Wednesday, December 22, 2010

ஈர மனம்

                                                           " எலே! வேலு! அங்கன பஞ்சாயத்து கூட்டம் கூட போவுது.நீ இங்கன குந்திக்கிட்டு என்னலே செய்யுத?"

  "அட போ முத்து!நான் வரல" சூள் கொட்டினான்

"எலே!என்ன சொல்லுத?வல்லியா?ஈஞ்சனூர்க்காரங்களுக்கு  எதிரா என்ன செய்யுறதுன்னு இன்னிக்கு முடிவுல.வல்லங்கற?"

"ஆமா வந்து என்னத்துக்காவப் போவுது?இத்தன நாள் வெட்டி மடிஞ்சது போதும்ல"

"ஏம்ல திடீர்னு இப்பிடி சொல்லிப் போட்ட?முத ஆளா நெஞ்ச நிமித்திகிட்டு வந்து நிப்ப.இப்ப என்னடான்னா அலுப்பா அலுத்துக்கற?"

"ஆமா அப்ப நெஞ்ச நிமித்துனது ஒண்ணும் இப்ப நல்லா தோணல.நெஞ்சுக்குள்ள இருக்கற ஈரம்தான் சரினு படுதுல"

"என்னலே சொல்லுத ஈரம் கீரம்னுட்டு.ஒரு மண்ணும் என் மண்டைக்கெட்டல.
தலமை ஏத்து நடத்துற நீயா இப்டி பேசுத?நமக்கெதிரா ஈஞ்சனூர்காரங்க செஞ்ச கொடுமை எல்லாம் மறந்து போச்சோ?மண்ணியூர்காரங்க   கொறஞ்சவக இல்லன்னு காட்டோனும்ல.இத்தன வருஷமா இருக்கற வாய்க்கா தண்ணி பிரச்னைய மறந்துட்டயால?

"மறக்கல.தண்ணிதான் பிரச்னை.ஆனா இன்னிக்கு மனசு மாறினதும் அந்த தண்ணியாலதான்"
"விளங்கும்படியா பேசப் போறயா இல்லியால?"
"நேத்து டவுனுக்கு போயி திரும்பற பஸ் வழில மண் பாதைல சரிஞ்ச்சிருச்சு.ஈஞ்சனூர் கீழத் தெரு மாரியும் ராசுவும்தான் உள்ள இருக்கறவங்கள வெளியேத்தி முகத்துல தண்ணி அடிச்சி, குடிக்க தண்ணி குடுத்து காப்பாத்தி கொண்டு விட்ருகாங்கல.அவங்க நெஞ்சுல ஈரமில்லாம நாம செஞ்சதெல்லாம் நெனச்சுருந்தா பஸ்சுல வந்த நம்மூர்க்காரங்கல்லாம் என்ன கதியாயிருப்பாங்கல?"

"நிசமாவா?"

"ஆமால.அப்பமே முடிவு பண்ணிட்டேன்.தகராறு செய்யாம தண்ணி பிரச்னைக்கு வழி பண்ணோனும்னிட்டு.அடிதடிக்கு தலமை ஏத்தாப்ல நல்ல வழிக்கும் நானே தலமை ஏத்து தீர்வு பண்ணுவேன்.ஈரம் தண்ணில மட்டுமில்ல.அது மனுஷனோட
மனசுக்கும் ரொம்ப அவசியம்னு எனக்கு புரிஞ்சாப்ல எல்லாத்துக்கும் புரிய வைப்பேன்ல"

உறுதியாய் பேசின வேலுவை வாய் பிளந்து வியப்பாய் பார்த்துக் கொண்டிருந்தான் முத்து.                   

16 comments:

R. Gopi said...

நல்லா இருக்கு மேடம்.

மூணாவது பாராவில் வார்த்தைகளுக்கு நடுவில் கொஞ்சம் ஸ்பேஸ் விடுங்க! நன்றி

sathishsangkavi.blogspot.com said...

ஈரமனம் நல்ல மனம்....

வெங்கட் நாகராஜ் said...

ஈரமனம் - நல்ல சிறுகதை படித்த நிம்மதி

தினேஷ்குமார் said...

நம்மில் அடிபடும் போதுதான் மனம் நனைகிறது பிறருக்கா

ADHI VENKAT said...

நல்ல கதை. பாராட்டுகள்.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

மன்னிக்கத் தெரிந்தவன் மிகப் பெரிய மனிதன். நல்ல கதை

raji said...

நன்றி கோபி சார்,நன்றி மிஸ்டர் சங்கவி,மிஸ்டர் வெங்கட் நாகராஜ்,மிஸ்டர் தினேஷ்குமார்.
நன்றி கோவை2தில்லி.நன்றி வித்யா மேடம்

Unknown said...

கிராமத்து மனசு...

மனோ சாமிநாதன் said...

ஒரு சிறந்த எழுத்தாளருக்கு இருக்கக்கூடிய வன்மையான எழுத்து உங்கள் எழுத்தில் தெரிகிறது ராஜி! நல்ல சிறுகதை! நல்ல நடை!

raji said...

நன்றி மிஸ்டர் கலாநேசன்,வெறும்பய

raji said...

தங்களின் பாராட்டுக்கு மிகவும் நன்றி மனோ மேடம்.
நான் ஏதோ மழைக்கு பள்ளிக்கூடம் ஒதுங்குபவள் போன்று வந்தவள்.
தங்களின் பாராட்டு என் எழுத்தை வளர்க்கட்டும்.நன்றி

ரிஷபன் said...

மனசுக்குள் ஈரம்.. வெளிப்படுத்திய விதம் அருமை.

raji said...

நன்றி மிஸ்டர் ரிஷபன்

அன்புடன் நான் said...

உங்க அந்த பேச்சி வழக்கு நல்லாயிருக்குங்க. கருத்துக்கு பாராட்டுக்கள்

raji said...

நன்றி மிஸ்டர் கருணாகரசு

சாந்தி மாரியப்பன் said...

உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்.

http://blogintamil.blogspot.com/2011/01/blog-post_04.html

Post a Comment