Saturday, March 26, 2011

ஊடல்



Two People with Broken Hearts Facing a Seperation

 ஒருநாள் ஒரு யுகமானது

 ஒருவர் இருவர் ஆனதால்.


வார்த்தைகளற்ற வெற்றிடம்

வளர்ந்து வதைத்தது.


மௌனமே வலியின்

மொழி பெயர்ப்பானது.


அலுவலகமோ அசட்டையானது

அடுப்பங்கரையோ அனலடித்தது.


உதடுகள் சிரிக்க மறுத்தது

உணவு உப்பு இழந்தது.


குழந்தைத் தூதுகள்

குடையை விரித்தது.


எனினும் வலியும் சுகமே

ஏங்கிக் காத்திருக்கையில்.


உன் பார்வைக்கு நானும்  

என் சிரிப்பிற்கு நீயும்

எதிர்பார்த்திருக்கையில்,


கூடலின் சுவை கூட்டக் கூடிய 

ஊடலின் வலியும் சுகமே  



25 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

கூடலின் சுவை கூட்ட[வழி காட்டக்]கூடிய கவிதை.

வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.


Copy & Paste செய்வதில் நமக்குள் மீண்டும் ஊடல் ஏற்பட்டுள்ளது.

அதனால் Retype செய்ய வேண்டியுள்ளது.

எனினும் [அந்த] வலியும் சுகமே!

அன்புடன் vgk

Chitra said...

கூடலின் சுவை கூட்டக் கூடிய

ஊடலின் வலியும் சுகமே


....... அருமையாக எழுதி இருக்கீங்க... :-)

Unknown said...

நிஜந்தாங்க...

சி.பி.செந்தில்குமார் said...

ராஜி வீட்ல சண்டைப்போட்டுடாங்கப்பா.. ஹா ஹா

சி.பி.செந்தில்குமார் said...

அடேங்கப்பா.. அதுக்குள்ள தமிழ்மணத்துல 5 ஓட்டு வாங்கிட்டீங்களே.. செம ஸ்பீடு வளர்ச்சிதான்.. அப்புறம் லேபிள்ல கவிதை என மட்டும் போடாமல் இப்போது மீண்டும் எடிட் ல போய் அனுபவம்,வாழ்க்கை நிகழ்வுகள் என டைப்பவும். இப்போ தமிழ் மண முகப்பில் 2 பிரிவுகளில் உங்க இடுகை வரும்.. அது அதிக பார்வையாளர்களை வரவழைக்கும். ஒரு படைப்பாளிக்கு அதிக பார்வையாளர்கள் படித்தால் மகிழ்ச்சிதானே..

சி.பி.செந்தில்குமார் said...

>> ஒருவர் இருவர் ஆனதால்.

பொதுவா இருவர் ஒருவர் ஆகினர் என வர்ணீப்பாங்க... நீங்க வித்தியாசமா சிந்திச்சிருக்கீங்க.. குட்

எல் கே said...

ஊடலும் கூடலும் சகஜம் தானே ??

சக்தி கல்வி மையம் said...

ஊடல், கூடல் .. அனைவரின் வீட்டிலும்..
அசத்தல் கவிதை..

R. Gopi said...

சாண் ஏறினால் முழம் சறுக்கும் என்பது பழமொழி. ஊடல் அதைத் தொடர்ந்து வரும் கூடல் இந்தப் பழமொழியின் உல்டா. அடுத்தடுத்த ஊடல்களுக்குப் பிறகு வரக்கூடிய கூடல் புது உயரங்களைத் தொடுகிறது.

வை.கோபாலகிருஷ்ணன் said...

தாங்கள் வெளியிட்டுள்ள காதல்/அன்பு சின்னமாகிய அந்த ஹாட்டின் படத்தை சட்டெனப்பார்பவர்களுக்கு, அன்பில் ஏதோவொரு விரிசல் ஏற்பட்டுள்ளதாகவே தெரியும்.

அந்த விரிசலை மறந்துவிட்டு, அந்தப்படத்தையே உற்றுப்பார்த்தால் தான் அதில் ஒரு ஆணும் பெண்ணும் நெருங்கி வந்துள்ளது புலப்படும்.

எவ்வளவு பேர் இதை நுணுக்கமாக கவனித்து ரசித்தார்களோ?

அல்லது ஒருவேளை இந்த என் பின்னூட்டத்தைப் படித்த பிறகு மீண்டும் அதை உற்றுப்பார்பார்களோ!

அந்த ஓவியம் மிகவும் ஒரு அர்தபுஷ்டியுடன் வரையப்பட்டுள்ளதே!!

கலைக்கண்ணுடன் நோக்குபவர்களுக்கும், ஓவியத்தில் விருப்பம் உள்ளவர்களுக்கும் மட்டுமே புலப்படும் ஒன்று.

அதைத்தேடிப்பிடித்து பொருத்தமாக வெளியிட்டமைக்கு நன்றிகள்.

Nagasubramanian said...

அட வாழ்கையில இதெல்லாம் சகஜம் தானே??

Anonymous said...

//உதடுகள் சிரிக்க மறுத்தது

உணவு உப்பு இழந்தது.//

அந்தக்குறை இனி இல்லை. கழகங்களின் இலவச திட்டங்களை கேட்ட நாள் முதல் "ஈ" என்று இழித்த பல தமிழர்கள் உதடு இன்னும் சிரித்துக்கொண்டே இருக்கிறது, அயோடின் கலந்த உப்பு இலவசம் என்ற செய்தி கேட்டதும் இழந்த "ரோஷம்" திரும்ப வந்தது. செந்தமிழ் நாடென்னும் போதினிலே...இலவச சத்தம் கேக்குது காதினிலே....வந்...தே..மா..தாரம்!

RVS said...

//மௌனமே வலியின்

மொழி பெயர்ப்பானது.//

ரசித்தேன். ;-))

ஊடல் கூடலுக்கு முதற்படி. அற்புதமான வரிகள். ரொம்ப நல்லா இருக்குங்க..;-)

கமலேஷ் said...

ஊடலை கவிதையில்
ரொம்ப நல்லா பேசி இருக்கீங்க..

வாழ்த்துக்கள்

தொடருங்கள்.

ஆச்சி ஸ்ரீதர் said...

தினமும் சந்தோஷமா/துக்கமா இருந்தால் அதுவும் சலித்துவிடும்,ஊடலுக்கு பின் கூடல் சுகம்தான்,நீங்கள் சொல்லிய விதம் அருமை.

jothi said...

க‌விதை அருமை. ச‌ண்டைக‌ள் இல்லாத‌ அன்பில் சுவார‌ஸ்ய‌மில்லை.

//அந்த விரிசலை மறந்துவிட்டு, அந்தப்படத்தையே உற்றுப்பார்த்தால் தான் அதில் ஒரு ஆணும் பெண்ணும் நெருங்கி வந்துள்ளது புலப்படும்.

அல்லது ஒருவேளை இந்த என் பின்னூட்டத்தைப் படித்த பிறகு மீண்டும் அதை உற்றுப்பார்பார்களோ! //

ஐயா சொன்ன‌பின் தான் நானும் க‌வ‌னித்தேன். ஊட‌லுக்கு பின் இணைந்த‌ அந்த‌ இருவ‌ரில் ஒருவ‌ருக்கு த‌லையில் ப‌ல‌த்த‌ அடிப்ப‌ட்டுள்ள‌து, அது ஆணா பெண்ணா என‌ தெரிய‌வில்லை

வை.கோபாலகிருஷ்ணன் said...

jothi said...
க‌விதை அருமை. ச‌ண்டைக‌ள் இல்லாத‌ அன்பில் சுவார‌ஸ்ய‌மில்லை.

//அந்த விரிசலை மறந்துவிட்டு, அந்தப்படத்தையே உற்றுப்பார்த்தால் தான் அதில் ஒரு ஆணும் பெண்ணும் நெருங்கி வந்துள்ளது புலப்படும்.

அல்லது ஒருவேளை இந்த என் பின்னூட்டத்தைப் படித்த பிறகு மீண்டும் அதை உற்றுப்பார்பார்களோ! //

ஐயா சொன்ன‌பின் தான் நானும் க‌வ‌னித்தேன். ஊட‌லுக்கு பின் இணைந்த‌ அந்த‌ இருவ‌ரில் ஒருவ‌ருக்கு த‌லையில் ப‌ல‌த்த‌ அடிப்ப‌ட்டுள்ள‌து, அது ஆணா பெண்ணா என‌ தெரிய‌வில்லை


அது ஆண் தான்.
அது அடி அல்ல, அவரின் முடி (கர்லிங் ஹேர்)

தினமும் அவளுடன் இப்படி ஊடலும் கூடலுமாக இருப்பதால் நொந்து போய் மண்டை பிளந்திருக்கலாம்.

அல்லது அவளே கூட செல்லமாக ஒரு கொஞ்சலில் அவர் மண்டையைப் பிளந்திருக்கலாம்.

ஊடலில் இதெல்லாம் சகஜமப்பா !
உமக்குக் கல்யாணம் ஆயிடுச்சா, நண்பரே!

jothi said...

//ஊடலில் இதெல்லாம் சகஜமப்பா !//

ம‌ண்டையை பிள‌க்கிற‌ மாதிரி இருக்கிற‌தென்றால் அது பெய‌ர் ஊட‌லா?? ந‌ல்ல‌ வேளை இது வ‌ரை என‌க்கு ம‌ண்டை பிள‌க்க‌வில்லை.

//உமக்குக் கல்யாணம் ஆயிடுச்சா, நண்பரே! //

ஒரே ஒரு முறை க‌ல்யாண‌ம் ஆயிருச்சு சார் :(

raji said...

@வை கோபாலகிருஷ்ணன் சார்

வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி சார்

காப்பி பேஸ்ட் சரியாகி விட்டது

@சித்ரா

நன்றி சித்ரா

@கலாநேசன்

ஆமாம்

@சி பி செந்தில்குமார்

ஆஹா!என்ன ஒரு கண்டுபிடிப்பு! என்ன ஒரு சந்தோஷம்!

தமிழ்மண தகவல்களுக்கு நன்றி.

பாராட்டிற்கும் நன்றி

@எல் கே

ஆமாம் சார்

@வேடந்தாங்கல்-கருண்

ஆமாம்.எல்லார் வீட்டிலும்தான்

நன்றி

@கோபி ராமமூர்த்தி

உண்மைதான்

@வை கோபாலகிருஷ்ணன் சார்

படத்தின் பாராட்டிற்கு நன்றி

@நாகசுப்ரமணியன்
உண்மையே

@சிவகுமார்

ஒரு மாச தேர்தல் கூத்திற்கு பின் இதையெல்லாம் யாருமே கண்டு கொள்ளவே போவதில்லை

@ஆர் வி எஸ்

ரொம்ப நன்றி ஆர் வி எஸ் சார்

@கமலேஷ்

நன்றி

@திருமதி பி எஸ் ஸ்ரீதர்

ஆமாம்.இரண்டும் கலந்த வாழ்க்கையில்தான் சுவை இருக்கும்.
பாராட்டிற்கு நன்றி

@ஜோதி

பாராட்டிற்கு நன்றி

அது தலையில் அடி அல்ல.ஊடல் வந்த பின் இருவருக்குமே குழப்பங்கள்
ஏற்பட்டுவிடும்.அதனால் தலை குழம்பி இதை எப்படி சரி செய்வது என்ற நிலை.

@ வை கோபாலகிருஷ்ணன் சார்

மனம் ஒத்த தம்பதிகளின் ஊடலிலும் கூடலிலும்
பிளக்கப் படுவது உணர்வுகளே.மண்டை அல்ல

@ஜோதி

ஒரே ஒருமுறை திருமணம் ஆன தங்களின் வருகைக்கு நன்றி.
இந்த ஊடல் பதிவு பார்த்த பின்னும் இன்னொரு திருமணம் பற்றிய எண்ணம் வராதே?

ரிஷபன் said...

குழந்தைத் தூதுகள்
குடையை விரித்தது.
aahaa..

jothi said...

//ஒரே ஒருமுறை திருமணம் ஆன தங்களின் வருகைக்கு நன்றி.
இந்த ஊடல் பதிவு பார்த்த பின்னும் இன்னொரு திருமணம் பற்றிய எண்ணம் வராதே?//

அட‌டா,.. சும்மா ஒரு ஜோக்குக்கு சொன்னேங்க‌,..

சிவகுமாரன் said...

என்ன தான் ஊடல்னாலும் , காரணம் என்னவாயிருந்தாலும் நாங்கதான் முதலில் பணிய வேண்டியிருக்கு டீச்சர்.

raji said...

@ஜோதி

நான் சொன்னதும் வேடிக்கையாகத்தாங்க.

r.v.saravanan said...

ஊடலின் வலியும் சுகமே

அசத்தல் கவிதை..

ADHI VENKAT said...

கவிதை அருமை. வீட்டுக்கு வீடு வாசப்படி.
ஊடலுக்கு பின்வரும் கூடல் சுகந்தான்.

Post a Comment