Friday, March 23, 2012

சாகரம்

 



வாழ்க்கை வீணையின்
தந்திகளை இறுக்குவதிலும்
தளர்த்துவதிலுமே
பொழுதுகள் கரைய,                                                                   

அனுபவ சுருதிகளும்
அர்த்தமறியா சுருதிகளும்
அவிழ்ந்து நாட்கள் நகர்கின்றன.

இணக்கமான இறுக்கத்தில்
இதமான சுருதிகள்
இனிமையாய் ஒலிக்கிறது.

தகுந்ததொரு தளர்விலும்
தாளம் தப்பாது ஒலிக்கிறது

அதீத இறுக்கமோ தளர்வோ சமயத்தில்
அவலமாக்கி விடுகிறது.

வாழ்க்கை இசையின்
வாசிப்புகளைக் கற்கும்
மாணவர்களாய் மனிதர்கள்....

மொத்தத்தில்
வித்தைக்காரன் கம்பிநடை
வித்தையாய்,
குழந்தைகளின் சீசா
விளையாட்டாய்,
ஆரோகணத்திற்கும்
அவரோகணத்திற்கும்
சமன்பாட்டைத் தேடும் சாகரமாய்....

வாழ்க்கை !!!!


28 comments:

இராஜராஜேஸ்வரி said...

இணக்கமான இறுக்கத்தில்
இதமான சுருதிகள்
இனிமையாய் ஒலிக்கிறது

அருமையான வாழ்க்கை ராகம்.. வாழ்த்துகள்..

இராஜராஜேஸ்வரி said...

ஆரோகணத்திற்கும்
அவரோகணத்திற்கும்
சமன்பாட்டைத் தேடும் சாகரமாய்....

வாழ்க்கை !!!!

சங்கீத சாம்ராஜ்ஜியம்..! கவிதையாய்.. பாராட்டுக்கள்..

கீதமஞ்சரி said...

வீணையின் நாதத்தில் விளைந்த அழகான வாழ்வியல் ஒப்பீட்டு இசை. அதீத இறுக்கமும் அதீதத் தளர்வும் அபஸ்வரமெனும் புரிதலில் புலப்படுகிறது வாழ்வின் ரகசியம் இசைவாய், இசையாய், மனதுக்கு இதமாய். பாராட்டுகள் ராஜி.

ராமலக்ஷ்மி said...

/அதீத இறுக்கமோ தளர்வோ /

ஆம். கவிதை அருமை.

'பரிவை' சே.குமார் said...

கவிதை அருமை... பாராட்டுக்கள்.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கவிதை சகோ.....

குறையொன்றுமில்லை. said...

அதீத இறுக்கமோ தளர்வோ சமயத்தில்
அவலமாக்கி விடுகிறது.


ஆமா உண்மைதான். நல்ல வரிகள்.

RVS said...

இப்படியெல்லாம் கவிதை எழுத எனக்கு வராது. ரொம்ப நல்லாயிருக்கு.

”வாழ்க்கை ஸ்ருதி”ன்னு தலைப்பு வச்சுருக்கலாமோ?

ரிஷபன் said...

ஆரோகணத்திற்கும்
அவரோகணத்திற்கும்
சமன்பாட்டைத் தேடும் சாகரமாய்....
வாழ்க்கை !!!!
கவிதை அருமை

ADHI VENKAT said...

//வித்தைக்காரன் கம்பிநடை
வித்தையாய்,
குழந்தைகளின் சீசா
விளையாட்டாய்,
ஆரோகணத்திற்கும்
அவரோகணத்திற்கும்
சமன்பாட்டைத் தேடும் சாகரமாய்....

வாழ்க்கை !!!!//

முற்றிலும் உண்மையே.....

ஒவ்வொன்றும் அர்த்தமுள்ள வரிகள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//வாழ்க்கை வீணையின்
தந்திகளை இறுக்குவதிலும்
தளர்த்துவதிலுமே//

//அனுபவ சுருதிகளும்
அர்த்தமறியா சுருதிகளும்//

//இணக்கமான இறுக்கத்தில்
இதமான சுருதிகள்
இனிமையாய் ஒலிக்கிறது//

வாழ்க்கைச் சாகரத்தை வெகு அழகாக கவிதையாக்கித் தந்துள்ளீர்கள். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

middleclassmadhavi said...

கவிதை அருமை

Yaathoramani.blogspot.com said...

ஆரோகணத்திற்கும்
அவரோகணத்திற்கும்
சமன்பாட்டைத் தேடும் சாகரமாய்....
வாழ்க்கை !!!!
கவிதை அருமை
பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

விச்சு said...

வாழ்க்கையை எப்படி வேண்டுமானாலும் வாசிக்கலாம். சுருதி விலகாமல் வாசித்தால் வாழ்க்கை இனிக்கும்.

முத்தரசு said...

அட கவிதை இப்படியுமா? வாழ்க்கை தத்துவம் பேசுது

வாழ்த்துக்கள் படைப்பாளிக்கு

மாலதி said...

வாழ்க்கை இசையின்
வாசிப்புகளைக் கற்கும்
மாணவர்களாய் மனிதர்கள்....//கவிதை அருமை

ananthu said...

#அதீத இறுக்கமோ தளர்வோ சமயத்தில்
அவலமாக்கி விடுகிறது# வாழ்க்கையின் தத்துவத்தை எளிதாய் விளக்கிவிட்டீர்கள் அருமை !

Rathnavel Natarajan said...

அருமை.
வாழ்த்துகள்.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

அர்த்தமுள்ள வரிகள் அனைத்துமே. ஏற்றத்திற்கும் இறக்கத்திற்கும் இடையில் சுவை கூட்டுவதுதான் வாழ்வின் இசை.

எல் கே said...

கவிதாயினி ராஜி வாழ்க

raji said...

@இராஜராஜேஸ்வரி

நன்றி மேடம்

@கீதமஞ்சரி

நன்றி

@ராமலக்ஷ்மி

நன்றி

@சே குமார்

நன்றி

@வெங்கட் நாகராஜ்

நன்றி

@லக்ஷ்மிம்மா

நன்றி

@RVS

வச்சுருக்கலாம்.சங்கீதப் பதிவு போலன்னு அதுல விருப்பமில்லாதவங்க தவற விடற வாய்ப்பிருக்கும்னு தோணுச்சு (அதெப்பிடி என் கிட்டேருந்து தப்பிக்கலாம்னு ஒரு நல்ல எண்ணம்தான்)

@ரிஷபன்


நன்றி சார்!

@கோவை2தில்லி

நன்றி

@வை கோபாலகிருஷ்ணன் சார்

நன்றி சார்

@ மாதவி

நன்றி

@ரமணி சார்

நன்றி

@விச்சு

சுருதி விலகாமல் வாசிப்பதுதான் பயிற்சியே

@மனசாட்சி

உற்று நோக்கினால் வாழ்க்கையில் எப்படியும் கவிதைதான். நன்றி

@மாலதி

நன்றி

@ananthu

நன்றி

@Rathnavel Natarajan sir!

நன்றி

@வித்யா சுப்ரமணியம் மேடம்

உண்மைதான் மேடம்.வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

@எல் கே

:) நன்றி

அப்பாதுரை said...

கொஞ்சமும் எதிர்பாராதக் கவிதைக் கருவி. சாமர்த்தியமாவும் சுவையாவும் பயன்படுத்தியிருக்கீங்க.

('ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்' வரிக்கு உண்மையில் என்ன அர்த்தம்னு கண்ணதாசன் ஒரு கட்டுரையில் எழுதியது நினைவுக்கு வந்தது.)

அப்பாதுரை said...

//(அதெப்பிடி என் கிட்டேருந்து தப்பிக்கலாம்னு ஒரு நல்ல எண்ணம்தான்)

அதான் நீங்க :)

Anonymous said...

''..அதீத இறுக்கமோ தளர்வோ சமயத்தில்
அவலமாக்கி விடுகிறது...''
மிக மிக அருமையான கவிதை. வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.

R. Gopi said...

good one

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

//வித்தைக்காரன் கம்பிநடை
வித்தையாய்,
குழந்தைகளின் சீசா
விளையாட்டாய்//

ஒருபுறம் இருந்து மறுபுறம் தொடும் கழைக்கூத்தாடிக்க்கும் சீசாவுக்கும்தான் வலியில் எத்தனை வித்யாசம்?

ஒவ்வொரு முறையும் கடந்தேயாக வேண்டும் இந்தக் கரிக்கும் நேர்க்கோட்டை.

சிலநேரம் மேலேயும் சிலநேரம் கீழேயும் திரும்பவும் மேலேயும் என்று ஆசுவாசப் படுத்திக்கொள்ள தருணங்கள் உண்டு இங்கே.

உங்களை அறிந்தோ அறியாமலோ மலர்ந்த பூவாய் மணக்கும் இவ்வரிகளைச் சுற்றி மொத்தக் கவிதையும் மலர்ந்திருப்பதாய் எண்ணுகிறேன் ராஜி.

நேர்த்தியான பார்வைக்கு ஒரு ஸ்பெஷல் சபாஷ்.

raji said...

@அப்பாதுரை

நன்றி!


//அதான் நீங்க :)//

கண்டு பிடிச்சுட்டீங்களா? :)

@kovaikkavi

நன்றி

@Gopi Ramamoorthy

நன்றி

@சுந்தர்ஜி

கருத்துக்களுக்கும் பாராட்டிற்கும் நன்றி ஜி!

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராஜி வாழ்க்கை ராகத்தை இணைந்து இசைப்பவர்கள் ஸ்ருதி பேதமில்லாமல் வாசிப்பது கஷ்டம்தான்.
தெளிவாக எடுத்துக் காட்டும் கவிதை மிக அருமை.

Post a Comment