தாயக நினைவில்
தவிக்கும் நெஞ்சங்கள்
தவமாய் உழைத்து
தவற விட்ட நொடிகள் எதுவோ?
அன்னை கைசோறும்
அவளது ஆதரவுமோ?
அப்பாவின் அறிவுரையும்
அவரது கருத்துக்களுமோ?
மனையாளின் மகிழ்வும்
மனம் பெருகும் அரவணைப்புமோ?
உடன்பிறந்தோனின்
உடன்பிறந்த சீண்டல்களோ?
தங்கையவளின் தர்க்கமும்
தடையற்ற பாசமுமோ?
மழலையின் மொழிகளும்
மயக்கும் சிரிப்புமோ?
என்னென்ன விலைகள்
எல்லாம் நீ தந்தாய்?
இவையெல்லாம் இழந்து
இன்னொரு நாட்டில்
இயந்திர வாழ்விலே நீ !
டிஸ்கி: இந்த கவிதை செப்டம்பர் 6 ஆம் தேதி "வல்லமை" யில் வெளி வந்துள்ளது
23 comments:
வெளி நாட்டில் வாழும் இந்தியர்களின், இது போன்ற பாச இழப்புக்கள் கொஞ்சநஞ்சமல்ல.
அவற்றை அழகாகவே சொல்லியிருக்கிறீர்கள்.
அருமையான வரிகள்
உண்மைதான். அதேபோல இந்த பக்கமும் நிறைய இழப்புகள் உள்ளன. நல்ல கவிதை,ராஜி.
Aaha! Nalla kavithai
கவிதை படித்து மனம் வலித்தது.
பணம் மட்டுமே பொருள் அல்ல, என்று வேகமாய் சுழலும் உலகுக்கு தெரியும் நாள், சமூக அவலங்கள் களைந்து இருக்கும்..
Super kavithai
Super kavithai
நல்ல கவிதை. வல்லமையில் வெளிவந்தமைக்கு வாழ்த்துகள்....
கண்களை விற்று ஓவியம் பெறும் அவலத்தை
மிக அழகாகச் சொல்லிப் போகும் அருமையான பதிவு
வாழ்த்துக்கள்
த.ம 6
மனம் ரணமாய் வலிக்கும் கவிதை, கண்ணீர் கண்ணை மறைக்கிறது...!!!
உண்மைதான்.
என்னென்ன விலைகள்
எல்லாம் நீ தந்தாய்?
இவையெல்லாம் இழந்து
இன்னொரு நாட்டில்
இயந்திர வாழ்விலே நீ !
உண்மைதானே.
உடன்பிறந்தோனின்
உடன்பிறந்த சீண்டல்களோ?
இந்த வரியை வெகுவாய் ரசித்தேன்..
த.ம.8
யதார்த்தம்.
ஹ்ம் எங்க கதையைத்தான் சொல்லி இருக்கீங்க. நல்லவேளை இன்னும் கல்யாணம் ஆகல அதனால இந்த கவிதைல பாதி வலிகள்தான் எனக்கு.
கவிதை அருமை வாழ்த்துக்கள்:)
நல்ல கவிதை.
Thesathai pirivathum
Thayaai pirivathum onruthan.
Niraiya ezhuthungal.
TM 9.
என்னங்க இது.. இப்படி ஏதாவது கிளப்பி விடறீங்க?
@வை கோபாலகிருஷ்ணன் சார்
கருத்திற்கு நன்றி
@K.s.s.Rajh
நன்றி
@சாகம்பரி மேடம்
தாங்கள் கூறுவது உண்மையே.எனினும் இந்த பக்கம் வலியின் போது பகிர்ந்து கொள்ள மற்ற பிற உறவுகளாவது இருக்கும் .அந்த பக்கம் யாருமற்ற தனிமையே
@மாதவி
நன்றி
@NIZAMUDEEN
வலிக்கும் உண்மைதான்
@suryajeeva
கருத்துக்கு நன்றி
@'என் ராஜபாட்டை'-ராஜா
நன்றி
@வெங்கட் நாகராஜ்
நன்றி
@ரமணி சார்
நன்றி
@Mano நாஞ்சில் மனோ
உண்மை அவ்வாறு உள்ளது
@thirumathi bs sridhar
வந்துட்டிங்களா?கருத்துக்கு நன்றி
@லக்ஷ்மிமா
ஆமாம் அம்மா
@ரிஷபன்
நன்றி
@சென்னை பித்தன்
நன்றி
@மழை
நன்றி
@ராமலக்ஷ்மி
நன்றி
@துரைடேனியல்
நன்றி
எதிர்காலத்துக்காக நிகழ்கால சந்தோசங்களை இழந்த மனதின் வேதனை தெரிகிறது.
நெஞ்சை நெகிழவைத்த கவிதைப் பகிர்வுக்கு மிக்க
நன்றி சகோதரி .வாழ்த்துக்கள் .முடிந்தால் வாருங்கள்
என் தளத்திற்கும் .
சூழ்நிலை ஒருவனைத் துரத்தும்போது என்னதான் செய்யமுடியும்? உறவுகளின் மானத்தைக் காக்கவும் மனத்தை ஆசுவாசப்படுத்தவும் சில சமயங்களில் இந்தத் தனிமைத் தவம் தேவைப்படுகிறதே. நல்ல கவிதை.
Post a Comment