ரொம்ப நாளா பதிவு பக்கம் வாராம இருந்தான்னு பாத்தா இப்ப இப்பிடி ஒரு அதிர்ச்சியோட வந்து கலங்கடிச்சுட்டாளேன்னு தோணுதா? என்ன பண்றது? அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க.சமூகத்துல இதெல்லாம் சகஜம் :-)
இதை அப்லோட் செய்ய உதவிய தலைநகரத்திற்கு நன்றி.
(இதுக்கு நீ வேற உதவியான்னு கேட்டு உங்க பதிவுல கல் வந்து விழுமோன்னு பயந்துதான் உங்க லிங்க் குடுக்கல தலைநகரம் சார்!)
26 comments:
அட்ஜஸ்ட் பண்ணிகிட்டோம் அடிக்கடி வந்து இப்படி அதிர்ச்சி வைத்தியம் கொடுங்க
இந்த காணொளியை ஏற்கனவே சென்ற வாரம் Youtube-ல் பார்த்தேன் - கேட்டு ரசித்தேன்.
நல்ல பகிர்வுக்கு நன்றி.
நீண்ட இடைவெளிக்குப்பின் ராஜியின் ரகளைகளை மிகவும் ரஸித்தேன்.
>>>>>>>
அழகான மேடை, அற்புதமான கலைஞர்கள், போட்டி போட்டுக்கொண்டு வீணா கான மழை.
இங்கு வெளியே இப்போது பெய்யும் மழையையும் அறியாமல் மெய்மறந்து கேட்டு ரஸித்தோம்.
>>>>>>>
ஆடியன்ஸ் கும்பலில் எவ்வளவு பேர்கள் !!!!!
மெய்மறந்து தாளம் போட்டு, தலைகளை ஆட்டிக்கொண்டு ரஸிக்கிறார்கள்.
அப்பப்பா ..... அனைத்தும் ஜோர் ஜோர் .....
>>>>>>>
அருமை ராஜி.. நல்லதொரு பகிர்வுக்கு நன்றி.
அப்பப்போ வந்து இப்படி ரகளை பண்ணுங்க.....:)
பச்சை புடவையில் பிரமாதம்.
நடுவில் இங்கு திருச்சியில் நீண்ட நேர முழு நேர மின்
தடை, மழை புயல் அறிகுறிகள். அதனால் பின்னூட்டத்தின் தொடர்ச்சியில் தாமதம்.....
>>>>>>>
எங்கு நடைபெற்றது? என்றையதினம் நடைபெற்றது? எனத்தகவல் ஏதும் தராதது ஏனோ?
OK OK புரிகிறது. காரணமில்லாமல் ஏதும் தாங்கள் செய்ய மாட்டீர்களே !!
>>>>>>>>
சரஸ்வதி தேவியின் பரிபூர்ண கடாக்ஷம் தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும், அண்டா அண்டாவாகப் பொழியப்போகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று நான், அன்றே சொன்னேன் அல்லவா!
-=-=-=-=-=-=-=-=-=-
Reference:
http://gopu1949.blogspot.in/2011/12/blog-post.html
VGK said...
***உங்கள் எழுத்துக்களைப் பற்றி நானும் திரு. ரிஷபன் சாரும், மிகவும் பாராட்டி வெகு நேரம் இன்று பேசிக்கொண்டிருந்தோம். உங்களுக்கு எழுத்துலகில் நல்ல பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்***- VGK
Raji said...
***குடத்தில் சரஸ்வதி அமுதம் பெற்றவர்கள் ஸ்பூனில் பெற்றவர்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தாலே குட அமுதம் பெற்றார்போல்தான். பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.*** - Raji
VGK said...
***உங்கள் எழுத்துக்களில் உள்ள கம்பீரம், அதில் நாளுக்கு நாள் தோன்றும் நல்ல முதிர்ச்சி, தங்கள் குரலில் உள்ள குயிலின் இனிமை, பிறருக்கு உதவ வேண்டும் என்ற தங்கமான குணம், எல்லாவற்றையும் விட அதிமுக்கியமாக ஒருவருக்கு இருக்க வேண்டிய தன்னடக்கம் எல்லாமே ஒருசேர இருப்பதை, நான் இப்போது உணர்ந்துள்ளேன்.
அதனால் இந்த நல்ல குணங்களெல்லாம் ஒன்றாகச் சேரும் போது, சற்றே உங்கள் முயற்சியும், கடின தொடர் உழைப்பும், அதிர்ஷ்டமும் எங்களின் மனப்பூர்வ ஆசிகளும் சேரும் போது, சரஸ்வதி தேவியின் அருள் அண்டா அண்டாவாக பலத்த மழைபோல கொட்டிவிடும்.
கவலை வேண்டாம். எடுத்தவுடனேயே கொட்டிவிட்டால் சின்னக் குழந்தைக்கு மூச்சுத் திணறிவிடும் அல்லவா!
அதனால் தான் சற்றே தாமதம் ஆகியுள்ளது. இப்போது தான் பக்குவமான பருவம் உங்களுக்கு பலத்த பாராட்டு மழைகளில் நனைய! ;)))) அன்பான வாழ்த்துக்கள்.
பிரியமுள்ள - VGK ***
-=-=-=-=-=-=-=-=-=-
இப்போ அதை பிரத்யக்ஷமாகத் தெரிந்து கொண்டீர்கள், அல்லவா!
இசை மூலம், அதுவும் வீணை இசை மூலம், சுகமாக பொழிந்துள்ள இசை மழையில் எங்களையும் சொட்டச்சொட்ட நனையவைத்து விட்டீர்களே! ;)))))
>>>>>>>>
மனமார்ந்த பாராட்டுக்கள்,
அன்பான வாழ்த்துகள்,
அழகான பகிர்வுக்கு நன்றியோ நன்றிகள்.
பிரியமுள்ள,
VGK
இது போன்ற ரகளைகள் இன்னும் தொடரட்டும். வாழ்த்துகள் :-)
இனிமையான இசை. வீணை வாசிக்கிறவங்க யாரு யாருனு ரெண்டு வரி எழுதக்கூடாதோ? இது என்ன இடம்?
ஆஹா.. சொல்லவே இல்ல.. வீணா கானம் ரசித்தேன்
கல் விழும் விஷயம் காலையில் இல்லையே! :)
வியப்பு,வியப்பு !!!!
திருஷ்ட்டி சுத்தி போட்டுக்கங்க.
இன்னும் பல பேர் முன்னிலையில் உங்கள் வாசிப்பு திறமை வெளிப்பட வாழ்த்துகள்.
வாசிக்க தெரியாட்டாலும் வீணைய வச்சு போட்டோ எடுத்துக்கணும்னு எனக்கு ரொம்ப நாள் ஆசை.
thirumathi bs sridhar said...
//வியப்பு,வியப்பு !!!!
திருஷ்ட்டி சுத்தி போட்டுக்கங்க.//
அதே! அதே !!
//இன்னும் பல பேர் முன்னிலையில் உங்கள் வாசிப்பு திறமை வெளிப்பட வாழ்த்துகள்.//
த தா ஸ் து ! ;)))))
//வாசிக்க தெரியாட்டாலும் வீணைய வச்சு போட்டோ எடுத்துக்கணும்னு எனக்கு ரொம்ப நாள் ஆசை.//
நான் நினைச்சேன். நீங்க சொல்லிட்டீங்க!
ஆனால் எனக்கு அந்த வீணையின் அடிபாகம் போல தொந்தியுள்ளதால் எனக்கு அதுபோலெல்லாம் நிஜமாகவே ஆசையில்லீங்கோ! ;)))))
நம்பாவிட்டால் தயவுசெய்து இங்கே இந்த இணைப்புக்குப்போய் பாருங்கோ:
http://gopu1949.blogspot.in/2011/03/blog-post_28.html
அன்புடன்
VGK
ரகளையை ரசித்தேன்...
ராஜியின் ரகளைகள் இனிமை ..வாழ்த்துகள்.
simply great.happy to see you on stage. Good performence. Keep it up.
அடாடா! நீங்க வீணையெல்லாம் வேற வாசிப்பீங்களா? இதமான நாதம்.. சுகமான ரகளை... நானும் சிலகாலம் வீணை கத்துகிட்டேன்.. வீணை டீச்சர் அப்பால் நகர்ந்த பின் ' மேரா ஜீவன் கொராகாகஸ்'ன்னு சினிமா பாட்டுல்லாம் வாசிப்பேன். வீணை மாமியிடம் திட்டு வாங்குவேன்..
அப்புறமா வாசிக்கிறது புத்தகங்களை மட்டும் தான்.. வித்தைக்கெல்லாம் சரஸ்வதி கடாக்ஷம் வேணுமில்லையோ? இப்படி அடிக்கடி ரகளை பண்ணுங்க.. விசிலடிக்க நாங்க இருக்கோம் ராஜி!
இது ஸ்கூலா சபாவா? முழுசா கேட்க நேரம் இல்லை! வாழ்த்துக்கள்!
"Ninnukori" varnam sounded great! I like the sound of veena a lot. Such a heavy yet pleasing sound... I have always wanted to learn how to play it. But never got the chance... What event is this?
wow...super akka. what is the occasion?
ஆஹா ராஜி ஒரு வழியா வந்து பார்த்து கேட்டு ரசிச்சாச்சு. சூப்பர்.
வணக்கம் சகோதரி...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_29.html) சென்று பார்க்கவும்... நன்றி...
Post a Comment