லோக குரு மகான் ஸ்ரீ ஆதி சங்கரர் இந்த உலகின் மானுட வாழ்விற்காக பல
ஸ்லோகங்களையும்,வேதத்திற்கு உரைகளையும் வழங்கியிருக்கிறார்.
அவரது ஆன்மீக உரைகள் பல இருந்தாலும் ஒரு சாதாரண வாழ்வு வாழும் மானுடன் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணமாக இரண்டு தொகுப்புகளை நமக்கு வழங்கியுள்ளார்.அதில் ஒன்று ப்ரசன்னோத்தர ரத்ன மாலிகா.மற்றொன்று
விவேக சூடாமணி.
இதில் ப்ரசன்னோத்தர ரத்ன மாலிகா என்பது சாதாரணர் கூட எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் கேள்வியும் பதிலுமாக அமைந்துள்ளது.
(ப்ரஸ்ன- கேள்வி, உத்தர-பதில்)
சம்சார கடலைக் கடக்கும் சாதாரணர், அதாவது ஆன்மீகத்தின் முதல் படியில் இருப்பவர்களுக்கு உதவும் வகையில் இந்த ப்ரசன்னோத்தர ரத்ன மாலிகாவில் ஒருவன் வாழ்வில் எதைச் செய்ய வேண்டும் எவற்றைச் செய்யலாகாது என்று குறிப்பிட்டு நல்வழிப் படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
அவற்றிலிருந்து சில கேள்வி பதில்களை இங்கு நாம் பார்க்கலாம்.என் அறிவுக்கெட்டிய வரை மொழி பெயர்த்திருக்கிறேன்.
1.எது பலன் கொடுப்பதாக இருக்கிறது?
தர்மம் மட்டுமே
2. யார் உண்மையான ஆசான்?
உண்மையை அறிந்தவரும், சீடனின் நலம் கருதுபவருமே.
3.எவற்றை விட்டொழிக்க வேண்டும்?
வாழ்விற்கு தேவையற்ற பழக்கங்களை.
4.எது நஞ்சைப் போன்றது?
பெரியோர்களையும் சான்றோர்களையும் மதியாதிருத்தல்.
5. எது இறுதி வரை உறுத்தும்?
ரகசியமாக எவருமறியாமல் செய்த பாவம்.
6. எதை ஒதுக்க வேண்டும்?
தீயவர்கள் சகவாசத்தையும்,பிறன்மனையையும், பிறர் சொத்தையும்.
7.எது தூக்கம்?
மனிதர்களின் அறியாமை.
8. எது தாமரை இலை தண்ணீர் போன்றது?
இளமை, செல்வம்,ஆயுள்
9. எவருடைய ஆளுமையில் மக்கள் இருப்பர்?
எவன் பணிவானவனோ எவன் உண்மை பேசுபவனோ அவன் ஆளுமையில் மக்கள் இருப்பர்.
10. எவன் விவேகி?
எவன் நல்லனவற்றையும் அல்லாதனவற்றையும் பிரித்தறிகிறானோ அவனே விவேகி.
11.எவர் சந்திர ஒளிக்கு ஒப்பானவர்?
நல்ல மனம் கொண்டவர்களே.
12.எது அறிவற்ற செயல்?
தற்பெருமை கொள்ளல்
13. எவன் குருடன்?
தேவையற்ற தகாத செயல் செய்பவன்
14. எவன் செவிடன்?
நல் வார்த்தைகளைக் கேளாதவன்.
15. எவன் ஊமை?
தகுந்த நேரத்தில் இனிய நல் வார்த்தைகள் பேசாதவன்
67 பகுதிகளைக் கொண்டதில் இருந்து சிலவற்றை இங்கு பகிர்ந்துள்ளேன்
பின் குறிப்பு: கற்றதிலிருந்து...
18 comments:
Tamilmanam : 2
Udance: 2
INDLI : 3
Very Nice reproduction. Thanks,
இவருடைய நிறைய படைப்புகள் பாமரராகிய எம்போன்றவரிடம் சென்றடையாதது குறை.
மனம் கவர்ந்த பதிவு
அருமையான மொழிபெயர்ப்பு
தொடர்ந்து மொழிபெயர்த்துத் தரலாமே !
தொடர வாழ்த்துக்கள்
ட.ம 3
மகாபாரதத்தில் யுதிஷ்ட்ரனிடம் தர்ம தேவதை கேட்கும் கேள்விகளும் பதில்களும் கிட்டத்தட்ட இப்படித்தான் நீளும். நல்ல பதிவு ராஜி.
ரொம்ப ரொம்ப அழகான பகிர்வு ராஜி.. இதைத் தொடராவே எழுதலாமே..
வாழ்வின் தர்மங்கள் என்று இவற்றை எடுத்துக் கொள்ளலாம்
மிகவும் பயனுள்ள பதிவு.
நல்ல பகிர்வு... தொடருங்களேன்...
எது தூக்கம்?
மனிதர்களின் அறியாமை.
அவரே கேள்வி கேட்டு அவரே பதிலும் தந்ததில் எத்தனை புத்தி சாதுர்யம்..
கேள்விகளும் பதில்களும் நெத்தியடியாக உள்ளது.
எது இறுதி வரை உறுத்தும்?
ரகசியமாக எவருமறியாமல் செய்த பாவம்.
-என்ன நிதர்சனமான வரிகள். அழகாகவே மொழிபெயர்த்துத் தந்துள்ளீர்கள். முடிந்த போதெல்லம் மற்றவற்றையும் தாருங்கள். அருமை...
நல்ல பதிவு ராஜி. இதனை முழுமையாக முடிக்க வேண்டும் - அத்தனை கேள்வியையும் எழுதினால் நல்லது. அதே போல பதிவிற்கு தலைப்பு சமஸ்கிருத்தில் வருவதால் மற்ற பதிவர்களுக்கு இந்த செய்தி சென்று சேராது. (ஓப்பன்கூட செய்ய மாட்டார்கள்.)
முழுமையாக பதிவதில் ஏதேனும் சிரமம் உள்ளதோ ராஜி?
முடிந்தால், முழுவதுமாய் பதியலாமே!!!
நல்ல கருத்துகள் .... நல்ல பதிவு....
வாழ்த்துகள்....
(உங்களுக்கு பிடித்த பாலகுமாரன் எழுத்துகள் இப்போது என் வலையில் தொடராக :
என்னை கவர்ந்த பாலகுமாரன் - பாகம்-5 http://jokkiri.blogspot.com/2011/11/5.html)
குழந்தைகள் உலகம் மகத்தானது என்ற தொடர் பதிவிற்கு என் அழைப்பை ஏற்பீர்கள் என்ற நம்பிக்கையில் தங்களை அழைத்துள்ளேன்.
என் தற்போதைய பதிவிற்கு வருகை தரவும் அழைக்கிறேன்.
எல்லா பதில்களுமே அருமை என்றாலும் 9 மற்றும் 10ஆம் கேள்விக்கான பதில்கள் மிக அருமை!!
உங்களை ஒரு தொடர்பதிவிற்கு அழைத்துள்ளேன் ராஜி!
நல்ல பகிர்வு ராஜி. வாழ்விற்கு தேவையான நல்ல கருத்துகள். எல்லோரும் சொல்வது போல இதை நீங்கள் தொடரலாமே...
”சங்கரரின் போதனைகள்” அல்லது வேறு ஏதாவது தலைப்பிடலாம் இல்லையா?
அருமையான ப்ரஸ்ன உத்திரங்கள்! மேலும் தொடருங்கள்!
@வை கோபாலகிருஷ்ணன் சார்
நன்றி
@அப்பாதுரை
இவற்றைத் தேடி நாம் செல்ல வேண்டிய பொக்கிஷங்கள் சார்!
@ரமணி சார்
நன்றி.தொடர்கிறேன் சார்
@வித்யா சுப்ரமணியம் மேடம்
ஆமாம்.நன்றி மேடம்
@அமைதிச்சாரல்
நன்றி சாந்தி,தொடர்கிறேன்
@suryajeeva
கரெக்ட் சார்
@லக்ஷ்மிம்மா
நன்றிம்மா
@வெங்கட் நாகராஜ்
நன்றி சார்.தொடர்கிறேன்
@ரிஷபன்
அவர்களைப் போன்ற மகான்களின் வாழ்வால் நாம்
வாழ்கிறோம்
@thirumathi bs sridhar
இன்னும் இருக்கிறது ஆச்சி
@கணேஷ்
நன்றி.மற்றவற்றையும் பதிவிடுகிறேன் சார்
@சாகம்பரி மேடம்
மீண்டும் தொடர்கிறேன் மேடம்.தலைப்பைப் பற்றிய கருத்திற்கும் யோசனைக்கும் நன்றி மேடம்.அடுத்த பகுதிகளில் வேறு தலைப்பு வைத்து விடுகிறேன்.
@R.Gopi
முழுதும் பதிவதில் எந்த சிரமமும் இல்லை.இதன் வரவேற்பு பொறுத்து முடிவு செய்ய எண்ணி இருந்தேன்.பலரும் ஆவலாக இருப்பதால் தொடர்வேன்.
தங்கள் வலைப்பக்கம் வந்து பார்க்கிறேன்.
@thirumathi bs sridhar
தங்கள் அழைப்பிற்கிணங்கி அடுத்த பதிவு போட்டிருக்கிறேன்.தங்கள் பதிவிற்கும் பின்னூட்டம் அளித்துள்ளேன்.அழைப்பிற்கு நன்றி.
@மனோ சாமிநாதன்
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி மேடம்.
தங்கள் அழைப்பை ஏற்று தொடர்பதிவு போட்டிருக்கிறேன்.
@கோவை2தில்லி
கட்டாயம் தொடர்கிறேன் ஆதி.தங்கள் ஊக்கம் என்னை பலப்படுத்துகிறது.சாகம்பரி மேடம் தலைப்பைப் பற்றி யோசனை கூறியதும் என்ன தலைப்பிடலாம் என யோசனையில் இருந்தேன்.தாங்கள் உதவி விட்டீர்கள்.கருத்திற்கும் ஊக்கத்திற்கும் நன்றி
@மாதவி
நன்றி.தொடர்கிறேன் மாதவி.
Post a Comment