Sunday, December 5, 2010

பரோபகாரம்

"அப்பாடி!என்ன வெயில் என்ன வெயில்! மங்களம்! குடிக்க ஒரு சொம்பு ஜலம் கொண்டு வா" என்றபடியே உள்ளே நுழைந்தார் கோபாலன்.

"என்னண்ணா! பாங்குக்கு போன வேலை நல்லபடியா முடிஞ்சதா" என்று கேட்டுக்கொண்டே தண்ணீர் கொண்டு வந்தாள் மங்களம்.

"ம்.. ம்..  ஆச்சு ஆச்சு. மெச்சூர் ஆன டெபாசிட் பணத்தை ட்ரா பண்ணி கொண்டு வந்துட்டேன்.ராதா கல்யாணத்தை நல்லபடியாவே முடிச்சுடலாம்.மாப்பிள்ளையாத்துக்காரா கேட்ட சத்திரமே பேசி முடிச்சு  அட்வான்ஸ் பண்ணிட்டேன்.இந்தா இந்த பையில
மூணு லட்சம் பணம் இருக்கு பத்திரமா உள்ள எடுத்து வை.சாயங்காலம் கல்யாண கான்ட்ராக்ட்காரா வருவா.அவாளுக்கு கொடுக்கணும்.ஆமா ராதா எங்க இன்னும் கோவில்லேர்ந்து வரல்லையா"  என்றபடியே  லெதர்பேக்கிலிருந்த துணிப்பையில் பத்திரப்படுத்திய பணத்தை எடுக்க கை நுழைத்தவர் அதிர்ந்தார்.

"எங்க  ஐயோ!எங்க" என்று பதறியபடியே மீண்டும் பைக்குள் கை நுழைத்து திகைத்தார்.
"ஏண்ணா!என்னண்ணா! "என்று கேட்ட மங்களத்தையும் பதற்றம் தொற்றிக்கொண்டது.வியர்த்து  விறு விறுத்து   மலங்க மலங்க  விழித்த கணவனை பார்த்து பயந்து போனாள்
விக்கித்து நின்றிருந்தவரை உலுக்கி, "என்னாச்சு உங்களுக்கு? பணத்தை தொலைச்சுட்டேளா? சொல்லுங்கோன்னா" என்றாள்

"காணோம்டி பணம் காணோமேடி, நான் என்ன செய்வேன்  எங்க போச்சு பத்திரமாதான் கொண்டு வந்தேன்.அய்யோ நான் என்ன செய்வேன் என் பொண்ணு கல்யாணம் எப்டி நடக்கும் இனி"  கதறினார்
"இருங்கோ, நான் பைய நல்லா பாக்கறேன்" என்று பையில் கையை துழாவினாள் மங்களம்

"ஐயோ பைய யாரோ கிழிச்சிருக்காண்ணா"
"இப்ப என்ன பண்றது கம்ப்ளைன்ட் கொடுக்கலாமா கிடைக்குமாண்ணா" அழுதாள்
"எனக்கும் ஒண்ணும் புரியலடி, சாயங்காலம் கான்ட்ராக்ட்காரா  வருவாளே.என்ன செய்ய"

"அவாளையாவது நாளைக்கு  வர சொல்லலாம்   ரெண்டு நாள் கழிச்சு வாங்கலாம்,தொலஞ்ச பணத்துக்கு  என்ன செய்ய?அத முதல்ல யோசிங்கோ"
"குரலெடுத்து அழுது என்னை இன்னும்  குழப்பாத.நானும் கலங்கித்தான் போயிருக்கேன்" என்று கத்தியவர் ஊஞ்சலில்   தளர்ந்து உட்கார்ந்தார்
எப்படி எப்படி பத்திரமாகத்தானே வைத்திருந்தார் அப்படியும் எப்படி இப்படி, யோசித்தார்

சட்டென்று மின்னல்.அந்த பையன்.ஆம்!அவன்தான்.அவன்தான் ரயிலில் மிக அருகில் நின்று கர்ச்சீப் விற்றுக்கொண்டு,ஆமாம் அவனாகத்தான் இருக்கும்.இப்பொழுது என்ன செய்வது?மங்களம் சொல்வது போல் கம்ளைன்ட் கொடுத்து விடலாமா?கிடைக்குமா? கிடைக்காவிட்டால்? குழப்பமாக இருந்தது

வாசலில் நிழலாடியது.சார்! சார்! என்ற குரலுக்கு திரும்பியவர் அதிர்ந்தார்

இவன்தான் இவனேதான்.பக்கத்தில் நின்று கர்ச்சீப் விற்றுக்கொண்டு தன்னையே உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தான்.இவன்தான்.இவன் எப்படி இங்கே?எதற்கு?
"யாருப்பா யார் வேணும்? "  மங்களம் சுதாரித்துக்கொண்டு கேட்டாள்

"சாரைத்தான்மா பாக்க வந்தேன்.இந்த பையை அவர் கிட்ட குடுக்க வந்தேன்"
 அவன் கையில் இருந்த பையை பார்த்ததும், "மங்களம்!மங்களம்!இந்த பைதான்.இதே பைதான்.நம்ம பை.நான் பணம் கொண்டு வந்த பை இதுதான்" என்று கூச்சலிட்டார்

"நம்ம பையா? என்ன சொல்றேள்? யாருப்பா நீ?இது எப்டி உன்கிட்ட வந்தது"

"முதல்ல இத பிடிங்கம்மா.பணம் சரியார்க்கானு பாத்துக்கோங்க.இத கொண்டுட்டு வந்து சேக்கரதுக்குள்ளாட்டியும்  என் மூச்சு என்கிட்ட  இல்லடா   சாமி"
வாங்கி சரி பார்த்தார் கோபாலன்
சரியாய் மூணு லட்சம் அப்படியே இருந்தது
 வியந்து போனவளாய்,"யாருப்பா நீ?இது உனக்கெப்படி கிடைச்சது? "என்றாள்

"அம்மா!நான் ட்ரெய்ன்ல கர்ச்சீப் விக்கறவன்மா.ஐயா  இறங்கும்போது இது கீழ விழுந்துச்சு.நான் பின்னாடியே வந்து கூப்ட கூப்ட ஐயா காதுல வாங்காம   ஆட்டோ பிடிச்சு போய்ட்டார்மா.அதுல இருந்த பேங்க் சீட்டுல இந்த விலாசம் இருந்துச்சு.அதான்மா எடுத்திட்டு பின்னாடியே வந்தேனுங்க"

அப்படியே தடாலென்று அவன் காலில் விழுந்தார் கோபாலன்.அவன் பதறினான்

"ஐயோ!என்ன செய்யறீங்க" பின்னைடைந்தான்

"உனக்கு தெரியாதப்பா.நீ எங்க குடும்பத்தையே காப்பாத்திட்ட" தழுதழுத்தார்

"அட என்னங்கய்யா!உங்க பணம் அது.அதத்தான் நான் தந்தேன்.அதுக்கு போயி இப்டி.."

"இல்லப்பா இது இல்லன்னா என் பொண்ணு கல்யாணமே நின்னுருக்கும்.காப்பாத்தி குடுத்துட்ட.பத்து நிமிஷத்துக்கு முன்னாடி நான் உன்னை தரக்குறைவானவனா நினைச்சேன்.ஆனா உன் செயலால நீ உசந்து என்னை குறுக வச்சுட்ட" அழுதார்

"கஷ்டப்பட்டு சேத்த பணம் எப்டிங்க போகும்?கல்யாணத்த நல்லா நடத்துங்க.நான் வரேன்" 

"இருப்பா இரு!உனக்கு ஏதாவது செய்யணும்னு தோணுது, இரு.எவ்ளோ பெரிய உபகாரம் பண்ணிருக்க"

"உபகாரம் எதிர்பார்த்துலாம் செய்யல்லிங்க.நதி என்ன நம்ம  கிட்ட எதிர்பார்த்தா தண்ணி குடுக்குது?மரம் என்ன எதிர்பார்த்தா நிழழும்,   காயும் கனியும்   தருது.அதெல்லாம் சார்ந்து வாழற ஆறறிவு படச்ச மனுஷன் மட்டும் அத பாத்து கத்துக்க வேணாமானு சின்ன வயசுல எங்காத்தா சொல்லும்.நான் எங்காத்தா சொல்லி தந்தாப்லதான் இன்னி வரை வாழ்ந்துட்ருக்கேன்.அட போங்க சாமி"
சிறிய வயதில் தந்தை தன்னை உட்கார்த்தி வைத்து சொல்லி தந்த சமஸ்க்ருத பாடம் ஞாபகம் வந்தது அவருக்கு

              "பரோபகாராய பலந்தி வ்ருக்ஷா:
               பரோபகாராய வஹந்தி நத்யா:
               பரோபகாராய துஹந்தி காவா:
               பரோபகாரார்த்தம் இதம் சரீரம்"

படித்தறியாதவனாயிருந்தும் தாய் சொல்லித் தந்ததை வாழ்க்கை முறையாய் வாழும் அவன் முன் தான் தூசியாய் தன்னை உணர்ந்தார்

பார்த்த்தனுக்குப் பின் தனக்கு விஸ்வரூபம் கிடைத்த உணர்வில்    நெகிழ்ந்து அவனை வழியனுப்பினார்.மனம் சிலு சிலுவென்றிருந்தது

14 comments:

Unknown said...

Great story.

Everyone must aspire to follow this

Sadly, I forgot the meaning of the third line

Please explain

மனோ சாமிநாதன் said...

அருமையான அற்புதமான சிறுகதை! முன்னாலேயே வாழ்த்தி விட்டேன் என்றாலும் நிறைய சிகரங்களைத் தொட வேன்டுமென மனம் மறுபடியும் வாழ்த்துகிறது!
அந்த சமஸ்கிருத வரிகளுக்கு அர்த்தமும் எழுதியிருந்தால் சிறுகதைக்கு முழு நிறைவு கிடைத்திருக்கும்!!

raji said...

தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி மனோ மேடம்.

நான் அறிந்த வரை அந்த சமஸ்க்ருத வரிகளுக்கு இங்கே அர்த்தம் எழுதியுள்ளேன்

மரங்கள் மற்றவர்களுக்காகவே பழம் தருகின்றன
நதி நீரின் ஓட்டம் மற்றவர்களுக்காகவே அமைந்துள்ளது
பசுவின் பால் கறவை மற்றவர்களுக்காகவே அமைந்துள்ளது
இந்த மனித சரீரமும் மற்றவர்களுக்கு உபகாரம் செய்யவே படைக்கப் பட்டுள்ளது

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

நல்ல கதை ராஜி. ஸ்லோகத்தின் அர்த்தம் அருமை.

Ahamed irshad said...

Nice Story..

தினேஷ்குமார் said...

உபகாரம் எதிர்பார்த்துலாம் செய்யல்லிங்க.நதி என்ன நம்ம கிட்ட எதிர்பார்த்தா தண்ணி குடுக்குது?


அருமையான சிறுகதை
எதிர்பார்ப்புகள் இயற்கையிடம் இல்லை ஆனால் குழந்தை கொடுக்கும் ஒரு முத்தத்திற்காக நாம் கொடுக்கும் இனிப்பு சிறுவயதிலே எதிர்பார்ப்பை விதைக்கிறது ,,,,,,,,,,,,,,,,,,

Unknown said...

Jayashree said

Good story.Nenjil nirkkum kadhai.Continue writing!!!Kadhai,kavithai shows that Revathi has enriched herself.

raji said...

நன்றி வித்யா மேடம்.என் எழுத்துக்கான பாராட்டுக்கள் அனைத்தும் உங்களையே சாரும்.
எழுத்தில் குறைகள் இருப்பின் அவை என் அசிரத்தையால் ஏற்பட்டவை ஆகும்

வழி நடத்தலுக்கு நன்றி

குட்டு பட்டாலும் மோதிரக்கையால் குட்டு பட வேண்டும் என்பார்கள்.நானோ தங்களின் மோதிரக்கையால்
"குட்" என்ற ஆசிர்வாதம் அடைந்ததில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்

raji said...

கருத்துக்களுக்கு நன்றி மிஸ்டர் அஹ்மத்,மிஸ்டர் தினேஷ்.நன்றி ஜெயஸ்ரீ

சி.பி.செந்தில்குமார் said...

கதை நல்லாருக்கு,

>>>குட்டு பட்டாலும் மோதிரக்கையால் குட்டு பட வேண்டும் என்பார்கள்.நானோ தங்களின் மோதிரக்கையால்
"குட்" என்ற ஆசிர்வாதம் அடைந்ததில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன் >>>

வார்த்தை ஜாலம்,, ம் ம் கலக்குங்க

Sowmya B said...

Exceptional narration!
Short story with some great values:
1)Face or Manners or attire is not always an index of mind.So never under or over estimate a person with these traits,but estimate them for what they are.
2)Learning is different,implementation is different:Learners are not always implementors and viceversa
3)Helping others is synonymous to serving God .It is the best ornament a person can ever wear.
Srothram shruthenaiva na thu kundalena,
Daanene paaninam na thu kankanena
vibaathi Kaaya: karunaparaanam
Paropakaarena na thu chandanena

The points I have put above looks very theorotical ,isnt'it?just like reading school lessons:)

But this short story has captured these moral values effortlessly,beutifully!!A sheer effort of extracing moral values from human feelings in a realistic way..

Short story inculcating huge values:)

Great Effort!!!

R. Gopi said...

அருமையான கதை!

THOPPITHOPPI said...

//வார்த்தை ஜாலம்,, ம் ம் கலக்குங்க //

அருமை

Unknown said...

yepdiri , yepdi unnala mathrum ipdiyellam ezhudhanumnu thonudhu,pul arichirichu. Nalla than keethu.....all the best --- epdinu bharathi sollra !!!!!!(adhavadhu eluthu nadai nalla irrukkunu)
Enakkum nalla pudichirikku.

Post a Comment