Sunday, November 27, 2011

களஞ்சியம்

இன்றைய களஞ்சியம்:


 1.  ஆக்கூர் அனந்தாச்சாரி என்ற அறிஞர் அவர் நண்பர்கள் சிலருடன் ஒரு பொதுக்காரியத்திற்காக ஒரு செல்வந்தரைக் கண்டு ஒரு நல்ல காரியத்திற்காக நன்கொடை பெற முடிவு செய்திருந்தார்.அதன்படி மற்ற நண்பர்கள் அந்த குறிப்பிட்ட நாளில் ஆக்கூரார் வீட்டுக்கு போக புறப்பட்டனர்.ஆனால் அவரோ தெருமுனையிலேயே அவர்களைச் சந்தித்து அவர்களுடன் கிளம்பி விட்டார். நன்கொடை பெற்ற பின் வண்டியில் கிளம்பி முதலில் ஆக்கூரார் வீட்டிற்கு ஓட்டச் சொன்ன்போது அவர் மறுத்தார்.ஆனாலும் நண்பர்கள் விடாப்பிடியாக அவரை வீட்டில் இறக்கச் சென்ற போதுதான் விஷயம் தெரிய வந்தது.ஆக்கூராரின் தாய் இறந்து விட்ட நிலையிலும் நல்ல காரியத்திற்கான பொதுப் பணி நிற்கக் கூடாதென எண்ணி வந்திருக்கிறார் என்றும் அது தெரிந்தால் தடைப்பட்டு விடலாம் என்றும் நினைத்திருக்கிறார் என்று அறிந்தனர்.


தன்னலமற்ற மனிதர்கள் பெரியோர்களே


2. சுவாமி சின்மயானந்தாவின் உரைகளில் ஒன்று :

என்னுடையது என்று எதையெல்லாம் நீங்கள் எண்ணிக் கொண்டிருக்கிறீகளோ அவற்றையெல்லாம் வரிசையாக எழுதுங்கள்.பட்டியல் எவ்வளவு நீள்கிறதோ அந்த தூரம்தான் கடவுளுக்கும் உங்களுக்கும் இடையேயுள்ள தூரம்

நம் அளவை நாம் கணக்கிட்டுக் கொள்ளலாம்.அதற்கு ஒரு எளிய வழி.

3 ஒரு தம்பதியர் அவர்களது பத்து வயது மகனுடன் ஆனந்த விகடன் அலுவலகத்தை அணுகி "இந்த ஒரு லட்சம் ரூபாயை அரசுக்கு நாங்கள் திருப்பித் தர ஏதேனும் வழி செய்யுங்கள் " என்று உதவி கோரியுள்ளனர்.விவரம் கேட்ட பொழுது அவர்கள் கூறியது, "சுனாமியில் அவர்கள் மகன் இறந்து விட்டதாகக் கருதி அரசு அவர்களுக்கு கொடுத்த தொகை அது.ஆனால் பல நாட்களுக்குப் பின் அவர்களது மகன் அவர்களுக்கு திரும்ப கிடைத்து விட்டான்.எனவே அரசாங்கத்தின் தொகையை அதனிடமே ஒப்படைக்க எண்ணி பல அரசு அதிகாரிகளை அணுகியுள்ளனர்.ஆனால் அந்த அதிகாரிகள்
அவ்வாறு செய்ய இயலாது என்று கூறி விட்டனர்". தற்பொழுது ஆனந்த விகடனும் அந்த குடும்பத்துடன் இணைந்து அந்த தொகையை அரசிடம் திருப்ப வழி உள்ளதா என்று பார்க்கும் முயற்சியில் உள்ளது.

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லாருக்கும் பெய்யும் மழை



18 comments:

Yaathoramani.blogspot.com said...

ஆகா அருமையான அனைவரும் அவசியம்
அறிந்து கொள்ள வேண்டிய தகவல் களஞ்சியம்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 2

RVS said...

சின்மயானந்தாவின் உரை அற்புதம்.

லட்ச ரூபாயைத் திருப்பித் தரத்தான் வேண்டுமா?

இராஜராஜேஸ்வரி said...

களஞ்சியம் நிறைவாக இருக்கிறது.. பாராட்டுக்கள்...

RAMA RAVI (RAMVI) said...

களஞ்சியம் அருமை. மூன்று விஷயங்களுமே சிறப்பாக இருக்கு.

பாலா said...

எல்லா கருத்துமே சும்மா நச்சுன்னு இருக்கு. அருமை.

சாந்தி மாரியப்பன் said...

நிறைவான களஞ்சியம்..

மனோ சாமிநாதன் said...

களஞ்சியத்தின் இன்றைய தகவல்கள் அனைத்துமே அருமை! அதிலும் அந்த முதல் தகவல் நெஞ்சைத் தொடுகிறது.

ADHI VENKAT said...

களஞ்சியம் அருமையாக உள்ளது.

வை.கோபாலகிருஷ்ணன் said...

களஞ்சியம் மூன்றுமே நிறைவாக இருக்கிறது.
இருப்பினும் அந்த இரண்டாவது எனக்கு மிகவும் பிடித்துள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.

Admin said...

கள்ஞ்சியம் என் மனதைக் கவர்ந்தது தோழியே..

சாகம்பரி said...

களஞ்சியம் நிறைவாக இருக்கிறது. நல்ல பகிர்வு.

ரிஷபன் said...

களஞ்சியம் நல்லவர்களின் தொகுப்பு.
அதான் மழை பெய்கிறது இப்போதும்!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

3ஆவது விஷயம் ஆச்சரியமளித்தது.

குறையொன்றுமில்லை. said...

நிறைவான களஞ்சியம்..

Anonymous said...

அனைவரும் அவசியம்
அறிந்து கொள்ள வேண்டிய தகவல் களஞ்சியம்...முதல் தகவல் நெஞ்சைத் தொடுகிறது...வாழ்த்துக்கள்

வெங்கட் நாகராஜ் said...

களஞ்சியம் நன்று...

மூன்றாவது விஷயம்... - அவர்கள் விருப்பப்பட்டால் அந்த பணத்தினை “பிரதம மந்திரி நிவாரண நிதிக்கோ, முதலமைச்சர் நிவாரண நிதிக்கோ” தந்து விடலாம்....

Thenammai Lakshmanan said...

களஞ்சியம் நிறைவைத் தந்தது ராஜி.. வாழ்த்துக்கள்..:)

raji said...

@ரமணி சார்

நன்றி

@RVS

தங்கள் கருத்து சரிதான்.அப்படி அவசியமில்லைதான்.ஆனால் அவர்களுக்கு உரிமையற்ற பணத்தை பிறருக்கு தானமளிப்பதோ உபயோகித்தலோ அவர்களுக்கு சரியாகப் படவில்லை என கேள்வி

@இராஜராஜேஸ்வரி

நன்றி

@RAMVI

நன்றி

@பாலா

நன்றி

@அமைதிச்சாரல்

நன்றி

@மனோ சாமிநாதன் மேடம்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி மேடம்

@கோவை2தில்லி

நன்றி

@வை கோபாலகிருஷ்ணன் சார்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

@மதுமதி

நன்றி தோழி

@சாகம்பரி மேடம்

நன்றி

@ரிஷபன்

கருத்திற்கு நன்றி சார்

@NIZAMUDEEN

கருத்திற்கு நன்றி

@லக்ஷ்மிம்மா

நன்றி

@ரெவெரி

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

@வெங்கட் நாகராஜ்

தங்கள் கருத்து சரிதான்

@தேனம்மை லெக்ஷ்மணன்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி மேடம்

Post a Comment