மறக்கவே முடியாது.
கணுப்பிடி கொண்டாட்டத்தில் நம்ம ஆஞ்சூஸ் தான் கதாநாயகன்.ஆஞ்சநேயருடைய பிரதிநிதியாக குரங்கு கூட்டத்தையே பார்க்கலாம் இங்கே.
கணுப்பிடி அன்று வீட்டின் மொட்டை மாடியில் பிடி வைப்பதற்காக சுத்தமாக பெருக்கி தண்ணீர் தெளித்து கோலம் போட்டு விளக்ககேற்றிய பின்னர், பிடி சாதம் இலைகள் எல்லாம் கொண்டு வருவதற்கு முன்னால் சில காபந்து வேலைகள் அவசியம் செய்ய வேண்டியிருக்கும்.
முதலில் வீர பாண்டிய கட்டபொம்மன் கணக்காக கையில் தடியுடன் கணவர் மாடிக்கு ஏறுவார்.பின்னர் ஏற முடியாமல் கஷ்டப்பட்டாவது மாமியார் ஏறுவார். அவருக்கு பின்னால் நானும் என் பெண்ணும் பிடி சாத வகைகளுடன் ஏறியதும் பின்னால் இன்னொரு தடியுடன் வீர பாண்டிய கட்டபொம்மனின் தகப்பனார் ஏறுவார்(மாமனார்).
இவ்வளவு ஜாக்கிரதை உணர்வுடன் ஏறி இலையை வைத்ததுதான் தாமதம்,நான்கு பக்கங்களிலிருந்தும் பாய்ந்து ஒடி வருவார் நம்ம ஆஞ்சூஸ் தன் குடும்ப சகிதமாக.
உடனே நம்ம கட்டபொம்மனும், அவர் தந்தையும் தன் சாகசங்களை ஆஞ்சூஸ் குடும்பத்துக்கேதிரே பிரயோகிக்க எதற்கும் அடங்காத சில முரட்டு 'ஆஞ்சூஸ்'கள் பல்லைக் காட்டி 'குர்'ரென தன் குடும்ப சவுண்டை குடுக்கும்.
இதற்கு நடுவே நாங்கள் மூவரும் அவசர அவசரமாக இலையில் பழம் கரும்பு வைத்து பிடி சாதத்தை நடுங்கிக் கொண்டே வைக்க, அப்பொழுதுதான் பூமிக்கே வந்தாற் போல் இருக்கும் குட்டியூண்டு ஆஞ்சூஸ்கள் ஒடி வந்து பழத்தை எடுக்கும்.
மாடியின் மூலையில் ஊசி பட்டாசு வைத்து கிடைக்கும் 'கேப்' பில் பிடி வைப்பதும் உண்டு.
காக்கைக்கு பிடி வைப்பது குரங்கு பிடியாகி விடும்.நமக்கு, எந்த பறவை எந்த விலங்கு சாப்பிட்டாலும் ஒன்றுதான் என்றாலும் பிடி வைப்பதற்குள் உன்னைப் பிடி என்னைப் பிடி என்றாகி விடும்.
இன்றோ சென்னை வாசத்தில் மாடியில் குரங்கும் இல்லை.காவலுக்கு கட்டபொம்மன் வருவதில்லை.மாடி ஏற முடியாத நிலையில் மாமனாரும்,மாமியாரும் என்றான பின் குடும்பத்துடன் வைத்த கணுப்பிடி காணாமல் போனது.
சோளிங்கர் ஆஞ்சூஸ் பத்தி மட்டும் எழுதிட்டு 'உம்மாச்சி' பத்தி எழுதலேனா எப்பிடி?
அக்காரக்கனியான அந்த எம்பெருமான் பெரிய மலையில் யோக கோலத்தில் வீற்றிருந்து அருள் பாலிக்கிறார்.இந்த தலத்துக்கு 'திருக்கடிகை' என்ற பெயருண்டு.கடிகை என்றால் நாழிகை என்று பொருள்.ஒரு நாழிகைக்குள் சப்த ரிஷிகளுக்கும் இங்கு பிரத்யட்சமாகி அருள் பாலித்ததால் இந்த பெயர்.
கார்த்திகை ஞாயிற்றுக்கிழமை பெருமாளை சேவிப்பது இங்கு மிக விசேஷம்.
மொத்தம் ஆயிரத்து முன்னூற்று பத்து படிக்கட்டுக்கள் ஏறி சேவிக்கும்பொழுது பக்தி பரவசத்தில் ஆழ்ந்து விடுவோம்.
சிறிய மலை நானூறு படிக்கட்டுக்கள் கொண்டது.இங்கு ஆஞ்சநேய சுவாமிகள், பெரிய மலையில் உள்ள யோக நரசிம்மரை நோக்கி யோக கோலத்தில் வீற்றிருந்து சங்கு சக்கரத்துடன் அருள் பாலிக்கிறார்.சப்த ரிஷிகளுடைய தவத்துக்கு இடையூறு செய்யும் அசுரர்களிடமிருந்து அவர்களை காக்க இந்த்ரத்யுமன் என்ற அரசனுக்கு துணையாக சங்கு சக்கர கோலத்தில் ஆஞ்சநேயர் சென்றதால் இங்கு இக்கோலத்தில் காட்சி அளிக்கின்றார்.

தாயார் அம்ருத பலாவல்லி, அமிர்தத்துக்கு ஒப்பான பலனை அளிக்கும் காருண்ய கோலத்தில் காட்சியளிக்கின்றார்.

இம்மலைகளைத் தவிர ஊர்க்கோவில் ஒன்று உண்டு.இங்குதான் பக்தோசிதன்(பக்தர்களுக்கு உசிதமானவன்) என்ற திரு நாமத்துடன் உத்சவர் எழுந்தருளி இருக்கிறார்.இங்கு ஐப்பசி மாத திருக்கல்யாண உத்சவமும்,சித்திரை பிரம்மோத்சவமும் மிக சிறப்பு வாய்ந்தவை,கணுப்பிடி அன்று உத்சவர், கிரி ப்ரதட்சினத்துக்கு இரண்டு மலைகளையும் சுற்றிக் கொண்டு இருபத்தைந்து கிலோ மீட்டர் எழுந்தருளுவார்.மலையடிவாரத்தில் தக்கான் குளம் என்ற பெரிய குளம் ஒன்றும் அதை ஒட்டிய வரதர் கோவிலும் உண்டு.
அக்காரக்கனி அனைவருக்கும் அருள பொங்கல் நன்னாளில் பிரார்த்திக்கிறேன்.

26 comments:
நம் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகள் காலம் கடந்து நினைக்கையில் அதனுள்தான் எத்தனை இனிமை!
ஆஞ்சநேயர்..ஆஞ்சூஸ்..இப்படி ஒரு செல்லப்பேரு!! இப்பதான் கேள்விப்படுகிறேன்.
ராஜி மேடம், சூப்பர் பதிவு
நான் சோளிங்கர் போன கதை இருக்கே. அது தனிக்கதை. முடிஞ்சா படிங்க.
http://ramamoorthygopi.blogspot.com/2010/09/blog-post_06.html
பதிவு நல்ல அருமையாகவும், படிக்க ஸ்வாரஸ்யமாகவும் இருந்தது.
ஒரு ஐந்து வருடம் முன்பு நானும் என் பையனும், மேலும் இரு நண்பர்களும் [ஜோஸ்யர் ஒருவர் சொன்ன பரிகாரம் செய்ய] ஒரு காரில் சோளிங்கருக்குச் சென்று வந்தோம். முதல் நாள் இரவு ராணிப்பேட்டை BHEL Guest House இல் தங்கி விட்டு மறுநாள் விடியற்காலம் கிளம்பி நீங்கள் சொன்ன இரண்டு மலைகளிலும் ஏறி ஸ்வாமி தரிசனம் செய்து வந்தோம்.
1310+400 = 1710 படிக்கட்டுகளிலும் படிக்கு பத்து குரங்குகள் வீதம் மொத்தம் 17100 குரங்குகளைத் தாண்டி போய் வருவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது எங்களுக்கு.
கீழே உள்ள கடைக்காரர் கொடுத்த தடிக்குச்சிகள் ஆளுக்கு ஒன்று வீதம் கையில் வைத்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் இறுக்கிப்பிடித்துக்கொண்டு பயந்து கொண்டே ஏறினோம். அது ஒரு பெரிய கதை / அனுபவம்.
பாதி மலையில் ஒருவர் சுடச்சுட வடை சுட்டு தைர்யமாக விற்று வருகிறார். அவரிடம் உள்ள வடைகளை அவைகள் நெருங்காத வண்ணம் பயமுறுத்தி வைத்துள்ளார்.
அவரிடம் காசு கொடுத்து நாம் வாங்கும் வடைகளைத் தான் அவை பிடிங்கிச் செல்லும். அவரிடம் நேரிடையாக அவைகள் வாலாட்டினால், இரும்புச் சட்டியில் கொதிக்கும் எண்ணையை, ஜாரிணிக் கரண்டியால் அவைகள் மீது தெளித்து விடுவாராம்.
இதைக் கேட்டதும் எங்களுக்கே பயமாகிப் போய் விட்டது. அவரிடம் வடைகளை வாங்கி அஞ்சூஸ்களுக்கு சாப்பிட விட்டெறிந்து விட்டு, அந்த இடத்தை விட்டு உடனே நகர்ந்து விட்டோம், கொதிக்கும் எண்ணெய் நம் மீதும் தவறுதலாகத் தெளிக்கப்பட்டு விடுமோ என்ற பயத்தில்..
பொங்கல் திருநாளில் தங்கள் தயவில் அம்ருத பலாவல்லித் தாயாரை மீண்டும் தரிஸிக்கும் பாக்கியம் பெற்றேன். மிக்க நன்றி.
Arumaiyana anmeega pathivu.
வீரபாண்டிய கட்டபொம்மன் இல்லாமல் யாரும் தைரியமாக கணுப்பிடி வைக்க முடியாது!!! ஏனென்றால் ஊரில் விடியற்காலை குளத்தோரத்தில் வைக்கும் போது ஆம்பிளைத் துணையாக இந்த அஞ்சாநெஞ்சன் சென்ற ஞாபகம் வருகிறது. அதை எழுதினால் இன்னும் நிறைய எழுதணும்.. அதனால இத்தோட நிறுத்திக்கிறேன். (அதனால தான் என் பதிவுலையே எழுதலை.. )
உங்க பதிவு லைவ்வா இருக்கு ;-) சூப்பர். ;-)
சோளிங்கர் நானும் சென்று வந்திருக்கிறேன். அதி அற்புதமான கோயில் ;-)
சோளிங்கர்...
நரசிம்மரை தரிசிக்க சென்ற ஞாபகம் இருக்கிறது...
அதென்ன அஞ்சூஸ்... நாங்க எல்லாம் அவரை செல்லமா “ஆஞ்சி”ன்னு தான் சொல்லுவோம்...
எப்படியோ எல்லாரும் மாத்தி சொன்னாலும், உம்மாச்சி வந்து கண்ண குத்த போறதில்ல... அதானே....
நேத்திக்கு ஆத்துல கணுப்பிடி வச்சேளா?
நேரம் இருக்கறச்சே, இங்கேயும் வந்து பாருங்கோ....
வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம் (பகுதி-1) http://edakumadaku.blogspot.com/2011/01/1.html
வெட்டி வேரு வாசம்.. வெடலை புள்ள நேசம் http://jokkiri.blogspot.com/2011/01/blog-post.html
கோவில் பத்தின தகவல் அருமை, தாயாரோட படம் கொள்ளை அழகு. ஆஞ்சு எங்க வந்தாலும் சிரிப்பு தான். ஆஞ்சு வேஷம் போட்ட வானரத்தொட கதைதான் நானும் எழுதி இருக்கேன்!..:)
ஆஞ்சு கதை சூப்பர்! சோளிங்கர், நான் வெகு நாளாக செல்ல நினைத்துக்கொண்டு இருக்கும் திருத்தலம்! நகைச்சுவையாய் உங்கள் நினைவுகளை எங்களுக்கும் பகிர்ந்ததற்கு நன்றி.
உண்மைதான் வித்யா மேடம்.
தாங்கள் கூறுவது மிக சரி
@சிவகுமார்.
ஆமாம் மிஸ்டர் சிவகுமார்.கடவுளையும் நம் குழந்தைகள் போல் செல்லப் பெயர் வைத்து கூப்பிடலாம்,தவறொன்றுமில்லை
@கோபி
நன்றி கோபி சார்.நீங்க போய்ட்டு வந்த கதையை நான் ஏற்கனவே படிச்சாச்சு.அதுல உங்க ப்ரொஃபைல் ஃபோட்டோவைக் கூட பாக்க
சொல்லிருந்தீங்களே
@வை.கோபாலகிருஷ்ணன்
நீங்கள் கூறுவது உண்மைதான்.மலைக்கு செல்லும் வழியில் படிக்கட்டுக்களில் எல்லாம் குரங்குகள் அமர்ந்திருக்கும்.
ஆனால் நம் கையில் எதுவும் கொண்டு செல்லாமல் சென்றால் நம்மை ஒன்றும் செய்யாது.அவ்வாறு கொண்டு சென்றால் அதை பிடுங்கும்
வரை நம்மை விடாது.தூக்கிப் போட்டு விடுவது நலம்.பலர் வேண்டுமென்றே குரங்குகளை சீண்டி வேடிக்கை பார்த்து நன்றாக அதனிடம் வாங்கி கொள்வார்கள்
@சே.குமார்
கருத்துக்கு நன்றி
@ஆர் வி எஸ்
கருத்துக்கு நன்றி சார்
@ஆர்.கோபி
கரெக்ட்.எப்பிடி கூப்பிட்டாலும் உம்மாச்சி உம்மாச்சிதான்
@தக்குடு
தாயாரின் அழகுக்கு அவர் முகத்தில் ததும்பும் காருண்யமே காரணம்
@வெங்கட் நாகராஜ்
கருத்துக்கு நன்றி
இடுகை நல்லாருக்குப்பா..
i like yr way of writing style..anjanaeyar - aanjush.. good post
in tamilmanam vote pattai , u have some problem i think. because i voted 2 times, but cant. 13 coments only yr vote added.. so complaint to the admin of tamilamanm.
சோளிங்கர் ”யோக நரசிம்மர்” கோவில் பற்றிய விவரங்கள் அருமை. சந்தர்ப்பம் கிடைக்கும் போது போக வேண்டும். ”அஞ்சூஸ்” பேர் நல்லா இருக்கே. குரங்கு கூட்டத்துக்காக பயந்து நடுங்கிக் கொண்டே கணுப்பிடி வெச்சீங்கன்னா இங்க தில்லியில் நானும் என் மகளும் குளிரில் நடுங்கிக் கொண்டே மாடியில் கணுப்பிடி வைத்து விட்டு ஓடி வந்து விடுவோம்.
அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள்..
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
தமிழின் “ழ” வும் உச்சரிப்பு உபத்திரமும்.
உங்கள் பதிவைப்படித்த பிறகு அந்த கோவிலுக்கு ஒருமுறை சென்றுவிட்டு வர தோணுகிறது
வெற்றிமாறனின் திரைக்கதை நுணுக்கங்கள்
சோளிங்கர் பற்றி அறிந்துகொண்டேன்.
@அமைதிச்சாரல்
நன்றி
@சி.பி. செந்தில்குமார்
நன்றி.தமிழ் மணம் பற்றிய தகவலுக்கும் நன்றி.இருந்தும் அது எனக்கு சரியாக புரியவில்லை.
எவ்வாறு புகார் செய்வது?
@கோவை2தில்லி
கட்டாயமாகப் போய் வாருங்கள்.அவசியம் போக வேண்டிய அருமையான மலைக்கோவில்
@ம.தி.சுதா
நன்றி
@கவிதைக் காதலன்
சென்று வர வேண்டிய கோவில்
@மாதேவி
நன்றி
மத்த மலைகள்ல இருக்கறது மாதிரி இல்லாம சோளிங்கர்’ல இருக்கறது ஸ்பெஷல் டிரெய்னிங் எடுத்த மிலிடெரி குரங்குகள்..
ரொம்ப சின்ன சின்ன விஷயங்களகூட சீரியஸா கவனிச்சு எழுதறீங்க..
அதனாலதான் நீங்கள்லாம் எழுதறீங்க.. நாங்கள்லாம் படிக்கிறவங்களா மட்டும் இருக்கோம்...
“ பணி தொடர பணிவான வாழ்த்துக்கள் “
” மாற்றுத்திறனாளிகள் “ ங்கிறமாதிரி... “ ஆஞ்சு-ஆஞ்சூஸ் “னு நிரந்தரமாக்கிட்டா என்ன? ரொம்ப செல்லமா இருக்கே !!
(அதுங்க செல்லப்பிராணிகளா ???!!)
நன்றி ஸ்ரீனி.நீங்களும் முயற்சி செய்தால் இதை விட பிரமாதமாகவே எழுதலாம்.
"ஆஞ்சு" செல்லப் பெயர்தான்.குழந்தைகளுக்கு செல்லப் பெயர் வைக்கும்பொழுது சமத்துக் குழந்தையா வால் குழந்தையா என்று
பார்ப்பதில்லை.அது போல்தான் இதுவும்.
'ஆஞ்சு" செய்யும் சில சேட்டைகளை பார்த்தால் சிரிப்புதான் வரும்
வலைச்சரத்தில் பார்த்து வந்தேன் ........... உங்கள் பதிவுகள் அனைத்தும் நன்றாக உள்ளது ........... நன்றி
கோவில்பற்றி நிறைய தகவல்கள் தெரிந்துகொண்டேன் நல்ல பகிர்வு
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்கம்மா...
சோளிங்கர் தரிசனம் உங்களால் மீண்டும்.
ரசித்து படித்தேன்.
கற்பனையில் அஞ்சுஜை கண்டு வயுறு வலிக்க சிரித்தேன்.
ஆஹா என்ன ஒரு அனுபவம்.
அருமை
விஜி
Post a Comment