எத்தனை விதம்! எத்தனை விதம்!
வரவேற்பறையில் ஒன்று,
வசீகரிக்கும் வண்ணமயமாக
கூடத்தில் ஒன்று,
கூவுகின்ற குயிலுடனே
சமையலறையில் ஒன்று,
சத்தம் தரும் விதமாக
படுக்கையறையில்ஒன்று
பாடல் ஒலி இசையுடனே 
வட்ட வடிவில் ஒன்று,
வீட்டு வடிவில் ஒன்று
சதுர வடிவில் ஒன்று,
சாய்ந்த வடிவில் ஒன்று

வடிவங்கள் பலவிதம்,
வண்ணங்கள் பலவிதம்
கடிகாரங்கள் பலவிதம் - ஆனால்,
காலமதோ ஒன்றுதான்.
ஆயினும்,
கடிகாரங்கள் ஓடவில்லை
காலமதோ...................????????
கடிகாரப்பழுது சீராகலாம்
காலப்பழுதோ...........????????

26 comments:
கடிகாரம் நின்று போகலாம் .
காலம் நிற்பதுமில்லை. காத்திருப்பதுமில்லை .
அருமை டீச்சர் .
சூப்பர். காலம் யாருக்காகவும் காத்திருக்காது சகோ
இன்னைக்கு பங்குனித்தேர் பற்றி பதிவை எதிர்பார்த்தேன்
உங்க வீட்ல 6 கடிகாரம் இருக்கா? ஓக்கே ஓக்கே.. ஹா ஹா
நல்லகாலம் படிக்க நேர்ந்தது.
’காலம் பொன் போன்றது
கடமை கண் போன்றது’
என்று நச்செனப்புரிய வைத்தது.
காலத்தினால் செய்த கவிதை உதவிக்கு நன்றி!
பாராட்டுகள், வாழ்த்துக்கள்.
கடிகாரம் பற்றிய உண்மைகள் கவிதை வடிவில் யதார்த்தமாக....
எளிமையான தமிழில் அருமை தோழி...
நல்ல கவிதை. காலம் யாருக்காகவும், எதற்காகவும் காத்திருப்பதில்லை! கவிதை மூலம் சொன்னது அருமையாக இருந்தது!
உண்மைதான். காலத்தை ஆட்டிவைப்பேன் என்றான் கண்ணதாசன். காலத்தின் அருமையை வலிமையை ஆளுமையை எளிமையாக உணர்த்திய கவிதை. அருமை.
இத்தன கடிகாரமா.??? வீடு ரொம்ப பெருசோ??? அதவிடுங்க.. வரிகள் அருமை.. தெரிந்த கருத்து.. ஆனால் உணரவேண்டியது தான்..
கடிகாரக்கடை வச்சிருக்கீங்களா? ஹா, ஹா, ஹா.
பிரமாதம்.
ஓடாத கடிகாரங்களாவது
ஒரே நேரத்தைக் காண்பிக்குமா?
:-))
யதார்த்தமாக கடிகாரம் பற்றிய கவிதை.
கடிகாரம் பற்றிய கவிதை அருமை
கடிகாரப்பழுதை சீராக்கலாம். ஆனால் காலப்பழுதை? இந்த வரிகள் அருமை ராஜி.
கடிகாரம் காலம் போன்றதா?
அல்லது காலம் கடிகாரம் போன்றதா?
இரண்டும் ஓடிக்கொண்டே இருக்கவேண்டும் ஓய்வு இல்லாமல்...
மிடில் கிளாஸ் மாதவி, காட்டாது:-) எப்போ நின்னு போச்சோ அந்த நேரத்தைத்தான் காட்டும். ஒரே நேரத்தில் ரெண்டு கடிகாரம் நின்னு போரதுங்குறது ரொம்ப அதிசயமான விஷயம்.
ராஜி மேடம், கடிகாரம் ஓடலை. முள்ளுதான் ஓடுதுங்குறீங்க.
saathaaranamaana chinna chinna vishayangalil thaththuvangal pala pathiththu vaiththirukkira 'panchathanthra' katha pol irunthathu, thangalathu inthak kavithai... kadal karai manal kandirukkum udaintha kilinjalil prapancham arinthathu pondra sugam... :)
காலத்தை கட்டிப் போட முடியாது அப்டீங்கறீங்க... சரியா? ;-)
நல்ல கருத்து நல்ல படைப்பு
கடிகாரப் பழுதுகளை சரிபார்க்கத் துடிக்கும் நாம்
காலப் பழுதுகளை ஏனோ கண்டு கொள்வதில்லை
நல்ல சிந்தனை தொடர வாழ்த்துக்கள்
முதல் கடிகாரம் வித்தியாசமா,அழகா இருக்கு.தினமும் யார பார்க்கிறோமோ,இல்லையோ,இந்த கடிகாரத்தைதான் அதிகம் பார்ப்போம்.நல்ல பகிர்வு.
கடிகாரப்பழுது சீராகலாம்
காலப்பழுதோ...........????????//
காலப்பழுது ஒருபோதும் சீர்ப்படுத்தமுடியாது.
கவனம் மிக அவசியம்.
/கடிகாரங்கள் ஓடவில்லை//
தமிழ் நாட்டின் கால சக்கரம் பின்னோக்கியே செல்கிறது...தேர்தல் அறிக்கைகள்...
காலம் பொன் போன்றது...
கடமை கண் போன்றது...
என்பதை ரத்தின சுருக்கமா (விளக்கமா தான்...) சொல்லி இருக்கிறீர்கள்...
இன்றைய பொழுதை இனிதாக்கி உபயோகமாக கழிப்போம்...
ராஜி மன்னிக்கவும். பதிவுகளை இப்போதுதான் படித்தேன். அனைத்துமே அருமையாக உள்ளது. உங்கள் விஷய ஞானமும், அதை வெளிப்படுத்தும் அழகும் கவர்கிறது.
@சிவகுமாரன்
நன்றி
@எல் கே
உண்மைதான்.நன்றி
@சி பி செந்தில்குமார்
ஒரு கடிகாரத்திற்கு மேல் இல்லாத வீடுகளே கிடையாது
@வை கோபாலகிருஷ்ணன் சார்
பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் நன்றி
@வேடந்தாங்கல் கருண்
நன்றி
@வெங்கட் நாகராஜ்
நன்றி
@ஹரணி
நன்றி
@தம்பி கூர்மதியன்
நன்றி
@லக்ஷ்மிமா
கடிகாரக்கடை வைக்க கூட கால நேரத்தோட அருமை தெரியணுமே
@நாகசுப்ரமணியன்
நன்றி
@மாதவி
உங்களுக்கு கோபி சார் பதில் சொல்லிட்டார்
@சே குமார்
கருத்துக்கு நன்றி
@ஆர் வி சரவணன்
நன்றி
@கோவை2தில்லி
கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி
@நையாண்டி மேளம்
கடிகாரம் ஓடாவிட்டாலும் காலம் ஓடத்தான் செய்யும்
@கோபி ராமமூர்த்தி
ஹை!கரெக்டா புரிஞ்சுக்கிட்டீங்களே.நன்றி
@Matangi Mawley
பதிவை விட உங்கள் பின்னூட்டம் அருமை
@ஆர் வி எஸ்
தெளிவா சொல்லிட்டீங்க
@ரமணி
நன்றி.
போன பதிவுல நீங்க கொஞ்சம் லேட்டா வந்ததும்
உங்க பின்னூட்டத்தை காணோமேன்னு நினச்சேன்.
@திருமதி பி எஸ் ஸ்ரீதர்
ரொம்ப கரெக்ட்.நன்றி
@இராஜராஜேஸ்வரி
கட்டாயமாக
@சிவகுமார்
உண்மைதான்
@ஆர் கோபி
நன்றி
@வித்யா சுப்ரமணியம் மேடம்
பாராட்டிற்கு நன்றி மேடம்
ஆனால் பெரியவர்களிடத்தில் அபசாரப் படக் கூடாது
என்று ஒரு வார்த்தை சொல்வார்கள்.
'மன்னிக்கவும்' என்ற வார்த்தை தாங்கள் என்னிடத்திலா?
பதறுகிறது.
நீங்கள் தாமதமாகப் படிக்க நேர்ந்தாலும் அது எனக்கு பெருமைக்குரிய
விஷயம்தான்.அதனால் இந்த வார்த்தை வேண்டாமே மேடம் ப்ளீஸ்
Post a Comment