மாலை டீயை கையில் எடுத்துக் கொண்டு ஜன்னலின் திட்டில்
அமர்ந்து கொண்டாள் அருணா.சில்லென்ற குளிர்ந்த காற்று முகத்தில் பட்டதும் மனதின் பாரம் சற்று குறைவதைப் போல உணர்ந்தாள்.சூடாக ஒருவாய் டீ குடித்ததும் கொஞ்சம் உடம்பு மனம் இரண்டுமே சற்று புத்துணர்வு பெற்றது போல் இருந்தது.
தேநீரின் சுவையை அனுபவித்துக் கொண்டிருக்கும் போதே மனம் கட்டற்ற குதிரையாய் முதல் நாள் அப்பாவுடன் நடந்த பேச்சிற்கு தாவியது.
தன்னையுமறியாமல் மீண்டும் கண்களில் குளம் கட்டத் தொடங்கியது.
எத்தனை ஆசையாய் ஒடி வந்து விஷயத்தை கூறினாள்.எவ்வளவு சந்தோஷமாக இருந்தது.இப்பொழுது அத்தனையும் வடிந்து விட்டதே.ஏன் அப்பா அப்படி கூறினார்.
என்ன ஆயிற்று அவருக்கு?இது அவரது சுபாவமும் இல்லையே.பின் ஏன் அப்படி
நடந்து கொண்டார்?ஒன்றும் புரியாமல் மறுபடியும் அழுகை முட்டிக் கொண்டு
வந்தது.
கிரீச்சென வாசல் கதவு திறக்கும் சப்தம் கேட்டு ஜன்னல் வழியே தலை திருப்பி பார்த்தாள் அருணா.சரயு கையில் ஒரு பெரிய பூங்கொத்தை எடுத்தபடி
நுழைந்து கொண்டிருந்தாள்.அவளின் வருகையால் வழிந்தோடிக் கொண்டிருந்த
கண்ணீரை அவசர அவசரமாக துடைத்தாள் அருணா.
"ஹாய் அருண்! கங்கிராட்ஸ்!" என்றபடியே உற்சாக ஊற்றாய் சிறு துள்ளலுடன்
வந்து அருணாவிடம் பூங்கொத்தை நீட்டினாள் சரயு.
"தேங்க்யூ!" என்று கம்மிய குரலில் கூறியபடி வாங்கி கொண்ட தோழியின் முகம்
சுரத்தில்லாமல் இருப்பதை உணர்ந்தாள் சரயு.
"என்னடி?என்னாச்சு?ஏன் என்னவோ போல இருக்க?"
"அதெல்லாம் ஒண்ணுமில்லையே,இரு உனக்கு டீ கொண்டு வரேன்"
"நில்லு.இப்ப டீ வேண்டாம்.முதல்ல என்னாச்சுனு சொல்வயா மாட்டயா?"
ஒரு நிமிடம் மௌனித்த அருணா மறுபடி கரைந்து அழ ஆரம்பித்தாள்.
"ஏய்! என்னடி?என்னாச்சு?எதாருந்தாலும் முதல்ல என்னன்னு சொல்லு"
"தஞ்சை கோவில்ல நடக்கப் போற நாட்டிய விழாவுக்கு நானும் செலக்ட் ஆயிருக்கேன்னுதான வாழ்த்த வந்துருக்க?"
"ஆமா!அதுக்கென்ன இப்ப?அதுக்கும் நீ அழறதுககும் என்ன சம்பந்தம்?"
"ஊரே என்னைப் பாராட்டி என்ன பிரயோஜனம்.என்னை பெத்தவர் என்னை
வாழ்த்தலையே?"
"என்னடி சொல்ற?அங்கிளா? ஏன் அவர் சந்தோஷப் படலையா இதுல?அவருக்கு
இதுல இஷ்டமில்லையா?"
"அப்டின்னு இல்ல.சொன்னதும் சந்தோஷம்தான் பட்டார்.ஆனாலும் என்னை ஆசிர்வாதம் பண்ணுங்கப்பான்னு சொன்னதும் ஆசிர்வாதம்லாம் எதுக்குனு சொல்லிட்டார்"
"நீ ஏன்னு கேக்கலையா?"
"கேட்டேனே.அதுக்கு அவர் எனக்கு சும்மா இருக்கறதுதான் சரின்னு படறதுனுட்டார்"
சொல்லிவிட்டு அழுத அருணாவை கொஞ்ச நேரம் பேசாமல் பார்த்தாள் சரயு.
"இங்க பாரு அருண், நான் சொல்லறத கொஞ்சம் கேக்கறயா?"
"சொல்லு"
"அப்பா வேணும்னு அப்படி சொல்லிருக்க மாட்டார்.ஏதாவது குழப்பத்துல
இருந்திருப்பார்.இத்தனை நாளா உன் கிட்ட இது போல ஏதாவது நடந்துண்டிருக்காரா?
இதை போயி பெருசா எடுத்துண்டு இப்பிடி நீ அழறது சரியா?"
"இப்பிடி நடந்ததில்லைதான்,ஆனா அவர் ஆசிர்வாதம் இல்லேனா நான் கலந்துக்க போகவே போறதில்லை"
"பைத்தியம் மாதிரி உளறாத.அவருக்கு என்ன மனக்கஷ்டமோ,எதனால அப்பிடி சொன்னாரோ.ஒண்ணும் தெரியாம நீயா உன்னிஷ்டத்துக்கு பேசாத.
இன்னொரு தடவை போயி பேசு.ஒரு வேளை அப்பவும் அவர் விரக்தில ஏதாவது ஆசிர்வாதம் பண்ண மாட்டேன்னு சொன்னாலும் அதை எல்லாம் பெரிசா எடுத்துக்காத.இப்பிடி கலந்துக்க வேண்டாம்னுலாம் அவசரப்பட்டு முடிவு பண்ணாத.எந்த அப்பாவும் தன் பொண்ணு நல்லாருக்க வேண்டாம்னு நிச்சயமா நினைக்க போறதில்லை.சரியா?"
"இருந்தாலும் அப்பா ஆசிர்வாதம் இல்லாம..."
"இங்க பாரு அருணா!நாமளே இப்ப கோவிலுக்கு ஒரு வேண்டுதலுக்காக போறோம்னு வை, கதவு சாத்தியிருந்தா மனசுக்கு கஷ்டமாதான் இருக்கும்.அதுக்காக மறுபடி கோவிலுக்கு போகாம விட்டுடறோமா? இல்ல அதுக்கப்பறம்தான் நம்ம கடவுள் நம்பிக்கையை விடறோமா?இல்லதான?வரிசைல கடைசில சொல்லிருக்கற தெய்வத்துக்கே அப்படின்னா இரண்டாவது இடத்துல இருக்கற அப்பா மேல நாம
எவ்வளவு நம்பிக்கை வைக்கணும்? இந்த உலகத்துல இறைவன் ஆசிர்வாதம் இல்லாம எப்பிடி எதுவும் நடக்கறதில்லையோ அப்பிடித்தான் பெத்தவங்க ஆசிர்வாதமும்.இறைவன் ஆசிர்வதிக்கறதை நாம உணரறதில்லை.அதுக்காக அவர்
ஆசிர்வதிக்கறதில்லைன்னு அர்த்தமில்லை.அப்படித்தான் அப்பாவும் உன் கிட்ட
சொல்லலேனாலும் மனசுக்குள்ளயாவது ஆசிர்வாதம்தான் பண்ணுவார்.பெரியவங்களோட சில நடவடிக்கைகளுக்கு நாம காரணம் ஆராயாம இருக்கறதுதான் சில சமயம் சரியாருக்கும்.அதனால நீ சந்தோஷமா கலந்துக்கோ.அப்பறம் அப்பாவும் இதனால நிச்சயம் சந்தோஷம்தான் பட போறார். ஓகே?"
வியப்பும் தெளிவுமாய் சரயுவை பார்த்து தலையாட்டினாள் அருணா.
"என்ன இப்பிடி முழிச்சுண்டு நிக்கற?என்னோட சேர்ந்து நீயும் இன்னொரு டீ குடி.
போய் ரெண்டு பேருக்கும் கலந்துண்டு வா" என்றாள் சரயு.
19 comments:
//பெரியவங்களோட சில நடவடிக்கைகளுக்கு நாம் காரணம் ஆராயாம இருக்கிறது தான் சில சமயம் சரியாயிருக்கும்//
சரியாகத்தான் சொல்லியிருக்கீங்க !
[Copy & Paste பண்ண முடியாம ஏதோ சிக்கல் இருக்கு உங்கள் வலைப்பூவில் - அதையும் பெரியவங்களோட நடவடிக்கையாய் நினைத்து காரணம் ஆராயாம நானே டைப் அடித்து விட்டேன். சரிதானே? சரியாத்தான் இருக்கும்.]
நல்ல வித்தியாசமான சிந்தனை
நல்ல நடை நல்ல பதிவு
வாழ்த்துக்கள்
அவர் ஏன் ஆசிர்வாதம் பண்ணலை ? ஆடறது பிடிக்கலையா ?? அதை பத்தி சின்ன ஒரு தகவல் கொடுத்து இருக்கலாமே
நல்லாவே கதை சொல்றீங்க
அப்புறம் அசீர்வாதம்தான்
கதை ஓக்கே ராஜி
@வை கோபாலகிருஷ்ணன்
கருத்துக்கு நன்றி சார்
காப்பி பேஸ்ட் பண்றதுல என் வலைப்பூவில்
என்ன பிரச்சனைனு எனக்கு தெரியல.இதுக்கு முன்னாடி
மேடம் வசந்தா நடேசன் அவர்களும் என்னோட 'அம்பேத்கரும் நானும்" ங்கற
பதிவுல இதை குறிப்பிட்டிருக்காங்க.ஆனாலும் எனக்கு என்ன பிரச்சனைனு
தெரியல.வேறு யாருக்காவது தெரிந்தாலும் தயவு கூர்ந்து கூறவும்.
குறிப்பிட்டதுக்கு நன்றி
தாங்கள் வயது,அனுபவம்,எழுத்து என எல்லாவற்றிலும் மிகவும் பெரியவர்.
தாங்கள் என் நடவடிக்கைகளை அறியாத நடவடிக்கையாகவே கருதலாம்.
@நன்றி
@எல் கே
பெரியவங்க நடவடிக்கையை சில சமயம் ஆராய வேண்டாம் என்பதே
கருத்து.சரயு கூறியது போல் அவருக்கு ஏதாவது விரக்தி மன நிலை இருந்திருக்கலாம்.
சமயத்தில் நாம் விரக்தியில் என்ன செய்கிறொம் என்பது நமக்கே தெரிவதில்லை என்பதால்
அவ்வாறு விட்டிருந்தேன்.எனினும் தங்கள் கருத்தின் படி இது போன்ற விஷயங்களில் இனி கவனம்
செலுத்துகிறேன்.கருத்துக்கு நன்றி
பெரியவங்க ஆசிர்வாதம் பற்றி, ஒரு கதையாகவே சொல்லிட்டீங்களே! அருமையாக வந்து இருக்குங்க.
(P.S. I couldn't copy and paste too...)
நல்ல கதை. நிறைய விஷயங்களில் பெரியவர்கள் செய்யும்/சொல்லும் விஷயங்களுக்கு நிச்சயமாய் காரணம் இருக்கும். உண்மையான விஷயம்! பகிர்வுக்கு நன்றி சகோ.
சாரிங்கோவ், நான் மேடம் இல்லை.. என் ப்ரொபைலை பார்க்கவில்லை என நினைக்கிறேன்.. பரவாயில்லை. //பெரியவங்க நடவடிக்கை// பெரியவர் யார் என்பதைப்பொருத்து மாறுபடும் என நினைக்கிறேன், நல்ல கட்டுரை, பகிர்ந்தமைக்கு நன்றி.
Nice blogging.
அப்பா ஏன் அப்படிச் சொன்னார்னு அவர் சைட் விளக்கமும் போட்டிருந்தால் இன்னும் களை கட்டியிருக்கும்!
Nalla kathai...
Arumaiya ezhuthi irukkinga...
நன்றாக இருந்தது. பெரியவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு அர்த்தம் இருக்கும் என்று அழகாக கூறியுள்ளீர்கள்.
கருத்தும் கதையும் நல்லாயிருக்கு.
நல்ல கருத்துடன் கூடிய கதை...
கதை நல்லா இருக்கு தொடர்ந்து எழுதுங்க...........வாழ்த் துக்கள்
கதை அருமை உங்கள் சிந்தனைக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்
தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in
@கோபி ராமமூர்த்தி
நன்றி
@சி பி செந்தில்குமார்
நன்றி
@சித்ரா
கருத்துக்கு நன்றி
@வெங்கட் நாகராஜ்
நன்றி
@வசந்தா நடேசன்
தவறுக்கு வருந்துகிறேன்.பெயரைப் பார்த்து நானே
முடிவு செய்து விட்டேன்.இப்பொழுதான் உங்கள் வலைப்பூவை பார்த்தேன்
கருத்துக்கு நன்றி
@ஜெரி ஈசானந்தன்
நன்றி
@மாதவி
கருத்துக்கு நன்றி
சே குமார்
நன்றி
@கோவை2தில்லி
நன்றி
@திருமதி பி எஸ் ஸ்ரீதர்
நன்றி
@தோழி பிரஷா
நன்றி
@நிலாமதி
நன்றி
Post a Comment