Tuesday, October 25, 2011

தனக்கென்று வந்துவிட்டால்..... (சவால் சிறுகதைப் போட்டி -2011)

ஆர்ப்பரித்த கடலின் முன் நின்று கால் நனைத்து யோசனையில் நின்றிருந்தார்  டி ஐ ஜி சூர்ய நாராயணன் என்னும் சூர்யா.நெற்றிப் பொட்டில் முடிச்சு விழுந்திருக்க பேன்ட் பாக்கெட்டிலிருந்து கோல்ட் ஃப்லேக் ஒன்றை உருவி வாயில் பொருத்தி பற்ற வைத்து ஒரு இழுப்பு இழுத்தார்.அங்கங்கே வெள்ளியோடியிருந்த முன் தலையைக் கோதினார்.

ஓவென்று இரைந்த கடலுடன் போட்டியிடுவது போல் நான்கைந்து சிறுவர்கள் கூச்சலெழுப்பி கும்மாளமிட்டுக் கொண்டிருந்ததை சற்று நேரம் பார்த்தார்.
'திவ்யாவும் இப்படித்தான்.கடலைக் கண்டால் குழந்தையாகி விடுவாள்'  மகளை  நினைத்துப் பார்த்தார்.கைபேசி கிணுகிணுக்க காதில் ஒற்றி, "சொல்லு கோகுல்!ஏதாவது தெரிஞ்சதா?" என்றார்.

"சார்!அடையாறிலேருந்து ராதாகிருஷ்ணன்னு ஒருத்தர் கார்த்தால வந்து கம்ப்ளெயின்ட் கொடுத்திருக்கார்.நேத்துலேருந்து அவர் பொண்ணைக் காணோமாம்"

"என்னய்யா?ஏற்கனவே இருக்கற குழப்பத்துக்கு நூல் ஏதாச்சும் கிடைச்சுதான்னு கேட்டா  நீ புதுசா எதையோ கொண்டு வந்து இல்ல நிறுத்தற?"

"இல்ல சார்!இது புதுசுன்னு நான் நினைக்கல.அதுக்கும் இதுக்கும்   தொடர்பிருக்கும்னுதான் எனக்குத் தோணுது"

"என்ன  சொல்றீங்க?"

ஆமா சார்! நீங்க நேர்ல வாங்க.பேசிக்கலாம்"

மௌனித்த கைபேசியை பீட்டர் இங்லேன்டின் சதுர அறையில் போட்டார்.

தூரத்தில் புள்ளியாய்த் தெரிந்த கப்பலை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த போது பக்கத்தில் அசைவை உணர்ந்து திரும்பினார்.

விஷ்ணு நின்றிருந்தான். "வா! போன விஷயம் என்னாச்சு?"

"பேசியாச்சு சார்!அவங்க ஏற்கனவே சொன்னதுல உறுதியா இருக்காங்க.
மாற்றம் எதுவும் இல்லை.ஸோ அதுக்கான அரேஞ்ச்மென்ட் பண்ணியாச்சு.
நீங்க கவலைப் பட வேண்டாம்"

"என்னமோ நீ ஈசியா சொல்லிட்ட.நடக்கறதைப் பாத்தா அப்படியா இருக்கு.நாம போற ரூட் சரிதானான்னு குழப்பமாவும் இருக்கு.பட் வேற வழி இல்லை.நீ எதுக்கும் எப்பவும் அலர்ட்டா இருந்துக்கோ.எதானாலும் எனக்கு கன்வே பண்ணு இம்மீடியட்டா.மெசேஜ் அனுப்பித் தொலைக்காத புரிஞ்சுதா?"

"ஓக்கே சார்! நீங்க கிளம்புங்க.நான் பாத்துக்கறேன்"

விஷ்ணுவின் தோளில் தட்டி, "பீ கேர் ஃபுல் "  என்று நகர்ந்தார்.

செப்டம்பர் மாதத்தின் நான்காம் நாள் மாலை நேரம் , வெயிட்டர் இரண்டு டீ கோப்பைகளை கொண்டு வைத்து விட்டு நகரும் வரை அமைதி காத்து எதிரெதிரே அமர்ந்திருந்தனர்  சூர்யாவும் கோகுலும்.

"எப்பிடி பழைய கடத்தல் கேசுக்கும் இந்த ராதாகிருஷ்ணன் பொண்ணு கேசுக்கும் சம்பந்தம் இருக்குன்னு நீ நினைக்கற?"

சூர்யாவை உற்று நோக்கிய கோகுல், " சார்! இதுவரை ஏற்கனவே அஞ்சு பொண்ணுங்க காணாம போயிருக்காங்க.இந்த பொண்ணு ஆறாவது.ஆறுத்துக்கும் சில ஒத்துமைகள் இருக்கு.எல்லாருமே காலேஜ் பொண்ணுங்க.சம வயசு உள்ளவங்க.இவங்க எல்லாருக்குமே, டி வி கேம்பயரிங் பண்ற இன்ட்ரெஸ்ட் இருந்துருக்கு.எல்லாருமே அப்டி கேம்பயரிங் போகும்போதுதான் காணாம போயிருக்காங்க."
"அதுவும் இல்லாம இதுவரை யாரும் சாகலை அல்லது கொலை செய்யப்படலைன்னு உறுதியா சொல்ல முடியும்.ஏன்னா இந்த ஆறு பேரும் கடந்த மூணு மாசத்துல ஒவ்வொருத்தரா காணாம  போயிருக்காங்க. ஒருவேளை செத்துப்போயிருந்தாலோ அல்லது சாகடிக்கப் பட்டிருந்தாலோ இதுக்குள்ள ஒருத்தர் பாடியாவது கிடைச்சிருக்கும்.இதுவரை செக் பண்ணின கடைசி மூணு மாச டெட் பாடி பட்டியல்ல எதுவுமே இவங்களோடது இல்லை.
அடுத்ததா எல்லா ரெட் லைட் ஏரியாலயும் ரெய்ட் நடத்தி செக் பண்ணியாச்சு.
ஒருத்தர் கூட சென்னை,பாம்பே,கல்கத்தா,கோவான்னு எங்கயுமே கிடைக்கல. எல்லாருமே வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவங்கதான்.மேலிடத்துல பிரஷர் அதிகமா இருக்கறதால இதுல முழு முனைப்பும் காட்டியிருக்கு"

"ஒருவேளை ஆறு பேருக்கும் அல்லது ஆறு பேர் ஃபாமிலிக்கும் பொதுவான எதிரி யாராச்சும் இருப்பாங்கன்னு நினைக்கறீங்களா?"

"இல்ல சார்!அந்த ஊகத்தின் அடிப்படையிலயும் பாத்தாச்சு.எல்லாரோட ஃபாமிலியும், நட்பும்  ஒண்ணுக்கொண்ணு எந்த தொடர்பும் இல்லாம இருக்கு.
மொழி ,இனம்னு இப்பிடி எல்லா அடிப்படையிலயும் பாத்தாச்சு.தனிப்பட்ட குடும்ப பகையும் நோண்டிப் பாத்தாச்சு"

"சரி!மேலே என்ன பண்றதா உத்தேசம்?"

"விஷ்ணு கிட்டேருந்து ஏதும் தகவல் வருதான்னு வெயிட் பண்றேன் சார்!
அதுக்கப்பறம்தான் என்ன பண்றதுன்னு முடிவு பண்ண முடியும்.பட் சின்னதா
ஒரு க்ளூ கிடைச்சிருக்கு.அது சரிதானான்னு கன்ஃபர்ம் பண்ணிக்கிட்டு உங்க கிட்ட சொல்றேன்"



செப்டம்பரின் எட்டாம்  நாள் அந்திப் பொழுது, சூர்யா மேசையில் முழஙகை ஊன்றி தலையைக் கையில் தாங்கி அமர்ந்திருந்தார்.மேசை மீது முதல் நாள் கோகுலின் பர்ஸ்லிருந்து கீழே விழுந்து தான் எடுத்த துண்டுச் சீட்டு இருந்தது.
அதனருகில் விஷ்ணு தனக்கு அனுப்பிய துண்டு சீட்டும் இருந்தது.மேசை மீதிருந்த ஸ்கேலைக் கையால் நகர்த்தி விட்டு இரண்டு சீட்டையும் எடுத்துப் பார்த்தார்.
கோகுலிடமிருந்து எடுத்த சீட்டில் இருந்த, mr. கோகுல் என்ற வாசகத்தை  தொடர்ந்த குறியீடு S W H2 6F என்று  அவரைக் குழப்பியது.ஆனால் விஷ்ணு தனக்கு அனுப்பிய Sir,  எஸ்  பி கோகுலிடம் .............  என்ற சீட்டு தெளிவாகவே இருந்து , விஷ்ணு ஏன்  கோகுலைக் குழப்பி இருக்கிறான் என்பதை தெளிவூட்டியது.இது என்ன குறியீடு என்று யோசிக்கும் போதே கையில் இருந்த
கைபேசி கவனத்தை ஈர்த்து ஓசையெழுப்பி, Vishnu Informer என்று காட்டியது.

"சொல்லுப்பா!இது என்ன கோகுலுக்கு ஏதோ குறியீடு அனுப்பித் தொலச்சுருக்க?"

"சார்!அதான் தெளிவா உங்களுக்கு ஒரு சீட்டும் அனுப்பிருக்கேனே.அது தவறான குறியீடுன்னு.அப்படிச் செய்யலைன்னா கேஸ் இன்னும் டீடெய்லா போகும் சார்! "

"தேங்க்ஸ் விஷ்ணு! கோகுலை நல்லாத்தான் குழப்பிருக்க"

"குழம்பினது நான் இல்லை சார்!நீங்கதான்"  சத்தம் வந்த திசையில் திரும்பினார்.பின்னால் கோகுல் நான்கு கான்ஸ்டபிள்களுடன் நின்றிருந்தான்.

"கோகுல்!என்ன இது?"

"நீங்கதான் சார் சொல்லணும்.விஷ்ணுவை வச்சு நீங்க பண்ணின ப்ளானை"

..........................

"ஓ!சொல்ல மாட்டீங்களா?ஓக்கே அப்ப விஷ்ணுவே சொல்வான்.வாப்பா உள்ள"

உள்ளே நுழைந்த விஷ்ணுவைப் பார்த்து திகைத்தார்.

"என்ன சார் பாக்கறீங்க? நான் மாட்டி விட்டேனேன்னா?இல்லை சார்!நான் உங்களை தப்பு செய்யறதுலேருந்து காப்பாத்திருக்கேன் கோகுல் சார் உதவியோட.உங்களை மட்டும் இல்லை உங்க பொண்ணையும் அப்பறம் அந்த கடத்தப் பட்ட ஆறு  பொண்ணுங்களையும்"

"என்ன சார் அப்படி திகைச்சுப் போயி நின்னுட்டீங்க?விஷ்ணு சொல்றது புரியலையா? நான் முதலேருந்து சொல்றேன்.ஏற்கனவே மூணு  மாசமா
காணாம போன அஞ்சு பொண்ணுங்க, ராதாகிருஷ்ணன் பொண்ணு இப்பிடி
எந்த கேஸ்லையும் என்னைக் கண்டு பிடிக்க விடாம குழப்பினாதான் உங்க பொண் திவ்யாவை விடுவோம்னு உங்க பொண்ணையும் பிடிச்சு வச்சுக்கிட்டு மிரட்டினாங்களே அந்த கும்பலை பிடிச்சாச்சு"

"என்ன பிரமிச்சு போயிட்டீங்க?கோகுல் சார் சொல்றதை நம்ப முடியலையா?
உங்க கூட ஒத்துழைக்காம நான் இருந்திருந்தா எனக்கு பதிலா வேற இன்ஃபார்மர் வச்சுருப்பீங்க.எதையும் கண்டு பிடிக்க முடியாம போயிடும்னு நான் உங்களுக்கு ஒத்துழைக்கறாப்ல நடிச்சேன்.அப்டி செஞ்சதாலதான்  அந்த கும்பல்ல ஒருத்தன் கிட்டேருந்து குறியீடு கிடைச்சது.அதன் படி S -september
W - Wales Ship H2 - H (8th letter)  2  o clock 6F - 6 Female அப்படிங்கறதை கோகுல் சார் மண்டையை உடைச்சுக்கிட்டு கண்டு பிடிச்சார்.செப்டம்பர் மாசம் Wales ship ல
8ம் தேதி 2 மணிக்கு ஆறு பெண்களை கடத்தறாங்கன்னு  கண்டு பிடிச்சு அவங்களை வளைச்சுப் பிடிச்சாச்சு"

"அவங்களுக்கு உங்க சுயநலத்துக்காக ஒத்துழைப்பு கொடுத்ததை உங்க வாயால நீங்க ஒத்துக்கணும்கறதுக்காகதான் இப்ப விஷ்ணு உங்க கிட்ட ஃபோன்ல பேசி நடிச்சார்"

சூர்யா  கலங்கின கண்களுடன்,  "நான் மாட்டிண்டதுக்காக  கண் கலங்கலை.என் பெண்ணோட மற்ற பெண்களையும்  காப்பாத்திட்ட நீ.அதனால  நிம்மதில வர ஆனந்தக் கண்ணீர் இது " என்றபடி கைகளை விலங்கிற்கு நீட்டினார்.


டிஸ்கி: இந்த சிறுகதை "சவால் சிறுகதைப் போட்டி - 2011" க்காக எழுதப்பட்டது.

30 comments:

Yaathoramani.blogspot.com said...

அருமையான சிறுகதை
சொல்லிச் செல்லும் விதமும் அருமை
வெற்றி பெற வாழ்த்துக்கள்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
மனம் கனிந்த இனிய
தீபாவளித் திரு நாள் வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

த.ம 1

விச்சு said...

சூப்பர்...வாழ்த்துக்கள். இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்... உங்கள் குடும்பத்தில் சந்தோஷமும் வளமும் பெருகட்டும்...

K.s.s.Rajh said...

அருமையான கதை மேடம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

வை.கோபாலகிருஷ்ணன் said...

இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

சவால் சிறுகதைப் போட்டி 2011 இல் வெற்றி பெற்றதற்கு மனமார்ந்த பாராட்டுக்கள். vgk

raji said...

@ரமணி சார்
@விச்ஸ்ர்
@k.s.s,Rajh

நன்றி

@வை கோபாலகிருஷ்ணன் சார்

நவம்பர் 15 அன்றுதான் முடிவு அறிவிக்கிறார்கள்.
அன்றுதான் வெற்றி பெறுவது பற்றி தெரியும்.முன்பாகவே வந்த வாழ்த்தை ஆசிர்வாதமாக எடுத்துக் கொள்கிறேன்.நன்றி

r.v.saravanan said...

சிறுகதை போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

வலைச்சரத்தில் என்னை அறிமுகபடுத்தியமைக்கு மிக்க நன்றி

உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்
மேடம்

பாலா said...

வெற்றி பெற வாழ்த்துக்கள்.

மேலும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

இராஜராஜேஸ்வரி said...

அருமையான சிறுகதை..

இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

சக்தி கல்வி மையம் said...

வாழ்த்துக்கள்.,

அந்த நரகாசூரன் நினைவு நாள் மட்டும் தீபாவளி அல்ல.
நீங்கள் சிரித்து மகிழும் ஒவ்வொரு நாளும் தீபாவளி தான்.

உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...

rajamelaiyur said...

அருமையான கதை

rajamelaiyur said...

நல்ல முடிவு

rajamelaiyur said...

இன்றுஎன் வலையில்

இந்த திபாவளிக்கு இலவசமாக வெடி வேண்டுமா?.

middleclassmadhavi said...

Vetri peRa vaazhththukkaL

ரிஷபன் said...

அருமை.. கடைசிவரை விறுவிறுப்பு.. துப்பறியும் திலகம் என்றே பட்டம் தரலாம்!
கிரைம் கதை ஸ்பெஷலிஸ்ட் ஆகவும் இருப்பதில் நிஜமாகவே மனம் நிறைந்த பாராட்டுகள்

Anonymous said...

அருமையான கதை ...தங்களுக்கும், தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ...

வெங்கட் நாகராஜ் said...

நல்ல சிறுகதை. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் சகோ....

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்....

Anonymous said...

அருமையான சிறுகதை.

-சே.குமார்

RAMA RAVI (RAMVI) said...

கதை மிக அருமையாக இருக்கு ராஜி.வெற்றி பெற வாழ்த்துக்கள்.

சாந்தி மாரியப்பன் said...

கதை நல்லாருக்கு ராஜி.. கடைசி வரை விறுவிறுப்பு குறையாம கொண்டு போயிருக்கீங்க.. வெற்றி பெற வாழ்த்துகள்.

விச்சு said...

SWH26F குறியீட்டை நல்லா யோசிச்சி எழுதியிருக்கீங்க...வாழ்த்துக்கள்.

அப்பாதுரை said...

வாழ்த்துக்கள்.
நல்லா யோசிக்க வச்சிருக்காங்க போலிருக்கே?

Unknown said...

கதை நல்லா இருக்கு. வெற்றி பெற வாழ்த்துக்கள்.
அப்படியே என்னோட கதையும் படிச்சுடுங்க.
http://venpuravi.blogspot.com/2011/10/blog-post_30.html

Avainayagan said...

குறிப்பிட்ட குறிப்புகள் வருவது போல கதைபின்னுவது ஒரு கலை அதில் வெற்றியும் பெற்று இருக்கிறீர்கள். "சிறுகதை போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்"

SURYAJEEVA said...

http://padithurai.blogspot.com/2011/10/blog-post.html

கிருபா நந்தினி மேடம் மறுபடியும் வந்துட்டேன் என்று பதிவு இட்டுள்ளார்

சேக்காளி said...

//பீட்டர் இங்லேன்டின் சதுர அறை//
இனி முடியாத ஒரு வாக்கியம்

சாகம்பரி said...

சரியான நகர்த்தல்களுடன் துப்பறியும் கதை. முடிவும் சிறப்பு.

ananthu said...

சிறுகதை நடையும் , முடிவும் அருமை ... வெற்றி பெற வாழ்த்துக்கள் ...

raji said...

பின்னூட்டமளித்து வாழ்த்திய அனைவருக்கும் எனது நன்றிகள்

அமர பாரதி said...

கதை நன்றாக இருந்தது. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Post a Comment