Wednesday, December 8, 2010

பிராணாயாமம்

                                      பிராணசக்தியை நியமத்திற்கு கொண்டு வருவதே பிராணாயாமம் ஆகும்.
நம் உடலில் பிராணன் என்ற அடிப்படை சக்தி ஒளிந்திருக்கிறது.
இந்த சக்தியை நாம் நம்முடைய மூச்சின் மூலமறிந்து கொள்ளலாம்.மின்சாரத்தை நாம் நம் தேவைக்கேற்ப கட்டுப்படுத்துவது போல் நாம் நம் பிராண சக்தியையும் நம் கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம்

பிராண சக்தியின் நன்மைகள்:

                                                         பிராண சக்தியை நன்கு பயன்படுத்துவதால்  மனிதனின் உடல்,மனம், மூச்சு மற்றும் அறிவு செம்மையாக இயங்குகின்றன.நன்கு பண்படுகின்றன.ஆத்ம பலம் கிட்டுகிறது.அதற்கு மேலும் தெய்வ சக்தியைக் கூட பெற இயலும்.

மனிதன் தன் உடல்,மனம், மற்றும் அறிவை முழுமையான முறையில் பயன்படுத்துவதில்லை.அதாவது, நாம் ஆழ்ந்து சுவாசிக்கும்போழுது
அதிகக் காற்றை உள்ளிழுத்துக் கொள்கிறோம்.நாம் நன்கு மூச்சு விடும்பொழுது நம் உடலிலுள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேறுகின்றன.
ஒரு மனிதன் சாதாரணமாக மூச்சு விடும்போது ஒவ்வொரு முறையும் அரை லிட்டர் காற்றை உள்ளிழுத்து அதே அரை லிட்டர் காற்றை வெளி விடுகின்றான்.ஆனால் முழுமையாக சுவாசிக்கத் தெரிந்த மனிதனோ ஒவ்வொரு முறையும் இரண்டரை லிட்டர் காற்றை உள்ளிழுத்து அதே அளவு வெளி விடுகின்றான்.
எனவே சாதாரணமாக சுவாசிப்பவர்கள் தன் திறமை,சக்தியில் ஐந்தில் ஒரு பங்கை மட்டுமே  பயன்படுத்துகிறார்கள்.இதனால் அவர்களுடைய உடலில் ரத்த ஓட்டம்,பிராண வாயு மற்றும் பிராண சக்தி இவை இதயத்திலிருந்து தொலைவில் உள்ள மூளை, விரல் நுனி இவற்றிற்கு போதுமான அளவு கிடைப்பதில்லை
நுரையீரலின் மேல்பகுதியிலும் கீழ் பகுதியிலும் உள்ள செல்கள் பிராண வாயு கிடைக்காமல் மரித்து போகின்றன. கை, கால், விரல்கள் மற்றும் மூளை இவை முழுத்திறமையுடன் பயன்படுவது இல்லை.மனமும் அமைதியை வெகு சுலபத்தில் இழந்து விடுகிறது.

பிராணாயாமம் செய்யும் வழிகள்:
                                                          பிராணாயாமம் செய்ய பல வழிகள் உள்ளது.ஒரு நாசியால் மூச்சை உள்ளிழுத்து மறு நாசியால் மூச்சை வெளியேற்றுவது மிக எளிமையான வழி.மூச்சு  உள்ளிருக்கும்போது நாசியை மாற்ற வேண்டும்.பின் எந்த நாசியால் மூச்சை வெளி விட்டோமோ அதே நாசியால் மீண்டும் மூச்சை உள்ளிழுக்க வேண்டும்.
ஆழ மூச்சு விடுதல்,மெல்ல மெல்ல மூச்சு விடுதல்,தொடர்ந்து மூச்சு விடுதல்,சுலபமாக மூச்சு விடுதல்,மூச்சை நன்கு கவனித்தல்    என்று பல விஷயங்கள் இதில் குறிப்பிட பட வேண்டியவையாகும்.இவற்றை முறையாக கற்றுக் கொள்வது நலம் தரும்.

பிராணாயாமத்தின் பயன்கள்:
உடல் முழுதும் பிராண சக்தியும் ரத்த ஓட்டமும்  சீராகப் பரவி  சுறுசுறுப்பு.உற்சாகம்,உயிர்த்தன்மை இவை பெருகுகின்றன.
மன அமைதி,அறிவுக்கூர்மை மனதில் மேன்மை இவை உண்டாகின்றன.
த்யானத்திற்கு பிராணாயாமம் பெரிதும் உதவுகிறது.
பிரத்யாகாரம் என்று சொல்லப் படுகிற புலனடக்கம் எளிதில் கிட்டுகிறது.அழகான பொருள்களினால் கண் கவரப்படுகிறது.
சுவையான பொருள்களினால் நாவில் எச்சில் சுரக்கிறது.நறுமணம் உள்ள பொருள்களினால் மூக்கு கவரப்படுகிறது.பிராணாயாமத்தால்,  இப்படி புலன்கள், பொருள்கள் பின் செல்லாமல் மனக்கட்டுப்பாடு கிடைக்கிறது.ஒரு புள்ளியில் மனத்தை நிலை நிறுத்தி த்யான நிலையும்,அதற்கு அப்பால் இறைமையை அடைதலும் சாத்தியமாகும்.

குறிப்பு: படித்தவற்றிலிருந்தும்  கேட்டவற்றிலிருந்தும்.

                

11 comments:

sathishsangkavi.blogspot.com said...

ரொம்ப தேவையான பதிவு.. நிறைய இடங்களில் தேடினேன் உங்கள் பதிவின் தகவல் எனக்கு ரொம்ப பயன்பட்டது நன்றி பகிர்விற்கு....

raji said...

மிக்க நன்றி மிஸ்டர் சங்கவி.
இந்த பதிவு பிராணாயாமம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த என்னாலான சிறு முயற்சி மட்டுமே.
மற்றபடி பிராணாயாமம் பற்றிய தகவல்கள் அடங்கிய புத்தகங்கள் பல உள்ளன.
ஆனாலும் எந்த புத்தகத்தையோ குறிப்புகளையோ படித்து அவற்றை செய்ய முயலாமல் முறையாகப் பயின்றவர்களை அணுகி
முறையாக கற்றுக்கொள்ளுதலே உத்தமம்

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு. மேலே சொன்னது போல, ஒரு ஆசானிடம் பயில்வதே நல்லது. பகிர்வுக்கு நன்றி.

அமர பாரதி said...

நல்ல பதிவு. "கற்றலும் கேட்டலும்" என்று தமிழிலேயே தெரியும்படி செய்யலாமே.

raji said...

கருத்துக்களுக்கு நன்றி திரு வெங்கட் நாகராஜ்,திரு அமர பாரதி."கற்றலும் கேட்டலும்" என தமிழாக்கம் செய்தாகி விட்டது

R. Gopi said...

உபயோகமான தகவல்கள்.

இது பற்றி மேலும் அறிந்து கொள்ள, சந்தியாவந்தன பாஷ்யம் என்று ஒரு புத்தகம் உள்ளது. அதில் பிராணாயாமம் பற்றிய குறிப்புகள் நிறைய உள்ளன. குறிப்பாக மூச்சை இழுத்து விடும் கால அளவு போன்றவை.

raji said...

மிக்க நன்றி கோபி சார்

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

குருவின் உதவியுடன் பிராணாயாமம் செய்வதே நல்லது. நல்ல பதிவு.

raji said...

கருத்துக்கு நன்றி வித்யா மேடம்

அமர பாரதி said...

//தமிழாக்கம் செய்தாகி விட்டது // நன்றி. இப்போது அழகாக இருக்கிறது. மேலும் எழுதுங்கள்.

ADHI VENKAT said...

பயனுள்ள தகவல்கள்.

Post a Comment