Friday, January 4, 2013

நீ.....!!





என் வாழ்க்கைக் கோலத்தை
எத்தனை அழகு படுத்த நான் முனைந்தாலும்
பூசணிப்பூவாய்  நீ நடுவில்
இருக்கையில்தான் பளிச்சிடுகிறது

 
             *******************************

கவிதைக்கு என் மேல் கோபம்
நீண்ட  நாட்களாய் நான் எழுதவில்லையென.
அதற்கென்ன தெரியும் ,
நீ மட்டும்தான் எனக்கு கவிதையென .

      ******************************************

மழைத்துளியின் தூய்மை
மட்டுப்பட்டதாகிறது
உனதன்பிற்கு  முன்னால்


      *****************************************

உன் தோள் வளைவில்  நான்
உறங்கும் நேரத்தில்தான் என்
உலகமே எழுகின்றது


      ******************************************




நீ ஊட்டும் ஒரு
உருண்டை சோற்றுக்கு முன்
உலக உருண்டையை  கடுகாய்த்தான்
உணர்கிறேன்


27 comments:

இராஜராஜேஸ்வரி said...

நீ ஊட்டும் ஒரு
உருண்டை சோற்றுக்கு முன்
உலக உருண்டையை கடுகாய்த்தான்
உணர்கிறேன்..

மறுக்கமுடியாத உணர்வுகளை கோலங்களாய் வரைந்து அருமையான கவிதையாய் பகிர்ந்தமைக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்...

சாந்தி மாரியப்பன் said...

அருமை..

Yaathoramani.blogspot.com said...

உண்ர்வுபூர்வமான கவிதை
அருமையிலும் அருமை
தொடர வாழ்த்துக்கள்

வை.கோபாலகிருஷ்ணன் said...

//என் வாழ்க்கைக் கோலத்தை
எத்தனை அழகு படுத்த நான் முனைந்தாலும்
பூசணிப்பூவாய் நீ நடுவில்
இருக்கையில்தான் பளிச்சிடுகிறது//

இதில் ’பூசணிப்பூவாய்’ என்பதற்கு பதில் ’பறங்கிப்பூவாய்’ என்று இருந்தால்
மேலும் பளிச்சிடுமோ ?

>>>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

//கவிதைக்கு என் மேல் கோபம்
நீண்ட நாட்களாய் நான் எழுதவில்லையென.
அதற்கென்ன தெரியும் ,
நீ மட்டும்தான் எனக்கு கவிதையென.//

ஆஹா, என் செல்லக் குழந்தை என்னைப்பார்த்துச்
சொல்வதாகவே நான் எண்ணி மகிழ்ந்தேன். ;)))))

>>>>>>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

//மழைத்துளியின் தூய்மை
மட்டுப்பட்டதாகிறது
உனதன்பிற்கு முன்னால்//

தூய்மையான அன்புக்கு முன்னால்
எல்லாமே வெறும் தூசி தான்.

அழகான வரிகள்.

>>>>>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

//உன் தோள் வளைவில் நான்
உறங்கும் நேரத்தில்தான் என்
உலகமே எழுகின்றது//

அன்னையின் தோளில் உறங்கும்
குழந்தைக்கு அதுவே பட்டு மெத்தை.

அற்புதமான சிந்தனைத் தூளியில்
குழந்தையை ஆட வைத்துள்ளீர்கள்.;)))))

>>>>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

//நீ ஊட்டும் ஒரு
உருண்டை சோற்றுக்கு முன்
உலக உருண்டையை கடுகாய்த்தான்
உணர்கிறேன்//

அன்னை ஊட்டிடும் சோற்றில்
கடுகளவும் காரமிருக்காது ...
ஆனால் அதில் சாரம் மட்டும்
அன்புடன் கலந்திருக்கும்.

என்பதை எப்படி அழகாக இந்த வரிகளில்
எடுத்துச்சொல்லி அசத்தியுள்ளீர்கள் ;)))))

என்ன இருந்தாலும் “நீ” நீ தான்.
நீ வாழ்க!! வாழ்க!! வாழ்க!!!

மனம் நிறைந்த பாராட்டுக்கள்

அன்பான வாழ்த்துகள்.

பகிர்வுக்கு நன்றிகள்.

பிரியமுள்ள
கோபு

ooooooooooo

வை.கோபாலகிருஷ்ணன் said...

எப்போதோ ஒருமுறை வந்து எங்களுக்குச்சோறு ஊட்டிச்சென்றாலும் அதிலுள்ள அன்பை நன்கு உணரமுடிகிறது.

காத்திருப்போம் காத்திருப்போம் காலமெல்லாம் காத்திருப்போம் ... அடுத்த கவளம் சோறு
கிடைக்கும் வரைக் காத்திருப்போம். நன்றி.

VGK

மனோ சாமிநாதன் said...

அன்பு பொங்கி வ‌ழியும் கவிதைத்துளிகள் அருமை ராஜி!!

தி. ரா. ச.(T.R.C.) said...

Kallukkul eeram

தி. ரா. ச.(T.R.C.) said...

அருமையான கவிதை அபூர்வமாக வருகிறது . ஆமாம்  குறிஞ்சி மலருக்கு இருக்கும் வரவேற்பு அன்றாடம் பூக்கும்  மல்லிக்கு கிடைப்பதில்லையே

”தளிர் சுரேஷ்” said...

சிறப்பான கவிதைகள்! நன்றி!

ரிஷபன் said...

எல்லாக் கவிதைகளுமே அழகு என்றாலும்..
இது கூடுதலாய்..

உன் தோள் வளைவில் நான்
உறங்கும் நேரத்தில்தான் என்
உலகமே எழுகின்றது..

ஆஹா !

கே. பி. ஜனா... said...

//உன் தோள் வளைவில் நான்
உறங்கும் நேரத்தில்தான் என்
உலகமே எழுகின்றது..//
அற்புதமான கவிதை!

ezhil said...

கவிதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் அழகு...

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Superrrrrrr...:)

பூந்தளிர் said...

ரொம்ப, ரொம்ப நல்லா இருக்குங்க.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

அருமை ராஜி. புகைப்படமும் அருமை. வாழ்த்துக்கள். நிறைய எழுதவும்.

Anonymous said...

நல்லா இருக்கு..தொடர்ந்து எழுதுங்கள்:)

ஆச்சி ஸ்ரீதர் said...

அனைத்தும் அருமை.படிப்பவர்களையும் உள்ளிழுத்து உணர வைப்பது சிறப்பு.

RAMA RAVI (RAMVI) said...

எல்லாமே அருமை, அதிலும் முதல் கவிதை மிக அருமை ராஜி. புகைப்படம் அற்புதம்.அதுவே ஒரு கவிதையாக இருக்கு.

ADHI VENKAT said...

அழகான வரிகள். ரசித்தேன்...

RVS said...

ம்... நல்லாயிருக்குங்க..

தோளுறக்கம் உலக எழுச்சி நன்றாக இருந்தது.

அடுத்தது “நான்” கவிதைகள் எழுதவும். :-) நேயர் விருப்பம்.
நன்றி;

Ranjani Narayanan said...

கவிதை எழுதுபவர்களைக் கண்டால் எனக்கு பெரும் வியப்பு. எப்படி இரண்டு வரிகளில் இரண்டாயிரம் அர்த்தங்களை கொண்டு வருகிறார்கள் என்று.
உங்கள் கவிதைகளும் இந்த இலக்கணத்துக் உட்பட்டு இருக்கின்றன ராஜி!

முதலில் 'நான்' படிக்க வந்தவள், 'நீ'யைப் பற்றி டிஸ்கி சொல்வதைப் படித்துவிட்டு, இங்கு வந்தேன்.

இரண்டுமே போட்டிப் போடுகின்றன முதலிடம் பெறுவதற்கு.

பாராட்டுக்கள் ராஜி!

அருணா செல்வம் said...

அனைத்துக் கவிதைகளும் அருமை.
பாராட்டுக்கள்.

தக்குடு said...

கவித கவித! நல்லாத்தான் எழுதரீங்க மேடம்! :))

Post a Comment