Friday, October 7, 2011

மௌனத்தின் விடியல்

கும்மிருட்டில் முள் நகர்த்தி
குரல் தரும் கடிகாரம்,

மேலே ஓடும் மின்விசிறியின்
மெல்லிய ஓசை,

எங்கோ எதற்கோ குரல்
எழுப்பி அழும் குழந்தை,

எந்த சத்தமானால் என்ன?
எதுதான் உன்னுடைய
மௌனத்தை மொழி பெயர்க்கும்?

நீண்ட இரவுக்குப் பின்
நீளும் சூரியக்கதிருக்காய்
நிதமும் காத்திருப்பது போல்,

நீயும் உன் வார்த்தைக்கதிர்
நீட்டி ஒளி தருவாய் என
நானும் காத்திருப்பேன்.


இந்த கவிதை 'வல்லமையில்' செப்.26 அன்று வெளியாகி உள்ளது

29 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

எப்போதும் காத்திருப்பதே ஒரு சாராரின் தாபமாகவும்
எப்போதும் காக்கவைப்பதே மற்றொரு சாராரின் சாபமாகவும் உள்ளதை கவிதாயினியாகிய தாங்கள் வெகு அழகாக எழுதியுள்ளீர்கள்.

கடைசியில் எப்படியாவது‘மெள்னத்திற்கு விடிதல்’ வந்தால் சரிதான்.

எழுத்தில் வல்லமை பொருந்திய தங்களின் இந்தப் படைப்பு “வல்லமை” யில் வெளி வந்துள்ளது நல்லப் பொருத்தமே. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். vgk

[Voted 1 to 2 in Indli & Tamilmanam]

சாந்தி மாரியப்பன் said...

கவிதை ஜூப்பரா இருக்கு ராஜி.. இன்னும் நிறைய எழுதுங்க :-)

சி.பி.செந்தில்குமார் said...

>>எந்த சத்தமானால் என்ன?
எதுதான் உன்னுடைய
மௌனத்தை மொழி பெயர்க்கும்?

குட் ஒன்

சி.பி.செந்தில்குமார் said...

சவால் சிறுகதைப்போட்டி அறிவிச்சிருக்காங்க.. கலந்து கொண்டு வெற்றி பெற வாழ்த்துகிறேன்

சமுத்ரா said...

நல்ல கவிதை

rajamelaiyur said...

//
நீயும் உன் வார்த்தைக்கதிர்
நீட்டி ஒளி தருவாய் என
நானும் காத்திருப்பேன்.
//

அருமையான வரிகள்

rajamelaiyur said...

அழகான கவிதை

rajamelaiyur said...

இன்று என் வலையில் ...

இது நியாயமா ? யாராவது பதில் சொல்லுங்கள்.

rajamelaiyur said...

tamailmanam 5 th vote

அம்பாளடியாள் said...

அருமையான கவிதை மென்மேலும் சிறப்புற வாழ்த்துக்கள் .இன்று என் தளத்தில் புதிய பக்திப் பாடல் வரிகள் உள்ளது அத்துடன் இன்னும் ஒரு விடயம் காத்திருக்கு முடிந்தால் தவறாமல் வாருங்கள் சகோ .மிக்க நன்றி பகிர்வுக்கு ..........

குடந்தை அன்புமணி said...

வலைச்சரத்தின் வழியாக உங்கள் வலைத்தளத்திற்கு எனது வருகை. நல்ல கவிதை. வாழ்த்துகள்.

குடந்தை அன்புமணி said...

உறவுகள் தொடர்கதை- சிறுகதையை பதிவர்களுக்கென்றே வெளிவரும் பதிவர் தென்றல் மாத இதழில் வெளியிட விருப்பம். தங்களின் அனுமதி தேவை.தங்களின் அனுமதியை எனது மெயிலுக்கு தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி.thambaramanbu@gmail.com

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கவிதை. வல்லமையில் வெளி வந்ததற்கு வாழ்த்துகள்....

ரிஷபன் said...

நீயும் உன் வார்த்தைக்கதிர்
நீட்டி ஒளி தருவாய் என
நானும் காத்திருப்பேன்.

கவிதைக்கரம் நீண்டு ஒளி தந்து விட்டது.. அழகாய்

Rathnavel Natarajan said...

அழகு கவிதை.
வாழ்த்துக்கள்.

கோகுல் said...

வல்லமை பொருந்திய வரிகள்!
வாழ்த்துக்கள்!

மனோ சாமிநாதன் said...

அருமையான வரிகள்!
அழகிய கவிதை!
வல்லமையில் வெளி வந்ததற்கு இனிய வாழ்த்துக்கள் ராஜி!

மனோ சாமிநாதன் said...

அருமையான வரிகள்!
அழகிய கவிதை!
வல்லமையில் வெளி வந்ததற்கு இனிய வாழ்த்துக்கள் ராஜி!

Unknown said...

சகோ நல்ல கவிதை!

MANO நாஞ்சில் மனோ said...

அருமையா இருக்கு வாழ்த்துக்கள் ராஜி...!!!

middleclassmadhavi said...

பேஷ், பேஷ்!

வழ்த்துக்கள்!

Yaathoramani.blogspot.com said...

நீர் அதிகம் சேரச் சேர உடைபடும் மடைபோல்
அதீத அன்பின் பெருக்கில் மௌனம்
உடைபடவே செய்யும்.ஆயினும்
அதற்குள் மடைபடும் அவதி
அனுபவித்தால்தான் புரியும்
அதை மிக அழகான படைப்பாக்கித்
தந்தமைக்கு வாழ்த்துக்கள் த.ம 16

Yaathoramani.blogspot.com said...

த.ம 11

ராமலக்ஷ்மி said...

/எந்த சத்தமானால் என்ன?
எதுதான் உன்னுடைய
மௌனத்தை மொழி பெயர்க்கும்?/

அழகிய வரிகள். அருமையான கவிதை.

சாகம்பரி said...

சீக்கிரம் பேசிடுங்கப்பா. மௌனத்திற்கு மொழி பெயர்க்க முயற்சிக்கும் கவிதை அருமை. வாழ்த்துக்கள் ராஜி!

RVS said...

மின்விசிறியின் மெல்லிய இசை?

வார்த்தைக்கதிர் நல்லாயிருக்கு... :-)

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

wow..short and sweet akka...

மாலதி said...

நீயும் உன் வார்த்தைக்கதிர்
நீட்டி ஒளி தருவாய் என
நானும் காத்திருப்பேன்.//

அருமை. வாழ்த்துக்கள்

சாகம்பரி said...

என் மனம் கவர்ந்த இந்தப் பதிவை நாளைய (1/11/11 -செவ்வாய் கிழமை) வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தவிருக்கிறேன். நேரம் கிட்டும்போது வந்து பாருங்கள். http://blogintamil.blogspot.com

Post a Comment