சின்ன வயசுல என் அக்கா எனக்கு ஒரு கதை சொல்லி இருக்கா.முதல்ல அது
என்ன கதைன்னு பாக்கலாம்
ஒரு சாது குளத்துல குளிக்க போனாராம்.அப்ப அந்த குளத்துல ஒரு தேள்
தண்ணில இருக்க முடியாம தத்தளிச்சுக்கிட்டு இருந்துச்சாம்.இவர் அதைப்
பாத்து பரிதாபப் பட்டு அதை வெளிய விட நினைச்சு கையில எடுத்தாராம்.
அந்த தேளோ அவர் தன்னை காப்பாத்தப் போறார்னு தெரியாம அவர் கையில
பளிச்சுனு ஒரு கொட்டு கொட்டிடுச்சாம்.வலி தாங்காம அதை தவற விட்டுட்டாராம் அந்த சாது.மறுபடி தண்ணில அந்த தேள் தவிக்க சாது அதைக் கையில எடுக்க அது கொட்ட இப்படி பல முறை நடந்ததாம்.இதைப் பார்த்த ஒரு வழிப்போக்கர், "சாமி!அந்த தேள்தான் கொட்டுதே.அப்பறம் ஏன் அதை காப்பாத்த நினைக்கறீங்க"னு கேட்டாராம்.
அதுக்கு அந்த சாது, " கொட்டறது தேளோட சுபாவம்.காப்பாத்தறது என்னோட சுபாவம்" னு சொன்னாராம்.
இந்த கதையை சொல்லி முடிச்சப்பறம் எங்கக்கா எங்களைப் பாத்து "இதுலேருந்து என்ன புரிஞ்சது" னு கேப்பா.அதுவரை கதையை ஆர்வமா கேட்டுக்கிட்டிருந்த நான் திருதிருன்னு முழிப்பேன்.அதுக்கு அவ, ஒருத்தர் நமக்கு கஷ்டம் கொடுக்கறாங்கங்கறதுக்காக அவங்களுக்கு உதவக் கூடாதுன்னு இல்ல.கஷ்டப் படுத்தறது அவங்க சுபாவம்.உதவறது நம்ம சுபாவமா இருக்கணும்.இதான் இந்தக் கதையோட நீதி" அப்படின்னு சொல்லுவா.
இந்தக் கதையை அவ எனக்கு ஏன் சொன்னானு எனக்கு அப்ப புரியலை.ஆனா
நான் வளர்ந்து பல வருஷங்கள் கழிச்சு எனக்கு தேள் கொட்டுச்சே அப்பத்தான் புரிஞ்சது சகிப்புத்தன்மைன்னா என்னனு?
யக்கோவ்!நீ ஒரு தீர்க்கதரிசிக்கா!!!!!!!!!!!!!!
எனக்கு முதல் தடவை தேள் கொட்டினப்ப (என்னது முதல் தடவையா? அப்ப இன்னும் எத்தனை முறை கொட்டுச்சுன்னு நீங்க ஜெர்க் ஆகறது எனக்குத் தெரியுது.பொறுங்க.வாழ்க்கைல பொறுமை ரொம்ப அவசியம்.கதை நீளும் போது எத்தனை தடவை கொட்டுச்சுன்னு தெரியத்தான போகுது) அது எப்படி நடந்ததுன்னு பாக்கலாம்.
ஒரு நாள் பாத்ரூம்ல குழாயைத் திறந்து விட்டுட்டு பக்கெட்ல தண்ணி ரொம்பறதுக்குள்ள அடுப்பை அணைச்சுட்டு வரலாம்னு போனேன்.அடுப்புல
இருக்கற காயை ஒரு கிளறு கிளறிட்டு அப்படியே வாசல் படிக்கட்டுல நின்னு பாத்ரூமை எட்டிப் பாக்கலாம்னு நிலை வாசல்ல கை வச்சு எட்டிப் பாத்தேன்.
நான் கை வச்சதுதான் தெரியும்.அப்படியே உள்ளங்கைல ஆயிரம் வோல்ட் எலக்ட்ரிக் ஷாக் அடிச்ச ஒரு ஃபீலிங் (அது எப்பிடி ஆயிரம் வோல்ட்னு கரெக்டா சொன்னீங்கனுலாம் கேள்வி கேக்கப்படாது.ஒரு பேச்சுக்கு சொல்றதுதான்)
அப்படியே துடிச்சுட்டென்.அப்பவும் தேள்தான் என்னைக் கொட்டிச்சுனுலாம் எனக்குப் புரியலை (முன்ன பின்ன கொட்டி இருந்தாதானங்க தெரியும்)
அது கொட்டின வேகத்துல நான் கையை உதறி எடுக்க அது பொத்துனு விழுந்து பக்கத்துல ஒளிஞ்சுக்கிச்சு. (கொட்டினதும் அதோட சக்தி எல்லாம் போயிடுமாம்.அதால உடனே நகரவே முடியாதாம் .பக்கத்துல எங்கயாவது ஒளிஞ்சுக்குமாம்.இதெல்லாம் அப்பறம் நான் பி ஹெச் டி பண்ணி தெரிஞ்சுக்கிட்டதாக்கும்)
நான் போட்ட சப்தத்துல எல்லாரும் ஓடி வந்தாங்க.என்ன என்னனு கேக்க நான் "என்னவோ கடிச்சுருச்சு,அங்க இருக்கு" ன்னு கை காமிக்க அதைப் பாத்து வீராவேசத்துடன் துடைப்பத்தால என் கணவர் அதை அடிச்சார்(தேளை உடனே அடிக்கலைன்னா அதுக்கு சக்தி வந்ததும் எப்படிலாம் வேகமா அலையுதோ அப்படிலாம் நமக்கு வலிக்குமாம்.இதுவும் பி ஹெச் டி ல தான் தெரிஞ்சுக்கிட்டேன்)
அப்பறம் எனக்கு கைல கட்டு போட்டு (விஷம் ஏறக் கூடாதுன்னு) டாக்டர் கிட்ட
போனோம்.போனதும் டாக்டர் கேட்ட முதல் கேள்வி "தேள் கொட்டுச்சா? கடிச்சிச்சா?" (ஐயோ!இதை நான் பி ஹெச் டி ல படிக்கலையே)
அப்பத்தான் கொட்டறது வேற கடிக்கறது வேறன்னு எனக்குத் தெரியும்.அப்பறம் டாக்டரே கையை பாத்துட்டு, "ஹ்ம்... கொட்டியிருக்கு.ஓக்கே.பெயின் கில்லர் இஞ்செக்ஷன் போட்டுரலாம்.ஒண்ணும் ப்ராப்லம் இல்லை" என்றதும் அப்பாடி! இஞ்செக்ஷன் போட்டதும் வலி நின்னுரும் போலனு நான் நிம்மதிப் பெருமூச்சை இழுத்து விடறதுக்குள்ளயே
"கையை நல்லா பிரிங்க.ஊசி போடணும்" என்றார்."உள்ளங்கையிலயா?"
என்றேன்.
"ஆமாம்.பின்ன?இது மரத்துப் போற ஊசி.கடிச்ச இடத்துலதான் போடணும்"னாங்க.
சரி,ஏதோ நமக்கு வலி நின்னா போதும்னு நானும் கையைப் பிரிச்சேன்.தேளே
பரவாயில்லைன்னு நினைக்கறாப்ல ஒரு ஊசி.உடனே கை மரத்ததும் அப்பாடி!சமாளிச்சிடலாம்.வலி தெரியலைன்னு நினைக்கும் போதே டாக்டர் என் கணவரைப் பார்த்து, அரை மணி நேரத்துக்கு வலி தெரியாது சார்! நீங்க கூட்டிட்டுப் போகலாம்.அப்பறம் ஒரு முக்கியமான விஷயம் ஒரு ஒன் அவர்க்கு அவங்க தூங்கிடாம பாத்துக்கங்க.விஷம் முறியாது" (ஐயோ!சாமி!இது வேறயா?)
"டாக்டர் அரை மணி நேரத்துக்கு வலி தெரியாதுனீங்களே?அப்டின்னா....?"
"ஆமாம்மா.அவ்ளோதான் அந்த ஊசிக்கு எஃபெக்ட்.அப்பறம் வலிக்கும்" னாங்களே பாக்கலாம்.
வீட்டுக்கு வந்தப்பறம்தான் தெரியும் தேள் கொட்டினா 24 மணி நேரத்துக்கு வலிக்கும்னு.அவ்ளோதான்.அடுத்த 24 மணி நேரத்துக்கு வலி வலி வலி தவிர எதுவும் தெரியாது.பிரசவ வலி தேவலை.தேள் கொட்டும் போது முதல் நாள் காலை மணி எட்டு.அடுத்த நாள் காலை எட்டு மணிக்கு வலி டாண்ணு சுவிட்ச் போட்டாப்ல நின்னுடுச்சு.என்னமாவது சாப்பிடட்டும் எல்லாரும்னு தூங்கினேன் தூங்கினேன் அப்பிடி தூங்கினேன்.
இரண்டாவது தடவை எப்பிடின்னா, பாத்திரம் தேச்சதும் ஸிங்கை தேச்சு அலம்பி விடும் போது குப்பைன்னு நான் கையில் எடுத்தது தேள்.அப்பறம் அது என்னை சும்மா விடுமா? போடு ஒரே போடு.போன தடவை வலது கையா?இந்த தடவை இடது.இந்த தடவை மரத்துப் போக ஊசி கிடையாது.ஏன்னா நான் நாலு மாச கர்ப்பிணியா இருந்தேன்.மறுபடி வலி வலி வலி.(இந்த தடவை நானே தேளை அடிச்சுட்டேன்ல)
இப்ப மூணாவது தடவை எப்படின்னு பாக்கலாம்.இரண்டு கையும் கொட்டி முடிச்சு அதுக்கு அலுத்துப் போச்சு.காலுக்கு வருவோம்னு நான் நடக்கற இடத்துல வந்து நின்னுக்கிச்சு.அது மேலே காலை வைக்க நச்சுனு கட்டை விரல்ல ஒரே போடு.இந்த தடவை மரத்துப் போக ஊசி உண்டு.
"என்னம்மா? இன்னும் இடது கால் பாக்கி இருக்கா"ன்னு டாக்டர் என்னை காமெடி பீசா ஆக்கிட்டாங்க.நல்ல வேளை நாங்க அதுக்கப்பறம் அந்த வீட்டை காலி பண்ணிட்டோம்.தப்பிச்சேன்டா சாமி!
சத்தியமா எனக்கு விருச்சிக ராசி இல்லை.நம்புங்க!
ஓக்கே!இப்ப மறுபடி அக்கா கிட்ட வரேன்.அக்கா! பின்னாளில் தேள் கொட்டும்னு சகிப்புத் தன்மை வளத்துக்க கதை சொன்ன தீர்க்கதரிசியே!
நான் ஒரு நல்ல எழுத்தாளரா ஆவேனா?எங்க கொஞ்சம் ரேகை பாத்து சொல்லு!
அக்கா: அதுக்கு ஏன்டி ரேகை பாக்கணும்.அதான் நீ ப்லாக் எழுதற லட்சணம் பாத்தாலே தெரியுதே.நீ தேற மாட்டேனு.மூணு தடவை தேள் கொட்டினதுக்கே இந்த அலப்பறை விடறியே.பாவம் மக்கள்.நீ எழுதற லட்சணத்தை எத்தனை தடவை படிச்சு துடிச்சி போறாங்க.அவங்க கதியெல்லாம் நினைச்சுப் பாத்தயாடி நீ? எழுதறது உன் சுபாவம்.அதை பொறுத்துக்கறது அவங்க சுபாவம்
உண்மையிலேயே அந்த கதையில வர சாது அவங்கதான்டி.நீ வெறும் சாதா!
.
நான் : அது என்னவோங்க! நான் என் அனுபவத்தை எழுதினாலே அது பல்புலதான் போய் முடியுது! :(

42 comments:
தமிழ்மணம்: 2 உடான்ஸ் : 3 இண்ட்லி: 3
மிகவும் அழகாக நகைச்சுவையாக எழுதப்பட்டுள்ள பதிவு. நான் மிகவும் ரஸித்துப்படித்தேன். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.
vgk
பொதுவாக நாட்டுஓடு, சீமை ஓடு இவற்றால் கூரையிடப்பட்ட வீடுகளில் தான் இந்தத்தேளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.
1950 முதல் 1980 வரை இதுபோன்ற நாட்டு ஓடு போடப்பட்ட வீடுகளில் தான் பெரும்பாலும் குடியிருந்தோம்.
எப்போது வேண்டுமானால் [கொடுக்கும் தெய்வம் கூரையைப்பிய்த்துக்கொண்டு கொடுக்கும் என்பார்களே அதேபோல] தேள் தொப்புத்தொப்பு என்று [தொப்புளில் கூட] விழக்கூடும். பலமுறை எங்கள் வீட்டிலும், நாங்கள் குடியிருந்த அக்கம்பக்க வீடுகளிலும் பலரையும் கடித்து விடும் / கொட்டி விடும்.
என் அப்பாவுக்கு தேள்கடி, பாம்புக்கடி, வேறு ஏதாவது விஷப்பூச்சிகள் கடி முதலியவற்றை உடனடியாகப் போக்க/இறக்க/நீக்க மந்திரங்கள் தெரியும். ஆனால் அதை, கடிபட்டவர் வந்து கேட்டுக்கொண்டால் மட்டுமே, அவர்களுக்காக மந்திரிப்பார். தானாகவே ”தேள் கடித்து விட்டதா, இங்கே வா மந்திரித்து விடுகிறேன், பிறகு வலியே இருக்காது” என்று சொல்லவே மாட்டார். அவ்வாறு செய்தால் அந்த மந்திரத்திற்கு பலனே கிடையாதாம்.
நாங்கள் யாராவது, கடிப்பட்டவர் மேல் இரக்கப்பட்டு, எங்கள் அப்பாவிடம் போய் மந்திரிக்கச்சொல்லி கேட்டுக்கொள் என்று ஆலோசனை கூறுவதுண்டு.
ஆனால் என்னை இது வரை தேள் நேரடியாகக் கொட்டியதோ/கடித்ததோ இல்லை. ஆனால் கடிக்கவோ/கொட்டவோ அல்லது என்னிடம் அன்பு செலுத்த மட்டுமோ ஒரே ஒரு முறை என் அருகில் வந்துபோன மிகப்பெரிய கருந்தேளை என்னால் மறக்கவே முடியாது. தொடரும்.....
எனக்கு அப்போது 13 வயது. உபநயனம் நடந்தது. எட்டாவது வகுப்பு படித்து வந்தேன். அதன் பிறகு வந்த ஆவணியவிட்டம் முடிந்த மறுநாள் காயத்ரி ஜபம். 1008 சமித்து குச்சிகளால் காயத்ரி மஹாமந்திர ஜபம் சொல்லி பாலிலும், நெய்யிலும் சமித்தைத்தோய்த்து, மிகவும் சிரத்தையாக ஹோமம் செய்து வருகிறேன்.
என் அருகில் என் சின்ன அண்ணா ஒருவர் [என்னைவிட 12 வயது பெரியவர்], ஹோமம் ஏதும் செய்யாமல், கண்களை மூடியபடி, 1008 தடவை காயத்ரி மஹாமந்திர ஜபம் மட்டும் செய்து வருகிறார்.
ஒரு மிகப்பெரிய கருந்தேள் என்னை நோக்கி வேகமாக ஊர்ந்து வருவதை திடீரென்று பார்த்து விட்டேன். 1008 சமித்துக்களை அக்னியில் போட்டு காயத்ரி ஜபம் முடியும் வரை நடுவில் எதற்காகவும் எழுந்திருக்கக் கூடாது என்று என்னை பயமுறுத்தியிருந்தனர். தொடரும்......
எனக்கு என்ன செய்வது என்றே ஒரு நிமிடம் புரியவில்லை. அதற்குள் வேகமாக வந்த அந்த மிகப்பெரிய கருந்தேளார், சடர்ன் பிரேக் போட்டு, ஏதோ யோசனையில் நின்று, தன் கொடுக்கைத்தூக்கி, என்னைப்போட்டுவிடவோ என்னவோ தன்னைத் தாயார் படுத்திக்கொள்ளத் தொடங்கினார்.
நான் என் கையில் இருந்த சமித்துக்குச்சிகளில் சிலவற்றை என் சின்ன அண்ணா முதுகில் அடித்து அவரின் தியானத்தைக்கலைத்து கவனத்தைத்திருப்பி, தேள் வந்துள்ளதை ஜாடையிலேயேக் கூறினேன்.
அவர் உடனே எழுந்து, தேளின் கொடுக்குகளை தன் விரல்களால் கப்பென்று அழுத்திப்பிடித்து, தெருவுக்குப்போய் அங்குள்ள குப்பைத்தொட்டியில் அதை உயிருடன் போட்டுவிட்டு வந்து விட்டார். உயிர்க்கொலை செய்யக்கூடாது என்ற கொள்கையுடையவர். மிகவும் தைர்யசாலி.
தங்களைப்போன்ற அனுபவம் எனக்குக் கிடைக்காமல் போய்விட்டதில் சற்றே வருத்தம் இப்போது தான் தங்களின் இந்தப்பதிவைப் பார்த்ததும் ஏற்படுகிறது.
ஏனென்றால் அந்த அனுபவத்தைப் பற்றியே வெகு அழகாக நகைச்சுவையாக ஒரு பதிவாகவே கொடுத்து விட்டீர்களே! சபாஷ்!!
//அக்கா: அதுக்கு ஏன்டி ரேகை பாக்கணும்.அதான் நீ ப்லாக் எழுதற லட்சணம் பாத்தாலே தெரியுதே.நீ தேற மாட்டேனு.மூணு தடவை தேள் கொட்டினதுக்கே இந்த அலப்பறை விடறியே.பாவம் மக்கள்.நீ எழுதற லட்சணத்தை எத்தனை தடவை படிச்சு துடிச்சி போறாங்க.அவங்க கதியெல்லாம் நினைச்சுப் பாத்தயாடி நீ? எழுதறது உன் சுபாவம்.அதை பொறுத்துக்கறது அவங்க சுபாவம்
உண்மையிலேயே அந்த கதையில வர சாது அவங்கதான்டி.நீ வெறும் சாதா!//
ஆஹா! இதுவேறு கடைசியில்!
திருஷ்டிசுற்றிப்போட்டுக்கொள்வது போல!! ;))))))
இந்த இவ்வளவு பெரிய பின்னூட்டத்தையே ஒரு பதிவாகப்போட்டிருக்கலாமே என்கிறீர்களா?
அது என்னவோ என் சிற்றறிவுக்கு எட்டவில்லையே!
;))))))))
தொடர்ந்து இதுபோலவே அனுபவங்களை அவ்வப்போது எழுதுங்கள். வாழ்த்துக்கள்.
மகிழ்வுடன் vgk
தன்னடக்கம் ஜாஸ்தி... கதை/அனுபவம் நல்லாயிருந்தது ...வாழ்த்துக்கள்...
மூன்று முறை தேளைச் சந்தித்த உங்களுக்கு ‘விருச்சிக வீராங்கனை’ன்னு பட்டமே தரலாம் போலருக்கே... தான் பட்ட கஷ்டத்தையும் ந்கைச்சுவையாகச் சொல்வது ஒரு கலை. உங்களுக்கு கைவரப் பெற்றிருக்கிறது. சூப்பர்ப்! வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றி!
சத்தியமா எனக்கு விருச்சிக ராசி இல்லை.நம்புங்க!
ஹாஹ்ஹா.. மிகவும் ரசிச்சு படிச்சேன். ’குழந்தேள்”னு இனி சொல்ல முடியாது.. எழுத்துல..
மூணுமுறை கடிச்சா பிற்காலத்தில்
ஒரு பதிவுக்காகாகும் என தேளுக்கு
தெரிந்திருக்குமோ ?
பதிவு ரொம்ப சிறப்பா இருக்கு
அதுதேளுக்கு தெரியாமப் பார்த்துக்கங்க
நன்றி சொல்ல வந்துடப் போகுது
மனம் கவர்ந்த அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள் (பதிவைத்தான் சொல்றேன் )
த.ம 4
தொலைக்காட்சியில ஜியாகிரபி சானலில் ஒருவர் பாலைவனத்தில் ஐந்து நாட்கள் கழிக்கும் சூழலில் நல்ல புரதச் சத்து என்று கொடுக்குப்பகுதியை இடது கட்டைவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்தபடி துள்ளிக்கொண்டிருக்கும் தேளை வாயில் வைத்துக் கடித்து மென்று சாப்பிடுவதை பயங்கர அதிர்ச்சியுடன் பார்த்திருக்கிறேன்.
தேள் அனுபவம் ஒவ்வொருவருக்கும் ஒருவித உணர்வை ஏற்படுத்துகிறது. நானும் என் தம்பியும் சிறுவயது. என்னுடைய தந்தையார் அருகில்தான் படுத்துக்கொள்வோம். வலது கையை மல்லாத்தி நீட்டியிருப்பார். அவருடைய அக்குளில் முக்ம் புதைத்தபடி தம்பியும் அவனையொட்டி நானும் படுத்திருப்போம். எங்கள் இருவர் தலைமீதும் அப்பாவின் கைபடிந்திருக்கும். இத்தகைய சூழலில் நள்ளிரவில் ஒரு கருந்தேள் அப்பாவின் விரலில் கொட்ட சட்டென்று விழித்துவிட்ட அப்பா கொட்டியது தேள் என்று உணர்ந்துகொண்டார். உடனே கையை எடுத்துவிடவில்லை. பிள்ளைகள் நாங்கள் படுத்திருக்கிறோம் என்பதை மனதில் நிறுத்தி அந்தத் தேளை நகரவிடாமல் கொட்டிய விரல்களால் அழுத்திக்கொண்டு முதலில் என்னை இடது கையால் தளளிவிட்..நசுக்கலில அந்த கருந்தேள் மறுபடியும் அப்பாவைக் கொட்டுகிறது...அப்பா கையை எடுக்காமல் என்னைத் தள்ளிய கையோடு தம்பியையும் தள்ளுகிறார்.. மறுபடியும் கொட்டல்..உடனே அம்மாவை உரக்கக் கூப்பிட்டு லைட்டைப் போடு என்கிறார். அம்மா பதறி லைட்டைப் போட நானும் தம்பியும் தப்பித்தோம்..அப்பா அழுத்தியது தேளின் முதுகில் ஆகவே தேளுக்கு வசதியாக கொடுக்கு நாலைந்து முறை கொட்டிவிட்டது. அப்புறம் அம்மா தேளை அடித்துவிட்டார்கள். அப்பா ஐந்து நாட்கள் மருத்துமனையில் இருந்தார்கள். இன்றைக்கு அப்பா உயிருடன் இல்லை தேளைப் பற்றிய யார் எழுதினாலும் பேசினாலும் அப்பா மனதுக்குள் வருகிறார். பின்னாளில வேதியியல் படிக்கும் தேளின் கொடுக்கில் உள்ள பைருவிக் அமிலம் பற்றி படிக்கும்போது அப்பாதான் மனதில் நிற்கிறார். இதை அப்பா பற்றி எழுதிக்கொண்டிருக்கும் நாவலிலும் தேள் வருகிறது. உங்கள் பதிவு அப்பாவை நினைவூட்டுகிறது. எழுதுங்கள் இதுபோன்ற அனுபவங்கள் எப்போதும் வாழ்வைத் துடிப்பாக்குபவை.
@வை கோபாலகிருஷ்ணன் சார்
சார்!உங்க அனுபவங்கள் படிக்க நல்லா இருக்கு.பதிவு போட்டீங்கன்னா இன்னும் நல்லா விரிவா எழுதி எங்களை மகிழ வைக்கலாமே.இது போல இன்னும் அனுபவங்கள் இருந்தா அதை எழுதுங்க.நாங்களாம் படிப்போமே!
அப்பறம் தேள் கடிக்கு மந்திரிச்சுக்கற அனுபவமும்
எனக்கு கிட்டியது.பதிவு ரொம்ப நீளமா இருந்ததால எடிட் செஞ்சுட்டேன்.
அதுக்கப்பறம் ஒரு பிறந்த நாள் பார்ட்டிக்கு நான் போயிருந்தப்ப (அவங்க நார்த் இன்டியன்ஸ்) அங்க கரன்ட் போயிட்டதால விளக்கேத்த எண்ணேய் வேணும்கறத அவங்க ஹிந்தில தேல் சாஹியேன்னு அவங்களுக்குள்ள பேசிக்க, நானோ தேள்னு புரிஞ்சுக்கிட்டு சட்டுனு சோபா மேலெ காலைத் தூக்கி வச்சுக்கிட்டு, "எங்கே தேள்?எங்கே தேள்"னு அலற
அப்பறம் அவங்க தேள்னு சொல்லலை.தேல்னுதான் சொன்னோம்.தேல் னா எண்ணெய்னு அர்த்தம்னு விளக்கினாங்க.
பதிவு நீளமா ஆகிட்டதால இதையும் நீக்கிட்டேன்
@ரெவெரி
ஹி..ஹி...நன்றி!
@கணேஷ்
சார்!பட்டத்துக்கு நன்றி.எனக்கு பி ஹெச் டி ல இந்த பட்டம் கொடுக்காம விட்டாங்களே.நன்றி
@ரிஷபன்
ஏன் சார் நீங்க வேற குழந்தேள்னு லாம் சொல்லி பயமுறுத்தறீங்க.நானே நடு நடுங்கிப் போயிருக்கேன்.
கருத்துக்கு நன்றி
@ரமணி சார்
ஹா...ஹா...தங்கள் பின்னூட்டத்தை மிகவும் ரசித்தேன். தொடரறேன் (பதிவைத்தான் சொல்றேன்)
அக்கா சொன்னதுக்காகலாம் மக்களை விட்டுற முடியமா? :-))
@ஹரணி
அப்பா அப்பாதான் சார்!பிள்ளைகளைக் காப்பாற்ற எத்தனை முறை வலி தாங்கி இருக்கிறார்.வாழ்விலும் தந்தைகள் பிள்ளைகளுக்காக கஷ்டங்கள் என்னும் வலிகளைத் தாங்குபவர்களே.
தங்கள் தந்தையின் ஆசிர்வாதம் எப்பொழுதும் தங்களுக்குத் துணையாக இருக்கும்.அது அவரே அருகில் இருப்பதைப் போல.
நீ நல்ல எழுத்தாளர்தான், அதில் தேளுக்கும்,எனக்கும் எந்த சந்தேகமும் இல்லை.
அடேங்கப்பா.. பதிவை விட பின்னூட்டங்கள் பல கதை சொல்லுதே?
>>.
நான் : அது என்னவோங்க! நான் என் அனுபவத்தை எழுதினாலே அது பல்புலதான் போய் முடியுது! :(
ஹா ஹா ஹி ஹி ஹோ ஹோ
ஹா.ஹா.ஹா.ஹா.முதலில் தேள் கொட்டிய அனுபவத்தை சுவாரஸ்யமாக எழுதியதுக்கு வாழ்த்துக்கள்.
பல இடங்களில் நீங்க பல்பு வாங்கியிருக்கீங்க போல.
எனக்கு முதல் மகன் பிறந்திருந்த போது குழந்தையைக் குளிப்பாட்டி சாம்பிராணிப்புகை போடும் நெருப்பில் பாம்பு சட்டை, தேள் கொடுக்கு ஆகியவற்றைப்போட்டு புகை பிடிக்க வைப்போம்.
விஷ ஜந்துகள் கடித்தால் விஷம் ஏறாமல் இருக்க மந்திரிக்கும் என் தாத்தா கற்றுக்கொடுத்த வைத்தியம் இது..
பாம்பு ச்ட்டையும் தேள் கொடுக்கும் வீட்டினுள் வைத்திருக்கக்கூடாது என்று வீட்டின் வெளியில் சுவரின் மேல் பகுதியில் பத்திரமாக வைத்திருந்த அவற்றை எடுத்துப் பிரித்தேன்...
(தொடரும்)
நெருப்பில் போட்டபிறகு பார்த்தால் சில குட்டித்தேள்கள் நெளிந்து கொண்டிருந்ததை தாயார் பார்த்து உடனே தெரிவித்தால் அதிர்ச்சி அடைந்துவிடுவேன் என்று குழந்தையை எடுத்துக்கொண்டு தொட்டிலில் போட்டுவிட்டு பிறகு தெரிவித்தார்கள்..
இப்போதும் நடுக்கம் ஏற்படுத்தும் நினைவுகள்...
பகிர்வுக்கு நடுக்கத்துடன் பாராட்டுக்கள்..
என்தாயார் சாதாரணமாக கூட எதையும் சொல்லிவிடாதே! உனக்கு வாக்கு பலிதம் உண்டு..
இதோ தேள் கொடுக்கு என்று சொல்லாமல்
தேள் என்று சொன்னவுடன்
தேளே பிரத்யட்சமாகிவிட்டதே என்பார்கள்!!
டிஸ்கவரி சேனலில் வருபவர்கள் கூட இத்தனை முறை தேளிடம் கொட்டு வாங்கி இருக்க மாட்டார்கள்.
உங்கள் பதிவில் இயல்பான நகைச்சுவை இருக்கிறது. வாழ்த்துக்கள். நீங்களே எழுத்தாளர் இல்லைனு சொன்ன அப்புறம் எங்களை எல்லாம் என்ன சொல்றது?
அடாடா... இந்தப் பதிவுக்கு கிடைத்துள்ள பின்னூட்டங்களை எல்லாம் படித்ததில் பதிவையும அவற்றையும் தொகுத்து புத்தகமாகவே போடலாம் போலிருக்கே... கன்கிராட்ஸ் ராஜி மேடம்...
நகைச்சுவையாக இருந்தாலும் அந்த சமயத்தில் ராஜி செய்த ரகளைகள் எனக்குத் தெரியும். ( இது சைக்காலஜி) பதிவு நல்லாயிருக்கு ராஜி.
பாலா said...
//டிஸ்கவரி சேனலில் வருபவர்கள் கூட இத்தனை முறை தேளிடம் கொட்டு வாங்கி இருக்க மாட்டார்கள். //
ஆமாமென தோன்றியது. சொன்ன விதம் சூப்பர். அக்காவின் ஸ்டேட்மெண்டோடு முடித்த விதமும் அருமை. பல்புகள் பல விதம்:))!
உங்க வீட்டுல எலி தொல்லையை விட தேளு தொல்ல அதிகம் போல......
செத்தும் கொடுத்துச்சு சீத காதி கேள்வி பட்டிருக்கேன்... தேள் வி பட்டது இன்னிக்கு தான்
பாத்தீங்களா அந்த தேள் உங்களை மூனுமுறை கொட்டுதனால எங்களுக்கு படிக்க ஒரு சுவாரசியமான பதிவு கிடைச்சுதே. எனக்கு வலி அவஸ்தை உங்களுக்கு சுவாரசியமா இருக்கான்னெல்லாம் கேக்கப்படாது.
இத்ன தட தேள்கிட்ட கொட்டு வாங்கின வீரியத்தின் விளைவில் இப்போ சிறந்த எழுத்தாளர்னு பேர்வாங்கியதற்கு தேளுக்கும் நன்றி சொல்லலாம்.
பின்னூட்டத்தில் குறிப்பிட்டுள்ள தேல் சாகியே பற்றியும் பதிவிலே சொல்லியிருக்கலாம்.
எழுத்து நடையும் கருத்தும் சுவாரஸ்யமாக இருந்தால் எவ்வளவு பெரிய பதிவாக இருந்தாலும் படிப்பவர்கள் படிப்பார்கள்.
எழுதுவது உங்கள் சுபாவமாக இருக்கும்போது படிப்பது படிப்பவர்களை பொறுத்தது .எனவே கவலை வேண்டாம்.தரம் எங்கு எப்படி உள்ளது என்று வாசகர்கள் கனித்துவிடுவார்கள்.ஆனாலும்
//எழுதறது உன் சுபாவம்.அதை பொறுத்துக்கறது அவங்க சுபாவம்
உண்மையிலேயே அந்த கதையில வர சாது அவங்கதான்டி.நீ வெறும் சாதா!//
இதில் எதும் உள் குத்து இருக்கோ?
.
//ஒரு பிறந்த நாள் பார்ட்டிக்கு நான் போயிருந்தப்ப (அவங்க நார்த் இன்டியன்ஸ்) அங்க கரன்ட் போயிட்டதால விளக்கேத்த எண்ணேய் வேணும்கறத அவங்க ஹிந்தில தேல் சாஹியேன்னு அவங்களுக்குள்ள பேசிக்க, நானோ தேள்னு புரிஞ்சுக்கிட்டு சட்டுனு சோபா மேலெ காலைத் தூக்கி வச்சுக்கிட்டு, "எங்கே தேள்?எங்கே தேள்"னு அலற அப்பறம் அவங்க தேள்னு சொல்லலை.தேல்னுதான் சொன்னோம்.தேல் னா எண்ணெய்னு அர்த்தம்னு விளக்கினாங்க.//
முக்கியமான பல்பை மொதல்ல சொல்லாம விட்டுட்டீங்களே :-)))
பல்பு தொடரட்டும்
வணக்கத்துடன் :
ராஜா
விஜய் மற்றும் அஜித் இணைந்து வழங்கும்…..
@வித்யா சுப்ரமணியம் மேடம்
ஒரு எழுத்தாளர் சொல்லி இதைக் கேக்க சந்தோஷமா இருக்கு மேடம்.
அது சரி உங்களுக்கு டவுட்டு இல்லைங்கறது ஓக்கே!அது என்ன மேடம் தேளுக்கும்? :-))
@சி பி செந்தில்குமார்
ஆமா சார்!பின்னூட்டங்கள் எல்லாமே படிக்க சுவாரசியமா இருக்கு.
ஆஹா!ஒருத்தர் பல்பு வாங்கறதுல இம்புட்டு சந்தோஷமா? :)
@K.s.s.Rajh
நன்றி சார்.அதை ஏன் கேக்கறீங்க.பல்பு மேட்டர் நிறைய இருக்கு.எல்லாத்தையும் வரிசையா போட்டீங்கன்னா யாராச்சும் 'பல்பக்கா'ன்னு பட்டம் கொடுத்துடப் போறாங்கன்னு முந்தின பல்பு பதிவுல நம்ம RVS sir வயத்துல புளியைக் கரைச்சுட்டாரா ,அதனால விட்டு விட்டு போடலாம்னு ஐடியா.
@இராஜராஜேஸ்வரி மேடம்
இது மாதிரி மேட்டர் நான் கேள்விப்பட்டதே இல்லை மேடம்.படிக்கும் போதே எனக்கு நடுக்கமா இருக்கு.
பாத்து பேசுங்க மேடம் :))
@பாலா
நன்றி.(இன்னுமா என்னை எழுத்தாளர்னு நம்பறீங்க?நீங்க ரொம்ப அப்பாவி போல)
@கணேஷ்
எல்லாம் நீங்க பட்டம் கொடுத்த ராசிதான் போல :))
@சாகம்பரி
'ராஜி செய்த ரகளைகள்' ! ஹை! இது கூட நல்லா
இருக்கே!இதை தலைப்பா வச்சு நாலு பதிவு போட்டுட மாட்டேன்.ஐடியாவுக்கு நன்றி மேடம் (ஆனா கருத்து சொன்னவங்கலாம் உங்களை அடிக்க வராம பாத்துக்கங்க)
பதிவை ரசித்தமைக்கு எனது நன்றிகள்
@ராமலக்ஷ்மி
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம்.
ஆமாம்.பல்புகள் பலவிதம்.அதுல இது ஒரு விதம்.இன்னும் நிறைய விதமும் அப்பப்ப வரும்.கருத்து சொல்ல வந்துடுங்க ஓக்கே?
@மாங்கனி நகர செல்லக் குழந்தை
அதென்னங்க உங்க பேர் ரொம்ப வித்தியாசமா இருக்கு.சேலத்துக்காரரா நீங்க?
என்னால தேளுக்கு தொல்லைங்கறீங்களா? இல்லை தேளால எனக்குத் தொல்லைங்கறீங்களா?கரெக்டா சொல்லுங்க சார்!
@suryajeeva
தேள் வி பட்டதுக்கே இப்பிடி ரியாக்ஷன் கொடுக்கறிங்களே!தேள் கொடுக்கு பட்ட நான் எம்புட்டு பாவம்?!
@லக்ஷ்மிம்மா
சில அனுபவங்கள் அப்ப கஷ்டம் தந்தாலும் பின்னாடி நினைச்சுப் பாக்கும் போது சுவாரசியமா இருக்கும்மா.நீங்க சொன்னதுல தப்பே இல்ல
@thirumathi bs sridhar
விரிவான கருத்துக்கு நன்றி ஆச்சி.
தேல் சாஹியே வை எடிட் செய்ய வேண்டாம்னுதான் நானும் நினைச்சேன்.அப்பறம் பெரிசா இருக்கோன்னுட்டு பண்ணிட்டேன்.நீங்க சொல்றதும் சரிதான்.சுவாரசியமா இருந்தா பெரிசா இருந்தாலும் பரவாயில்லைதான்.
அப்பறம் அந்த ஸ்டேட்மென்ட்ல எந்த உள்குத்தும் இல்லீங்..... :))
@அமைதிச்சாரல்
அதான பாத்தேன்.மொத்த பதிவுலயும் இருக்கற பல்பு மேட்டர் பத்தாம பின்னூட்டத்துல சொல்லி இருக்கறதை ரசிச்சிருக்கீங்களே! லாஜி!எங்கடா மாட்டுவான்னு தேடி படிச்சீங்களாக்கும்?
@'என் ராஜபாட்டை'-ராஜா
தொடரும் :))
"எழுதறது உன் சுபாவம்.அதை பொறுத்துக்கறது அவங்க சுபாவம் உண்மையிலேயே அந்த கதையில வர சாது அவங்கதான்டி.நீ வெறும் சாதா"! எவ்வளவு இயல்பாக வருகிறது நகைச்சுவை -அனுபவத்தை நீங்கள் எழுதியிருக்கும் விதம் மிக அருமை. பாராட்டுக்கள்.
ஆஹா! மலரும் நினைவுகள் ஒண்ணொண்ணா வெளில வருது. :)))
நீங்க மீன ராசின்னு தான் எங்களுக்கு தெரியுமே!
பாவம்ப்பா நீங்க. மூன்று முறை தேள் கடியா.
நான் மூன்று நான்கு முறை குளவியிடம் கொட்டு வாங்கியிருக்கிறேன். இப்போ நினைத்தாலும் அந்த வலி அப்பப்பா...எப்படித் தான் தேடி வந்து கொட்டுமோ!
@வியபதி
நன்றி :)
@கோவை2தில்லி
அதை ஏன் கேக்கறீங்க ஆதி!அந்த கால கட்டத்துல யாராச்சும் 'தேன்' அப்டின்னு சொன்னா கூட எனக்கு தேள்னு விழற நிலைமைக்கு ஆயிட்டேன்.
ரொம்ப நாள் வரை எனக்குப் பிடிச்ச 'தேன் சிந்துதே வானம்' பாட்டைக் கூட கேக்கலைன்னா பாத்துக்கங்களேன் :))
ஆஹா... நீங்க இந்த பதிவு எழுதின நேரம் - பாருங்க உங்களை விட தேள் ரொம்ப பாப்புலர் ஆயிடுச்சு... எல்லாரும் தேள் பற்றியே சொல்றாங்க! :)
இந்த தேள்-லயும் பல வகை இருக்குன்னு அம்மா சொல்வாங்க! தேள் கொட்டின உடனே கடிவாயில் [தேளோட வாயில் இல்லை] - தேள் கடித்த இடத்தில் சுண்ணாம்பு தடவணும்...
நல்ல பகிர்வு... தொடருங்கள் உங்கள் அனுபவப் பகிர்வுகளை....
@வெங்கட் நாகராஜ்
ஹா...ஹா... 'தேளோட வாயில் இல்ல'
உங்கள் பின்னூட்டத்தை மிகவும் ரசித்தேன்.
நான்தான் பி ஹெச் டி ன்னு பாத்தா தேள் விஷயத்துல
பல பேர் பி ஹெச் டி பண்ணி இருக்காங்க போலருக்கே:)
எனக்கும் ரெண்டு தடவ தேள் கொட்டி இருக்கு..!!!தேள் கொட்டின உடனே பக்கத்து கிராமத்துக்கு என்ன தூக்கிட்டு ஓடினாங்க..அங்க ஒரு தாத்தா எதோ ஒரு காசு வச்சி கட்டி எதோ பன்னினார்..சரியா ஞாபகம் இல்ல.
உடம்பில் பித்தம் இருந்தா தேள் கொட்டினால் ரொம்ப வலிக்கும்னு சொல்லி கேள்விப்பட்டுருக்கேன்.
வாழ்க்கைல ஒருத்தருக்கு மூணுதடவ தேள்கொட்டுமாம் இன்னும் ஒரு தடவ உனக்கு பாக்கி இருக்குடா என்கிறான் நண்பன் ஒருவன்!!
கடவுளே..!!!
திருடனுக்கு தேள் கொட்டினாப் போலன்னு தான் நான் சொலவடை கேட்ருக்கேன். சாது கதை அப்புறமா ஒருநாள் கேட்டேன்.
தீசிஸ் சப்மிட் பண்ணி டாக்டர் பட்டம் வாங்கிட்டீங்க போலருக்கு....
கொட்டின இடம் வின்வின்னு தெரிக்கும்னு கொட்டுபட்டவங்க சொன்னாங்க...
நல்லா இருக்குங்க... :-)
@மழை
பாவம் நீங்க.இன்னொரு தடவை கொட்டு உண்டோன்னு சந்தேகத்துலயே பயந்துடுவீங்க.
@RVS
//நல்லா இருக்குங்க... :-)//
பதிவா? தேள் கொட்டுனதான்னு கொஞ்சம் க்ளியரா
சொல்லுங்க சார் :)
கொட்டோ கொட்டுனு கொட்டினதை நீங்க கட்டோ கட்டோனு கட்டியிருக்கீங்களே? சாமியார் கதையைப் படிச்சதும் படிப்பினையா ஏதோ எழுதியிருப்பீங்கனு நெனச்சு படிச்சா..அட்டகாசம்! ரொம்ப நாளாச்சுங்க இப்படிச் சிரிச்சு. உங்களுக்கு நகைச்சுவை இயல்பா வருது. (ஓடு ஓடுன்னதாகட்டும் தேள்கடியாகட்டும்..) நட்டுவாக்களி கடி பட்டிருக்கீங்களானு தெரிஞ்சுக்க இப்போ ஒரே ஆர்வமா இருக்குங்க.
இராஜராஜேஸ்வரி எழுதியிருப்பது திகில்.
@அப்பாதுரை
//நட்டுவாக்களி கடி பட்டிருக்கீங்களானு தெரிஞ்சுக்க இப்போ ஒரே ஆர்வமா இருக்குங்க//
y dis கொலைவெறி சார்?!
Chiththi ongaluku inime rajalakshmikku badhila thelu lakshmi per vaikkalam...avvalavudhooram thelu kotto kottunnu kottirukku!!!!!
Onga bloga padikkara enga nilamaiya purinjukkitta onga akka unmaiyileye oru dheergatharisithaan
Dr.Raji, தேள் பகிர்வுக்கு லேட்டா வந்துட்டேன்; ஆனால், சுவாரஸ்யமான பதிவோடு பின்னூட்டங்களையும் படிக்கக் கிடைச்சுது. நன்றி! :-)
Post a Comment