )
புரட்டாசி - கன்னி (31) ( 17 Sep - 17 oct )
ஐப்பசி - துலை ( 30 ) (18 oct - 16 Nov )
கார்த்திகை - நளி ( 29 ) ( 17 Nov - 15 Dec )
மார்கழி - சிலை ( 29 ) ( 16 Dec - 13 jan )

raji said...

@Arun Ambie

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

@வை கோபாலகிருஷ்ணன்

தங்கள் குழந்தை என கூறி என்னை உங்கள்
மகளாக பாவிப்பதற்கு நன்றி சார்
என் பதிவை எதிர்பார்க்கும் அனைத்து அப்பாவிகளின்
எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்ய அந்த இறைவன்
எனக்கு அருள வேண்டும்


@நல்ல தம்பி
தகவலுக்கு மிக்க நன்றி

salute sir

இந்த பதிவிற்கு வருகை தரும் அனைவரும் என்னுடன் சேர்ந்து
திரு நல்ல தம்பி அவர்களுக்கு ஒரு சல்யூட் அடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

வை.கோபாலகிருஷ்ணன் said...

திரு. நல்ல தம்பி அவர்களே, வணக்கம்.
உங்கள் பெயருக்கு ஏற்றாற்போலவே மிகவும் நல்ல தம்பியாகவே உள்ளீர்கள். நல்ல நல்ல பல விஷயங்களை எங்கிருந்தோ தோண்டித்துருவி தேடிக் கண்டு பிடித்து அருமையாக அளித்துள்ளீர்கள். பெருமையாக உள்ளது. படிக்கவே மிகவும் ஆச்சர்யமாகவும் ஆனந்தமாகவும் உள்ளன.

என் அருமை & அன்பு மகள் ராஜி சொல்வது போல உங்களுக்கு ஒரு ராயல் சல்யூட்.

Yaathoramani.blogspot.com said...

நிஜமாகவே தங்கள் பதிவை
வெகு நாட்கள் காணோமே
காரணம் கேட்டு ஒரு பின்னூட்டம்
போடலாமா என யோசித்துக்கொண்டிருந்தேன்
தாமதமாக வந்தாலும் தரமான பதிவுடந்தான்
வந்துள்ளீர்கள்,தொடர வாழ்த்துக்கள்

Chitra said...

அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து, தமிழ் பெருமை சொன்ன ராஜி மேடம் போற்றி!

Unknown said...

மின்னஞ்சலில் வந்தது. நல்ல பகிர்வு

சிவகுமாரன் said...

யாமறிந்த மொழிகளிலே (மூணு தான் தெரியும்) ......... இனிதாவது எங்கும் காணோம்
நம் பிள்ளைகளின் உலகத்தை எட்டிப் பார்த்தால் தமிழையே எங்கும் காணோம். .

தமிழ்வாசி பிரகாஷ் said...

எண்களும் அதன் தமிழ் பெயர்களும்... அருமையான தொகுப்பு.

இதையும் படிங்க: மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வரலாறு

சக்தி கல்வி மையம் said...

'அட!வந்துட்டாங்களான்னு' நினைக்கற அப்பாவிகளுக்கு
(அப்டி யாருமே இல்லையா?)-நிச்சயமாக எப்ப வருவீங்கன்னு நான் நினைத்துக் கொண்டிருந்தேன்..

Vijay Periasamy said...

நல்ல முயற்சி, வாழ்த்துக்கள்

middleclassmadhavi said...

ஒரு பிரிண்ட் எடுத்து வைச்சுக்கறேன்...., நன்றி ராஜி, நல்லதம்பி

பத்மநாபன் said...

தமிழில் எண் அலங்காரம் அருமை ... இவ்வளவு பெரியஅளவுக்கு தமிழில் எண் பெயர் இருப்பது இப்பொழுது தான் தெரிகிறது நன்றி ... சுத்த தமிழர்கள் என்பதை அந்த எண் வரை ஊழல் செய்து காட்டுகிறார்கள் நம் அரசியல்வாதிகள் ...மகாயுகத்தை நெருங்கி இருப்பார்கள்...

பின்ன அளவுக்கும் , நீட்டல் அளவுக்கும், மாதங்களுக்கும் தமிழ் பெயர்கள் சொன்ன நல்ல தம்பி வாழ்க ......

Pattu & Kuttu said...

great..feeling great.

do not tell this raja or congress.. they will go for more that 13 digits

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

இந்தப் பதிவு உங்களுக்கு சுவையாக இருக்கக் கூடும்..

வசந்தா நடேசன் said...

வெகு சமீபத்தில் வேறு ஒரு பதிவரும் இதை சொல்லியிருந்தார்,,

RVS said...

டூ ஜி ஸ்பெக்ட்ரம் இதுல எந்த நம்பர்ல வரும்ன்னு யோசிச்சுகிட்டு இருந்தேன். ;-)
பின்னூட்ட நல்லதம்பியின் கணக்கு அந்தக்கால சந்தையின் நடுவில் நின்னு பேசுன மாதிரி இருந்தது.. ;-)

RVS said...

எனக்கும் இது மெயில்ல வந்தது.. அபிதான சிந்தாமணியில் இதுமாதிரி நிறைய இருக்கு.. வச்சு நாலைந்து கதை எழுதலாம்.. ;-)

இராஜராஜேஸ்வரி said...

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே
முன் தோன்றிய மூத்த தமிழல்லவா??
கணக்கும் பறை சாற்றுகிறதே!!

ஆச்சி ஸ்ரீதர் said...

நல்ல பதிவு,இதில் பாதி விபரங்களை சமீபத்தில் ஒரு பதிவில் படித்தேன்.(விரல் சரியாகி விட்டது என்று தெரிந்து விட்டது.)

வெங்கட் நாகராஜ் said...

நல்ல தகவல்கள். முன்பே படித்திருக்கிறேன். திரு நல்லதம்பி அவர்களுக்கும் நன்றி. இந்த தகவல்களை சேமித்து வைத்துக் கொண்டேன். மிக்க நன்றி.

raji said...

@மதுரை சரவணன்

நன்றி

@ரமணி
என் பதிவை எதிர்பார்த்ததற்கும் வாழ்த்துக்களுக்கும்
நன்றி சார்

@சித்ரா

நீங்க பாத்தப்ப மணி நாலா?
ஏதோ நம்ம பதிவுக்கு நாலு அப்பாவிங்க மாட்டிருக்காங்களே
பாவம்னு பாத்தா நீங்க ஒரு படி மேலே போய் போற்றினு
சொல்லிட்டீங்களே
(நீங்க ரொம்ப ரொம்ப அப்பாவி போல!!ஐயோ பாவம் :( )

@கலாநேசன்
நன்றி

@ராம்ஜி யாஹூ
நன்றி

@சிவகுமாரன்
எனக்கும் நாலே நாலு மொழிதாங்க தெரியும்

நீங்க சொல்றது ரொம்ப சரி
நம்ப குழந்தைகள் உலகத்துல தமிழே இருக்காது போல

@சங்கவி

அட!ஈர மனம் சிறுகதைக்கு பின்னூட்டம் போட வந்தீங்க கடைசியா.
அதுக்கப்பறம் இப்பதான் வருகை.வருகைக்கு நன்றி

@தமிழ்வாசி
நன்றி.படிக்கிறேன்

@வேடந்தாங்கல்
நீங்களுமா?நாட்டில நிறைய அப்பாவிங்க போல

@விஜய்
நன்றி

@மாதவி
நன்றி

@பத்மனாபன்
கரெக்டா சொன்னீங்க

@Pattu & Kuttu
நன்றி
நீங்க வேற நாம சொல்லிதானா அவங்களுக்கு
டிஜிட் தெரிய போகுது?

@அறிவன்
வருகைக்கு நன்றி,பதிவை பார்க்கிறேன்

@வசந்தா நடேசன்
co incidence :-)

@ஆர் வி எஸ்
ஸ்பெக்ட்ரம் பத்தி யோசிச்சா நமக்கு டிஜிட் மறந்துரும்.
கதை எழுதுங்க.நாங்க படிக்கிறோம்

@இராஜராஜேஸ்வரி
ஆமாம்
வருகைக்கு நன்றி

@ஆச்சி
நன்றி
ஆமாம்.சரியாகி விட்டது(அதான் பதிவு ஆரம்பிச்சு அறுக்கலாம்னு :-))) )

@வெங்கட் நாகராஜ்

நன்றி

எல் கே said...

உங்க போஸ்ட் அப்டேட் கூட வரது இல்லை

சி.பி.செந்தில்குமார் said...

சில சமயம் கோயிலுக்கு போறப்ப மெயின் சாமியை விட சைடுல இருக்கற சாமி கலக்கலா இருக்கும்.(அலங்காரம்)

சில சினிமாக்கள்ல ஹீரோவை விட கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் கலக்கி இருப்பார்.

அந்த மாதிரி ராஜி ஃபோர் அடிச்சு நிமிந்து பார்த்தா நல்ல தம்பி சிக்சர் அடிச்சுட்டு அசால்ட்டா இருக்கார். நல்ல தம்பி சார்.. கலக்கல்

R. Gopi said...

Raji, Nalla thambi thanks for sharing this

குறையொன்றுமில்லை. said...

நல்ல தகவல்கள். நன்றி.

ADHI VENKAT said...

நல்ல பகிர்வு. சேமித்து வைத்து கொள்ள வேண்டும். தமிழ் வாழ்க!

மனம் திறந்து... (மதி) said...

வியக்க வைக்கும் விவரங்கள்! தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா!...எவ்வளவு உண்மையான பெருமிதம் பாருங்கள்!

நல்ல தம்பி....நல்ல அக்கா! இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள், நன்றியுடன்!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

இந்த மாதிரி நம்பர்கள் போட்டீங்ன்னா, நம்ம அரசியல் வாதி நண்பர்கள்,அத்தனை பெரிய தொகைக்கும் ஊழல் செய்ய ஆரம்பிச்சுடுவாங்க!

Post a Comment