
பட்டாம்பூச்சி
பின்னால் அலைந்த
பத்து வயதில் தொடங்கியது
பதின்ம பருவத்தில்
பாட்டி மீது விட்ட
புது சைக்கிளில் தொடர்ந்தது
கொய்யா மரமேறி
கொறித்த பழத்தின்
கணக்கில் அம்மாவின் கை
கணக்கும் புரிந்தது
விபத்தில் பட்ட
வலியில், அப்பாவின்
வலிமை தொலைந்து
வலி உதிர்த்த கண்ணீர், வலித்தது
தொலைந்த என்னைத்
தேடிய சகோதரன்
தொடர்ந்து அர்ச்சித்தாலும்
தொட்ட அன்பு வளர்ந்தது
இன்னும் சிலருக்கு
இவள் ஒரு வாய்மூடா எம் பி 3
இருப்பினும் இவளது
இயல்பு இசையே
கையேந்தும் வீணையில்
கான சரஸ்வதியின்
கோபம் புரிந்தாலும்
கைகளைக் கட்டுவதில்லை இவள்
இவளது ரகளைகளின்
இடையே எமனும்
இடர் தர அஞ்சி
இடைவெளி விட்டே
இருக்க மாட்டானோ
டிஸ்கி : எனதுபோன பதிவிற்கு முந்தைய பதிவில் மேடம் வித்யா சுப்பிரமணியம் அவர்கள் எழுதும்படி கூறியிருந்த "ராஜியின் ரகளைகள்"
29 comments:
குறுகுறுப்பான முகத்துடன்,
இரட்டைப்பின்னலுடன்,
தலையில் இருபக்கமும் பூச்சரத்துடன்,
அகல பார்டருடன் கூடிய புட்டா போட்டப்
பாவடையுடன்,
கருப்புச்சட்டையில்,
கருப்பு வெள்ளைப்படத்தினில்,
காதுத்தோடு,
கைவளையல்கள்,
கழுத்தில் நீண்ட டாலர் செயின் +
நெக்லஸ் உடன்,
கோல பேக் க்ரெளண்டில்,
நின்ற கோலத்தில்
தரிஸனம் தந்திடும்
குழந்தை ராஜி
சூப்பரோ சூப்பர்.
பாராட்டுக்கள்
வாழ்த்துகள்
பகிர்வுக்கு நன்றிகள்
இனி குழந்தையின் ரகளைகளைப் படித்துப்பார்த்து விட்டு மீண்டும் வருவேனாக்கும். ;)))))
சிறு வயது குறும்புகளையும், உணர்ச்சிகளையும், தொடங்கியது, தொடர்ந்தது, புரிந்தது, வலித்தது, வளர்த்தது என வரிசைப்படுத்திக்கூறியுள்ளது மிக அழகாகவே உள்ளன.
//இன்னும் சிலருக்கு
இவள் ஒரு வாய்மூடா எம் பி 3
இருப்பினும் இவளது
இயல்பு இசையே
கையேந்தும் வீணையில்
கான சரஸ்வதியின்
கோபம் புரிந்தாலும்
கைகளைக் கட்டுவதில்லை இவள் //
மிகவும் ரஸித்த அழகான வரிகள்.
ரகளைகள் அவ்வபோது தொடரட்டும்.
பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
ரொம்ப நாளாவே ராஜியின் ரகளைகள் வராமல் இருந்து விட்டதே.....
அதனால் சிறு வயது லாஜியின் படம் போட்டு, ரகளையை கவிதையாய் போட்டாச்சு.....
நல்ல ரகளை தான்....
கவிதை அழகு!
ஹஹஹா நல்லா இருக்கு
அழகு...
வாழ்த்துக்கள்...
RagaLaigal rasikkumpadi uLLana!
Kadaisi para.... ??
சின்ன வயசை நல்லா எஞ்சாய் பண்ணியிருக்கீங்க.... நாங்களும் இப்படித்தான்.புளிய மரமேறி புளியம்பிஞ்சுகள் பறித்ததில்லையா....
//பாட்டி மீது விட்ட புது சைக்கிள்..
அடடே, இது தெரியாம போச்சே!
வாய்மூடா எம்பி3 - nice.
பத்து வயதில் தொடங்கிய ரகளைகளையை மிக அழகாக வரிசைப்படுத்தி எழுதியிருக்கீங்க ராஜி. மிகவும் ரசித்தேன் உங்க ரகளைகளை.
ஒவ்வொரு வரிகளும் ராஜியின் சிறு வயது குறும்புகளை கண் முன் நிறுத்துகிறது...
நேயர் விருப்பம் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படுகிறது...:)
நேயர்கள் வாழ்க!
கையேந்தும் வீணையில்
கான சரஸ்வதியின்
கோபம் புரிந்தாலும்
கைகளைக் கட்டுவதில்லை இவள் -இனிய வாழ்த்துகள்...
ரகளைகள் சுவாரஸ்யம்! பகிர்வுக்கு நன்றி!
இந்த ரகளை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..சூப்பர்ங்க:)
இவளது ரகளைகளின்
இடையே எமனும்
இடர் தர அஞ்சி
இடைவெளி விட்டே
இருக்க மாட்டானோ
இதானே வேண்டாம்னு சொன்னேன்
ரகளையா இது நவரசக்கலவை
அன்புள்ள ராஜி,
வெகு இயற்கையாக உங்கள் சிறு வயது லூட்டிகள் பற்றி எழுதி இருக்கிறீர்கள். சகோதரனுடனான அன்புப் பகிர்வு அருமை.
கடைசி நான்கு வரிகளை எடுத்துவிடுங்கள். ரகளையின் நடுவில் பாந்தமில்லாமல் இருக்கிறது.
இதேபோல ரகளை பண்ணிக் கொண்டு பல பல ஆண்டுகள் எல்லோர் மனதிலும் 'ரகளை ராஜி' யாக வர வாழ்த்துகள்.
'ரகளை ராஜி'யாக வலம் வர வாழ்த்துகள் என்று இருக்க வேண்டும்.
தவறுக்கு மன்னிக்கவும்.
Very Positive ragalai Raji. ragalaigal avvappoathu thodarattum.
இன்னும் சிலருக்கு
இவள் ஒரு வாய்மூடா எம் பி 3
இருப்பினும் இவளது
இயல்பு இசையே
கையேந்தும் வீணையில்
கான சரஸ்வதியின்
கோபம் புரிந்தாலும்
கைகளைக் கட்டுவதில்லை இவள்
ஆஹா.. என்ன அழகு.. கொஞ்சும் வரிகள்..
தாமதத்திற்கு வருந்துகிறேன் .
போட்டோவில் முகமே குரும்பாகத்தான் உள்ளது .
வார்த்தைகளில் வடித்தது போக மீதி எத்தனை உள்ளதோ?????
கடைசி வரிகள் சற்று கசக்கிறதே...
நல்லா இருக்கு.
வாய் மூடா mp3 பதம் நன்றாக இருக்கிறது. மீது விட்ட சைக்கிள்!? அடப் பாவமே!
லாஜியின் ரகளைகள் நல்லாருக்குப்பா. இங்கே எமனுக்கு என்ன வேலை? திருப்பி அனுப்புங்க.
கொய்யா மரமேறி
கொறித்த பழத்தின்
கணக்கில் அம்மாவின் கை
கணக்கும் புரிந்தது
வாழ்த்துகள்.
சாரி.. லேட்டா வந்தேன் லாஜி! இவ்வளவு எளிமையா கைல சாதம் பிசைஞ்சு போடரா மாதிரி எங்கப்பா எழுத கத்துகிட்டீங்க?
வாய் மூடா mp3... வெல்டன் ராஜி!
தொடர்பதிவு அழைப்பு :
http://ananyathinks.blogspot.in/2013/07/part-2.html
தொடர வாழ்த்துக்கள்...
கைகளை கட்டுவதில்லை இவள் என்பதில் எனக்கும் சந்தோசம்தான் !வாய்மூடா mp3 கேட்டு வருந்துபவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் !
Post a Comment