ஒரு கோப்பையில் இருவர் சாறு அருந்துவதல்ல,
இரு கோப்பைகளின் சாரம் ஒன்றாக இணைவதே.
காதல்-
கடற்கரையில் நெருக்கம் காட்டுவதல்ல,
கடல் தாண்டியிருப்பினும் நெருக்கம் இறுகுவதே.
காதல்-
கட்டிலில் தேடும் காமம் என்பதல்ல,
கஷ்டத்திலும் வருடும் மயிலிறகு.
காதல்-
ஆயிரம் அலங்கார வார்த்தைகள் அல்ல,
மௌனத்திலும் புரிகின்ற நல்ல சங்கீதம்.
காதல்-
உடனிருக்கும்போது உண்டாகும் இன்பம் மட்டுமல்ல,
உடனில்லாதபோது ஏற்படும் வெற்றிடமும்.
காதல்-
வார்த்தையிலும் கவிதையிலும் வடிப்பதல்ல,
வாழ்க்கையில் உணரும் ஒரு நல்ல உணர்வு.
காதலன்,காதலி
தொலைவதுண்டு,
நகர்வதுண்டு,
இறப்பதுண்டு.
காதல்-
தொலைவதில்லை,
நகர்வதில்லை,
இறப்பதில்லை.

17 comments:
சூப்பர் .காதலுக்கு விளக்கம் அருமை
>>>>காதல்-
உடனிருக்கும்போது உண்டாகும் இன்பம் மட்டுமல்ல,
உடனில்லாதபோது ஏற்படும் வெற்றிடமும்.
கலக்கல் வரிகள்
அடடா.. ராஜி.. இந்த காதல் கவிதையை நாளைக்குப்போட்டிருக்கலாமே?( ஒரு வேலை நாளைக்கு வேற ஒண்ணு ஸ்டாக்கோ? #டவுட்டு)
இரு மனமும் நினைவில் கொள்ள வேண்டிய
நறுமணம் கமழும் அருமையானதொரு கவிதை!
வைரமென ஜொலிக்கும்
பட்டை தீட்டப்பட்ட வரிகள்.
பதிவுக்கு என் பாராட்டுகள்.
காதல் அழிவதில்லை... ;-) ;-)
காதலுக்கு மரியாதை.
********
இந்த சர்தார்ஜி காமடி தாங்க முடியல சாமி
புதுமையாய் உண்மையை சொல்லியிருக்கீங்க
என்பதா இல்லை என்பது எனவே இருக்கலாம்
நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்
வெற்றிடம் என்பது மட்டும்
எதிர்மறையாக உள்ளது
அது வெற்றிடம் நிரப்பும்
சுகானுபாவமாக இருந்திருக்கலாமோ?
//மௌனத்திலும் புரிகின்ற நல்ல சங்கீதம்.// Superb!
என்றும் அழியாத காதலை, அழகான தமிழில் வடித்தமை ரொம்பவே அழகு ராஜி...
//காதல்-
ஆயிரம் அலங்கார வார்த்தைகள் அல்ல,
மௌனத்திலும் புரிகின்ற நல்ல சங்கீதம்.
காதல்-
உடனிருக்கும்போது உண்டாகும் இன்பம் மட்டுமல்ல,
உடனில்லாதபோது ஏற்படும் வெற்றிடமும்.//
சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........
@எல் கே
நன்றி.
@சி பி செந்தில்குமார்
நன்றி
உங்க டவுட்டு கரெக்ட்.இன்னிக்கு ஸ்டாக்
இப்பத்தான் ரிலீஸ் ஆச்சு
@வை கோபாலகிருஷ்ணன்
மேல இருக்கற கவிதையை(!) விட உங்க
பின்னூட்டம் ரொம்ப நல்லாருக்கு
@ஆர் வி எஸ்
நன்றி
@தமிழ்வாசி
நன்றி
@திருமதி பி எஸ் ஸ்ரீதர்
கருத்துக்கு நன்றி
@ரமணி
நன்றி
உண்மையான காதலில் எல்லாமே சுஹானுபாவம்தான்
@மாதவி
நன்றி
@ஆர் கோபி நன்றி
இதுதான் காதல் என்பதா! நல்ல கவிதை பகிர்வுக்கு நன்றி.
காதல் - வாழ்க்கையில் உணரும் நல்ல உணர்வு.
நல்லதொரு காதல் கவிதைக்கு நன்றி.
உங்க கவிதை மனசை என்னமோ பன்னுதுக்கா..
அருமை..அருமை..
//@வை கோபாலகிருஷ்ணன்
மேல இருக்கற கவிதையை(!) விட உங்க
பின்னூட்டம் ரொம்ப நல்லாருக்கு//
ஆஹா, ஒரேயடியா என்னை இப்படி கவுத்துட்டீங்களே !
பின்னூட்டத்திற்கு பின்னூட்டம் எழுதுவதிலும்
PIN போல படு SHARP நீங்கன்னு, நிரூபிச்சிட்டீங்க.
வாழ்த்துகள்.
காதலன்,காதலி
தொலைவதுண்டு,
நகர்வதுண்டு,
இறப்பதுண்டு.
காதல்-
தொலைவதில்லை,
நகர்வதில்லை,
இறப்பதில்லை.
கவிதையை முடிக்கும்போது அருமையாக முடித்துவிட்டீர்கள்.
நல்லா இருக்கு மேடம்
Post a Comment