Thursday, December 16, 2010

கிராமத்துக் காற்றே....

கிராமத்துக் காற்றே
கிராமத்துக் காற்றே
நீ எங்கே போனாயோ?

விடிகாலை வேளையிலே
வாசல் வழி வந்தே
வருடி சுகம் தந்த
நீ எங்கே போனாயோ?

நண்பகல் வேளையிலே
நடு முற்றம் தனிலே
நல்ல அனலைக் குறைத்த
நீ எங்கே போனாயோ?

அந்தி சாயும் நேரத்திலே
ஆற்றங்கரை ஓரத்திலே
அழகாய் ஆடி வந்த
நீ எங்கே போனாயோ?

கயிற்றுக் கட்டில் இரவினிலே
கருவான தாரகை சிரிப்பினிலே
களிப்புடனே ஓடி வந்த
நீ எங்கே போனாயோ?

நகரத்து வாழ்க்கையிலே
நலம் தர நீ இல்லையிங்கே
நல்லதன்று நகரமென 
நகர்ந்து போனாயோ?

அடுக்கு மாடி குடியிருப்பு
அடுக்கவில்லை எனக்கு என 
அலுப்புடனே கூறி விட்டு 
அகன்று போனாயோ?

கிராமத்துக் காற்றே 
கிராமத்துக் காற்றே 
நீ எங்கே போனாயோ?

16 comments:

sathishsangkavi.blogspot.com said...

கிராமத்துக்காற்றைப்பற்றி ஓர் அற்புதமான கவிதை...

ரொம்ப நாள் ஆச்சு அனுபவச்சு...

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

kaatru varudugirathu.

வெங்கட் நாகராஜ் said...

கிராமத்து காற்றைப் பற்றி தென்றலாய் ஒரு கவிதை. அதிலும் இந்த நகர வாழ்க்கை காற்றுக்குக் கூட பிடிக்கவில்லை எனச் சொன்னது நன்று. வாழ்த்துக்கள்.

நட்புடன்

வெங்கட் நாகராஜ்
www.venkatnagaraj.blogspot.com

ADHI VENKAT said...

கிராமத்துக் காற்றைப் பற்றி அருமையான கவிதை. ஆனந்தமாய் இருந்தது.

arasan said...

உண்மையில் சொன்ன வரிகளில் வலிகளும் நிறைய இருக்கத்தான் செய்கிறது...

சாயுங்கலத்தில் ஆற்றங்கரையோரம் அமைதியாய் நம்முடன் வந்து தொட்டு செல்லும் என் கிராமத்து காற்று .. எங்க போய் தேடுவது...

இழந்தவைகளில் இதுவும் ஒரு பொக்கிஷம் ...

நல்லா இருக்குங்க உங்கள் பதிவு... தொடருங்க ... வாழ்த்துகள்

raji said...

Karuththukkaluku nanri mr.sangavi mr.venkat nagaraj mr arasan, kovai2delhi.nanri vidya madam

ஸாதிகா said...

கிராமிய நறுமணத்துடன் ”கிராமத்துக்கற்றை”ரசித்தேன்.கவிதை அருமை சகோ ராஜி

vinthaimanithan said...

ம்ம்ம்...ரைட்டு!

மோனிஷா said...

கிராமத்து சுகமே சுகம். ந(ர)கரவாசியான பின் எழுத்தின் மூலமே உணரமுடிகிறது.

பனித்துளி சங்கர் said...

உங்களின் வார்த்தைகள் தீண்டி சிலிர்த்துப் போகிறேன் . அருமையானக் கவிதை . பகிர்வுக்கு நன்றி . தொடர்ந்து எழுதுங்கள் மீண்டும் வருவேன்

Ahamed irshad said...

கிராம‌த்திற்கு போன‌ மாதிரி ஒரு ஃபீலிங்..

தேவன் மாயம் said...

கிராமத்துக் காற்று! நினைத்தாலே சுகம்தான்!

raji said...

கருத்துரைத்த அனைவருக்கும் நன்றி

Kurinji said...

romba nalla erukku....
Kurinji

R. Gopi said...

கான்க்ரீட் பூதம் காற்றை விழுங்கி விட்டது!

raji said...

நன்றி குறிஞ்சி.நன்றி கோபி சார்

Post a Comment