இந்த தலைப்பில் தொடர்பதிவு எழுத என்னை அழைத்த பதிவர்கள் திருமதி மனோ மேடம் அவர்களுக்கும்,திருமதி பி எஸ் ஸ்ரீதர் அவர்களுக்கும் எனது நன்றிகள்.
நான் இந்த தலைப்பை ஒரே பதிவிலேயே இரு பிரிவுகளாகப் பதிய விரும்புகிறேன்.எந்த ஒரு விஷயத்திற்கும் இரு பக்கங்கள் உண்டு என்பதால் நான் அதன் இரு பக்கத்தையும் காணவும் பகிர்ந்து கொள்ளவும் விரும்புகிறேன்.
இனி அவற்றைப் பார்க்கலாம்.
துருவன் : புராணக்கதைகள் அறிந்த எவருக்கும் இந்த பெயர் புதிதல்ல.
தந்தை உத்தானபாதரின் மடியில் இடம் கிடைக்காமல் ஏங்கிய குழந்தை
மகரிஷி நாரதரின் வழிகாட்டலில் மிகவும் உயரிய இடத்திற்கு சென்ற சின்னஞ்சிறு பாலகன்.

துருவ சரிதத்தில் நாம் அறிவது என்னவென்றால் தோல்வியை ஏற்கும் மனப்பான்மையை குழந்தை அறிய வேண்டும்.அவ்வாறு ஏற்ற தோல்வியை வெற்றியின் படிகளாக மாற்றும் மனப்பான்மையும் குழந்தைக்கு போதிக்கப் படவேண்டும்.
இப்படி தோல்வியை ஏற்கும் மனப்பான்மை அற்ற இன்றைய குழந்தைகள்தான்
மன வலிமை இழந்து தற்கொலை போன்ற அபாயகரமான முடிவுகளுக்குத் தள்ளப் படுகிறார்கள்.கேட்டது எல்லாமே கிடைக்கப் பெறும் குழந்தைகள் இம்மாதிரி தோல்விகளை சந்திக்க இயலாதவர்களாகி விடுகின்றனர்.ஒளி வீசும் நட்சத்திரமாக துருவன் வாழ்ந்த பரதக் கண்டத்தில் அவன் வாரிசுகள்
ஒளியிழக்கலாமா? எனவே குழந்தைகளுக்கு எவற்றையும் ஏற்கும் மனோ வலிமையை போதிப்போம்.
ப்ரஹ்லாதன் : தவறு செய்பவன் தந்தை எனினும் துணை செல்லாதவன்.
எந்த தவற்றுக்கும் துணை போகாத குணமுள்ள குழந்தைகளாக வளர்த்தால்
வீடு மட்டுமன்றி நாடும் நலம் பெறும்.அத்தைகைய சூழலுக்கு முதலில் நாம் தவறுகள் செய்வதை நிறுத்தல் வேண்டும்.நாம் முதலில் தவற்றுக்கு துணை
போகக் கூடாது.
இதற்கு ஒரு நகைச்சுவையையும் உதாரணம் சொல்லலாம்.கேட்பதற்கு நகைச்சுவை போல் தோன்றினாலும் கருத்து அடங்கியது.
தந்தை: ஏன்டா அழற?
மகன்: பக்கத்துப் பையன் பென்சில் திருடினதால டீச்சர் அடிச்சிட்டங்கப்பா.
தந்தை: பென்சில் இல்லைன்னா ஏன்டா திருடற? என் கிட்ட சொல்லி இருந்தா
நான் ஆஃபீஸ்லேருந்து எடுத்துக்கிட்டு வந்திருப்பேன் இல்ல?
தந்தை செய்வதுதான் மகனிடம் இறங்குகிறது.
மார்க்கண்டேயன்:

குறைவான ஆயுள் என்பதை அறிந்தும் இறையின் மேல் நம்பிக்கை வைத்து கலங்காமல் மனோதிடம் கொண்டு வாழ்ந்த பாலகன்
நம்பிக்கை குழந்தைகளுக்கு போதிக்கப் படவேண்டிய வாழ்வின் முக்கிய அம்சம்.எதையும் கலங்காமல் நம்பிக்கையுடன் எதிர் நோக்க குழந்தைகளுக்கு
சொல்லித் தரப் பட வேண்டும்.
இப்படி வாழ்வு என்பது எப்படி இருக்க வேண்டும் , ஒரு குழந்தை எப்படி வளர்க்கப் பட வேண்டும் என்பதெல்லாம் நம் புராணத்தில் இருந்து நாம் நிறைய அறிதல் வேண்டும்.அறிந்தால் மட்டும் போதாது.அதைச் செயல் பாட்டில் கொண்டு வந்தால்தான் அது முழுமையடையும்.
அடுத்த பகுதியாக இன்றைய நிலைக்கு வரலாம்.
கரடி மாமா கரடி மாமா எங்கே போறீங்க?
காட்டுப் பக்கம் வீடிருக்கு அங்கே போறேங்க.
கம்பளிச் சட்டை ஜோரா இருக்கு யாரு தந்தாங்க?
கடவுள் தந்த பரிசுதாங்க, வேறு யாருங்க?
ஒரு சாதாரண குழந்தைப் பாடல்.அதில் ஒரு குழந்தைக்கு கரடி என்ற விலங்கைப் பற்றியும் காடு என்பதான அதன் வீடு பற்றியும் அதன் உடல் முழுதும் முடி படர்ந்திருக்கும் என்றும் அது கம்பளிபோல் இருக்கும் என்று கம்பளி பற்றியும் கடவுள் தந்த பரிசு என்று இறை உணர்வையும் கலந்து தரும் பாடல்.
இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் குழந்தையின் அறிவும் சிந்திக்கும் திறனும் வளர்க்கப் பட வேண்டும்.
குழந்தையின் சந்தோஷங்கள் சுருங்காமல் மகிழ்வான சூழல்கள் உருவாக்கித் தருதலும் நம் கடமை.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வே நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வே.உடனொத்த குழந்தையுடன் ஒற்றுமை வாழ்வு புகட்டப் படல் அவசியம்.ஒருவருகொருவர் உதவி செய்து கொள்ளல் போன்ற நல்லுணர்வுகள் கற்றுத் தரப் பட வேண்டும்.இதற்கெல்லாம் முதலில் நாம் முன்னோடியாக இருத்தல் அவசியம்

குழந்தைகளின் குறும்புகள் ரசிக்கப் படவேண்டும்.ஆபத்தற்ற எந்த குறும்புகளையும் கட்டுப் படுத்தல் அவசியமில்லை.அவ்வாறு கட்டுப்படுத்துவது அவர்களது தன்னம்பிக்கையை குறைக்கும்.அதே சமயம் அவர்களது குறும்புகள் எல்லையற்றதாக ஆகி விடாமலும் பிறரை பாதிக்கா வண்ணம் இருக்கவும் கற்றுத் தரப் பட வேண்டும்.

கட்டுரையின் கடைசிப் பகுதியை நாம் நெருங்கிக் கொண்டிருக்கிறோம்.ஆனால் இதுவே இதன் முக்கிய பகுதி
மழலையின் இன்பம் பெரிதுதான்.ஆனால் அது எம்மாதிரி சந்தர்ப்பங்களில்?
எப்பேர்ப்பட்ட துன்பமும் ஒரு குழந்தையின் சிறு புன்னகையில் பறந்து விடும்தான்.அதில் மறுப்பில்லை.ஆனால் அந்த மழலைகளின் துன்பம்
எல்லா விதங்களிலும் தீர்க்கப் படுகிறதா?
என் வீட்டுக் குழந்தையின் குறும்பிலே நான் மகிழ்கிறேன்.உங்கள் வீட்டு மழலையின் குறும்பும் அவ்விதமே.ஆனால் நம்மில் எத்தனை பேருக்கு ஒரு மன நலம் குன்றிய மழலையை முகச் சுளிப்பற்று ரசிக்கத் தோன்றி இருக்கிறது.
அம்மாதிரிக் குழந்தைகளின் உலகம் மகத்தானதாக மாற நாம் எத்தனை பேர்
என்ன முயற்சி செய்திருக்கிறோம்?
2009 ல் நடந்த ஒரு நிகழ்வு ஒன்றை இங்கே பகிர விரும்புகிறேன்.கர்நாடகாவின் ஒரு கிராமத்தில் ஒரு சூரிய கிரஹணத்தன்று அந்த கிரஹணம் முடியும் வரை மன நலம் குன்றிய குழந்தைகளை கழுத்து வரை குழியில் புதைத்தால் குணம் காணலாம் என்று செய்தி பரப்பி அம்மாதிரி 108 குழந்தைகளைப் புதைத்தனர்.அக்குழந்தைகள் பயத்திலும் பீதியிலும் துடித்து குரல் எழுப்ப கூட வலுவற்று பரிதாபமான நிலைக்கு தள்ளப் பட்டனர்.குழந்தைகள் தினம் கொண்டாடும் நம் நாட்டில் இந்த கொடுமைகளை அகற்ற என்ன முயற்சி எடுக்கப் படுகிறது?
இன்றைய செய்தி ஒன்று.சீர் திருத்தப் பள்ளியிலிருந்து 16 குழந்தைகள் தப்பி ஓட்டம்.
இதில் எத்தனை குழந்தைகள் எந்த தீவிரவாதியின் பிடியில் சிக்கி பிஞ்சுக் கரத்தில் ஆயுதம் ஏந்த பழக்கப் படுத்தப் படுகிறதோ?அவர்கள் உலகம் மகத்தானதா?
நம் வீட்டுக் குழந்தைகளின் பிறந்த நாளை இனிப்புடன் கொண்டாடச் செய்யும் நாம், நம் குழந்தைகளுக்கு அவர்கள் பிறந்த நாளை கஷ்டத்தில் இருக்கும் குழந்தைக்கு உதவும் நாளாக சொல்லித் தருகிறோமா? பூகம்பத்திலும் சுனாமியிலும் வீடிழந்து உறவிழந்த குழந்தைகள் பற்றி விழிப்புணர்வைத் தந்திருக்கிறோமா? அவ்வாறு இழப்பில் இருக்கும் குழந்தைகள் உலகம்
மகத்தானதாக ஏதேனும் செய்திருக்கிறோமா?

நம் குழந்தைகளை நாம் பெருமைப் படுத்திக் கொண்டிருக்கும் சமயத்தில்
உலகில் ஏதேனும் ஒரு குழந்தை ஒருவேளை உணவிற்காக கையேந்திக் கொண்டிருக்கலாம்.நல்ல வாழ்வு வாழ்ந்து கொண்டிருந்த ஒரு குழந்தை கடத்தப் பட்டு கை கால் முடக்கப் பட்டு பிச்சைப் பாத்திரம் ஏந்தலாம்.பணத்திற்காக கொலை செய்யப் படலாம்.இந்த அவலத்தை தடுக்க
நம்மால் எவ்விதத்திலேனும் இயலுமா?
இந்த கட்டுரையை நான் எழுதிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இதை நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் உலகின் ஏதோ ஒரு மூலையில் ஏதேனும் ஒரு ஆறு அல்லது ஏழு வயது குழந்தை யாரோ ஒரு கயவனின் பாலியல் இச்சைக்கு இரையாகிக் கொண்டிருக்கலாம்.அந்த குழந்தைகளின் உலகம் இனி மகத்தானதாக அமையுமா?
இந்த சமூக அவலங்கள் ஒழிய நாம் எவ்விதமேனும் சிறிதளவாவது முயன்றால்தான் "மழலைகள் உலகம் மகத்தானது" என்று மார் தட்டிக் கொள்ளலாம்.அதுவரை நம் வீட்டு மழலைகள் உலகம் மட்டுமே மகத்தானது என்று நாம் பொய்யான பெருமைதான் பட்டுக் கொள்ள முடியும்
மழலைகள் மீண்டும் துருவ நட்சத்திரங்களாக மாறும் நாள் வேண்டும்.அதுவரை மழலைகள் உலகம் மகத்தானது என்பதன் அருகில் நாம் கேள்விக் குறி போட்டுக் கொள்வோமா?
எந்த விழிப்புணர்வும் இல்லாத வாழ்வை நாமும் வாழ்ந்து அதையே குழந்தைகளுக்கும் அளித்தால் ஒரு உணர்வற்ற வாழ்வு மிஞ்சி இந்த நிலை வரலாம்.

பாரத நாடு பழம்பெரும் நாடு நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர் !!
இதனைத் தொடர சக பதிவர்களில் எழுத்தாளர் வித்யா சுப்ரமணியம் மேடத்தை இரு வாண்டுகளை ஒரே நேரத்தில் சமாளிக்கும் பாட்டி என்ற முறையிலும், குட்டிப் பெண்ணுக்கு அம்மாவாக சுழலும் திருமதி ஆதியையும், இரு சுட்டிப் பெண்களின் தந்தை என்ற முறையில் திரு ஆர் வி எஸ் அவர்களையும் குட்டிப் பையனின் தந்தையான திரு கோபி ராமமூர்த்தி அவர்களையும் அழைக்கிறேன்.

32 comments:

தந்தை செய்வதுதான் மகனிடம் இறங்குகிறது///
கரடி மாமா கரடி மாமா எங்கே போறீங்க?
காட்டுப் பக்கம் வீடிருக்கு அங்கே போறேங்க.
கம்பளிச் சட்டை ஜோரா இருக்கு யாரு தந்தாங்க?
கடவுள் தந்த பரிசுதாங்க, வேறு யாருங்க? //
அம்புளி மாமா அம்புளி மாமா எங்கே போறீங்க?
நிலாக்குள்ள உலகம் இருக்கு அங்கே போறேங்க..
வட்ட முகம் அழகா இருக்கு யாரு தந்தாங்க?
கடவுள் தந்த பரிசுதாங்க வேறு யாருங்க?:)
அடடா...அம்புலிக்கு அம்புளின்னு போட்டுட்டேனே...ஹ்ஷ்ஷ்
//நம் வீட்டுக் குழந்தைகளின் பிறந்த நாளை இனிப்புடன் கொண்டாடச் செய்யும் நாம், நம் குழந்தைகளுக்கு அவர்கள் பிறந்த நாளை கஷ்டத்தில் இருக்கும் குழந்தைக்கு உதவும் நாளாக சொல்லித் தருகிறோமா? பூகம்பத்திலும் சுனாமியிலும் வீடிழந்து உறவிழந்த குழந்தைகள் பற்றி விழிப்புணர்வைத் தந்திருக்கிறோமா? அவ்வாறு இழப்பில் இருக்கும் குழந்தைகள் உலகம்
மகத்தானதாக ஏதேனும் செய்திருக்கிறோமா?
////
நல்ல கேள்விகள்...மிக அழகாக சிந்தனைகளைதட்டி எழுப்புமளவில் பதிவு செய்துள்ளீர்கள்.
அனைத்து கருத்துக்களும் உதாரணங்களும் அருமை ராஜி!!
Tamilmanam : 2
INDLI : 3
Udance: 3
Very Good Analysis of various aspects.
//மழலைகள் உலகம் மகத்தானது (?)//
Heading: Quite justified.
The 4th picture is very nice.
Thanks for sharing.
vgk
பென்சில் காமெடி அருமை.உங்கள் கட்டுரை நிறைய யோசிக்க வைக்கின்றன.
இந்த சமூக அவலங்கள் ஒழிய நாம் எவ்விதமேனும் சிறிதளவாவது முயன்றால்தான் "மழலைகள் உலகம் மகத்தானது" என்று மார் தட்டிக் கொள்ளலாம்.அதுவரை நம் வீட்டு மழலைகள் உலகம் மட்டுமே மகத்தானது என்று நாம் பொய்யான பெருமைதான் பட்டுக் கொள்ள முடியும்
சிரிக்க வைக்கிற மாதிரி சொல்லிக் கொண்டே சீரியசாய் கேட்டு விட்டீர்கள்.
புராணக்கதை உணர்த்தும் கருத்துக்களும்,அடுத்த நகைச்சுவையும் சூப்பர்.அடுத்த பகுதியின் கருத்துக்களும்,கேள்விகளும் எல்லோர் மனதிலும் தாமரை இலை தண்ணீர் போலதான் உள்ளது.முடிந்தவரை நல்லதும்,உதவியும் செய்வோம்.முடியாதபட்சத்தில் நாம் வேடிக்கை பார்க்கத்தான் தள்ளப்படுவோம்.
சிந்தனைகளைத் தூண்டும் அருமையான பகிர்வு.ஒரு குழந்தைக்காக கவிதை எழுதியிருந்தீங்களே அந்த குழந்தைபோலவே உள்ளது படுத்திருக்கும் குழந்தை.
விரிவான தெளிவான அனைவருக்கும்
ஒரு செயல்படும்படியான விளக்கத்தையும் சொல்லிப் போகும்
பதிவு மிக மிக அருமை.வாழ்த்துக்கள்
த.ம 3
எத்தனை வலிமையான கேள்விகள்? எவரிடமும் பதில்தான் இல்லை. வகையாய் வாழும் வழியற்றக் குழந்தைகளின் வாழ்க்கையில் அவர்கள் சந்திக்கும் துன்பங்கள்தாம் எத்தனை எத்தனை? படித்து முடிக்கையில் மனதின் பாரம் அழுத்துகிறது ராஜி.
எளிமையான வரிகள். ஆனால் அழுத்தமான கருத்துக்கள்.
புராணக் கதைகளின் குழந்தைகளை உதாரணமாகக் கொள்ளச் சொல்லியதும், கரடிப் பாடலும், அப்பாவின் நடத்தை ஜோக்கும் சொல்லி ரசிக்க வைத்து இறுதியில் வலிமையான கேள்வி ஒன்றை எழுப்பி மனதை கனக்கச் செய்து விட்டீர்கள். ஆழ யோசித்தால் நம் குழந்தைகள் உலகத்தைத்தான் மகத்தானதாக மாற்ற யோசித்திருக்கிறேன். எல்லாக் குழந்தைகளுக்குமாக யோசித்து மிக உயரத்திற்குச் சென்று விட்டீர்கள் ராஜி. உங்களுக்கு எத்தனை குழந்தைகள்? (கொடுத்து வைத்தவர்கள் புரிதலுள்ள தாய் கிடைப்பதற்கு) வாழ்த்துக்கள்...
சிறப்பான கருத்துக்கள் அருமை
மிக கவனமாக படித்தேன். சில குறிப்பிட்ட விசயங்கள் எனக்குள்ளும் சிந்தனையை தூண்டிவிட்டன. உண்மைதான் மகத்தானது என்பதை உணர்வதற்கும் சொல்வதற்கும் மனம் வேண்டும். குரங்கு கையில்.... என்பதுபோல் மூடர்களும் இருக்கும் மிக்க இந்த உலகத்தில் இதையெல்லாம் கடக்க வேண்டிதான் இருக்கிறது. அருமையான கருத்துக்கள்.
உதாரணத்திற்கு புராணக்கதை சொல்லி புரியவைத்திருப்பது நல்ல உத்தி. பதிவு நல்லா இருக்கு.
வாழ்த்துகள். நல்ல பதிவு.
துருவனும் ப்ரஹ்லாதனும் பக்தி செலுத்துவதற்கு வயது ஒரு தடையில்லை என்றும் சிறு வயது முதலே பக்தியில் மக்கள் திளைக்கவேண்டும் என்றும் உலகிற்கு எடுத்துரைக்க வந்த மஹான்கள்.
பெரிய ஆட்களுக்கு மத்தியில் என்னையும் ரிலேவுக்கு கூப்பிட்டிருக்கிறீர்கள். இதுபோல இல்லாவிட்டாலும் முயற்சிக்கிறேன். :-)
நான் ஊர் போயிருந்த போது ஒரு நாள் என் மனைவி : அய்யய்யோ இவள் ஒன்னுமே படிக்கலையே எப்பிடி எக்ஸ்சாம் எழுதப்போராலோன்னு ஒரே கரைச்சல் பண்ணி கொண்டிருந்தவளை இடைமறித்த மகள், மம்மி நீங்க எதுக்கு டென்சன் ஆகுறீங்க நான் சூப்பரா எழுதிட்டு வாறேன்னு போனவள், பஸ்ட் மார்க்கோடு வந்து என் மனைவிக்கு பல்ப் கொடுத்தாள், ஸோ அவர்கள் உலகமே வேறுதான்...!!!
அருமையான பகிர்வு ராஜி. புராணக் கதைகளையும், நிதர்சன உண்மைகளையும் சரியாச் சொல்லியிருக்கீங்க.
அழைப்புக்கு நன்றி. ஆச்சியும் கூப்பிட்டிருக்காங்க.இப்போ நீங்களும். விரைவில் பதிவிடுகிறேன்.
//நம்பிக்கை குழந்தைகளுக்கு போதிக்கப் படவேண்டிய வாழ்வின் முக்கிய அம்சம்.எதையும் கலங்காமல் நம்பிக்கையுடன் எதிர் நோக்க குழந்தைகளுக்கு
சொல்லித் தரப் பட வேண்டும்.//
அருமையான கருத்து .
//இதற்கெல்லாம் முதலில் நாம் முன்னோடியாக இருத்தல் அவசியம்//
சரியாக சொன்னீர்கள் .இன்னமும் யோசித்துகொண்டிருக்கிறேன் பதிவின் இரண்டாம் பகுதியை பற்றியே
//இந்த சமூக அவலங்கள் ஒழிய நாம் எவ்விதமேனும் சிறிதளவாவது முயன்றால்தான் "மழலைகள் உலகம் மகத்தானது" என்று மார் தட்டிக் கொள்ளலாம்.//
நியாயமான கருத்து
நச்...
ஒவ்வொரு மண்டையிலும் குட்டு...
நல்ல பகிர்வு....
தெளிவான பதிவு ராஜி. நானும் எழுதுகிறேன். ஆனால் கொஞ்சம் டைம் வேண்டும்.
குழந்தைகளை வாழப் பயிற்றுவிக்கும் வழிமுறைகளை அருமையா சொல்லி இருக்கீங்க ராஜி..
@மழை
கருத்திற்கு நன்றி
@ஷைலஜா
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
@மனோ மேடம்
தொடருக்கு அழைத்த தங்களின் எதிர்பார்ப்பை நான்
எந்த அளவில் பூர்த்தி செய்திருக்கிறேன் என்று தெரியவில்லை
@வை கோபாலகிருஷ்ணன் சார்
நன்றி சார்
@விச்சு
இந்த தலைப்பே யோசிக்க வேண்டிய ஒன்றுதான்
@ரிஷபன்
எல்லாரிடமுமே இந்த கேள்விகள் இருக்கின்றனதான்.ஆனால் முயற்சியாக மாறினால் தேவலை
@thirumathi bs sridhar
இந்த கேள்வி தாமரை இலைத் தண்ணீராக இருந்தால் போதாது.பெருக்கெடுத்து ஓடும் ஆற்றின் தண்ணீராக மாற வேண்டிய கேள்வி.பிற பகுதிகளை ரசித்தமைக்கும் கருத்திற்கும் நன்றி
@ரமணி சார்
நன்றி சார்
@கீதா
உண்மைதான்.ஆனால் இதற்கெல்லாம் பதிலுக்கு எவரிடமும் செல்ல வேண்டியதில்லை.ஒவ்வொருவரின் ஒத்துழைப்பும் இருக்கும் பட்சத்தில்
@பாலா
கருத்திற்கு நன்றி
@கணேஷ்
உண்மையில் எல்லா தாய்களின் மனத்திலும் உள்ள கேள்விகள்தான் இவை.
எனக்கு ஒரு மகள்தான்.அவளுக்கு உடன்பிறந்தோர்
இருக்கும் பாக்கியம் எனக்கு கடவுள் அருளவில்லை.
@K.s.s.Rajh
நன்றி
@சாகம்பரி மேடம்
கருத்திற்கு நன்றி மேடம்
@லக்ஷ்மிம்மா
நன்றிம்மா
@RVS
பக்திக்கு வயது தேவையில்லை என்பது அவர்கள் சரிதம் அறிந்தாலே நேரிடையாக தெரியும் புரிதல்.அதைத் தவிர அவர்கள் வாழ்க்கை முறையில் நாம் தெரிந்து கொள்ளவும் நிறைய உள்ளது.
நீங்களும் எழுத்தில் பெரிய ஆள்தானே
இதை விட அருமையான எழுத்தல்லவா தங்களது.
கருத்திற்கு நன்றி
@MANO நாஞ்சில் மனோ
அவர்கள் உலகத்தை நாம்தான் புரிந்து கொள்வதில்லை.கருத்திற்கு நன்றி
@கோவை2தில்லி
கருத்திற்கு நன்றி ஆதி
தொடர்பதிவிற்கு காத்திருக்கிறேன்
@angelin
முதலாவது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.தங்கள் பதிவும் நன்றாக இருந்தது.
@suryajeeva
பலமா?!
@வெங்கட் நாகராஜ்
நன்றி சார்
@வித்யா சுப்ரமணியம்
நன்றி மேடம்.மெதுவாவே எழுதுங்க.அவசரமில்லை.
@தேனம்மை லெக்ஷ்மணன்
கருத்துக்கு நன்றி மேடம்
//சமூக அவலங்கள் ஒழிய நாம் எவ்விதமேனும் சிறிதளவாவது முயன்றால்தான் "மழலைகள் உலகம் மகத்தானது" என்று மார் தட்டிக் கொள்ளலாம்.அதுவரை நம் வீட்டு மழலைகள் உலகம் மட்டுமே மகத்தானது என்று நாம் பொய்யான பெருமைதான் பட்டுக் கொள்ள முடியும்//
ரொம்பச் சரியா சொன்னீங்க லாஜி. நாம கஷ்டப் படலைங்கறதுக்காக உலகத்துல கஷ்டமெல்லாம் தீர்ந்துடுச்சுன்னு சொல்லிட முடியாது இல்லியா..
பெற்றோர்களையும் அவர்களின் பெற்றோர்களையும் சுற்றியே குழந்தைகளின் ரசனையும் முதிர்ச்சியும் சுபாவங்களும் வளர்ச்சியும் அமைகின்றன.
விதைப்பவர் ஒருவர் விதைக்கும்பொழுது சில விதைகள் வழியோரம் விழ பறவைகள் அவற்றை விழுங்கி விட்டன.வேறு சில விதைகள் பாறைப் பகுதிகளில் விழுந்தன. அங்கே மண் ஆழமாக இல்லாததால் அவை விரைவில் முளைத்தன;ஆனால் கதிரவன் மேலே எழ, அவை காய்ந்து,வேரில்லாமையால் கருகிப் போயின. மற்றும் சில விதைகள் முட்செடிகளின் இடையே விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து அவற்றை நெருக்கிவிட்டன.ஆனால் இன்னும் சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவற்றுள் சில நூறு மடங்காகவும் சில அறுபது மடங்காகவும் சில முப்பது மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன.
அப்படித்தானே ராஜி?
@அமைதிச் சாரல்
மழலைகளாகட்டும் சிறுவர்களாகட்டும் நம்மைச் சுற்றியும் நாம் பார்க்க வேண்டும் இல்லையா?
@சுந்தர்ஜி
என்ன ஆழமான கருத்தை அனாயாசமாகக் கூறிவிட்டீர்கள்.நன்றி ஜி
புராணக்கதை நல்ல உக்தி..அழகா எழுதியிருக்கீங்க...மழலைகள் உலகம் மகத்தானது தான்...வாழ்த்துக்கள்
புரணக்கதை எடுத்து காட்டுடன் கூடிய உங்கள் கட்டுரை மிக அருமை தோழி.
என்ன துயரம் இருந்தாலும் மழலைகல் சிரிப்பில் எல்லாம் பஞ்சாய் பறந்து விடும்
@ரெவெரி
நன்றி
@jaleela kamal
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி தோழி!
மீண்டும் எனது பதிவுகளுக்கு வருகை தந்து சிறப்பிக்கவும்.
புராணக்கதைகளை மேற்கோள் காட்டி நீங்க எழுதியிருப்பது மிக அருமை,ராஜி.
Post a Comment