ஒரு வருடம் முன்பு என் சொந்த வேலையாக அடையாரில் உள்ள 'வாலண்டரி ஹெல்த் ஆர்கனைசஷன்' சென்றிருந்தேன்.அங்கு சற்று நேரம் காத்திருக்கும்படியாக ஆனது.நான் ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்கும்போது என் அருகில் நிறைய பேர் சிறு குழந்தை முதல் பத்து பன்னிரண்டு வயதுள்ள குழந்தைகளுடன் காத்திருந்தனர்.என் அருகில் இருந்த குழந்தை என்னிடம் மிகவும் ஒட்டிக்கொண்டது.அதன் தாயாருடன் பேசிக்கொண்டிருக்கும்போது 'குழந்தைக்கு என்ன உடம்பு' என்று கேட்டேன்.ஏதாவது சளி ஜுரம் என்றிருக்குமென நினைத்து கேட்டேன்.அவர் உடனே 'தலசெமியா' 'இங்க வந்திருக்கற எல்லா குழந்தைகளுக்கும் அதான்' என்றார்.எனக்கு ஒன்றும் புரியவில்லை.அப்படிஎன்றால் என்ன என்று அவரிடம் கேட்க முடியவில்லை.ஏனென்றால் அதை கூறும்போது அவர் கண்களில் வேதனை இருந்தது.பின்னர்தான் ஒரு மருத்துவ புத்தகத்தின் மூலம் அறிந்தேன் அது ரத்தத்தில் ஏற்படும் ஒரு குறைபாடு என்று.
இக்குறைபாடு மரபணு கோளாறால் ஏற்படுகிறது.இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹீமோகுளோபின் தேவையான அளவில் இருக்காது என்பதோடு ரத்தம் தானாகவே உற்பத்தி ஆவதில்லை. இவர்கள் ஹீமோகுளோபின் குறையும் அளவை பொறுத்து மாதம் ஒரு முறையோ பதினைந்து நாட்களுக்கு ஒரு முறையோ தேவைக்கேற்றாற்போல் ரத்தம் ஏற்றிக்கொண்டே ஆக வேண்டும்.இவர்களால் மற்ற குழந்தைகள் போல் எல்லா விளையாட்டுக்களையும் விளையாட இயலாது.ஏனெனில் அடி பட்டு ரத்தம் வெளி வரக்கூடாது."போன் மேரோ ட்ரான்ஸ்ப்லாண்டேஷன்' செய்வதால் நிவர்த்திக்கு முயற்சிக்கலாம்.மிக விலையுயர்ந்த முயற்சி.மேலும் இந்த வகை சிகிச்சைக்கு உடன்பிறந்தவர்களின் போன் மேரோ ஒத்திருத்தலும் அது நோயாளிக்கு பொருந்துதலும் மிக அவசியம்.மாதம் ரத்தம் ஏற்ற ஆகும் செலவே வெளியில் குறைந்தது 3000 ரூபாய் ஆகும்.இந்த ஹெல்த் ஆர்கனைசேஷனில் மிக குறைந்த கட்டணத்தில் செய்கிறார்கள்.நல்ல மனத்துடன் ரத்த தானம் செய்யும் மனிதர்களை நம்பி இவர்கள் வாழ்கிறார்கள்.
அட!எங்கே செல்கிறீர்கள்? ரத்த தானத்திற்குதானே?மிக்க வந்தனம்.மிக்க நன்று

8 comments:
//வாலண்டரி ஹெல்த் ஆர்கனைசஷன்' //இப்படி ஒரு நிறுவனத்தின் சிறப்பை வெளிக்கொண்டு வந்ததற்கு வாழ்த்தும் நன்றியும்...
மனதில் உறுதியோடு குருதியில் உறுதி கொள்வோம்...
தங்கள் கருத்துக்கும் மன உறுதிக்கும் நன்றி மிஸ்டர் பத்மனாபன்
ராஜி மேடம், நல்ல பதிவு
ரெண்டு மூணு பாராவா பிரிச்சு எழுதி இருக்கலாம்.
சென்னை வரும்போது ரத்த தானம் செய்ய முயற்சி செய்கிறேன்.
இந்த நோயைத் தடுக்க எதாவது வழி உண்டா? மகப்பேறுக்கு முன் folic acid மாத்திரைகள் சாப்பிடுவார்களே. இந்த நோயைக் கட்டுப்படுத்தத்தானோ?
'தலசெமியா' பற்றி தெளிவாக எடுத்துச் சொல்லியதற்கு நன்றி.
http://simulationpadaippugal.blogspot.com/2005/08/blog-post_21.html
//இவர்கள் ஹீமோகுளோபின் குறையும் அளவை பொறுத்து மாதம் ஒரு முறையோ பதினைந்து நாட்களுக்கு ஒரு முறையோ தேவைக்கேற்றாற்போல் ரத்தம் ஏற்றிக்கொண்டே ஆக வேண்டும்.//
புதிதாகக் கேள்விப்படுகிறேன்.... பகிர்வுக்கு நன்றி.வாழ்த்துக்கள்
நன்றி மிஸ்டர் சரவணன்
இப்போது தான் படித்தேன். குழந்தைகளுக்குப்போய் இப்படியெல்லாம் வியாதி வந்தால் எவ்வளவு கஷ்டம், அந்தக்குழந்தைக்கும் அதன் பெற்றோருக்கும். ;((
நான் இதுவரை 3 முறைகள் மட்டும், ரத்ததானம் செய்துள்ளேன்.
ஒருவர் பெண்மணி. அவ்ர் கணவர் மட்டும் எனக்குக் கொஞ்சம் தெரிந்தவர். BHEL ஆஸ்பத்தரியில் ஏதோவொரு மேஜர் ஆபரேஷன் அவர் மனைவிக்கு.
மீதி இருவரும் தெரியாத நபர்கள். அதில் ஒருவள் சிறுமி. விபத்தில் அடிபட்டு வெவ்வேறு நாட்களில் BHEL மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவர்கள்.
நல்லவேளையாக மூவரும் பிழைத்து விட்டதில் எனக்கு ஓர் பெரிய நிம்மதி.
பகிர்வுக்கு நன்றி. vgk
Post a Comment