Thursday, November 17, 2011

ஆயிரம் நிலவே வா....

போன பதிவுல நான் பல்பு வாங்கின விஷயத்தைப் பத்தி பாத்தோம்.இந்த பதிவுல நான் பல்பை உடைச்ச விஷயம் பத்தி பாக்கலாமா?

எங்கள் வீட்டில் எப்பொழுதும் அப்பா அம்மாவின் தோய்த்த துணிகளை மட்டும் தனியாக வீட்டிற்குள்ளேயே உயரே இருக்கும் கொடியில் உலர்த்துவது வழக்கம்.அவர்கள் இருவரும் பூஜை செய்வார்கள் என்பதால் இந்த ஏற்பாடு.அதற்கு மடிக் கொடி என்று பெயர்.எப்பொழுதும் அம்மாதான் உலர்த்துவார்.அம்மாவால் உலர்த்த இயலாத சந்தர்ப்பங்களில் மன்னி
உலர்த்துவார்கள்.

நான் காலேஜ் படித்துக் கொண்டிருந்த சமயம்.ஒருமுறை அம்மா, மன்னி இருவருமே உடல் நலம் சரியில்லாமல் ஆகிவிட்டார்கள்.அண்ணாக்களும் நானும் ஆளுக்கொரு வேலைகள் செய்து கொண்டிருந்தோம்.இரவு உணவுக்கு 
பூரி உருளைக்கிழங்கு மும்முரமாக செய்ய ஆரம்பித்தோம்.(பூரிக்கு உப்பு போடணுமா இல்லையான்னு எங்களுக்குள்ள பட்டிமன்றம் வேற) அப்போது
அண்ணா என்னைப் பார்த்து "நீ போய் அப்பாவிற்கு வேஷ்டி உலர்த்திவிட்டு வா"
என்று கூற நான் போய் உலர்த்தச் சென்றேன்.அப்பொழுது டிவி யில் எஸ் பி பியின் குழைவான குரலில் 'ஆயிரம் நிலவே வா' பாடல் ஓடிக் கொண்டிருந்தது.

"தர்மாவதி ராகத்தில் அமைந்த பாடல் அது"

அதைக் கேட்டு விட்டு நானும் அந்த பாடலை பார்த்துக் கொண்டும் பாடிக் கொண்டும் வேஷ்டி எடுத்து உதறி நுனியை சுருட்டி கம்பின் நுனியில் வைத்து மேலே உலர்த்த கம்பைத் தூக்க வேஷ்டி தனியே கீழே விழுந்து அந்த வேகத்தில் கம்பு பக்கத்திலிருந்த ட்யூப் லைட் மேல் பட்டுவிட அவ்வளவுதான்.டணார் என்ற சப்தத்தோடு ட்யூப் உடைந்து சிதறி இருட்டில் புகை மண்டலமாகக் காட்சியளித்தது.

சப்தம் கேட்டு பதறிப் போய் அனைவரும் ஓடி வர நான் இருட்டில் தலை முழுக்க ட்யூப் லைட்டின் சிதறிய வெள்ளைத் துண்டுகளோடு பேயறைந்தாற்
போல (அப்ப என்னைப் பாத்தா அப்படியே பேய் மாதிரிதான் இருந்ததுன்னு எங்கண்ணா சொன்னான்.) நின்று கொண்டிருந்தேன்.

உடனே அடுத்த அறைக்கு கூட்டிக் கொண்டு போய் தலை எல்லாம் க்ளீன் செய்ய, தலையில் ட்யூப் சிதறல் குத்தியிருந்ததில் ரத்தம் வந்து கொண்டிருந்தது.உடனே டாக்டரிடம் சென்று மருந்து போட்டு வீட்டுக்கு வந்ததும் வெளியே சென்றிருந்த அப்பா வந்து,  "என்னாச்சு?"  என்று கேட்டார்.


"உங்க பொண்ணு ஆயிரம் நிலவே வா பாட்டைப் பாடிண்டு, இருந்த வெளிச்சத்தை இருட்டாக்கிட்டா" என்று இரண்டாவது அண்ணா பதில் கூறினான்.

கடைசி அண்ணாவோ அவ பாடினது கேட்டு ட்யூப் லைட் "நீ பாடறது எனக்கே பொறுக்க முடியலை.அப்பறம் அந்த நிலவு, அதுவும் ஒரு நிலவில்லை ரெண்டு நிலவில்லை ஆயிரம் நிலவும் எப்படி பொறுத்துக்கும்னு சொல்றாப்புல
நெஞ்சு பொறுக்குதில்லையேன்னு டமார்னு வெடிச்சிடுத்து"ன்னான் 

                                                                                          
"என்னிக்காவது ஒரு நாள் வேலை செஞ்சா இப்பிடித்தான் இருக்கும்" னு மூணாவது அண்ணா தன் பங்குக்கு வார ஆரம்பித்தான்.அதுக்கப்பறம் எப்ப ரேடியோலயோ டிவிலயோ ஆயிரம் நிலவே வா பாட்டு போட்டாலும் வீட்ல எல்லாரும் உஷாராய்டுவாங்க.

நான் வேணும்னா உங்களுக்கெல்லாம் இப்ப அந்த பாட்டைப் பாடிக் காமிக்கட்டுமா? உங்க கம்ப்யூட்டர் மானிட்டர்லாம் ஒண்ணும் ஆகாதுங்க.
ஏன் பயப்படறீங்க?   :-))))))))))))



29 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

Tamilmanam : 2
Indli : 4

Enjoyed very much.
Very Good Jovial Experience.
Thanks for sharing. vgk

விச்சு said...

அய்யோ சாமி! கம்ப்யூட்டரை ஆஃப் பண்ணப்போறேன்.

பால கணேஷ் said...

பாட்டுப் பாடி பல்பு உடைச்சது அருமை. அண்ணன்கள் கிண்டல் செஞ்சது ரசிக்க வெச்சது. அப்புறம்... வீட்ல வேற ஏதாவது பாட்டுப் பாடினீங்களா..? உங்கள் பதிவை மிக ரசித்தேன்.

K.s.s.Rajh said...

ஹா.ஹா.ஹா.ஹா..மேடம் நீங்க பல்ப்பை உடைத்தும் பல்பு வாங்கிட்டீங்க.....ஓரு தடவை பாடுங்க மேடம்.......

Yaathoramani.blogspot.com said...

சில நிகழ்வுகள் எத்தனை ஆண்டு காலம் ஆனாலும்
பசுமையாக நினைவில் தங்கிவிடும்
அது தொடர்பான நிகழ்வுகள் நிகழ்கையில்
அது மீண்டும் நம் மனதின் அடி ஆழத்தில் இருந்து மேல் எழுகையில்
அந்த சுகமே தனி மிக அழகாக எழுதிப் போகிறீர்கள்
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

த.ம 5

வெங்கட் நாகராஜ் said...

பல்பு வாங்குனது ஒரு நகைச்சுவை என்றால் பல்பு உடைத்தது இன்னும் சிறப்பு! அந்த நிகழ்வு எப்படி நடந்திருக்கும் என நினைத்துப் பார்த்தேன் - சிரித்தேன்... :)

எதுக்கும் உங்க வீட்டு ட்யூப் லைட்-க்கு மேலே ஒரு ஷேட் வாங்கி மாட்டிடுங்க!

rajamelaiyur said...

//நான் வேணும்னா உங்களுக்கெல்லாம் இப்ப அந்த பாட்டைப் பாடிக் காமிக்கட்டுமா? உங்க கம்ப்யூட்டர் மானிட்டர்லாம் ஒண்ணும் ஆகாதுங்க.
ஏன் பயப்படறீங்க? :-))))))))))))

//
அய்யயோ .. ஸ்க்ரீன் உடையுது ..

rajamelaiyur said...

இன்று என் வலையில்


விஜய் Vs அஜித் : யாருக்கு ரசிகர்கள் அதிகம் ஒரு மெகா சர்வே

குறையொன்றுமில்லை. said...

இதுபோல துணி உலர்த்தும்போது கம்பிலிருந்து துணி கீழ விழும் அனுபவம் அனேகமா எல்லாருமே சந்திச்சு இருப்போம். நீங்க அதையே நகைச்சுவை பதிவா போட்டுட்டீங்க சூப்பர்தான்.

RVS said...

பல்பாபிஷேகம்னு சொல்லுங்க..

பார்த்துங்க.. இது போல வரிசையா பல்பு அனுபவங்கள் எழுதி யாராவது “பல்பக்கா”ன்னு பட்டம் கொடுத்துடப் போறாங்க!!!! :-)))))))))))

RVS said...

அந்தப் பாடலில் “நல்லிரவு துணையிருக்க” என்ற இடத்தில் பாடும் நிலா பாலுவின் குரலைக் கூர்ந்து கேட்கவேண்டும். அடாடா.... காதலைக் கரைத்து காதில் ஊற்றியிருப்பார்! :-))

MANO நாஞ்சில் மனோ said...

நான் வேணும்னா உங்களுக்கெல்லாம் இப்ப அந்த பாட்டைப் பாடிக் காமிக்கட்டுமா? உங்க கம்ப்யூட்டர் மானிட்டர்லாம் ஒண்ணும் ஆகாதுங்க.
ஏன் பயப்படறீங்க? :-))))))))))))//

கொஞ்சம் பொறுங்க நான் ஒரு பத்தடி பின்னாடி தள்ளிப்போறேன் வெயிட்..............சரி இனி கொல்லுங்க ச்சே ச்சீ பாடுங்க...!!!

MANO நாஞ்சில் மனோ said...

யுடான்ஸ் இணைப்பு கொடுத்துட்டேன்..

ஆச்சி ஸ்ரீதர் said...

உங்களுடன் ஒரே சிப்பு(சிரிப்பு)தான் போங்க.வாழ்க்கையில காயம் எப்படிலாம் வருதுப்பா?

நீங்க தாராளாமா பாடுங்க.நானும் என் கணினியும் அசர மாட்டோம்!ம்...ம்..

ADHI VENKAT said...

தயவு செய்து பாடிடாதீங்க ராஜி....

பல்ப் உடைச்ச அனுபவம்...அப்போ பாவமாத் தான் இருந்திருக்கும். இப்ப சிரிப்பா இருக்கு.

கம்பில் துணி உலர்த்துவது எனக்கும் வராது.

சக்தி கல்வி மையம் said...

பல்போ பல்பா..

ரிஷபன் said...

உங்களுக்கு காமெடியும் நல்லா வருது..

சென்னை பித்தன் said...

த.ம.9

சென்னை பித்தன் said...

பாடிக் காட்டியிருக்கலாம்!
நல்ல நகைச்சுவை!

துரைடேனியல் said...

Nice.
TM 10.

raji said...

@வை கோபாலகிருஷ்ணன் சார்

நன்றி சார்!

@விச்சு

அந்த பயம் இருந்தா சரி :-)

@கணேஷ்

கடைக்குட்டியா இருந்து அதுவும் அண்ணன்களுக்கு தங்கச்சியா இருந்துட்டா ஓட்டறதுக்கு கேக்கவே வேணாம் சார்!

@K.s.s.Rajh

அவ்வளவு தைரியசாலியா சார் நீங்க?! :-))

@ரமணி சார்

ஆமாம் சார்!பசுமையான பழைய நினைவுகள் மேலெழும்பும் சுகம் தனிதான்.த ம ஓட்டிற்கும் வாழ்த்திற்கும் நன்றி சார்!

@வெங்கட் நாகராஜ்

தலைநகரம் வந்தா பாடுவேன்.ட்யூப் லைட்டுக்கு ஷேட் ரெடி பண்ணிடுங்க.இல்லைன்னா வீட்டைப் பூட்டிக்கிட்டு ஓடிருங்க :))

@'என் ராஜபாட்டை'-ராஜா

அப்பாடி!அமிர்தவர்ஷிணி பாடி மழை வராப்புல என் பாட்டுக்கும் ஒரு எஃபெக்ட் இருக்கத்தான் செய்யுது:-)

@லக்ஷ்மிம்மா

நன்றிம்மா

@RVS


//பார்த்துங்க.. இது போல வரிசையா பல்பு அனுபவங்கள் எழுதி யாராவது “பல்பக்கா”ன்னு பட்டம் கொடுத்துடப் போறாங்க!!!! :-)))))))))))//

யாருக்கும் தோணாட்டாலும் கூட நீங்களே எடுத்துக் குடுத்துருவீங்க போலருக்கே.தம்பியுடையாள் படைக்கு அஞ்சாள்னு நினைச்சா இப்பிடியா எடுத்துக் கொடுப்பீங்க?! :)

//அந்தப் பாடலில் “நல்லிரவு துணையிருக்க” என்ற இடத்தில் பாடும் நிலா பாலுவின் குரலைக் கூர்ந்து கேட்கவேண்டும். அடாடா.... காதலைக் கரைத்து காதில் ஊற்றியிருப்பார்! :-))//

உண்மைதான்.ஒரு விஷயம் தெரியுமோ?அது அவரோட முதல் பாட்டு.

@MANO நாஞ்சில் மனோ

என்னது?பத்தடி பின்னாடி தள்ளிப் போறீங்களா?
என்ன இருந்தாலும் உங்களுக்கு K.s.s.Rajh சார் அளவுக்கு தைரியம் போறலை சார்!அவரைப் பாருங்க என் பாட்டைக் கேக்க அஞ்சா நெஞ்சனா இருக்கார்.

யுடான்ஸ் இணைப்புக்கு நன்றி :)

@thirumathi bs sridhar

ஆமாம் ஆச்சி!வாழ்க்கைல காயம் எப்பிடி எல்லாம் வருது பாத்தீங்களா?

//நீங்க தாராளாமா பாடுங்க.நானும் என் கணினியும் அசர மாட்டோம்!ம்...ம்..//

அப்டிப் போடுங்க!ஆனா அப்பறம் கணிணி பழுதுக்கு எல்லாம் என் கிட்ட காசு வசூல் பண்ணக் கூடாது ஓக்கேவா?! :)

@கோவை2தில்லி

உங்க பெட்டர் ஹாஃப் க்கு சொன்ன பதில்தான் உங்களுக்கும்.

//கம்பில் துணி உலர்த்துவது எனக்கும் வராது.//

ஹை!ஸேம் ப்ளட்! :))

@வேடந்தாங்கல் கருன்

என்ன சந்தோஷம் சார் உங்களுக்கு.சரி ரொம்ப நாள் கழிச்சு வந்துருக்கீங்க அப்டிங்கறதால சும்மா விட்டுடறேன் ஓக்கே?! :-)

@ரிஷபன்

//உங்களுக்கு காமெடியும் நல்லா வருது..//

சார்!எங்க வீட்ல நாந்தான் காமெடி பீஸ்! அதான்...ஹி...ஹி.. :)

@சென்னை பித்தன்

ஆஹா!மற்றுமொரு ரசிகர்!

நன்றி சார்!

@மாதவி

டெம்ப்ளேட் கமென்ட் போட்டா எப்பிடி மேடம்!

பாடுங்கறீங்களா? வேணாங்கறீங்களா?

மேலே பாருங்க.தலைநகரத்துலேருந்து ஆச்சி பாடுங்கறாங்க.ஆதி வேணாங்கறாங்க.
நீங்க எந்த கட்சி?

ஆனா பாத்துக்கங்க.ஆதியை பழி வாங்கணும்னா அவ்ளோ தூரம் போகணும்.நீங்க எப்டி?

raji said...

@துரை டேனியல்

thank u sir!

கீதமஞ்சரி said...

உங்க அனுபவப் பகிர்வு சுவையாவும் சுவாரசியமாவும் இருக்கு.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

பல்பாபிஷேகமா? என் அத்தையும் கம்பில் துணி உலர்த்தும் கேஸ்தான். எனக்கு வாங்கி உலர்த்த ஆசைதான். அனால கேட்டால் கம்பாலேயே அடிக்க வருவாள். ஒருமுறை உலர்த்துகிறேன் பேர்வழி என்று காம்பிலிருந்து நழுவி அவளது நார்மடி புடவை முற்றத்து சாக்கடையில் விழுந்த பிறகு இப்படித்தான் அடிக்க வருவாள்.

Unknown said...

மிக அருமையாக, ஒரு சாதாரண நிகழ்சியை
நல்ல நகைச் சுவை பதிவாக்கிய தங்கள்
திறமை பாராட்டுக்கு உரியது நன்றி!

த ம ஓ 11

ஒருமுறை என வலைவழி வாருங்களேன்!

புலவர் சா இராமாநுசம்

SURYAJEEVA said...

//நான் வேணும்னா உங்களுக்கெல்லாம் இப்ப அந்த பாட்டைப் பாடிக் காமிக்கட்டுமா? உங்க கம்ப்யூட்டர் மானிட்டர்லாம் ஒண்ணும் ஆகாதுங்க.
ஏன் பயப்படறீங்க? //

மறுபடியும் பாடறதுக்கு முன்னாடி பல்பு இல்லாத வெளிப்புறத்துக்கு வந்துடுங்க...

சாந்தி மாரியப்பன் said...

ஆஹா..
பல்பே
பல்பு கொடுக்கிறதே.
அடடே!!

வெங்கட் நாகராஜ் said...

அழைப்பிதழ்:

உங்களது இவ்விடுகையை இன்றைய வலைச்சரத்தில் “ஞாழல் பூ - அனுபவச்சரம்” என்ற தலைப்பில் வலையுலக நண்பர்களுக்கு அறிமுகம் செய்திருக்கிறேன்.

http://blogintamil.blogspot.in/2012/04/blog-post_08.html

நேரம் இருக்கும் போது வந்து பார்வையிட அழைக்கிறேன்.

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

Post a Comment