விர்ரென்று பறந்து வந்த கல் ராகவனின் தோளை உரசிச் சென்றது.திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தார்.இவ்வளவு பெரிய கடை வீதியில் அது எங்கிருந்து வந்ததென பார்க்கும்போதே சில இளைஞர்கள் திபு திபுவென ஓடினர்.அவர்கள் கையில் கட்டை, கம்பு என்று ஆளுக்கு ஒரு ஆயுதம் இருந்தது.எதிரே பார்த்தவற்றை எல்லாம் அடித்து நொறுக்க ஆரம்பித்தார்கள்.
கடைவீதியில் கூச்சல் குழப்பம் என ஒரே களேபரம்.கடைகள் படீர் படீரென அறைந்து சாத்தப் பட்டன.தள்ளுவண்டிக்காரர்கள் அவசர அவசரமாக வண்டியுடன் ஓட்டம் பிடிக்க ஆரம்பித்தனர்.வேகவேகமாக ஆண்களும் பெண்களும் குழந்தைகளை அள்ளிக் கொண்டு அங்குமிங்கும் ஓடி மறைந்து கொண்டிருந்தனர்.ராகவனும் சட்டென்று அருகிலிருந்த பிள்ளையார்
கோவிலுக்குள் சட்டென நுழைந்தார்.அவரைப் போலவே இருவர் கோவிலுக்குள் ஓடி வந்து ஒளிந்து கொண்டனர்.
அதற்குள், அங்கு வந்த பஸ் கல்லடியால் நொறுங்க ஆரம்பிக்க பயணிகள் தப்பித்து ஓட ஆரம்பித்தனர்.அந்த இடமே யுத்த பூமி போல் காட்சியளித்தது.
"ஏதாவது கோஷ்டிப் பூசலா?" ராகவன் அருகிலிருந்தவரிடம் சன்னமான குரலில் வார்த்தைகளை தடுமாற்றமாக வெளியிட்டார்
"இல்ல சார்!ஏதோ ஸ்டூடன்ட் ப்ரச்சனையாம்" என்றார் ஒருவர்
"வாத்தியார் ஏதோ பையனை அடிச்சுட்டாராம்.மன்னிப்பு கேக்கணுமாம்.அதுக்கு
பப்ளிக் என்ன செய்வாங்கன்னு இல்லாம ஆர்ப்பாட்டம் பண்றாங்க" என்றார் மற்றொருவர்.
தழைந்த குரலில் சம்பாஷிக்கும் போதே சிறிது நேர களேபரத்திற்குப் பின் காவல்துறை வந்து கலவரம் செய்தவர்களை அள்ளிக் கொண்டு சென்றது
ரகளை அடங்கியதும் மூவரும் மெதுவாக வெளியே வந்தனர்.தெரு வெறிச்சோடிக் கிடந்தது.கால் வைத்து நடக்க முடியாமல் கல்லும் கட்டைகளும் கண்ணாடிச் சிதறல்களுமாய் காட்சியளித்தது.சற்று முன்
காய்கறிகளும், பழங்களும், இதர சாமான்களும் விற்றுக் கொண்டும், வாங்கிக் கொண்டும் வருவோரும் போவோருமாய் இருந்த தெரு தலைகீழாய் மாறியிருந்தது.ரத்தத் துளிகளும் அறுந்த செருப்புகளுமாய் அலங்கோலமாய் இருந்தது.
சிந்தனையுடன் ராகவன் நடக்க ஆரம்பிக்க மற்ற இருவரும் பேசிக் கொண்டே நடந்தனர்."இந்த மாதிரி இளைஞர்களை நம்பி நாடு காத்திட்டிருக்கு.என்ன செய்ய?" என்ற புலம்பலுடன் நடந்தனர்.
ராகவன் எதிரில் வந்த ஆட்டோவை நிறுத்தி ஏறிக் கொண்டார்.ஆட்டோ வளைந்தும் நெளிந்தும் சிதறிக் கிடந்த பொருள்களுக்கிடையே சென்றது.
"உருப்படாத பயலுக.என்ன சாமி!ரொம்ப பயந்துட்டீங்களா?" என்று திரும்பிப் பார்த்து கேட்டான் அந்த டிரைவர்.
ராகவன் ஒரு பெருமூச்சுக்குப் பின் "இதனால இவங்களுக்கென்ன லாபம்?"
எத்தனை சேதம் பாரு" என்றார்
"லாப நஷ்டமெல்லாம் பாத்தா இதெல்லம் நடக்குது?எவனும் எங்களை எதுவும் செய்யக் கூடாது.மீறி செஞ்சா இப்பிடித்தான்னு இவனுகளுக்கெலாம் ஒரு தெனவு"
"நல்லாதான் பேசறப்பா"
"படிக்கற இவனுங்க என்னத்த கத்துக்கிட்டானுக.படிக்காத ஆளுக என்ன சீரழிஞ்சுட்டாங்க? நடத்தை நல்லா இருந்தாதான் சாமி எதுவுமே.இவனுகளைச் சொல்லிக் குத்தமில்லை சாமி,சுத்தி இருக்கற உலகம் அப்டி இருக்கு.பணத்தைக் கொடுத்து காலேஜ்ல சீட் வாங்கிடறாங்க.படிப்பையே விலைக்கு வாங்கிட்டோம்.பாடம் சொல்லித் தரவன் எம்மாத்திரம்னு தோணிப் போகுது.அவனை காசு கொடுத்து வாங்க முடியாட்டி இருக்கவே இருககு அடுத்த ஆயுதம் வன்முறை.எனக்கு வேணுங்கறது வேணும்.மத்ததை பத்தி கவலை இல்லைனு ஆயிட்ட உலகத்துல வேறென்ன கத்துக்க முடியும் இவங்களால?"
"அப்பல்லாம் திண்ணைப் பள்ளிக் கூடத்துலயும் அரசாங்கப் பள்ளிக் கூடத்துலயும் படிப்பை காசு வாங்காம கல்வியை சேவையா சொல்லி குடுத்தாங்க.வாத்தியார்களும் வாங்கற சம்பளத்துக்கு வஞ்சனை இல்லாம உழைச்சாங்க.பசங்களும் வாத்தியாரை தெய்வமா மதிச்சு கத்துக்கிட்டாங்க.இப்ப எல்லா இடத்துலயும் பள்ளிக்கூடம்,எங்க போனாலும் காசு, சிபாரிசு.இப்பிடிக் கிடைக்கற கல்வியால ஒரு விஷயத்தை எந்த வழில வேணா அடையலாம்னு வெறிதான் வளருது".
"அப்டின்னா இவங்க கத்துக்க நல்ல விஷயங்களே இல்லைனு சொல்றியாப்பா?
எல்லா மாணவர்களும் இப்டி இருக்கறதில்லையே.நல்லா படிச்சு முன்னுக்கு வரவங்களும் இருக்கதானே செய்யறாங்க?"
"உண்மைதாங்க.ஆனா நல்லா படிக்கறா எத்தனை பேர் சுய நலமில்லாம இருக்காங்க?கல்வியை நல்லா படிச்சா மட்டும் என்னங்க பிரயோசனம்?வாழ்க்கையை நல்லா படிக்க வேணாவா?.எத்தனை பேர் மனித நேயத்தை உணர்ந்து நடக்கறாங்க?அதுல எத்தனை பேர் அடுத்தவனுக்கு உதவ தயாரா இருக்கான்?காசு பணத்தால இல்லாட்டியும் கூட உடம்பாலயாச்சும் உபகாரம் பண்றவங்க எத்தினி பேரு சாமி?அடிதடி பண்றது மட்டும் வன்முறை இல்லை சாமி!அடுத்தவன் வலி தெரிஞ்சும் அலட்சியப் பண்றதும்
வன்முறைதான்"
"என்னப்பா சொல்ற?"
"ஆமா சாமி!இப்பல்லாம் டாக்டருக்குப் படிக்கணும் இஞ்சினியரிங் படிக்கணும்,இதைப் படிச்சா இப்பிடி சம்பாதிக்க முடியும்னு கணக்குப் பண்ணி படிக்கறதுதான் படிப்பாயிருச்சு.ஸ்கூல் எல்லாம் எங்க ஸ்கூல் இவ்வளவு மார்க்னு மார் தட்டிக்குது.வீட்லயும் இத்தனை மார்க் எடுத்தா இதுல சேரலாம்னு பசங்களை கட்டாயப் படுத்தறாங்க.இதுல எங்கேருந்து அடுத்தவன் வலியை புரிஞ்சுக்க சொல்லித் தராங்க?"
"அப்டின்னா இப்பிடி படிச்சவங்க எல்லாம் நல்ல வாழ்க்கை முறையை கடைப் பிடிக்கறதில்லங்கறயா?"
"ஒட்டு மொத்தமா சொல்லிட முடியுமா சாமி.பயிருக்கு நடுவுல களை இருந்தா பிடுங்கிறலாங்க.களைகளுக்கு நடுல பயிர் இருந்தா அது கெடுதல் இல்லீங்களா?இப்ப இந்த பயலுக இப்டி நடக்க காரணம் அடுத்தவன் வலியை புரிஞ்சுக்க சரியான வயசுல சரியான நேரத்துல சொல்லித் தராததும் கத்துக்காததும்தான?"
"நீ ஸ்கூலுக்கு போயிருக்கயாப்பா?ஏதாச்சும் படிச்சுருக்கயா?"
"ஒன்பதாவது வரை படிச்சுருக்கேன்.அப்பறம் அப்பா தவறிட்டாரு.உடம்பு சரியில்லாத அம்மா,ரெண்டு தங்கச்சிங்க,ஒரு தம்பின்னு குடும்பத்தை கரையேத்த தொழிலுக்கு வந்துட்டேன்.ஏன் சாமி கேக்கறீங்க?"
:நல்லா பேசறயே.படிச்சுருந்தா நல்லா வந்திருப்ப.அதான் கேட்டேன்"
"இப்ப என்ன குறைஞ்சுட்டேன் சாமி!குடும்பத்தை காப்பாத்தற அளவு வருமானம் வருது.அடுத்தவனுக்கு கெடுதல் பண்ணக் கூடாதுன்னு நினைக்கற அளவு கல்வியறிவு இருக்கு.சின்ன வயசுல ரங்கசாமி வாத்யாருன்னு ஒருத்தர்
சொல்லிக் கொடுத்த கல்வியறிவுலதான் நான் என் வாழ்க்கையை வாழறேன்"
ராகவன் சின்ன திடுக்கிடலுடன், "என்ன பேரு சொன்ன?ரங்கசாமி வாத்தியாரா?தமிழ் வாத்தியாரா?"
"அவரை உங்களுக்கு தெரியுங்களா?"
"தெரியும்பா.அவர் பிள்ளைதான் நான்"
சட்டென்று ப்ரேக் அடித்து விழி விரிய, "நிசமா சாமி!" என்று கும்பிட்டான்.
அவன் தோளில் தட்டிக் கொடுத்து "ஆமாம்.இந்தாப்பா பணம்.நான் இங்கதான் இறங்கணும்" என்று வண்டியை விட்டிறங்கி வீட்டிற்குள் நுழைந்தார்.
அவன் சிலையாய் நிற்க, உள்ளே அவரை வரவேற்க செய்தி காத்திருந்தது.அவரது அருமைப் புதல்வன் ரங்கேஷ் கடைவீதியில் காவல்துறையினரால் கைது செய்யப் பட்டான் என்று.
டிஸ்கி : இந்த சிறுகதை "வல்லமை தீபாவளி மலரில்" வெளி வந்துள்ளது.
வல்லமையினருக்கு எனது நன்றிகள்.

26 comments:
The story is very nice & wonderful. Congratulations for being published in Vallamai. With Best Wishes. vgk
//
அவன் சிலையாய் நிற்க, உள்ளே அவரை வரவேற்க செய்தி காத்திருந்தது.அவரது அருமைப் புதல்வன் ரங்கேஷ் கடைவீதியில் காவல்துறையினரால் கைது செய்யப் பட்டான் என்று.
//
அருமையான முடிவு
இன்று என் வலையில்
நடிகர் விஜய் பய(ங்கர) டேட்டா
அருமையான முடிவு .
S.kumar
http://vayalaan.blogspot.com
அருமையான சிறுகதை.... நல்ல முடிவு.
நட்புடன்,
http://tamilvaasi.blogspot.com/
துவக்கமும் தொடர்தலும் முடிவும்
மிக மிக அருமை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 1
சூப்பரா டச்சிங் முடிவு...!!!
வணக்கம் சகோதரி இன்றுதான் உங்கள் தளத்திற்கு முதன் முதலில் வருகின்றேன் உங்கள் எழுத்துக்கள் ரசிக்கவைக்கின்றது இனி தொடர்ந்து வருவேன் நன்றி
நல்லா இருந்தது முடிவு
தலைப்பை மறுபடி படித்தேன்!
கதை வல்லமையில் பிரசுரமானதிற்கு வாழ்த்துக்கள்!
முடிவு நல்லாயிருந்தது.படிப்பின் அருமை,பொது சொத்து&பொது மக்களின் அருமை தெரிந்தவன் இது போன்ற வீம்பு போராட்டங்களில் கலந்துகொண்டிருக்க மாட்டார்கள்.
பல நல்ல விஷயங்களைச் சொன்ன இக்கதை நன்றாக இருக்கிறது சகோ...
வல்லமையில் வெளிவந்தமைக்கு மிக்க நன்றி.
ஹ்ம் எதோ சொல்றீங்க!!!
என்ன ஒன்னங்கிளாஸ் சங்கரன் வாத்தியார் நொச்சி கம்பால அடிச்ச அடி இன்னும் வலிக்குது..அவர பார்த்தா பயம் தான் வருது..மரியாதை எங்க வருது???முன்னைவிட இப்ப கல்வித்துறைல இந்தியா முன்னேறி (மாறி)இருக்கு அப்டிங்கிறதுதான் என் கருத்து.
வளர்ந்த நாடுகளில் எல்லாம் குழந்தைகளை,மாணவர்களை ஆசிரியர்கள் மட்டும் இல்ல பெற்றோர்கள் கூட அடிக்கவோ துன்புறுத்தவோ கூடாது.அப்டி அடித்தாலோ துன்புறுத்தினாலோ சட்டப்படி குற்றம்.தண்டனை நிச்சயம் உண்டு.அதுதான் சரியும் கூட.
ஆசிரியர் கடவுளும் இல்ல .மாணவன் அடிமையும் அல்ல.ஆசிரியப்பணி ஒரு நற்பணி அவ்வளவுதான்.
நீங்க மேலே சொன்ன
கல்வி வியாபாரம் ஆச்சு, நல்ல மார்க்ன்னு மார் தட்டுறாங்கன்னு இப்டி எல்லாமே வளர்ந்த நாடுகள்லயும் இருக்கு..ஆனா வன்முறை மட்டும் அங்க மிக குறைவு.(இந்தியாவுடன் ஒப்பிடும்போது).இந்த வன்முறைக்கு கல்வி நிறுவனங்கள் காரணம் கிடையாது.அதுக்கு வேற எதோ காரணம் இருக்கு.அத நாமதான் கண்டுபிடிக்கனும்.
வளர்ந்த நாடொன்றின் காவல் நிலைய வாசலில் நான் தினமும் பார்க்கும் வாசகம்.
“LOW CRIME DOES NOT MEAN NO CRIME"
இந்த வாசகத்தை ஏன் எழுதியிருக்காங்கன்னா??
நாட்டுல வன்முறை,குற்றம் எதுவுமே நடக்கலன்னு மக்கள் நினைச்சிட கூடாதுன்னுதான்.எத்தனை சுத்தம் பாருங்கள்.!
@மழை
வன்முறைக்கு கல்வி நிறுவங்கள் காரணம்னு சொல்லப்படலை.வன்முறைக்கு காரணம் அடுத்தவன் வலியைப் புரிஞ்சுக்க எங்கயுமே சொல்லித் தாரம,கத்துக்கப் படாம விடறதுதான்.இதுதான் கதையின் முக்கிய உள் கருத்து.இது தெளிவு பட, //இதுல எங்கேருந்து அடுத்தவன் வலியை புரிஞ்சுக்க சொல்லித் தராங்க
// இந்த வரிகள்ல விளக்கப் பட்டிருக்கு.
அடிதடி பண்றது மட்டும் வன்முறை இல்லை சாமி!அடுத்தவன் வலி தெரிஞ்சும் அலட்சியப் பண்றதும்
வன்முறைதான்"
வரிகள் அருமை .,,
வல்லமையில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கௐள்..
அவன் சிலையாய் நிற்க, உள்ளே அவரை வரவேற்க செய்தி காத்திருந்தது.அவரது அருமைப் புதல்வன் ரங்கேஷ் கடைவீதியில் காவல்துறையினரால் கைது செய்யப் பட்டான் என்று.
கனமான முடிவு!
\\அடிதடி பண்றது மட்டும் வன்முறை இல்லை சாமி!அடுத்தவன் வலி தெரிஞ்சும் அலட்சியப் பண்றதும்
வன்முறைதான்"//
மிகவும் அழுத்தமாய் தெளிவாய் சொல்லி இருக்கிறீர்கள்.
மழை சொல்வதும் யோசிக்க வேண்டிய ஒன்று,
அரசியலும், தனிமனித ஒழுக்கமும் சீரழிந்ததும் தான் முக்கிய காரணம்.
அடிதடி பண்றது மட்டும் வன்முறை இல்லை சாமி!அடுத்தவன் வலி தெரிஞ்சும் அலட்சியப் பண்றதும்
வன்முறைதான்"
என் ஆசிரியர் என்னை அடித்திருக்கிறார். அதுவும் என் பிழைக்காக அல்ல.. என் பொறுப்பில் இருந்த வகுப்பு பொருள் தொலைந்ததற்கு.. அந்த ஒரு முறை அடி வாங்கியதோடு சரி. என்னுள் அதன்பின் எல்லா விஷயங்களிலும் கவனம் வேண்டும் என்கிற பாடம் பதிவானது.
நம் விவாதங்களே முரண்கள் நிரம்பியவை.
அப்போது போல நேர்மையான, மனசாட்சியுள்ள ஆசிரியர்கள் இப்போது எண்ணிக்கையில் குறைவாய்.
இந்த முடிவை எதிர்பார்க்கவே இல்லை... சூப்பரா இருக்கு..(உங்களுக்கு சொந்த ஊர் இராஜபாளையமா? ரொம்ப சந்தோஷமா இருக்கு..)
தமிழ்மணத்துல 4 வது என் ஓட்டுதான்..
முதலில் எனது வணக்கங்களும்
அன்பான வாழ்த்துக்களும்
வலைச்சரம் பார்த்தேன்
அதில் அருமையாய்
எளிதாய்
மிக கடப்பாட்டுடன்
இசைக்கருவிகள் பற்றி தொகுத்து இருந்தீங்க
சந்தோசம்
வாழ்க வளமுடன்
பொறுப்புள்ள ஒரு சில ஆசிரியர்கள் மிகவும் குறைவு
வருத்தம்தான் ..:(
தீபாவளி வாழ்த்துக்களும்
கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது போல் வாத்தியார் பேரன் வாத்தியாரையேத் தாக்குவது, நம் தலைமுறையின் நற்பண்புகளை நாம் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லத் தவறுவதைக் காட்டுகிறதோ.
நல்ல பாடம். நன்றிகள்.
மிக நன்றாக எழுதியிருக்கிறீர்கள். கொஞ்சம் கூட எதிர்பார்க்காத முடிவு.
'அந்த நாளில ஆசிரியர்கள் வாங்கிய காசுக்கு வஞ்சனையில்லாமல் உழைத்தார்கள்' என்பது தலைமுறைக்குத் தலைமுறை மாறாத புலம்பல்:)
super story ! vazhthukkal!
Post a Comment