எப்ப பாத்தாலும் சீரியஸ் பதிவாவே போடறாங்களே இவங்கன்னு எல்லாரும் நம்மள
ஓரங்கட்டிட்டா என்ன பண்ணறதுன்னு யோசிச்சதுல கொஞ்சம் இப்டி காமெடியும்(!)
மொக்கையுமா ஏதாவது போடலாமேனுதான் இநத பதிவு.(பாத்தும்மா,கடைசில
இத படிச்சிட்டு ஓரங்கட்டிடப் போறாங்க _ இது கணவர் )
சரி காமெடியா என்ன போடலாம்னு யோசிக்கும்போதே அருமை அண்ணன் வந்து, "தனியா எதுக்கும்மா காமெடி பதிவுலாம்?அதான் ஏற்கனவே உன் ப்ரொஃபைல் குடுத்துருக்கயே" என்று கேட்க,
படித்துக் கொண்டிருக்கும் 'ஹிண்டு' வை லேசாகத் தழைத்து, 'இதையே நான் சொல்லிருந்தா என்ன ஆயிருக்கும்' என்பது போல் கணவர் பார்த்தார்.
சரி சரி கற்பூர வாசனை தெரியாதவங்களை எல்லாம் பக்கத்துல வச்சுகிட்டு எழுதறது கஷ்டம்தான்னு முடிவு பண்ணி அவங்கல்லாம் வேலை பாக்க(?) ஆபிஸ் போனப்பறம் எழுப்பினேன் என் மூளையை(சத்தியமா எனக்கு மூளை இருக்குதுன்னு எனக்கு சி.டி ஸ்கேன் பண்ணின
டாக்டர் சொனாருங்க)
அதன் விளைவுதான் இநத "அலமேலுவின் அட்டகாசங்கள்"
அலமேலுவும் அவள் தோழியும் சினிமா பார்க்க தியேட்டர் செல்ல அங்கு உள்ளே நுழைய முடியாமல் ஒரே கூட்டம்.நம்ம அலமேலு அடிச்சி பிடிச்சி உள்ள நுழைய போற சமயம்,
செக்யூரிட்டி: வெயிட் மேடம்
அலமேலு: அறுபது கிலோங்க
செக்யூரிட்டி: ..?
அலமேலுவின் மெடிக்கல் 'செக்கப்' பின் போது
டாக்டர்: சரியான சாப்பாடில்லாத காரணத்தால வீக்கா இருக்கீங்க.
மார்னிங் ஹெல்த்தி ப்ரேக்பாஸ்ட் எடுத்துக்கங்க.மத்யானமும் சத்துள்ள ஆகாரங்களா சமைச்சதை சாப்டுங்க.
அலமேலு: ஐயோ!அது முடியாதே டாக்டர்!
டாக்டர்: ஏன்?
அலமேலு:அவருக்கு அந்த அளவெல்லாம் சமைக்க தெரியாது டாகடர்.ஏதோ சமைப்பார் அவ்ளதான்
அலமேலுவும் அவள் கணவன் அழகர்சாமியும்:
அழகர்சாமி: என்னது? ஏ டி எம் லேர்ந்து என் சம்பளப்பணம் மொத்தத்தயுமா டிரா பண்ணிட்ட?சம்பாதிக்கறது நான், செலவழிக்கறது நீயா?
அலமேலு: கடமையை செய், பலனை எதிர்பார்க்காதனு சொல்லிருக்குங்க.நீங்க உங்க கடமையை மட்டும் செஞ்சா போதாதா?
அலமேலுவின் மகனைப் பற்றி புகாருடன் ஆசிரியையும், அலமேலுவும்:
ஆசிரியை: உங்க பையன் இந்த ஹாலிடேஸ் முடிஞ்சு வந்தப்பறம் ரொம்ப வாலா மாறிட்டான்.படுத்தல் தாங்கல.
அலமேலு: ஸ்கூல் முடிஞ்சு ஹாலிடேஸ் விட்டிங்களே.லீவுல ஒரு நாளாவது
வந்து உங்க ஸ்டூடண்ட் ரொம்ப வாலா இருக்கான்,படுத்தல் தாங்கலன்னு நான் சொல்லிருப்பேனா?
ஆசிரியை: .....?
இதெல்லாம் படிச்சிட்டு மண்டைய பிச்சிக்கிட்டீங்கன்னா அதுக்கெல்லாம் அலமேலுதான் காரணம்(நானில்ல).
உங்க தலைல மிச்சம் மீதி இருக்கற முடியைப் பொறுத்து அட்டகாசங்களை தொடரலாமாங்கறத யோசிக்கலாம்.அது வரை அலமேலுவின் சார்பில் உங்களிடமிருந்து வடை பெறுகிறேன், சீ சீ அது என்னது அது ஆங்.. விடை பெறுகிறேன்

15 comments:
அலமேலு , அழகர்சாமி நகைச்சுவை ஜோடி ஜோருங்க..
மூனாவது நகைச்சுவை மாதிரி நாங்கெல்லாம் அழகர் சாமிகள்... கீதையை கடைபிடிப்பவர்கள்....
அட்டஹாசங்கள் தொடரட்டும்
நல்லா இருக்கு நகைச்சுவை பகிர்வுகள். தொடரலாமே!
அலமேலு டீச்சர் கிட்ட அலுத்துக்கறது நல்லார்க்கு.
இது வேற அலமேலுவா? இல்ல ஆதவன் அலமேலுதானா????? ஆதவா எங்கிருந்தாலும் ஓடி வா :)))
நன்றி கோபி சார்.நன்றி மிஸ்டர் பத்மனாபன்,மிஸ்டர் வெங்கட் நாகராஜ்
நன்றி வித்யா மேடம
விஜி அது என்ன ஆதவன் அலமேலு?புரியலயே
நல்ல நகைச்சுவையான பகிர்வு. தொடருங்கள்.
நன்றி கோவை2தில்லி
அதானே.. என்னிக்காச்சும் அவங்க ஸ்டுடண்ட் பத்தி புகார் பண்ணியிருப்போமா?!
நல்லா இருக்கு.. அலமேலு பண்ற கலாட்டா
நன்றி மிஸ்டர் ரிஷபன்
:))
// ஆதவன் அலமேலு//
:-)
Just Google "ஆதவன் அலமேலு".
Or
Open this link
http://www.google.it/profiles/aadhavanssk
His friends/followers(not only) used to make fun of him with the name அலமேலு.
ரொம்ப நல்லவர். ஊர் பேர் தெரியாதவங்க எல்லாம் கிண்டல் பண்ணினாலும் சந்தோசமா ஏத்துக்குவார்.
# எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான். இவன் ரொம்ப நல்லவன்'ன்னு ஒரு வார்த்தை சொல்லணும். அவ்வளவு தான். :)
ஹா...ஹா...ஹா...
இந்த அலமேலு அட்டகாசங்கள் தாங்க முடியல...
அடுத்த பார்ட் எப்போவோ?
ரொம்ப சூப்பரா இருந்ததுங்க !
உங்க மொழி நடை ரொம்ப யதார்த்தமா இருக்கு .
இவண், இணையத் தமிழன் .
http:\\inaya-tamilan.blogspot.com
Post a Comment