Monday, March 14, 2011

துணை

முன்கதைக்கு பகுதி 1   மற்றும் பகுதி 2  படிக்கவும்


பகுதி 3


"என்னடி! இது? கையில குழந்தை? யாரோடது?இவ்வளவு காலங்கார்த்தால
யார் வந்துருக்கா?"

"யாரும் வரலைமா.இது யார் குழந்தைனே தெரியாது"

"என்னது? என்னடி குண்டைத் தூக்கிப் போடற?யார் குழந்தைனே தெரியாதா? அப்போ ஏது இது?"

"வாசல் தெளிக்கும்போது நம்ம திண்ணையில இருந்தது.மார்கழிக்
குளிர் வேற. பாவம், எப்படித்தான் தாங்கித்தோ,எவ்வளவு நேரமா இருக்கோ!"

"அச்சச்சோ! எவ என்ன பாவம் பண்ணி இதைப் பெத்து இங்க கொண்டு போட்டாளோ? அதை நீ    ஏன் உள்ள தூக்கிண்டு வந்த?"

"என்ன அத்தை  சொல்றிங்க? பாவம் பச்சைக் குழந்தை.குளிர்ல கிடந்துருக்கு"

"சரி, போகட்டும், இப்ப இதை என்ன பண்றது? ஒண்ணு போலீஸ்ல
ஒப்படைக்கணும் இல்லைனா ஏதாவது ஆசிரமத்துல விடணும்.
இதெல்லாம் நமக்குத்தானா வந்து சேரணும்? ஒண்ணும் சரியாயில்லை"


"இல்லை அத்தை,இதை நாமே வச்சுக்கலாமே ப்ளீஸ்"

"உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு.எவ பெத்த குழந்தையவோ
நாம எப்பிடி வச்சுக்க முடியும்?என்ன குலமோ என்ன கோத்திரமோ?
நாளைக்கே பெத்தவ வந்து வம்பு பண்ணினா என்ன செய்வ?நமக்கெதுக்கு இந்த வேண்டாத தொல்லையெல்லாம்?"


"இல்லை அத்தை!எந்த பிரச்சனையும் வராது.வேண்டாம்னுதான போட்டு போயிட்டாங்க.அப்பறம் எதுக்கு வரப் போறாங்க?அப்பிடியே வந்தாலும் வர வரை நாம வச்சுக்கலாம்"

"என்ன உளர்ற?"

"அடடா! காலங்காத்தால இதென்ன கூச்சல்? வீட்ல மனுஷனை நிம்மதியா தூங்க விடாம"  தூக்கம் கலைந்த எரிச்சலுடன் வந்த விசு கத்தினான்.

"அடேய்! விசு! இங்க பாருடா!உன் பொண்டாட்டி அடிக்கற கூத்தை!
எவளோ தப்பு பண்ணி குழந்தை பெத்து இங்க போட்டு போயித் தொலைச்சுருக்கா.இவ அதை வளப்பாளாம்,என்னடா அநியாயமா இருக்கு?"

"என்னது? என் பொண்டாட்டியா? அது யாரு? எனக்கு அப்பிடி யாருமே கிடையாது. இந்த பஞ்சாயத்தெல்லாம் எங்கிட்ட கொண்டு வராத.
நீ ஒரு தலையெழுத்தை இழுத்துண்டு வந்த.அந்த தலையெழுத்து
இன்னொரு தலையெழுத்தை கொண்டு வந்திருக்கு.நீயாச்சு அதுவாச்சு.
இதுல என்னை இழுக்காத" என்று பிரஷ் எடுத்துக் கொண்டு போய்
விட்டான்.

"இங்க பாருடி! நான் சொல்றதை நல்லா கேட்டுக்கோ. பழையபடி
நீ மட்டும் இங்க இருந்துண்டு வேலை கீலை செஞ்சிண்டு அவனை
சரி பண்ண பாக்கறதானா இங்க இரு.இல்லை குழந்தை குட்டின்னு ஏதாவது பேத்தறதாருந்தா உங்கப்பன் வீட்டுக்கு நடையைக் கட்டு
சொல்லிட்டேன்"

சுமதி மௌனமாய் நின்றாள்.

"என்னடி! நான் பாட்டுக்கு சொல்லிண்டிருக்கேன். பேசாம நின்னா என்ன அர்த்தம்?"

"வெள்ளிக்கிழமை பெண் குழந்தை வீடு தேடி வந்திருக்கு.இதை கையில
எடுத்து அணைக்கும்போது நான் தாய்மைனா என்னனு உணர்றேன்.
இனி உங்க பிள்ளை என்னை மனைவியா ஏத்துக்கறது நடக்காத விஷயம்.
பேருக்கு பொண்டாட்டியா இருக்கறதா விட புதுசா பேர் வைக்கப் போற
இந்த குழந்தைக்கு அம்மாவா இருக்கறதுன்னு நான் முடிவு பண்ணிட்டேன்.
நான் வரேன்"

சுந்தரா அதிர்ச்சியில் உறைந்தாள்

"ன்னம்மா! இப்படி பண்ணிட்ட? " அப்பா ஆற்றாமையாய் கலங்கினார்.

"என்ன செய்ய சொல்றீங்கப்பா? பொண்டாட்டியா நினைக்காத ஒருத்தன்
காலடில கிடந்து  வேலை செய்றத விட இந்த குழந்தைக்கு தாயா
இருந்தா என்னப்பா தப்பு? உங்களுக்கு பாரம்னா சொல்லுங்க நான்
போயிடறேன்"

"என்னடி!இப்படி பேசற? நீங்க கொஞ்சம் சும்மா இருங்களேன்.அவளே நொந்து போயிருக்கா"  என்ற அம்மா குழந்தையை அவளிடமிருந்து
வாங்கிக் கொண்டாள்"

"சரி! இனி என்னம்மா செய்யப் போற?"

"நான் பழையபடி வேலைக்கு போகலாம்னு இருக்கேன்பா.எப்படியும் குழந்தைய வளக்க என்னைக் காப்பாத்திக்க பொருளாதாரம் அவசியம்"

"சரிம்மா!உன்னிஷ்டம்" என்றார் வருத்தம் தோய்ந்த குரலில்.

அடுத்து வந்த நாட்களில் குழந்தை எல்லாருடைய கண்ணையும் கருத்தையும் கவர்ந்து எல்லாருடைய உலகமுமாகி மனதிற்கு பிரியமாகி விட "ப்ரியா" என்று பெயர் சூட்டி அவளது குறும்புகளில் மகிழ்ந்தனர்.
சுமதி குழந்தையினாலும் தன் வேலைச் சுமையினாலும் கிட்டத்தட்ட
பழைய வாழ்வை மறந்தே போனாள்.விவாகரத்தான பின் ஒரு தடவை மட்டும் அவள் தோழி, விசு அந்த புவனாவையே மணந்ததாகாக் கூறிய பின் அதுவும் முற்றிலும்
மனதை விட்டு அகன்றது.

ஆயிற்று!குழந்தைக்கும் இரண்டு வயது பூர்த்தியாகி விட்டது.
போன வாரம்தான் தன் மழலையில், கேக் கத் பண்ணனும்,பலூன் கத்தனும்
என்றெல்லாம் ப்ரியா கொஞ்சிக் கூறியவற்றை நிறைவேற்றி இரண்டாவது
பிறந்த நாளும் கொண்டாடியாகி விட்டது.இப்பொழுது செல்ல தாத்தா
பாட்டியுடன் ஊருக்கு சென்றதில்  ஒரே வெறிச்சென்றிருக்கிறது.

இந்த சமயம் பார்த்து இவன் மீண்டும் எங்கிருந்து வந்து குதித்தான்?
குழப்பத்துடன் இருந்தவளிடம்  ப்யூன் வந்து, "காலைல
வந்தாரே, அவரு வந்திருக்காரும்மா.பாக்கணும்னு சொல்றாரு"
என்றான்

கைப்பையை எடுத்துக் கொண்டு இழுப்பு மேசையைப் பூட்டி விட்டு
எழுந்து சென்றாள்

அவளைக் கண்ட விசு புன்னகைத்து, " பக்கத்துல பார்க்ல போய்
பேசலாமா?" என்றதும் முறைப்புடன் தலையாட்டி  உடன் சென்றாள்

தொடரும்.......

19 comments:

raji said...

@ALL

தொடர்ந்து ஊக்கமளித்து எனக்கு
ஆதரவளிக்கும் சக பதிவர்கள் நூறு பேர்களுக்கும் எனது
நன்றிகள்

சி.பி.செந்தில்குமார் said...

அடடே 100 ஃபாலோயர்ஸ்.. வாழ்த்துக்கள்.. நல்ல முன்னேற்றம்

சி.பி.செந்தில்குமார் said...

>>>பேருக்கு பொண்டாட்டியா இருக்கறதா விட புதுசா பேர் வைக்கப் போற
இந்த குழந்தைக்கு அம்மாவா இருக்கறதுன்னு நான் முடிவு பண்ணிட்டேன்.

நல்ல வார்த்தை ஜாலம்

Yaathoramani.blogspot.com said...

தொடர் சிறப்பாகத் தொடர்கிறது
ஆர்வமாய் தொடர்ந்து வருகிறோம்
தொடர வாழ்த்துக்கள்

எல் கே said...

ஹ்ம்ம் இப்ப எதுக்கு வந்திருக்கிறான் ? தனக்கு குழந்தை இல்லை அந்தக் குழந்தையை குடு என்றா ? இல்லை இவளை வீட்டில் இருந்து அனுப்ப அவனுக்கு முன்பு பிறந்தக் குழந்தையை வாங்கி செல்லவா ??

எல் கே said...

அது யார் குழந்தை ? ஒரு வேலை அவனுக்கும் புவனாக்கும் பிறந்தக் குழந்தையா ?? அதை திரும்ப வாங்க வந்திருக்கானா ??

வை.கோபாலகிருஷ்ணன் said...

//"வெள்ளிக்கிழமை பெண் குழந்தை வீடு தேடி வந்திருக்கு.இதை கையில எடுத்து அணைக்கும்போது நான் தாய்மைனா என்னனு உணர்றேன். இனி உங்க பிள்ளை என்னை மனைவியா ஏத்துக்கறது நடக்காத விஷயம். பேருக்கு பொண்டாட்டியா இருக்கறதா விட புதுசா பேர் வைக்கப் போற இந்த குழந்தைக்கு அம்மாவா இருக்கறதுன்னு நான் முடிவு பண்ணிட்டேன்.//

சூப்பரான முத்திரை வரிகள், துணிச்சலான முடிவு.

//நீ ஒரு தலையெழுத்தை இழுத்துண்டு வந்த.அந்த தலையெழுத்து இன்னொரு தலையெழுத்தை கொண்டு வந்திருக்கு. நீயாச்சு அதுவாச்சு. இதுல என்னை இழுக்காத"//

ஆணவம் மிகுந்த, அற்ப குணம் கொண்ட கதாபாத்திரத்தை அற்புதமாக படைத்துள்ளீர்கள் இந்த வரிகளில்.

//அடுத்து வந்த நாட்களில் குழந்தை எல்லாருடைய கண்ணையும் கருத்தையும் கவர்ந்து எல்லாருடைய உலகமுமாகி மனதிற்கு பிரியமாகி விட "ப்ரியா" என்று பெயர் சூட்டி அவளது குறும்புகளில் மகிழ்ந்தனர்.//

ப்ரியா! தாங்கள் சூட்டிய பெயரும் மிகப் பொருத்தமே!

முடிவுப்பகுதி நெருங்கி விட்டதை உணர முடிகிறது.
தாங்கள் சொல்லப்போகும் முடிவில் தான் உங்களுக்கு செண்டம் கொடுப்பதா வேண்டாமா என்று நான் முடிவு செய்ய வேண்டியிருக்கும்.

அன்பான என் பாராட்டு+வாழ்த்துக்கள்.

அதுவரை நம்
ப்ரியாவை பிரியத்துடன் பிரியும் பிரியமுள்ள vgk

இராஜராஜேஸ்வரி said...

அருமையான கதை. வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

r.v.saravanan said...

தொடர வாழ்த்துக்கள்

ஆச்சி ஸ்ரீதர் said...

சிறப்பான கதையாக செல்கிறது,
அடுத்த பகுதிக்கு
எதிர்பார்ப்புடன்

middleclassmadhavi said...

சுமதி ஏற்கெனவே சரியான முடிவெடுத்தவள்; இனியும் அப்படித்தான் என்ற நம்பிக்கையுடன்...

ADHI VENKAT said...

கதை விறுவிறுப்பாக செல்கிறது. விசு என்ன சொன்னான் என்று தெரிந்து கொள்ள ஆவல்!

R. Gopi said...

\\ middleclassmadhavi said...
சுமதி ஏற்கெனவே சரியான முடிவெடுத்தவள்; இனியும் அப்படித்தான் என்ற நம்பிக்கையுடன்... \\

கதைக்குள்ளே ஓவரா போயிட்டீங்க

வெங்கட் நாகராஜ் said...

மூன்றாவது பகுதியும் நன்றாக இருக்கிறது. வாழ்த்துகள்!

RVS said...

முடிவைக் கொஞ்சம் வித்தியாசமா கொண்டு போங்க.... கிளைமாக்ஸ்க்கு காத்திருக்கிறேன்.. ;-))

raji said...

சி பி செந்தில்குமார்

நன்றி

@ரமணி
நன்றி சார்

@எல் கே

இன்னிக்கு முடிவு தெரிஞ்சிடும்

@வை கோபாலகிருஷ்ண்ன்

தொடரும் ஊக்கத்திற்கும்
கதை பற்றிய அலசலுக்கும் நன்றி சார்

@இராஜராஜேஸ்வரி
நன்றி

@ஆர் எஸ் சரவணன்
நன்றி

@திருமதி பி எஸ் ஸ்ரீதர்

இன்னைக்கு முடிவு

@மாதவி

இன்னைக்கு தெரிஞ்சுடும்

@கோவை2தில்லி

என்ன சொல்றான்னு இன்னைக்கு வந்து படிச்சுடுங்க
கருத்துக்கு நன்றி

@கோபி ராமமூர்த்தி

:-)

@வெங்கட் நாகராஜ்
கருத்துக்கும் ஊக்கத்திற்கும் நன்றி சார்

@ஆர் வி எஸ்

இன்னைக்குத்தான் க்ளைமாக்ஸ்

குறையொன்றுமில்லை. said...

ராஜி நல்லா பொகுது தொடர். தொடர்ந்து மூணுபகுதியும் படிச்சதால தொடர்மாதிரி இல்லாம நீண்ட சிறுகதை போல ரசித்து படிக்க முடிகிரது.

நிரூபன் said...

திருப்பங்களுடன் கதையினைக் கொண்டு செல்கிறீர்கள். இப் பகுதியில் தன்னம்பிக்கையுடன் தனிமரமாக குழந்தையுடன் பிரிந்து செல்லும் தாயைக் காட்டி விட்டு, திடீரென முன்னாள் கணவனையும் அவளையும் சந்திக்க வைக்கிறீர்கள்.

Vijiskitchencreations said...

இன்று தான் முதல் வருகை இங்கே. நான் இந்த கதையை இனிமேல் தான் படிக்கனும் படித்துவிட்டு பதிவு போடுகிறேன். தொடர்கதை என்பதால் பகுதி 1 படிக்கனும். நன்றாக இருக்கு.

Post a Comment