எழுத்துக்களம் குதித்திடவே
எழுது கலம் எடுத்திட்டேன்
எழுந்து வந்த எண்ணங்களை
ஏடுதன்னில் ஏற்றிட்டேன்
உள்ளமதில் உதித்தவற்றை
உயிர் கொடுத்து உதிர்த்திட்டேன்
உருவம் தந்து சுவைதன்னை
ஊற்றிடவே முயன்றிட்டேன்
தன் குழந்தையென தன் கரம்
தந்தனள் தமிழன்னை
தமிழே! என் தாயேயென
தாவி மடி ஏறி விட்டேன்
வளர்த்தனள் அன்னை
வளர்ந்தது என் தமிழ்
வந்தது வார்த்தைகள்-
'வாழ்க நம் தமிழ்' என
எழுது கலம் எடுத்திட்டேன்
எழுந்து வந்த எண்ணங்களை
ஏடுதன்னில் ஏற்றிட்டேன்
உள்ளமதில் உதித்தவற்றை
உயிர் கொடுத்து உதிர்த்திட்டேன்
உருவம் தந்து சுவைதன்னை
ஊற்றிடவே முயன்றிட்டேன்
தன் குழந்தையென தன் கரம்
தந்தனள் தமிழன்னை
தமிழே! என் தாயேயென
தாவி மடி ஏறி விட்டேன்
வளர்த்தனள் அன்னை
வளர்ந்தது என் தமிழ்
வந்தது வார்த்தைகள்-
'வாழ்க நம் தமிழ்' என
3 comments:
நல்லா இருக்கு.
நீங்க இன்ட்லி, தமிழ்மணம் இதையெல்லாம் சேருங்க. அப்போதான் நிறைய பேர் படிங்க. எப்படி அதை சேர்ப்பது என்று தெரிந்து கொள்ள இந்த வலைத்தளங்களைப் போய்ப் பாருங்கள்.
http://ta.indli.com/
மேலே சொன்ன வலைத்தளத்தில் வலது கீழ் மூலைக்குக் கொஞ்சம் மேலே இருக்கும் இன்ட்லி ஓட்டுப் பெட்டி.
http://tamilmanam.net/
இந்த தளத்திலும் வலது பக்கத்தில் உள்ள ஒரு பகுதியில் தமிழ்மணம் ஒட்டுப்பட்டையை இணைப்பது பற்றி இருக்கும்.
எழுதுவது நான்கு பேருக்குப் போய்ச் சேர்ந்தால்தானே நிறைய பாராட்டு கிடைக்கும். சமயங்களில் அர்ச்சனையும் கிடைக்கும்! எல்லாம் நல்லதுக்கே!
ஆஹா..அருமை..
கவிதை அருமை!
மெருகேறி, மேன்மேலும் வளர இனிய வாழ்த்துக்கள்!
Post a Comment