Monday, February 7, 2011

ஸ்ரீவில்லிபுத்தூரும் சிவகாமி பாடசாலையும்


என்னுடைய ஒரு பதிவில் ஆறு வயதுக்கு முன் பள்ளியில் சென்று அமர்ந்த
அனுபவத்தை பகிர்ந்து கொண்டேன்.அப்பொழுது  நான் சென்றது திருவாரூரில் உள்ள
நகராட்சி பள்ளிக்கு.ஒரு வருடம்  கழித்து வயது ஆறானதும் முறைப்படி என்னை
பள்ளியில் சேர்த்தார்கள்.அந்த வருடம் நாங்கள் திருவாரூரிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மாறிவிட்டோம்.அப்பாவின் வேலை பணிமாற்றத்திற்கு  உட்பட்டதாக இருந்ததால் நான் வருடம் ஒரு பள்ளியில் படித்தேன்.அவர் ஒரு நேர்மையான அதிகாரியாக இருந்த காரணத்தாலேயே
எங்கள் குடும்பம் ஒரு வருடத்திற்கு மேல் எந்த ஊரிலும் இருந்ததில்லை.
எனக்கு ஆறு வயதாகும் பொழுது நாங்கள் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்ததால்
என்னை அங்கிருந்த சிவகாமி ஆரம்ப பாடசாலையில் சேர்த்தனர்.

'ர'கரம்  படுத்திய பாடு:  ஆறு வயதாகியும்  கூட என் வாய்க்கும் 'ர'கரத்திற்கும்
ஏனோ ஒத்தே வரவில்லை.எத்தனை முயன்றாலும் 'ர'கரத்தை 'ல'கரமாக உச்சரிப்பதே என் வழக்கமாக இருந்து வந்தது.யாராவது உன் பெயர் என்ன என்று கேட்டால் பளிச்சென்று 'லாஜி' என்றுதான் கூலுவேன் (ஐயோ!பழைய  நினைப்புல
தப்பா டைப்பிட்டேன்.சாரி!) கூறுவேன்.தினமும் என் அக்கா இதற்காக என்னோடு போலாடாத..சீ சீ போராடாத நாளே இல்லை எனலாம்.

லாஜிக்கு போட்ட லைட்டு:   

பள்ளியில் சேரும் போது எனக்கு ஒரு சிலேட்டும் பலப்பமும்  வாங்கி தந்து அனுப்பினர்.அப்பொழுதெல்லாம் சிலேட்,பலப்பம்தான். முதல் மூன்று மாதங்களுக்கு
சும்மா பள்ளியில் 'அ'  'ஆ'  'இ' 'ஈ'  எழுதுவதோடு  சரி.மற்ற படி வாயால் ஒப்பித்தலும் பதில்  கூறுதலும்தான்.மூன்று மாதங்களுக்கு பிறகு சிலேட்டில் எழுதக் கூடிய
சின்ன சின்ன வீட்டுப் பாடங்கள் தருவார்கள்.சிலேட்டில் எழுதிய வீட்டுப்
பாடத்தை அழியாமல் ஸ்கூலுக்கு எடுத்து  சென்று காமிக்கும் டெக்னிக் இருக்கிறதே.. அப்பப்பா.. .,  அப்படி எழுதியதை அழியாமல் கொண்டு சென்று அதில் வாத்தியாரிடம்
'டிக்' வாங்கும்போது ஏதோ இமாலய சாதனை செய்தது போல ஒரு பீற்றல் இருக்கும்.
அழியாமல் கொண்டு சென்றவர்கள், அழிந்து போய் எடுத்து வருபவர்களின் பொறாமைக்கு ஆளாவோம்.

அப்படி வாத்தியாரிடம் 'டிக்' வாங்கிய பெருமையை வீட்டில் வந்து சொல்லும் போது
நான் சொல்வதைக்  கேட்டு எல்லாரும் சிரிப்பார்கள். ஏனென்றால் நான் சொல்லும் லட்சணம் அப்படி. "எங்க வாத்தியால் எனக்கு லைட் போட்டாலே"
(எங்க வாத்தியார் எனக்கு ரைட் போட்டாரே)

அப்பொழுது எங்கள் வீட்டில் அப்பாவின் பணி நிமித்தமாக ஒரு வாட்ச்மேன்
ஒருவர் உண்டு.அவர் பெயர் வைத்தி.அவர் நான்  பள்ளியில் இருந்து வந்ததுமே
என்னைப் பார்த்து கேட்பார்."என்ன லாஜிம்மா இன்னிக்கு உங்க வாத்தியால்
உனக்கு லைட்டு போட்டாலா? (உங்க வாத்தியார் உனக்கு ரைட் போட்டாரா")
என்ன லைட்டு? ட்யூப் லைட்டா பெட்ரமாக்ஸ் லைட்டா?" என்பார்.
இப்பொழுது மேலே எழுதி இருக்கும் லாஜிக்கு போட்ட லைட்டு என்ற தலைப்பின்
அர்த்தம் உங்களுக்கு நன்றாகப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

'ல' கரத்தை 'ர'கரமாக்கிய புண்ணியவான்:

என் 'ல'கரத்தை 'ர'கரமாக மாற்றும்  முயற்சியில்,  சிவகாமி ஆரம்ப பாடசாலையின் தலைமை ஆசிரியராக இருந்த நாராயணன் அவர்களுக்கு நான் ஒரு பெரிய சவாலாகவே மாறி விட்டேன் .சமஸ்க்ருதத்தில் புலமை பெற்ற ஸ்ரீனிவாச அய்யங்காரின் கடைசி திருமகளுக்கு 'ர'கரம் கூட வரவில்லையே என்று வெறுத்துப் போனார்.

தினமும் பள்ளி முடிந்ததும் நான் போய் அவர் அறை வாசலில் நின்று எட்டிப் பார்ப்பேன்.கருணையே உருவான அவர் எந்த குழந்தை வந்து எதை கேட்டாலும் அதை தயங்காமல் கொடுத்து விடுவார்.நான் அவர் அறைவாசலில் நின்று எட்டிப் பார்த்ததும் எழுந்து வருவார்.அந்த பள்ளியில்  ஒரு பாதாம் மரம் இருக்கும்.நான் அதிலுள்ள பாதாம்பருப்பை  கேட்பேன்.அவர் ப்யூனை அழைத்து தட்டி தர
சொல்வார். அதை என்னிடம் தரும் முன்பு ஒரு ஸ்லோகம் கூறினால் தருகிறேன் என்பார்.நானும் எனது லகர ரகரத்தை கலந்து கட்டி ஏதாவது ஒரு ஸ்லோகம் கூறி வாங்கிக் கொள்வேன்.இப்படியாக எனது நாவில் அதுவரை எட்டிப் பார்த்தே இராத 'ர'கரத்தை வெற்றிகரமாக குடி கொள்ள  செய்தார்.(இப்பொழுது இப்படி,  இது போல் தலைமை
ஆசிரியர்களோ,ஆசிரியர்களோ இருக்கிறார்களா என தெரியவில்லை)

ஒரு வழியாக ராஜியும் ரைட் வாங்க ஆரம்பித்தாள்.அந்த சிவகாமி ஆரம்ப 
பாடசாலை இப்பொழுது இன்னும் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருக்கிறதா என்று தெரியவில்லை.இருந்தால் சென்று பார்க்க ஆசை.திருமணமான புதிதில்
கொடைக்கானல் செல்லும் பொழுது மதுரை கள்ளழகரையும், ஸ்ரீவில்லிபுத்தூர்
ஆண்டாளையும் தரிசிக்க சென்றோம்.அப்பொழுது இந்த சிவகாமி பாடசாலை
பற்றி விசாரிக்க இயலவில்லை.கொடைக்கானலுக்கு வந்தயா?பாடசாலை
பாக்க வந்தயா? என்று ரங்கமணி  கோபித்தால் என்ன செய்வது என்ற பயத்தில்
(அப்போது மட்டும்தான்.ஹி...ஹி... என்ன இருந்தாலும் கல்யாணமான புதுசு இல்லையா!!!)பேசாமல் இருந்து விட்டேன்.வாய்ப்பு நழுவி விட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூரைப் பற்றிய பதிவாக இருப்பதால், நினைவுக்கு வரும் ஆண்டாளையும் இதில் இணைத்துள்ளேன்.ஆண்டாள் மடியில் ரங்கமன்னார்
தலை வைத்து படுத்திருக்கும் இந்த அற்புதக் கோலம் மிகவும் பிரசித்தம்.
(இதை பார்த்து விட்டு எல்லா ரங்கமணிகளும் முயற்சி செய்ய நினைத்து
தங்கமணிகளின் கோபத்துக்கு ஆளாக வேண்டாம் என்று எச்சரிக்கிறேன்)






Posted by Picasa
இதை இன்னும் ரசனையுடன் காண விரும்புபவர்கள்  கீழே இருக்கும்
லிங்கிற்கு செல்லவும்.

http://www.youtube.com/watch?v=DY4eujFkHYw

22 comments:

சிவகுமாரன் said...

ஒங்களுக்கு லவே வலாதா ? ஒலே காமெடியா இலுக்கு. சிலிப்பு சிலிப்பா வலுது.
நல்லா எழுதுலீங்க.

வை.கோபாலகிருஷ்ணன் said...

உங்களுடைய இந்தப் பதிவு எனக்கு ரொம்பப் புடிச்சிருக்கு மேடம்.

ஒரு சின்னக் குழந்தையாகவே மாறி, குழந்தைகள் பேசுவது போல அழகாக எழுதியுள்ளீர்கள். என் மனமார்ந்த பாராட்டுகள்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் மடியில் ஸ்ரீ ரங்கமன்னார், சயனக் கோலத்துடன் ஆன படமும் இணைத்து இந்தப் பதிவை வெளியிட்டதற்கு நன்றி.

அந்தப் படத்தின் மேலே தாங்கள் கொடுத்துள்ள எச்சரிக்கையும் நல்லதொரு நகைச்சுவையாக உள்ளது.

நாம் உபயோகித்த அந்தக் காலத்து கல்/தகர ஸ்லேட்டுகள் + ஸ்லேட்டுக் குச்சிகளெல்லாம் எல்லாம் இப்போது உபயோகத்தில் உள்ளனவா என்றே தெரியவில்லை.
அன்புடன்............

Chitra said...

லாஜி, இந்த பதிவு லொம்ப நல்லா இலுக்குது .... உங்க சின்ன வயசு சங்கதி இன்னும் சொல்லுங்க....

தமிழ்வாசி பிரகாஷ் said...

சிறு வயது அனுபவம், சூப்பரா சொல்லியிருகிங்க. மேடம் பதிவு ரொம்ப அருமை.

Yaathoramani.blogspot.com said...

உங்கள் எழுத்தின் லாவகம்
என்னுள் மலைப்பை ஏற்படுத்திப் போகிறது
ரசித்துப் படித்தேன்.நல்ல பதிவு.
தொடர வாழ்த்துக்கள்

எல் கே said...

லாஜி இனி இப்படிதான் உங்களை கூப்பிடப் போறோம் பதிவுகளில். வம்பை விலைக் கொடுத்து வாங்கிட்டீங்க. சின்ன வயசில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்னு இந்த மாதிரி இருக்கும் .ரங்கமன்னார் சயன சேவைக்கு நன்றி

R. Gopi said...

\\(இதை பார்த்து விட்டு எல்லா ரங்கமணிகளும் முயற்சி செய்ய நினைத்து
தங்கமணிகளின் கோபத்துக்கு ஆளாக வேண்டாம் என்று எச்சரிக்கிறேன்)\\

அது சலி:-)

குறையொன்றுமில்லை. said...

நீங்களாவது சின்னவயதில்தான் ர, ல, வராம இருந்தீங்க. என்வாண்டுகள் இப்போ 40 வயதிலும் கூட புருஷோத்தமன், வராம புருதோஷமன்னுதான் சொல்லுது. ராமாயணம், ராம யாணம் ஆகும்.

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு அம்மா.
நல்ல பள்ளி அது. தற்போது அந்த பள்ளி நாடார் உறவின்முறை நிர்வாகத்துக்கு மாறி விட்டது. நானும் அந்த பள்ளி மாணவன் தான்.
வாழ்த்துக்கள்.

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு அம்மா.
நல்ல பள்ளி அது. தற்போது அந்த பள்ளி நாடார் உறவின்முறை நிர்வாகத்துக்கு மாறி விட்டது. நானும் அந்த பள்ளி மாணவன் தான்.
வாழ்த்துக்கள்.

சி.பி.செந்தில்குமார் said...

>>>ஆறு வயதாகியும் கூட என் வாய்க்கும் 'ர'கரத்திற்கும்
ஏனோ ஒத்தே வரவில்லை.

haa ஹா நாங்களும் அப்படித்தான் லாஜி.. அடச்சே ராஜி

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு லாஜி! உங்களது போலவே சிலர் ”ர”வுக்கு பதில் ”ட” உபயோகிப்பார்கள். இங்கே ஒரு நண்பரின் மகன் வேகவேகமாக வந்து “மாமா, இங்கே பாடுங்க, புடா, புடா!” என்று சொல்ல நான் ”அப்படி ஒரு பாட்டும் தெரியாதே!” என முழித்து இருக்கிறேன்...

பகிர்வுக்கு மிக்க நன்றி!

ஆச்சி ஸ்ரீதர் said...

திருவாரூர் எங்க ஊருக்கு பக்கம்தான்.
மிக ரசிச்சு படிச்சேன்.தொடருங்கள்.

ADHI VENKAT said...

நல்ல பகிர்வு லாஜி. பள்ளியில் சிலேட்டில் அழியாமல் காண்பிப்பது கஷ்டமான காரியம் தான். என் தம்பி கூட” நிமிஷத்தை மினிஷம்” என்பான். ஆங்கிலத்தில் ”மினிட் என்பதை” நிமிட்” என்பான். ஒரு கல்யாணத்தில் ”பீட்ரூட் பச்சடியை” ”பீரங்கி பச்சடி” என்றான்.

middleclassmadhavi said...

மலரும் நினைவுகளுக்கு நன்றி யாஜி, அதாவது என் பையனுக்கு ய வயாது!

பத்மநாபன் said...

சகோ நிங்களும் நம்ம கேஸ் தான் ஸ்கூல் மாத்திர விஷயத்துல்... 10 க்ளாஸ் தாண்றக்குள்ள 10 ஊர் மாற்றம்..அகண்ட கோவை மாவட்டம் முழுவதும்..

``ரகரத்தில் பட்ட பாடு நல்ல நகைச்சுவை.. என் கூட படித்தவனுக்கு ` ர ` த ஆக மாறும்.. முறுக்கு ...முதுக்கு ஆகும் ..நகரம் ..நகதம் ஆகும்...

raji said...

@சிவகுமாரன்
நன்றி

@வை.கோபாலகிருஷ்ணன்
கருத்துக்கு நன்றி சார்

@சித்ரா
சொல்றேன் சொல்றேன்

@தமிழ்வாசி
நன்றி

@ரமணி
நன்றி

@எல் கே
நன்றி கால்த்திக் சார்

@கோபி ராமமூர்த்தி
எது சலி?உங்களை தங்கமணியின் கோபத்திலேர்ந்து
தப்ப வச்சதுதான?

@லக்ஷ்மி
அட கடவுளே!

@ரத்னவேல்

அட!நீங்களும் அந்த பள்ளி மாணவரா?

கருத்துக்கு நன்றி

@சி பி செந்தில்குமார்
உங்களுக்கும் ர வராதா?

@வெங்கட் நாகராஜ்

எழுத்தை மாற்றி சொல்லும் போது
அது புரியாமல் ஒரே காமெடியாகி
விடும்தான்

@திருமதி பி எஸ் ஸ்ரீதர்

திருவாரூர் எனக்கு பிடித்த ஊர்.
கருத்துக்கு நன்றி

@கோவை2தில்லி
அட!இது மாதிரி ரொம்ப பேர் இருக்காங்களா?
சரிதான்

@மாதவி

உங்க வீட்ல இதனால காமெடியாருக்குமே

@பத்மனாபன்

ஆமாம் சார்!அப்பாவின் ரிடையர்மென்ட் வரை
யாதும் ஊரே யாவரும் கேளிர்தான்.

இந்த ர வராதவங்க நிறைய பேர் போல.அதுவும் வித விதமா!
ஒருத்தருக்கு அது ல, இன்னொருத்தருக்கு ய
அதுவே இன்னொருத்தருக்கு ட, இன்னொருத்தருக்கு த.
அடேங்கப்பா!

சக்தி கல்வி மையம் said...

என்னை ஞாபகம் இருக்கா?

என் மாணவர்களுக்கு செய்முறை தேர்வு அதனால் கடந்த வாரம் பதிவிடவில்லை.. நன்றி..

See,

http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_10.html

RVS said...

லாஜி! அட்டகாசம் ஜி! (எனக்குதான் எவ்ளோ ஜீக்கள்) அசத்தலாக சம்பவங்கள் கோர்வையாக இருந்தது. நாலாயணன் உங்கள் திருவாய் மலர்ந்து நாராயணன் என்று கூப்பிட ஆசைப்பட்டரோ!
திருவாரூரில் இருந்திருக்கிறீர்களா!! அட நம்ம பக்கம்.. ;-)
ரங்கமன்னார் ஆண்டாள் ஜோடி அற்புதம்.. என்ன அம்சமான ஊஞ்சல் சயனம். சிருங்காரத்திர்க்கு கேட்கவா வேண்டும்...
தங்கமணிகள் ஏன் அடிக்க வேண்டும். பக்கத்து வீட்டு தங்கமணி மடியில் தலைவைக்க ஆசைப்பட்டால் தான் தலை கொய்யும் அளவிற்கு கோபம் வரவேண்டும். ;-)

raji said...

@ சக்திஸ்டடி கருண்
வருகைக்கு நன்றி

@ஆர் வி எஸ்

மன்னை மன்னரின் வருகைக்கும்
கருத்திற்கும் மிக்க நன்றி.

திருவாரூர் எனக்கு மிகவும் பிடித்த ஊர்

Unknown said...

ஆஹா. அருமையான காட்சி. பாம்புப்படுக்கையிலேயே அறிதுயிலும் மாயவன்
மாதாவின் மடியிலே படுத்துக்குறட்டையன்றோ விடுகிறான்.வைகுண்டத்திலும்
மேன்மையானதன்றோ மடி இல்லையா லேவதிமேடம்

பிரகாஷ் said...

லகரம் ட்டூ ரகரம் ஜர்னி சூப்பர்ப் ;)

Post a Comment