Saturday, December 3, 2011

முற்றிலும் கோணலன்று

"அம்மா!கொஞ்சம் காலை நகத்திக்கறீங்களா பெருக்கணும்"  துடைப்பத்தைக் கையில் வைத்துக் கொண்டு நின்று கொண்டிருந்தாள் கமலா

கம்ப்யூட்டரில் தனது அலுவலக பணிக்கான ப்ராஜக்டை சரி பார்த்துக் கொண்டிருந்த சுகன்யா நிமிர்ந்து பார்த்தாள்.

"மத்த வேலை எல்லாம் முடிச்சுட்டயா கமலா?"

"ஆயிடுச்சும்மா.வீடு கூட்டிட்டா கெளம்ப வேண்டியதுதான்.ஏம்மா கேக்கறீங்க?"

"சரி இதோ ஒரே ஒரு நிமிஷம் இரு" என்று ஸேவ் பட்டனை க்ளிக்கி அதை பாதியில் வைத்து விட்டு எழுந்தாள்

"ஏம்மா!தொந்தரவா ஆயிடுச்சா?நான் வேணா கொஞ்ச நேரம் இருக்கேன்மா.நீங்க அந்த பொட்டில ஏதாச்சும் பண்ணனம்னா முடிச்சுக்கங்க"

"அதெல்லாம் ஒண்ணுமில்ல.நான் அப்பறம் பாத்துப்பேன்.நீ பெருக்கிடு"

"ஏம்மா ரொம்ப நாளா ஒண்ணு கேக்கணுமின்னுட்டு...."

"கேளு கமலா!ஏன் தயங்கற?ஏதாச்சும் பண உதவி வேணுமா?"

"ஐய!அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா.ஒரு சந்தேகம்தான் கேக்கணும்"

 "சந்தேகமா? என்ன கேக்கணும்? கேளு"

"இல்லம்மா.இந்த பொட்டில நீங்க வேலை பாக்கறதை அடிக்கடி பாத்துருக்கேன்.பாலு தம்பி ரேகா பொண்ணும் கூட இதுல ஏதோ செய்யறதை
பாத்துருக்கேன்.ஐயா தனியா வேற மாதிரி ஒண்ணு வச்சுருக்காரு.அதுக்கும் இதுக்கும் என்ன வித்தியாசம்?இதுல என்ன செய்வீங்க எல்லாரும்?"

"அட!இது என்ன புது சந்தேகம் உனக்கு?என்ன திடீர்னு?"

"இல்லம்மா.எங்கூட்லயும் பாப்பா பன்னண்டாவது படிக்குதுல்ல.அதுக்கு கூட இப்பிடி பொட்டி குடுப்பாங்கன்னு சொல்லிகறாங்கம்மா.அதான் இத பத்தி விவரம் கேட்டுக்கலாம்னு...."

"ஓ! அப்டியா? உன் பொண்ணு ப்ளஸ் டூ படிக்கறாளா? அவ என்ன க்ரூப் எடுத்துருக்கான்னு உனக்கு தெரியுமா?"

"அதென்னவோம்மா! எனக்கு அதெல்லாம் தெரியாது.டாக்டருக்கு படிக்கணுமின்னுட்டு அதுக்கு ஆசை.அந்த க்ரூப்புன்னு சொல்லிச்சு"

"வெரிகுட்! சரி, இப்ப நீ கேட்ட சந்தேகத்துக்கு வருவோம்.இதை கம்ப்யூட்டர்னு
சொல்வாங்க.ஐயா வச்சுருக்கறதும் இதுதான்.ஆனா அதை எங்க வேணா தூக்கிட்டு போகற வசதி உண்டு.அதுக்குப் பேரு லேப்டாப்னு சொல்வாங்க.
இதுல, படிக்கற குழந்தைகள் அவங்களுக்குத் தேவையான மாதிரி படிப்பு சம்பந்தமா உபயோகிச்சுக்கலாம்.என்னை மாதிரி ஆஃபீஸ் போறவங்க அது சம்பந்தமான வேலை பாத்துக்கலாம்.கணக்கு வழக்கெல்லாம் பாத்துக்கலாம்.
நெட் அப்டின்னு ஒரு வசதி இருக்கு.அதை செஞ்சுக்கிட்டா இன்னும் நிறைய பண்ணலாம்.நம்ம உறவு நட்புகளோட கடிதம் மாதிரி அனுப்பிச்சுக்கலாம்.அதுலயே பேசிக்கலாம்.விளையாட்டுக்கள் இருக்கு.இன்னும் கேளிக்கைகுரியதுலாம் நிறைய இருக்கு.உன் பொண்ணு மாதிரி படிக்கற பசங்களுக்கு படிப்பு சம்பந்தமா நிறைய தெரிஞ்சுக்க உதவியா இருக்கும்.உனக்கு இந்த விவரம் போதுமா? இல்ல இதுல ஏதாவது செஞ்சு காட்டட்டுமா?"

"ஐயோ!அதெல்லாம் வேணாம்மா!இதுவே பாதி புரிஞ்சாப்ல இருக்கு புரியாத மாதிரியும் இருக்கு.எனக்குத் தெரிய வேண்டியதெல்லாம் என் பொண்ணுக்கு இது உதவியா இருக்குங்களா?"

"உபயோகிக்கற விதத்துல உபயோகிச்சா எதுவும் உதவிதான் கமலா!ஏன் கவலைப்படற?"

"அதில்லம்மா!அக்கம் பக்கம்லாம் இது வந்துட்டா பசங்க கெட்டுப் போயிடுவாங்கனு பேசிக்கறாங்களா, அதான் எனக்கு ஒண்ணும் புரியல.
நாந்தான் படிக்காத பாவியாய்ட்டேன்.என் பொண்ணுனாச்சும் நல்லா படிச்சு பெரிய பெரிய உத்யோகத்துக்கு போகணும் தாயி!எங்கப்பன் குடிகாரன்.எங்காத்தா அவனோட மல்லாடுச்சு.அப்டி அவதிப்பட்டும் என்னிய ஒரு குடிகாரனுக்கே கண்ணாலமானா போதுமின்னு கட்டி வச்சுருச்சு.என் பொண்ணுக்கு அந்த அவதி வரக் கூடாது.முதல் கோணல் முற்றிலும் கோணல்னு சொல்வாங்க.அப்டி ஆவக் கூடாது.என் பொண்ணு விஷயத்ல நேர் செஞ்சிரணும்"

"கவலைப்படாத கமலா! உன் பொண்ணு நல்லா படிக்க எந்த உதவின்னாலும் நான் செய்யறேன்.இதுனால எல்லாம் உன் பொண்ணு படிப்பு கெடாது.சொல்லப்
போனா உபயோகம்தான்.கட்டாயமா உன் பொண்ணு நல்ல முறைலதான் இதை உபயோகிச்சுப்பா.இது விஷயமா என்ன உதவி வேணும்னாலும் நான் செய்யறேன்.இது மட்டுமில்ல.அவ படிக்க பண விஷயமாவோ வேறெந்த உதவியோ வேணும்னாலும் என் கிட்ட தயங்காம கேளு.சரியா?"

"ரொம்ப நன்றிங்கம்மா!" என்று துடைப்பத்தைக் கையில் எடுத்து தன் வீட்டு கோணலை நேராக்க வளைந்து கூட்ட ஆரம்பித்தாள்.




29 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//"அதில்லம்மா!அக்கம் பக்கம்லாம் இது வந்துட்டா பசங்க கெட்டுப் போயிடுவாங்கனு பேசிக்கறாங்களா, அதான் எனக்கு ஒண்ணும் புரியல.
நாந்தான் படிக்காத பாவியாய்ட்டேன்.//

படிக்காதவளாயினும், விவரமானவளாகவே இருக்கிறாள். அவள் கவலைப்படுவதும் நியாயமே!
எல்லாவற்றிலும் நல்லதும் உள்ளது. கெட்டதும் உள்ளது. இதை யாரும் மறுக்க முடியாதே!

//உன் பொண்ணு நல்லா படிக்க எந்த உதவின்னாலும் நான் செய்யறேன்.இதுனால எல்லாம் உன் பொண்ணு படிப்பு கெடாது.சொல்லப்
போனா உபயோகம்தான்.கட்டாயமா உன் பொண்ணு நல்ல முறைலதான் இதை உபயோகிச்சுப்பா.இது விஷயமா என்ன உதவி வேணும்னாலும் நான் செய்யறேன்.இது மட்டுமில்ல.அவ படிக்க பண விஷயமாவோ வேறெந்த உதவியோ வேணும்னாலும் என் கிட்ட தயங்காம கேளு.சரியா?"//

நல்ல தங்கமான குணம் உள்ள வீட்டுக்கார அம்மா! ;))))

தமிழ்மணம்: 2 இண்ட்லி: 3
யூடான்ஸ் மட்டும் எனக்கு இன்று செயல்படவில்லை.
vgk

வை.கோபாலகிருஷ்ணன் said...

//இதுவே பாதி புரிஞ்சாப்ல இருக்கு புரியாத மாதிரியும் இருக்கு.எனக்குத் தெரிய வேண்டியதெல்லாம் என் பொண்ணுக்கு இது உதவியா இருக்குங்களா?"

"உபயோகிக்கற விதத்துல உபயோகிச்சா எதுவும் உதவிதான் கமலா!//

மிகச்சரியான பதில். எதையுமே உபயோகிக்கற விதத்துல தான் உபயோகிக்கணும்.

நல்ல விஷயத்தை கமலாவுக்கு சுகன்யா சொல்வது போல, எங்கள் எல்லோருக்கும் நீங்க சொல்லிட்டீங்க!
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.vgk

KParthasarathi said...

பல ஏழை குடும்பங்களில் இதே சூழ்நிலைதான்.
படித்து முன்னுக்கு வர இந்த லேப்டாப் உதவி
காரணமாக அமையட்டும்.அழகாக எழுதி இருக்கிறீர்கள்

middleclassmadhavi said...

Super! Government than viLakkavuraiyaaga ungal idugaiyaip payanpaduththalaam! ;-))

பால கணேஷ் said...

இன்றைய விஞ்ஞான வளர்ச்சியால் சாதனங்களால் கிடைக்கும் வசதிகள் கூரான கத்தி மாதிரி. சரியாக கையாள பெரியவர்கள் வழிநடத்தினால் எதுவுமே நல்லதுதான். நல்ல ஒரு விஷயத்தை அழகான நடையில் எழுதியிருக்கிறீர்கள். பிரமாதம்!

வெங்கட் நாகராஜ் said...

நல்ல விஷயம்... இது போன்ற உதவி செய்யும் மனப்பான்மையோடு எஜமானிகள் இருந்துவிட்டால் நல்லது....

எந்த ஒரு பொருளுமே நல்ல விதத்தில் பயன்படுத்தப்பட்டால் நல்லது தான் - தெளிவாகச் சொல்லி விட்டீர்கள்.... வாழ்த்துகள்...

இராஜராஜேஸ்வரி said...

"உபயோகிக்கற விதத்துல உபயோகிச்சா எதுவும் உதவிதான் கமலா!ஏன் கவலைப்படற?"

மனம் நிறைந்த நிறைவான அருமையான பகிர்வு..
பாராட்டுக்கள்..

இராஜராஜேஸ்வரி said...

கட்டாயமா உன் பொண்ணு நல்ல முறைலதான் இதை உபயோகிச்சுப்பா

எதையுமே முற்றிலும் கோணலாக பார்க்காமல்
நேர் சிந்தனையுடன் பகிர்வு மனம் கவர்ந்தது..
பாராட்டுக்கள்.. வாழ்க வளமுடன்..

RVS said...

:-)

குறையொன்றுமில்லை. said...

அந்த வேலைக்காரிக்கும் புரியும்படி எடுத்துச்சொன்னது அழகு.

ananthu said...

நல்ல கதை ...

ரிஷபன் said...

உபயோகிக்கற விதத்துல உபயோகிச்சா எதுவும் உதவிதான்

ம்ம்.. அருமையா சொன்னீங்க.

Unknown said...

கதை சூப்பர்..கலக்குறீங்க போங்க..
அப்ரம் சமூக வலைத்தளங்களாலதான் பலரும் கெட்டு போறாங்க..அரசாங்கம் சமூகவலைத்தளங்கள் மற்றும் ஆபாச வலை தளங்களை தடைசெய்து கல்விக்கு பயணளிக்கும் தளஙகளை மட்டுமே அந்த மடிக்கனினியில் பார்க்கமுடியுமாறு செய்தால் நன்றாக இருக்கும்.அப்டி ஒருவழி இருக்கான்னு எனக்கும் தெரியல.
இல்லன்னா இந்த மடிக்கனினியால் நன்மையை விட தீயவையே அதிகரிக்கும்.இது என் கருத்து.

இப்படிக்கு
சமூக வலைத்தள பார்வையாளன்.
தமிழின் முதல் இன்விசிபிள் குழுமம் இங்கே.

Matangi Mawley said...

அரசாங்கம் "laptop கொடுப்போம்" னு அறிவிச்சது ஒரு பக்கம். ஆனா- அப்படீன்னா என்ன ன்னு தெரியாத மக்கள்- இந்த அறிவிப்பை எப்படி பார்க்கறாங்க-ங்கறதுக்கு ரொம்பவே அழகான எடுத்துக்காட்டு இந்த கதை (?). ஒரு 'புது' விஷயம் சமூஹத்துக்குள்ள வருது. அத பத்தி தெரியாத மக்களுக்கு- இயற்கையாகவே இருக்கற "mixed feelings"- ரொம்பவே subtle ஆனா விதத்துல கதைக்கு ஒரு அழகான core ஆ மாறி இருக்கு.
பெண்ணுக்கு 'laptop' கடைக்கர விஷயம்- நிஜமாகவே அவளுக்கு பயனுள்ளதா இருக்குமா-- இல்ல அதனால ஏதேனும் ஆபத்து அவளுக்கு வருமா-ன்னு எத்தனை எத்தனையோ விஷயங்கள் அந்த அம்மா வின் மனதில்! இந்த விஷயத்தை புரிந்துகொள்ள அவள் எடுக்கும் முயற்சி... Very well written ... Thought Provoking...

அப்பாதுரை said...

என் புத்தி என்னை விட்டுப் போகுமா? 'ஐயா தனியா வேற மாதிரி ஒண்ணு வச்சுருக்காரு'ன்னதும் கற்பனை எங்கியோ ஓடிப்போச்சு...
நல்ல வேளையா கடிவாளம் மாட்டி இழுத்துட்டு வந்துட்டீங்க..

மாதங்கியின் 'mixed feelings' மனப்பான்மை பற்றிய கருத்தும் சுவாரசியம்.
இலவச லேப்டாப் தருதா அரசாங்கம்? பரவாயில்லையே?

மனோ சாமிநாதன் said...

ஒரு அழகான கருத்தை, அழகான நடையில் அழகாக எழுதியிருக்கிறீர்கள் ராஜி!!

திண்டுக்கல் தனபாலன் said...

அழகான பதிவு. நன்றி சகோதரி!
நம்ம தளத்தில்:
"அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா? - பகுதி 1"

ADHI VENKAT said...

நல்லதொரு கதை ராஜி. இனி அவர் வீடு நேர் ஆகி விடும்.

RAMA RAVI (RAMVI) said...

வேலை செய்பவருக்கு புரியும் படியாக சொன்ன விதம் சிறப்பாக இருக்கு.

//தன் வீட்டு கோணலை நேராக்க வளைந்து கூட்ட ஆரம்பித்தாள்.//

அருமை.

ஆச்சி ஸ்ரீதர் said...

அவசியமான கருத்தை விழிப்புணர்வு பதிவாக கதையின் மூலம் சொல்லீடீங்க.இப்போ பெத்தவங்க ஒன்னும் தெரியாமல் இருக்கலாம்.ஆனா பிள்ளைகள் கையில் எப்போ கேமரா ஃபோன் கிடைக்க,நெட் வசதியுள்ள ஃபோன் கிடைத்த போதே பல பிள்ளைகள் கண்டதையும் கிளிக்கவும்,பாக்கவும் ஆரமிச்சிடாங்க.

அப்படிபட்ட பிள்ளைகளுக்கு இந்த லேப்டாப் அட்வான்ஸ் வசதியாக இருக்குமே தவிர ஆரம்ப சீர்கேடா இருக்காதுங்க.

Suresh Subramanian said...

விழிப்புணர்வு கதை...www.rishvan.com

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

எல்லாவற்றிலும் நல்லதும் உள்ளது, கெடுதலும் உள்ளது. இவ்வுலக வாழ்வே அப்படிப்பட்டதுதான்.

raji said...

பின்னூட்டமளித்த அனைவருக்கும் எனது நன்றிகள்

Unknown said...

அருமையான கதை.இன்றைய நடைமுறைக்கு தேவையான பதிவு.பகிர்வுக்கு நன்றி.

Yaathoramani.blogspot.com said...

எல்லாவற்றிலும் நன்மை தீமை உண்டு
எது தேவை என்பதை நாம்தான்
முடிவு செய்ய வேண்டும்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு
நல் வாழ்த்துக்கள்

அப்பாதுரை said...

[புத்தாண்டு வாழ்த்துக்கள்]

Yaathoramani.blogspot.com said...

ஏறக்குறைய தாங்கள் பதிவிட்டு ஒரு மாதத்திற்கு மேலாகிவிட்டது
என நினைக்கிறேன்
என்னைப் போல் தங்கள் பதிவின் ரசிகர்கள் பலர்
தங்கள் பதிவை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறோம்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய பொங்கல்திரு நாள் வாழ்த்துக்கள்

வை.கோபாலகிருஷ்ணன் said...

//கற்றலும் கேட்டலும் அள்ள அள்ள குறையாத செல்வங்கள்,இந்த பெயரில் குறையாத செல்வங்களை நமக்கு தந்து வருகிறார்,சகோ.ராஜி.

மருந்து,சிகிச்சைகளுடன் மரணத்தை வெல்ல முக்கியமான விஷயம் பற்றி நல்லதோர் வீணை செய்தே இங்கே சொல்லியிருக்கிறார்.//

வலைச்சரத்தில் 24.01.2012 அன்று மீண்டும் அறிமுகம் ஆனதற்கு என் அன்பான வாழ்த்துகள்.vgk

Post a Comment