முகம் அலம்பி உடை மாற்றிக்கொண்டு ஹாலுக்கு வந்தான் ராகவ்.
கூடம் அமைதியாக இருந்தது.காபி தம்ளருடன் வந்த அம்மா அதை 'டொக்' எனற
சப்தத்துடன் வைத்து விட்டு போனதிலிருந்து சூழ்நிலையை ஊகம் செய்ய முடிந்தது.
தங்கை கலாவை கேள்விக்குறியாய் நோக்க அவள்,"தரகர் வந்திருந்தார்"என்றாள் கிசுகிசுப்பாய்.
ஆயாசமாய் கண்களை மூடித் திறந்து காபியைபருகிக் கொண்டே மஞ்சுவின் நினைவில் மூழ்கினான்.
நன்றாகத்தான் சென்றது வாழ்க்கை, கொஞ்சல்களும் குதூகலமுமாய் அவளுடன்.
அந்த விபத்து நடக்கும் முன்பு வரை. நாள் தள்ளி, டாக்டரிடம் சென்று
கருவுற்றதை உறுதி செய்து ஸ்கூட்டரில் திரும்பும்போதுதான் அது நடந்தது.
ஆட்டோ ஒன்று அசுர வேகத்தில் வந்ததில் இவர்கள் வண்டியில் மோத தூக்கி எறியப்பட்டனர்.புதரில் விழுந்த ராகவ் சிராய்ப்புகளுடனும்,நினைவிழந்த மஞ்சு
கரு கலைந்தும் அட்மிட் செய்யப்பட்டனர்.
"யோசிச்சு ஒரு முடிவுக்கு வர சொன்னேனே,யோசிச்சயா?" அம்மாவின் குரலில் கலைந்து நிமிர்ந்தான்.
"நீ எத்தனை தரம் கேட்டாலும் என் பதில் அதேதான்மா"
"உன் மனசுல நீ என்னதான் நினைச்சுட்டிருக்க?"
கூடத்தில் குரல் உயர்ந்ததில் அறைக்குள்ளிருந்து மஞ்சு வெளிப்பட்டு அறை வாசலில் வந்து நின்றாள்.
"எதுக்கும் உபயோகப்படாத ஒருத்தியோட எப்பிடி குப்பை கொட்ட முடியும்?" முகம் சிவக்க அம்மா கத்தினாள்.
"என்னம்மா பேசற?உறவுகள்ங்கறது உபயோகம் பாத்து ஏற்படுத்திக்கறதா?அவளும்
நல்லா இருந்தவதான் இப்ப அவளுக்கு பழசு எதுவும் நினைவில்லைங்கறதுக்காகவும்,
குழந்தை பெத்துக்க முடியாதுன்னு ஆயிட்டதாலயும் அந்த உறவை வெட்டிக்கறது
எனக்கு சாத்தியமில்லைமா"
"இன்னிக்கு கூட தரகர் ஒரு வரன் கொண்டு வந்தார்.அதை எல்லாம் இவளும் இங்கிருந்து பாத்துண்டுதான் இருந்தா.ஆனாலும் அவளுக்கு அதுவிஷயமா பதட்டமோ,தவிப்போ ஏற்படல.உன் கிட்டயும் அவ இப்ப ஒட்டுதலா இல்ல.அப்படிப் பட்டவளை வச்சுண்டு என்ன செய்ய?சொல்றத கேளு.நீ நல்லாருக்கனும்னுதான் சொல்றேன்"
"என்னோட வாழ்ந்த எந்த நினைவும் அவளுக்கு இப்ப இல்லைங்கறப்ப அவ கிட்ட அந்த மாதிரி உணர்வை எப்டிம்மா எதிர்பாக்கற?அவளோட நான் வாழ்ந்தது எனக்கு மறக்கல.அதனால எனக்கு அவ வேணும்.அவளுக்கும் ஒரு துளியாவது அவ ஆழ் மனசுல என்னோட வாழ்ந்தது ஒட்டிண்டிருக்கும் அது என்னிக்காவது வெளிப்ப்படும்னு நான் நம்பறேன்.அதுவரை அவ ஒரு குழந்தை மாதிரிதான்.
எனக்கந்த வாழ்க்கை போதும்மா"
அம்மா கோபமாக உள்ளே செல்ல, "கவலைப்படாதண்ணா.அம்மா அப்டித்தான்.
அவளோட பார்வை அந்த மாதிரி.நாம விலங்கில்லை.காமமும் குரோதமும் மட்டுமா வாழ்க்கை நடத்த.இத அவளும் புரிஞ்சுப்பா.விடு" என்றாள் கலா
உள்ளே வந்தவனை மஞ்சு தீர்க்கமாகப் பார்த்தாள்.
"என்னம்மா?" என்றான் கரிசனமாக
"உங்களை பாத்தா எனக்கு பிரமிப்பாவும் வியப்பாவும் இருக்கு.எவ்வளவு உறுதியான அன்பு உங்களுக்கு என் மேல இருக்கு!உங்க கிட்ட ஈடுபாடோ ஒட்டுதலோ இல்லாம நான் இருக்கேந்தான்.ஆனா நட்போட இருக்க விரும்பறேன்.அந்த நட்பு ஒரு நாள் ஈடுபாடா மாறும்னு நான் நம்பறேன்.பழசு நினைவுக்கு வரலைதான்.அதனால இத்தனை நாள் புருஷனா நினைக்க முடியல.ஆனா புதுசா வாழ விரும்பறேன் உங்களோட"
ராகவ் நம்பிக்கையுடன் அவள் கையைப் பற்றி, "இனி வரும் வாழ்க்கைதான்
நம் நினைவுகள்" என்றான்
13 comments:
kathai arumaiyaka ullathu. vaalththukkaL
அருமையானதொரு கதை.
எனக்கு ரொம்பப்புடிச்சுருக்கு.
மிகவும் பிடித்த வரிகள்:
//"உங்களை பாத்தா எனக்கு பிரமிப்பாவும் வியப்பாவும் இருக்கு.எவ்வளவு உறுதியான அன்பு உங்களுக்கு என் மேல இருக்கு!உங்க கிட்ட ஈடுபாடோ ஒட்டுதலோ இல்லாம நான் இருக்கேந்தான்.ஆனா நட்போட இருக்க விரும்பறேன்.அந்த நட்பு ஒரு நாள் ஈடுபாடா மாறும்னு நான் நம்பறேன்.பழசு நினைவுக்கு வரலைதான்.அதனால இத்தனை நாள் புருஷனா நினைக்க முடியல.ஆனா புதுசா வாழ விரும்பறேன் உங்களோட"//
வித்தியாசமான தலைப்புக்கேற்ற கதை, வாழ்த்துக்கள்
கவித்துவமான தலைப்பு
கதையும் கூட
தொடர வாழ்த்துக்கள்
கதையின் தலைப்பிலேயே ஆர்வத்தை கூட்ட வைத்து விட்டீங்க....
கதை அருமை, //மிடில்கிளாஸ்// சொன்னதுபோல் தலைப்பு அதைவிட அருமை.. (காப்பி/பேஸ்ட் சரிபண்ணிவிட்டீர்கள் போல் தெரிகிறது) பகிர்ந்தமைக்கு நன்றி.
கதை மிகவும் அருமை. இதுபோல ஆண்களைப்பார்ப்பது அபூர்வம்தான்.
கதை அருமையா இருக்கு. வித்தியாசமான கோணத்திலயும் கொண்டு போயிருக்கீங்க.
உணர்வுப்பூர்வமான கதை
தீபாவளி படக் கதை மாதிரி இருக்கு
@மதுரை சரவணன்
நன்றி
@வை கோபாலகிருஷ்ணன்
நன்றி
@மாதவி
நன்றி
@ரமணி
நன்றி
@சித்ரா
கருத்துக்கு நன்றி
@வசந்தா நடேசன்
நன்றி
@லக்ஷ்மி
நன்றி
@கோவை2தில்லி
நன்றி
@திருமதி பி எஸ் ஸ்ரீதர்
நன்றி
@கோபி ராமமூர்த்தி
கருத்துக்கு நன்றி
நீங்கள் கூறும் தீபாவளி என்னும் சினிமா
நான் இதுவரை பார்த்ததில்லை.
இப்பொழுதுதான் நீங்கள் கூறிய பின் அதன் கதை கேட்டு
அறிந்தேன்.அதன் சாயல் பழைய நினைவுகள் இழப்பதிலும்
அவர்கள் இணைவதிலும் இருந்தாலும் கதை தளம் வேறு என்றே
என்று தோன்றுகிறது.படம் பார்த்தால்தான் சரியாக அறிய முடியும்.
சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.இனி சாயல் வராமல்
இருக்குமாறு பார்த்துக் கொள்கிறேன்
நேர்மறையான உணர்வுகளோடு உறவை பேணும் நம்பிக்கை மிகு கதாநாயகன்... மனமாற்றம் துளிரும் நாயகி என அருமையான கதை...
நல்ல கதை சகோ. ராகவ் போன்று எல்லா ஆண்களும் இருந்துவிட்டால் பிரச்சனையில்லை!
Post a Comment