Tuesday, March 8, 2011

இதிகாசங்களும்,புராணங்களும்-ஒரு அலசல்


சக பதிவர் திரு  எல் கே அவர்களின் பதிவில் மற்றொரு பதிவரான
திரு கருணாகரசு எழுதியுள்ள கீழ்க்கண்ட கவிதையை பற்றிய
அலசல் படிக்க நேர்ந்தது.அதன் விளைவே இப்பதிவு.

திரு கருணாகரசு அவர்களின் கவிதை:

சீதை

ஆணாதிக்கத்தால்
அக்னியில் குளித்தெழுந்த
அனிச்சம்

இதிகாச புராணங்களை அலசினால்(நீ யாரு அதை எல்லாம் அலசவும் காயப் போடவும்னு யாரோ கடுப்பாறாங்களே) அவற்றிலிருந்து  நாம்
அறிய வேண்டியதும் புரிந்து கொள்ள வேண்டியதும் என்னவென்று விளங்கும்.

முதலாவது இதிகாசங்களும் புராணங்களும் நாம் எவ்வாறு வாழ்க்கை
நடத்த வேண்டும், எவ்வாறு இருக்க கூடாது என நமக்கு வழி காட்டவே
படைக்கப் பட்டன.

இராமாயணத்தை எடுத்துக் கொண்டால் அதில் ஒவ்வொரு பாத்திரங்களும்
நமக்கு பல விஷயங்களையும் கோணங்களையும் உணர்த்துகின்றன.

ராவணனிடமிருந்து பிறன் மனை விழையாதே என்ற கருத்தை நாம்
எடுத்துக் கொள்ள வேண்டும்.

கைகேயியிடமிருந்து மற்றவர் சொல் கேட்டு சுய புத்தி இழக்க கூடாது
என்பதையும் நாம் எடுக்கும் முடிவுகளால் என்னென்ன பின் விளைவுகள் வரலாம் என யோசித்து செயல் பட வேண்டும்  என்பதையும் கொள்ளலாம்.

சூர்ப்பனகையிடமிருந்து ஒரு ஆண் எத்தனை அழகனாயிருந்தாலும்   தனக்கு சொந்தமானவனாக இல்லாத போது  அவன் முன்பு காம வசப்படலாகாது
என்பதை  கற்றுக் கொள்ள வேண்டும்.

விபீஷணனிடத்தில் தர்மத்திற்காக நியாயத்தின் பக்கம் இருத்தலை
எடுத்துக் கொள்ளலாம்

வாலியினிடத்தில், சற்றும்  யோசிக்காமல் கோபம் கொள்ளலாகாது என்பதை  நாம்  அறிந்து  கொள்ளலாம்.சுக்ரீவன் வாலி இறந்ததாக நினைத்து குகையை மூடினான் என ஏற்காமல் அவனிடத்தில் வாலி கோபம் கொண்டான்.சுக்ரீவனோ  என்ன நடந்தது என ஆராயவே இல்லை. எதையும் தீர ஆராயாமல் ஒரு முடிவுக்கு வரலாகாது என்பதை சுக்ரீவனிடத்தில் இருந்து நாம் தெரிந்து கொள்ளலாம்.

சீதையோ ராமன்தான் அலறுகிறான் என கற்பனை செய்து
உணர்ச்சி வசப்பட்டு லக்ஷ்மணனை சற்றும் எண்ணிப் பார்க்காமலே தூற்றி விடடாள்.சீதையை தீக்குளிக்க சொன்னது ராமன் தவறு  என கருத்து நிலவுகிறது.உடம்பால் தீக்குளிக்க சொன்னது தவறென்றால் லக்ஷ்மணனின் மனதை  அக்னி போன்ற வார்த்தையால் பொசுக்கியது
எவ்வளவு பெரிய குற்றம்?ஒருவரின் மனதை சுடு சொற்களால்
புண்படுத்தினால் கொதிக்கும் எண்ணைக் கொப்பரையில் இடப் படுவார்கள் என நம் புராணங்கள் கூறுகின்றன.

அவ்வாறு லக்ஷ்மணனை தூற்றிய பிறகு அன்போடு  ராமனை ஏறிட்டுப் பார்க்கவும் முடியுமா?

காட்டிற்கு செல்ல வேண்டாம் என கௌசல்யை தடுத்தும், ராமன் வர
வேண்டாமென கேட்டுக் கொண்டும் சீதை தான் செல்வது என முடிவு
எடுத்ததிலிருந்து அவளுக்கு பெண்ணுரிமை இருக்கிறது என்பது தெளிவாகிறது.பின் தீக்குளித்ததில் ராமனின் ஆணாதிக்கம் எங்கிருந்து
வந்தது?

மேலும் அயோத்தி திரும்பிய பின் மீண்டும் சீதை காட்டிற்கு
அனுப்பப்பட்டது சீதையின் சம்மதத்தின் பெயரிலேயே நடந்தது.

ஒருவரோ இருவரோ பேசியதை  வைத்து ராமன் முடிவுக்கு வரவில்லை.
தூதர்களை வைத்து நாட்டின் அத்தனை, பொது மக்களின் கருத்தையும் அறிந்த பிறகே முடிவெடுக்கப் பட்டது.ஒரு அரசன் அவ்வாறுதான்
நடக்க இயலும்.கணவனும் மனைவியும் என்றான பின் அவனது
அரச தர்மத்தை காக்க வேண்டியது சீதைக்கும் கடமையாகி விடுகிறது.

நாம் போடும் மெஜாரிட்டி வோட்டை  வைத்து ஒருவன் தலைவனாகிறான்.அவன் நல்லவனோ கெட்டவனோ நாம் அவனை
தலைவனாக ஏற்கிறோம்.ஆனால் ராமன் போன்ற அரசன் நாட்டின் மெஜாரிட்டி மக்கள் தீர்ப்பை வைத்து முடிவு செய்வதை ஒப்புக்
கொள்வதில்லை.

புராணங்களையும் இதிகாசங்களையும் தவறுகள் கண்டு பிடிக்க
பயன் படுத்தாமல் அவற்றிலிருந்த நம் வாழ்க்கைக்கு சொல்லப் பட்டது என்ன என எடுத்துக் கொள்வதே சிறந்தது.தவறு  கண்டு பிடிக்கும் பட்சத்தில் ஒவ்வொரு பாத்திரப் படைப்பிலும் கண்டுபிடித்துக் கொண்டே இருக்கலாம்.

கர்ணன் தவறு, துரியோதனன் தவறு, பொய் கூறி துரோணரை சாய்த்த யுதிஷ்டிரன் தவறு, ஏன் கடைசியில்  கிருஷ்ணரே தவறு என லிஸ்ட் நீள வேண்டியதுதான்.

இவ்வளவு தவறுகள் கண்டு பிடிக்கும் நாம், நாம்  செய்யும் தவறுகளை
எண்ணிப் பார்த்தால் நம் வாழ்வு சீராகும்.புராண இதிகாசங்களிலிருந்து
நாம் செய்யக் கூடியதும், செய்யக் கூடாததையுமே எடுத்துக் கொள்ளல்
அவசியம்.அதை விடுத்து நம் விவாதத்திற்காக அதில் தவறு தேடுதல்
சரியல்ல.

நம் வீட்டில் மனைவியோ கணவனோ  ஒரு முடிவை தவறாக  எடுத்ததற்காக
அதையே கூறிக் கொண்டிருக்க முடியுமா?அவ்வாறு செய்தால் வாழ்க்கை வீணாகாதா?அப்படி என்றால் புராண இதிகாசங்களிடம்  நமக்கு பகை ஏன்?

பொத்தல் இல்லாத தோசை வார்க்க முடியுமா? அல்லது பொத்தல் இருப்பதால் அதை சாப்பிடாமல் விடுகிறோமா?

எனவே புராண இதிகாசங்களிலும் சரி,நம் வாழ்விலும் சரி
குறைகளையும் தவறுகளையுமே  பார்க்கப் பழகாமல் அதிலிருந்து
வாழ்க்கைப் பாடம் கற்றுக் கொள்ளப் பழகுவோமே?!

47 comments:

எல் கே said...

நன்றி ராஜி. நம்மில் பலர் செய்யும் தவறு இது.பாதி பேர் தெரியாமல் செய்கின்றனர். இன்னும் சிலர் வெறுமே கிண்டல் கேலி செய்யவேண்டும் என்று செய்கின்றனர். இன்னும் சிலரோ உண்மைத் தெரிந்தும் , சரியான விஷயங்களை சொன்னால் தான் கேலி செய்யப் படுவமோ என்று எண்ணி அமைதிக் காக்கின்றனர். இதுதான் காரணம்.

எல் கே said...

மகாபாரதக் கதை வேற. அதற்க்கு ஒரு பதிவு பிறகு போடுகிறேன் ராஜி. சில தகவல்கள் தேடனும்

r.v.saravanan said...

எனவே புராண இதிகாசங்களிலும் சரி,நம் வாழ்விலும் சரி
குறைகளையும் தவறுகளையுமே பார்க்கப் பழகாமல் அதிலிருந்து
வாழ்க்கைப் பாடம் கற்றுக் கொள்ளப் பழகுவோமே?!

correct

வை.கோபாலகிருஷ்ணன் said...
This comment has been removed by the author.
வை.கோபாலகிருஷ்ணன் said...

//பொத்தல் இல்லாத தோசை வார்க்க முடியுமா? அல்லது பொத்தல் இருப்பதால் அதை சாப்பிடாமல் விடுகிறோமா?//

பொத்தல் உள்ள தோசைகள் தான் டேஸ்ட் ஆக இருக்கும். தோசைப்பிரியன் ஆகிய நான், தோசைகள் சார்பாக, இந்த உதாரணம் கொடுத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

மற்றபடி பதிவு ருசியோ ருசி தான், பொத்தல் உள்ள தோசைகள் போலவே.

எல் கே said...

தொடர

raji said...

@எல் கே

தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மையே

விரைவில் தங்களது மகாபாரத பதிவை எதிர்பார்க்கிறேன்

@ஆர் வி சரவணன்

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

@பொத்தல் உள்ள தோசைதான் ருசியாக இருக்கும் என்பதை
நானும் ஆமோதிக்கிறேன்.அதனால்தான் அதை உதாரணமாக தந்திருக்கிறேன்.
அதாவது பொத்தல் உள்ள தோசை என்பதால் நாம் சாப்பிடாமல் இருப்பதில்லை.ஏனெனில் அது ருசியானதாக
இருப்பதால்தான்.
அப்படி என்றால் நாம் பொத்தல்களை பார்ப்பதில்லை,ருசியைத்தான் பார்க்கிறோம்.
அது போல வாழ்க்கையிலும், புராண இதிகாசங்களிலும் தவறுகளைக் காணாமல்
அதிலிருந்து நாம் எப்படி வாழ வேண்டும் என்பதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே என் கருத்து.

பொத்தல் உள்ளது என தோசையை ஒதுக்கினால் அதன் ருசியை இழந்து பசியோடு இருக்க வேண்டியதுதான்.

அதுபோல் தவறுகளை மட்டுமே நோண்டி நோண்டி பார்த்துக்
கொண்டிருந்தால் வாழ்க்கை ருசிக்காது என்பதோடு துன்பம் மட்டுமே மிஞ்சும் என்பதுதான்
எனது கருத்து

raji said...

@வை கோபாலகிருஷ்ணன்

மேலே தந்திருக்கும் எனது பதிலில் தங்கள்
பெயர் விடுபட்டு விட்டது.தவறுக்கு மன்னிக்கவும்

Chitra said...

எஸ்கேப் ரூட் ஜீப் எந்த பக்கம் நிக்குது? என்னது... அப்படியே, நேரா போய், ரைட்ல கட் பண்ணி left ல போகணுமா? தேங்க்ஸ்ங்க....

எல் கே said...

@சித்ரா

வழியே இல்லை எல்லா பக்கமும் அடைச்சாச்சு

SUREஷ்(பழனியிலிருந்து) said...

அசத்துங்க அண்ணாச்சி..,

தி. ரா. ச.(T.R.C.) said...

எனவே புராண இதிகாசங்களிலும் சரி,நம் வாழ்விலும் சரி
குறைகளையும் தவறுகளையுமே பார்க்கப் பழகாமல் அதிலிருந்து
வாழ்க்கைப் பாடம் கற்றுக் கொள்ளப் பழகுவோமே?!


முத்தாய்ப்பு மிக பிரமாதம். அலசி ஆராய்ந்து சார்பு இல்லாத கருத்துக்கள்

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ஒரு ஒரு கதாபாத்திரத்தில் இருந்தும் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய நீதியை சொன்னது ரெம்ப நல்லா இருக்குங்க ராஜி...

R. Gopi said...

ராமர் சீதை விஷயத்தில் செய்த அனைத்துமே தவறுதான்.

அர்ச்சாவதாரம் எடுக்கும்போது அவதாரம் என்பது மறந்துபோய் மானிட இயல்பு வந்துவிடும். மானிட அவதாரம் எடுத்துவிட்டு தெய்வ சிந்தனைக்கு இடம் கொடுத்தால் அவதாரம் எடுபடாது.

ராமர் செய்யும் அனைத்துமே ஒரு சராசரி ஆண் செய்வதுதான். வீட்டம்மா மாதவன் நடித்த படங்களைப் பார்க்கவேண்டும் என்று ஒரு நான்குமுறை சொன்னால் நாம் உடனே கேட்கமாட்டோம்? “ஏன் அவனையே கட்டிக்கிட்டு இருக்க வேண்டியதுதானே?”

சீதை மாதக்கணக்கில் வேறோருவனின் அரண்மனையில் இருந்திருக்கிறாள். ராவணனும் சகல தேஜஸ் கொண்டவன்தான். வீரம், கல்வி, கேள்விகளில் சோடை போனவனில்லை.

இயல்பாகவே ஆண்மகனுக்கு இருக்கும் சந்தேகம்தான் போர் முடிந்ததும் வார்த்தைகளாக வருகின்றன ராமனிடமிருந்து. அப்போது ராமன் (‘ர்’ ‘ன்’ ஆகிறது தானாகவே) பேசுவதை எல்லாம் கேட்க ரொம்பவே நாராசமாக இருக்கும். கிட்டத்தட்ட “எவன் கூட வேண்டுமானாலும் போ” (பரதன், சுக்ரீவன், லக்ஷ்மணன், விபீஷணன் இவர்கள் எவருடன் வேண்டுமானாலும் செல்லலாம்) என்கிற ரீதியில் இருக்கும். காரணம் ஒன்றுதான். இதுதான் ஒரு ஆண்மகனின் இயல்பு.

சீதை, “நான் மாயந்துபோகிறேன்” என்று லக்ஷ்மனனைத் தீ மூட்டச் சொல்லும்போதும் ராமர் மவுனம் காக்கிறார். இது ஒரு விதத்தில் அவருக்கு சம்மதமே. ஒருவரின் மனைவி நடத்தை கெட்டவளாக இருந்தாலும் கூட அவளைக் கொல்வதோ அல்லது அவள் தற்கொலை செய்துகொள்ள முயலும்போது தடுக்காமல் இருத்தல் இரண்டுமே தவறு. இந்த நியாயம் ஊருக்குத்தான். தனக்கென்று வரும்போது வேறு நியாயம். அதுதான் மனித இயல்பு.


அடுத்து கர்ப்பமுற்ற நிலையில் இருக்கும் சீதையை லக்ஷ்மணனை விட்டுக் கங்கை கரையில் விட்டுவரச் சொல்வது. அந்தக் காட்சியைப் படிக்கும் நமக்கே கண்ணீர் வரும். சீதை தன்னுடைய மேடிட்ட வயிற்றைக் காட்டி, “நான் கர்ப்பவதியாக இருக்கும்போதுதான் நீங்கள் என்னை இங்குக் கொண்டு வந்து விட்டிருக்கிறீர்கள். சந்தேகமின்றிப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்பாள்.

லவன் குசன் பிறந்தபிறகு மூன்றாவது முறை இன்னொரு சோதனை. கற்பு குறித்துப் பிரமாணம் எடுக்க வேண்டி. இம்முறை பூமாதேவியுடன் சீதை ஐக்கியமாகி விடுவார்.

இதே ராமர் கைகேயி சொல்வதைத் தட்டுவதில்லை. சூர்ப்பனகை வலிய வந்தும் ஏற்பதில்லை. பிற பெரியவர்களிடம் அடக்கமாகவே இருக்கிறார்.

குறை இல்லாத கதாபாத்திரம் என்று ஒன்று இருக்கவே முடியாது, அது இதிகாசமானாலும்.

நீங்கள் பதிவின் மற்ற கதாபதிரங்களில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்து எழுதி இருப்பது போல, நாம் இந்த விஷயத்தில் கற்றுத் தெளியவேண்டியது ஒன்றே ஒன்றுதான். மனையாளை சந்தேகப்படாதே. வாழ்வு நரகமாகிவிடும்.

மற்றபடி ராமர் செய்வது சரி என்றெல்லாம் சொல்வதில் எனக்கு உடன்பாடு கிடையாது.

raji said...

இந்த பதிவிற்கு கோபி சார் போட்ட கமென்ட்டும் அப்பாவி தங்கமணி அவர்கள்
போட்ட கமென்ட்டும் எத்தனை முறை பப்ளிஷ் கொடுத்தாலும் பதிவில் டிஸ்ப்ளே
ஆகவில்லை.எனவே அவற்றை நான் காப்பி பேஸ்ட் கொடுத்து வெளியிடுகிறேன்.

கோபி சாரும்,அப்பாவி தங்கமணி அவர்களும் இந்த தர்ம சங்கடத்திற்கு
மன்னிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Gopi Ramamoorthy said...

//ராமர் சீதை விஷயத்தில் செய்த அனைத்துமே தவறுதான். அர்ச்சாவதாரம் எடுக்கும்போது அவதாரம் என்பது மறந்துபோய் மானிட இயல்பு வந்துவிடும். மானிட அவதாரம் எடுத்துவிட்டு தெய்வ சிந்தனைக்கு இடம் கொடுத்தால் அவதாரம் எடுபடாது. ராமர் செய்யும் அனைத்துமே ஒரு சராசரி ஆண் செய்வதுதான். வீட்டம்மா மாதவன் நடித்த படங்களைப் பார்க்கவேண்டும் என்று ஒரு நான்குமுறை சொன்னால் நாம் உடனே கேட்கமாட்டோம்? “ஏன் அவனையே கட்டிக்கிட்டு இருக்க வேண்டியதுதானே?” சீதை மாதக்கணக்கில் வேறோருவனின் அரண்மனையில் இருந்திருக்கிறாள். ராவணனும் சகல தேஜஸ் கொண்டவன்தான். வீரம், கல்வி, கேள்விகளில் சோடை போனவனில்லை. இயல்பாகவே ஆண்மகனுக்கு இருக்கும் சந்தேகம்தான் போர் முடிந்ததும் வார்த்தைகளாக வருகின்றன ராமனிடமிருந்து. அப்போது ராமன் (‘ர்’ ‘ன்’ ஆகிறது தானாகவே) பேசுவதை எல்லாம் கேட்க ரொம்பவே நாராசமாக இருக்கும். கிட்டத்தட்ட “எவன் கூட வேண்டுமானாலும் போ” (பரதன், சுக்ரீவன், லக்ஷ்மணன், விபீஷணன் இவர்கள் எவருடன் வேண்டுமானாலும் செல்லலாம்) என்கிற ரீதியில் இருக்கும். காரணம் ஒன்றுதான். இதுதான் ஒரு ஆண்மகனின் இயல்பு. சீதை, “நான் மாயந்துபோகிறேன்” என்று லக்ஷ்மனனைத் தீ மூட்டச் சொல்லும்போதும் ராமர் மவுனம் காக்கிறார். இது ஒரு விதத்தில் அவருக்கு சம்மதமே. ஒருவரின் மனைவி நடத்தை கெட்டவளாக இருந்தாலும் கூட அவளைக் கொல்வதோ அல்லது அவள் தற்கொலை செய்துகொள்ள முயலும்போது தடுக்காமல் இருத்தல் இரண்டுமே தவறு. இந்த நியாயம் ஊருக்குத்தான். தனக்கென்று வரும்போது வேறு நியாயம். அதுதான் மனித இயல்பு. அடுத்து கர்ப்பமுற்ற நிலையில் இருக்கும் சீதையை லக்ஷ்மணனை விட்டுக் கங்கை கரையில் விட்டுவரச் சொல்வது. அந்தக் காட்சியைப் படிக்கும் நமக்கே கண்ணீர் வரும். சீதை தன்னுடைய மேடிட்ட வயிற்றைக் காட்டி, “நான் கர்ப்பவதியாக இருக்கும்போதுதான் நீங்கள் என்னை இங்குக் கொண்டு வந்து விட்டிருக்கிறீர்கள். சந்தேகமின்றிப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்பாள். லவன் குசன் பிறந்தபிறகு மூன்றாவது முறை இன்னொரு சோதனை. கற்பு குறித்துப் பிரமாணம் எடுக்க வேண்டி. இம்முறை பூமாதேவியுடன் சீதை ஐக்கியமாகி விடுவார். இதே ராமர் கைகேயி சொல்வதைத் தட்டுவதில்லை. சூர்ப்பனகை வலிய வந்தும் ஏற்பதில்லை. பிற பெரியவர்களிடம் அடக்கமாகவே இருக்கிறார். குறை இல்லாத கதாபாத்திரம் என்று ஒன்று இருக்கவே முடியாது, அது இதிகாசமானாலும். நீங்கள் பதிவின் மற்ற கதாபதிரங்களில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்து எழுதி இருப்பது போல, நாம் இந்த விஷயத்தில் கற்றுத் தெளியவேண்டியது ஒன்றே ஒன்றுதான். மனையாளை சந்தேகப்படாதே. வாழ்வு நரகமாகிவிடும். மற்றபடி ராமர் செய்வது சரி என்றெல்லாம் சொல்வதில் எனக்கு உடன்பாடு கிடையாது//

அப்பாவி தங்கமணி said...

//ஒரு ஒரு கதாபாத்திரத்தில் இருந்தும் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய நீதியை சொன்னது ரெம்ப நல்லா இருக்குங்க ராஜி...//

வெங்கட் நாகராஜ் said...

Well said.

Yaathoramani.blogspot.com said...

தஙகள் பதிவு மிகக் கனமான விஷயங்களை
மிகத் தெளிவாகத் தாங்கி வருவது குறித்து
மிக்க மகிழ்ச்சி நமது புராணங்களில்
சிறந்த தனிமனிதனுக்கான உதாரணமாக
திகழ்பவன் ராமன்.சமூக மனிதனுக்கான
விளக்கமாகத் திகழ்பவன் கிருஷ்ணன்
அவதாரமாக இருந்தாலும் தன் வல்லமையைக் காட்டாது
விதியின் போக்கில் வாழ்ந்து சென்றவன் ராமன்
மனிதனாக பிறந்திருந்தாலும் தெய்வமாகவே
விதியையே நிர்ணயிப்பவனாக வாழ்ந்தவன் மாதவன்
பட்டாபிஷேகத்தின் போதுகூட வில்லுடன் இருக்கும் ராமனையும்
போர்க்களத்தில் கூட புல்லாங்குழலுடன் சிரித்துக்கொண்டே இருக்கும்
கிருஷ்ண்னையும் மிகச் சரியாக புரிந்து கொள்வது கொஞ்சம் சிரமமே
தங்கள் பதிவு நல்ல சிந்தனைகளை ஊக்குவித்துச் செல்கிறது
தொடர வாழ்த்துக்கள்

எல் கே said...

@கோபி

என் பதிவை நீங்கள் படித்தீர்களா என்றுத் தெரியவில்லை. நீங்கள் ராமனிடம் என்னக் குறையை கண்டுபிடிச்சீங்க ??


இதைதான் இந்த கால கண்ணோட்டம் கொண்டு இதிகாச புராணங்களை பார்க்க வேண்டாம் என்று என் பதிவில் சொல்லி இருந்தேன். நேரம் இருந்தால் என் பதிவை பாருங்கள். அதில் திருமதி கீதா சாம்பசிவம் சொல்லி உள்ளவற்றையும் படிக்கவும்.

raji said...

@கோபி ராமமூர்த்தி

இது ராமனுக்கு அட்வகேட் செய்யும் பதிவல்ல.ஆனால் எல்லா
பாத்திரப் படைப்புகளிலும் நிறைகளும் குறைகளும் இருக்கும் பட்சத்தில்
ராமனின் செயல்கள் மட்டும் தவறு என்றும் ஆணாதிக்கம் என்றும் விவாதங்கள் தேவையற்றது
என்பதே கருத்து.

@அப்பாவி தங்கமணி

நன்றி

@வெங்கட் நாகராஜ்
நன்றி

@ரமணி
ஆமாம்,தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மையே
புராணங்களையும் இதிகாசங்களையும் யாராலும்
சரியான கோணத்தில் முழுவதுமாக புரிந்து கொள்வது கடினமே

RVS said...

சன் டி.வியில் ராமாயணம் முடியும் சமயம்...
சீதை பூமா தேவியோட போறேன்னு போறாள்.... ராமர் அழறார்....
பக்கத்துலேர்ந்து என் சித்தி சமையர்க்கட்டிலிருந்து எட்டிப்பார்த்து.. .... "உக்க்ஹும்.. இப்ப அழுது என்ன பிரயஜோனம்..." என்றாள்...
நான் சொன்னேன்... "நமக்கெல்லாம் ராமரை இவ்ளோதான் தெரியும்...".....

இந்த ரேஸ்ல கலந்துக்க எனக்கு நேரம் இல்லை.... இன்னும் கொஞ்ச நாள் உங்கள் பதிவுல இந்தப் படம் ஓடிச்சுன்னா வந்து கலந்துக்கறேன்.. ;-)

'பரிவை' சே.குமார் said...

அருமையான விளக்கத்துடன் நல்லதொரு பகிர்வு.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

கோபி சொல்வதுதான் என் கருத்தும்.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

ராமர் கடவுளாக ஏற்றுக் கொள்ளப் பட்டுவிட்டதாலேயே, அவனது தவறுகளுக்கு நியாயம் கற்பித்து பூசி மெழுகி அவனை உயரத்திலேயே வைத்திருக்கிறார்கள்.

raji said...

@ஆர் வி எஸ்

இந்த ரேஸ் இல்லாவிட்டால் என்ன?தனி பதிவாக கூட போடலாமே

@சே குமார்
நன்றி

@வித்யா சுப்ரமணியம்

இதை இப்படியும் கூறலாம்.ராமர் கடவுள் என்பதாலேயே அவர்
பக்கத்து தவறுகள் பெரிது படுத்தப் படுகின்றன.ஆனால் மற்ற
பாத்திரங்கள் அவ்வாறு எடுத்துக் கொள்ளப் படுவதில்லை.ராமனை
ஒரு சாதாரண மானுட அரசனாக பார்த்தால் அவர் ஒரு சூழ்நிலைக் கைதி
என்பது தெரியும்

தமிழ் ஈட்டி! said...

சகோதரி,

தங்கள் பதிவில் உள்ள பிழைகள்:


//படைக்கப் பட்டன//
படைக்கப்பட்டன

//சூர்ப்பனகையிடமிருந்து ஒரு ஆண் எத்தனை அழகனாயிருந்தாலும் தனக்கு சொந்தமானவனாக இல்லாத பொது //

இல்லாதபோது


//இவ்வளவு தவறுகள் கண்டு பிடிக்கும் நாம், நாம் செய்யும் தவறுகளை
எண்ணிப் பார்த்தால் நம் வாழ்வு சீராகும்.//

சரியாக சொன்னீர்கள். தமிழில் பதிவு எழுதுகையில் பிழை இன்றி எழுதவும்.

தொண்ணூறுக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் பதிவுகளை பின் தொடர்கின்றனர். எனவே, பதிவு எழுதி முடித்ததும் பிழைகளை சரி பார்க்கலாமே?


இப்படிக்கு,
தமிழ்த்தாய் இளைஞர் படையின் சேவகன்.

raji said...

@தமிழ் ஈட்டி

//இல்லாத போது// திருத்தப்பட்டு விட்டது.சுட்டிக் காட்டியமைக்கு நன்றி

எனினும் //படைக்கப் பட்டன// சரி செய்ய இயலவில்லை.எத்தனை முயன்றாலும்
சேர்த்து தட்டச்சு செய்யப்படும் சில வார்த்தைகள் எனது வலையில்
பிரிந்தே வெளியாகின்றன.காரணம் தெரியவில்லை.அலன்மென்ட் சரி
செய்ய தெரியவில்லை.இதை முன்பே ஒரு முறை கூறியுள்ளேன்.
மன்னிக்கவும்

சக்தி கல்வி மையம் said...

வாழ்த்துக்கள்..
பெண்மையைப் போற்றுவோம்.

இராஜராஜேஸ்வரி said...

நாம் செய்யும் தவறுகளை
எண்ணிப் பார்த்தால் நம் வாழ்வு சீராகும்.//
ஆழ்ந்த கருத்துக்கள். ராமரின் தவறோ, சீதையின் தவறோ, நாம் நம் தவறுகளை எண்ணிப்பார்த்து வாழ்வைச் சீரமைத்துக் கொள்ள வேண்டிய தருணம்.

ADHI VENKAT said...

ஒவ்வொரு கதாபாத்திரங்கள் கிட்டயிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய கருத்துக்களை தெளிவா சொல்லியதற்கு நன்றி.

எஸ்கேப் …………….

ஆச்சி ஸ்ரீதர் said...

பதிவையும் விமர்சனங்களையும் படித்த போது,விஷயம் தெரிந்தவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது ஒன்றும் தெரியாதவர்கள் மௌனமாக இருக்க வேண்டும் என்பதை நான் கடை பிடிக்கிறேன்ப்பா.

{ நான் இரண்டு வருடங்களுக்கு முன் குருஷேத்திரம் சென்றிருந்தேன்.டி.வீ யில் புராணக் கதைகள பாக்கும் போதே தோன்றும் கேள்வியிலாம் கேட்டு நம்ப முடியாத பதில்களைப் பெற்ற எனக்கு குருஷேத்திரம் சென்ற போது பீஷ்மரின் முள் படுக்கை,ராமன் உட்பட பலரும் அமர்ந்து குருகுலம் பயின்ற இடங்கள்,கீதை உபதேசம் நடந்த இடம்,அந்த இடம்,இந்த இடம்னு காலையில் பஸ்ஸை விட்டு இறங்கியதிலிருந்து சுத்தினோம்,எதுவும் பக்கத்தில் இல்லை,மூலைக்கொரு இடம்.என்னால் நம்பவே முடியல,நிஜமாவே இந்த பூமியில அவர்களெல்லாம் இருந்தார்களானு,

ஒரு சின்ன மியூசியம் இருந்தது,அதில் கடைசியில் (பதினாறு நாட்கள் என நினைக்கிறேன்) கீதை உபதேசம், போர்,நடந்த விதம் பற்றிய சுவர் வரைபடங்களும்,சில பொம்மை வடிவிலும் இருந்தது,இந்த கதையில் வரும் சிலர் உபயோகப்படுத்திய மட்பாண்டங்கள் வில்,அம்புகள்,இப்படி சில பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

என்னதான் பார்த்தாலும் கேட்டாலும்,எனக்கு நம்ப முடியல,ஆனால் மனிதர்களை நல்வழிப் படுத்துவதற்காக ஒவ்வொரு காதாபாத்திரங்களை உருவாக்கி நெறிமுறைகளை வகுத்து நல்லது,கெட்டதுகளை தெரியப் படுத்துகிறார்கள் என்றே நான் கருதுகிறேன்.

ராஜி எனக்கு சிறு வயதில் புராணக் கதைகள் பார்த்து கேட்ட சந்தேகங்களில் சிலவற்றை கேளுங்க,
• சாமி எப்ப தூங்கும்
• இந்த டிரஸ்லாம் யாரு தெச்சா /எந்த கடையில வாங்குவாங்க/நகைகளும்.
• போர்க்களத்தில் நின்னு இவ்ளோ நேரம் பேசுற வரைக்கும் எதிர்ல இருக்கிறவன் சண்டை போடாமல் அவனும் நின்னு கதை கேக்கிறானா?

குருஷேத்திரம் போன போது

இந்த இடத்தில் எல்லாம் நடந்ததென்றால் கதை மட்டும் உள்ளதே,கடவுள் என்பதால் அவர்களுக்கு,இறப்பு இல்லாமல் மறைந்து விட்டார்களா, பூமியில் வாழ்ந்த இதிகாச பாத்திரங்கள் பூமியிலே இறந்திருந்தால் அவர்களை எங்கு எப்படி அடக்கம் செய்தார்கள், ,இது இவரை அடக்கம் செய்த இடம்/எரித்த இடம், ஏன் அந்த இடங்கள் அடையாளம் காட்டப்படவில்லை.பீஷ்மரின் முள் படுக்கை சிலை மட்டும் உள்ளது.
(இந்த பின்னூட்டம் டிஸ்ப்ளே ஆனால் யார்யார்கிட்ட வாங்கப் போறேனோ தெரியல.) }

raji said...

@ஆச்சி

முதலாவது யாருமே முழுதாக தெரிந்தவர்களோ
ஒன்றுமே அறியாதவர்களோ இல்லை.அவரவர்கள் படித்தது கேட்டது
என்பதன் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து
இருக்கலாம்.இதில் தப்பென்றும் சரியென்றும் எதையுமே தீர்த்து
சொல்லி விட முடியாது.

மேலும் ராமயண கால கட்டமே வேறு.அப்போதிருந்த காலத்தில்
எந்தெந்த விஷயங்களுக்கு எம்மாதிரி தீர்ப்புகள்
இருந்தன என்பதெல்லாம் நாம் முழுமையாக அறிய மாட்டோம்.
அதனால் ராமன் செய்தது சரியா தவறா என்று அந்த காலகட்டத்தில்
வாழாத நாம் யாருமே கூற இயலாது.அப்படியிருக்க ராமனை ஆணாதிக்கவாதி என
கூறவோ ராமன் சீதை விஷயத்தில் செய்தது முழுக்க முழுக்க தவறு எனவோ
கூற இயலாது என்பது மட்டுமே எனது கருத்து.

நீங்கள் கூறியது போல் சிறு வயதில் அந்த வயதுக்கே உரித்தான சந்தேகங்கள்
எல்லோருக்குமே எழுவதுதான்.

மற்றபடி நீங்கள் பார்த்த இடங்கள் முழுக்க உண்மையாக நடந்த இடங்கள் என்றோ முழுக்க கற்பனை
என்றும் கூட கூற இயலாது.ஏனெனில் இப்பொழுது இம்மாதிரி விஷயங்களிலும் கூட மோசடிகள்
நடக்கின்றன.சுற்றிப் பார்க்க வருபவர்களிடம் பணம் கறக்க சில ஏமாற்று வேலைகளும் நடப்பதுண்டு

raji said...

@வேடந்தாங்கல்

நன்றி

@இராஜராஜேஸ்வரி


ஆமாம்.கருத்துக்கு நன்றி

@கோவை2தில்லி

கருத்துக்கு நன்றி

எல் கே said...

@ஆச்சி

நெறய சந்தேகம் கேட்டு இருக்கீங்க . எனக்குத் தெரிஞ்சதை சொல்றேன். அந்தகாலத்தில் போர் துவங்க சங்கு ஒலிக்கும் அதற்குப் பிறகே போர் துவங்கும். அதே போல் மாலையில் போர் முடிந்தவுடன் சங்கு ஒலிக்கும் பிறகு போர் நின்றுவிடும் இதை யாரும் மீற மாட்டார்கள் . இதுதான் பாரத யுத்தத்தில் நிகழ்ந்தது.

எல் கே said...

கடவுள் தூங்குவாரா நம்மை போல் உடை அணிவாரா என்றுக் கேட்டால் அதற்கான விடை சிறிய அளவில் சொல்ல இயலாது. எதற்கும் திருமதி கீதா அவர்கள் எழுதிய பதிவை தேடித் தருகிறேன்

raji said...

@ஆச்சி

சங்கு ஒலிக்காவிட்டால் அது ஒலிக்கும் வரை காத்திருக்கத்தான் வேண்டும்.
போருக்கு இருவரும் தயார் என்ற நிலையில் மட்டுமே போர் துவங்கப்படும்

middleclassmadhavi said...

ராமாயணம், மகாபாரதம் மட்டுமல்ல, மற்ற மத நூல்களிலும் இந்தக் காலத்துக்கு ஒவ்வாத விஷயங்கள் வரும். காலத்திற்கேற்ற கருத்தை மட்டுமே கொள்ள வேண்டும் என்பதே என் தாழ்மையான கருத்து.

சாந்தி மாரியப்பன் said...

//புராணங்களையும் இதிகாசங்களையும் தவறுகள் கண்டு பிடிக்க பயன்படுத்தாமல் அவற்றிலிருந்த நம் வாழ்க்கைக்கு சொல்லப்பட்டது என்ன என எடுத்துக் கொள்வதே சிறந்தது.தவறு கண்டுபிடிக்கும் பட்சத்தில் ஒவ்வொரு பாத்திரப் படைப்பிலும் கண்டுபிடித்துக் கொண்டே இருக்கலாம்//

ரொம்ப சரி.. பாத்திரப்படைப்பில் மட்டுமல்ல அன்றாடம் நாம சந்திக்கிற மனிதர்கள் கிட்டயும் கண்டுபிடிச்சிட்டே இருக்கலாம்.

R. Gopi said...

கார்த்திக், பாரதப் போரில் பல யுத்த தர்மங்கள் காற்றில் விடப்பட்டன. பதினான்காவது நாள் யுத்தம் இரவிலும் நடந்தது. ஜெயத்ரதன் மாண்டதும் யுத்தம் முடிந்தது என்று இருதரப்பினரும் யுத்தத்தை முடித்துக்கொண்ட வேளையில்தான்.

மனம் திறந்து... (மதி) said...

புராணங்களையும் இதிகாசங்களையும் தவறுகள் கண்டு பிடிக்க பயன் படுத்தாமல் அவற்றிலிருந்த நம் வாழ்க்கைக்கு சொல்லப் பட்டது என்ன என எடுத்துக் கொள்வதே சிறந்தது.தவறு கண்டு பிடிக்கும் பட்சத்தில் ஒவ்வொரு பாத்திரப் படைப்பிலும் கண்டுபிடித்துக் கொண்டே இருக்கலாம்.
:))))

இன்னும் ஒரு படி மேலே போய், உலகைச் சாடும் பேர்வழிகளுக்கு ஒரு பெரியவர் சொன்ன பதில்:

//உலகம் நம்மைப் புரிந்து கொள்ளவில்லையே என்று வருந்துவதில் சற்றும் பயனில்லை; உலகை நாம் புரிந்து கொள்ளவில்லையே என்று வருந்துவதிலும், ஆராய்வதிலும் தான் நம் வாழ்க்கையின் எல்லாக் கேள்விகளுக்கும் விடைகள் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது!//

இது கார சாரமான விவாதம் அடங்கிய என் பதிவொன்றை முடிக்க உதவிய அருள் வாக்கு!

சிவகுமாரன் said...

பொது மக்களின் கருத்தை அறிந்து முடிவெடுக்க அது நாட்டின் பிரச்சினை அல்ல. கணவன் மனைவி இருவர் மட்டுமே சம்பந்தப்பட்ட விசயத்தில் மூன்றமவரின் கருத்துக்கு இடமளிக்க கூடாது என்பது என் கருத்து. பெண்களாகிய நீங்களே ராமன் செய்ததில் தவறில்லை என்று சொன்ன பிறகு நான் என்ன சொல்வது.?

raji said...

@சிவகுமாரன்

அரசனும் அரச பத்தினியும் நாட்டின் முன்னுதாரண
பிரஜைகளாகக் கருதப்படுபவர்கள்.
அவர்களுக்கென்று தனிப்பட்ட முடிவுகள் எடுத்துக் கொள்ளும்
வாய்ப்புகள் அவர்களுக்கு மிக குறைவே.அவர்களின் முடிவுகள்
பொது மக்கள் சார்ந்தே இருப்பவை.மேலும் கணவன் மனை சம்பந்த பட்ட விஷயம்
என்றாகி விட்டால் அதை பற்றிய விவாதங்களுக்கோ தவறுகள் கண்டு பிடிக்கவோ
எவருக்குமே அதிகாரம் இல்லைய்து ஏற்கனவே
எல் கே சாரின் பதிவில் நான் போட்டிருக்கும் பின்னூட்டத்தில் ஏற்கனவே கூறியுள்ளேன்.
நீங்கள் அதை படிக்கவில்லை போலிருக்கிறது.

//பெண்களாகிய நீங்களே ராமன் செய்ததில் தவறில்லை என்று சொன்ன பிறகு//

நடுநிலையான சார்பற்ற முடிவுகளுக்கு ஆண் பெண் என்ற பேதம் அவசியமில்லை என
நான் நினைக்கிறேன்.நான் முதலிலேயே கோபி சாருக்கு [அதிலளித்த படி இது ராமனுக்கு வக்காலத்து
வாங்கும் பதிவல்ல.நன்றாக படித்தால் புரியும்.எல்லா படைப்புகளிலும் நிறை குறைகள் இருக்கும் பொழுது ராமனின்
தவறுகள் மிகைப் படுத்தப்பதுகின்றன என்பதே பதிவின் சாரம்

சி.பி.செந்தில்குமார் said...

>>முதலாவது இதிகாசங்களும் புராணங்களும் நாம் எவ்வாறு வாழ்க்கை
நடத்த வேண்டும், எவ்வாறு இருக்க கூடாது என நமக்கு வழி காட்டவே
படைக்கப் பட்டன.

குட்

சி.பி.செந்தில்குமார் said...

>>
பொத்தல் இல்லாத தோசை வார்க்க முடியுமா? அல்லது பொத்தல் இருப்பதால் அதை சாப்பிடாமல் விடுகிறோமா?

கரெக்ட்

சி.பி.செந்தில்குமார் said...

ஆன்மீகம், புராணம் சமபந்தபட்ட மேட்டர்களில் (பதிவில்)எழுதுபவர்கள் குறைவு.. வாழ்த்துக்கள்

Jayadev Das said...

பரத நாட்டியம் கத்துக்க ஒரு குருகிட்டத்தான் போறோம், யோகாசனம் ஒரு ஆசிரியரின் கண்காணிப்பின் கீழ்தான் செய்யவேண்டுமென்பதை தவறாமல் கடைபிடிக்கிறோம், அவ்வளவு என் சமையல் செய்வதற்கு கூட ருக்மினியம்மாள் அவர்களிடம் அவர் புத்தகத்தின் வாயிலாக கற்றுக் கொள்ளத் தயார். ஆனால் ஆன்மிகம் என்று வந்தவுடன் ஆளாளுக்கு அள்ளி விடுகிறோம், நாம எல்லோருமே எக்ஸ்பெர்ட் என்று ஒருத்தொருக்கொருத்தர் முதுகில் தட்டிக் கொடுத்துக் கொள்கிறோம். என்ன வினோதம் இது?? ஒவ்வொரு துறைக்கும் எக்ஸ்பெர்ட் இருக்கும் பொது ஆன்மீகத்து மட்டும் இருக்க மாட்டார்களா? அப்படி இருந்தால் இந்த இடுக்கையில் எழுப்பப் பட்டுள்ள கேள்விகளுக்கு, சந்தேகங்களுக்கு அவர்கள் என்ன சொல்லியுள்ளார்கள் என்பது பற்றி ஒருத்தரும் கவலைப் பட்ட மாதிரியே தெரியவில்லையே? என்னே விந்தை இது!!


tad viddhi pranipatena
pariprasnena sevaya
upadeksyanti te jnanam
jnaninas tattva-darsinah [BG 4.34]

Just try to learn the truth by approaching a spiritual master. Inquire from him submissively and render service unto him. The self-realized soul can impart knowledge unto you because he has seen the truth.
இந்த உண்மைகளை ஒரு ஆன்மீக குருவிடம் அணுகி கற்றுக் கொள். அவரிடம் பணிவுடன் கேள்வி கேள், அவருக்கு சேவை செய். தன்னையறிந்த அவர் உனக்கு அறிவைப் புகட்ட முடியும் ஏனெனில் அவர் தத்துவத்தைக் கண்டவர்.


tad-vijnanartham sa gurum evabhigaccet
samit-panih srotriyam brahma-nistham
Mundaka Upanisad [1.2.12]


"In order to learn the transcendental science, one must approach the bona fide spiritual master in disciplic succession, who is fixed in the Absolute Truth."

raji said...

@ஜெயதேவ் தாஸ்

தாங்கள் கூறுவது ஒரு விதத்தில் சரிதான்.ஆனால் அதே சமயம் முற்றிலும் சரி என்று எடுத்துக் கொள்ள
இயலாது.எந்த ஒரு விஷயமும் குரு வாயிலாக கற்பதே சிறந்தது என்பது உண்மைதான்.

ஆனால் ஆன்மீகம் மற்ற விஷயங்களைப் போல் அல்ல.அது அனைவருக்கும்
எளிதில் தொடக் கூடிய பாதை.எல்லாருக்கும் பரத ஞானம், யோகாசன ஞான்ம் கிடைக்கும் வாய்ப்பு
அமைவதில்லை.ஆனால் ஆன்மீகம் அப்படி அல்ல.உபன்யாசங்கள்,கோவில்கள்,புராணக் கதைகள்
பெரியோர் எழுதியுள்ள புத்தகங்கள் வாயிலாக எல்லோரும் தொடக் கூடிய வாசல் உள்ளது.
வாசலுக்குள் சென்ற பின் அவர்கள் அந்த பாதையை எப்படி அமைத்து கொள்கிறார்கள் என்பது தனி மனித சுதந்திரம்.
ஆன்மீகம் மட்டுமே எங்கும் தேடி பெறக் கூடிய ஞான விஷயம்.ஒரு சாதாரண படிக்காத பாமரனை கூட மிகப் பெரிய ஆன்மீக ஞானியாக அடையப் பெற்ற நாடு நம் நாடு.எந்த கலையும் குருவருளால் வளர்வதுதான்.ஆனால் அதன் பின் சீடன் அதை எப்படி இன்னும் இன்னும் தேடி அடைகிறான் என்பதும் முக்கியம்.ஆன்மீகத்தை பற்றி நான்கு பேர் பேசுவது விவாதிப்பது தவறு என்று கொள்ளல் ஆகாது.குரு அமையப் பெறாத ஏகலைவர்கள் நிறைய பேர்
உண்டு.அதற்கென்று கட்டை விரலை எடுக்க சொல்ல முடியாது

Jayadev Das said...

\\போர்க்களத்தில் கூட புல்லாங்குழலுடன் சிரித்துக்கொண்டே இருக்கும்
கிருஷ்ண்னையும் மிகச் சரியாக புரிந்து கொள்வது கொஞ்சம் சிரமமே\\
புல்லாங்குழலும், தலையில் மயிலிறகும் விருந்தாவனத்தில் ஷ்யாமசுந்தர் வடிவில் இருந்த கிருஷ்ணருக்கு மட்டுமே சொந்தம். விருந்தாவான வாசிகள் மட்டுமே அந்த ரூபத்தில், மூடில் தரிசிக்கும் வாய்ப்பைப் பெற்றிருந்தனர். விருந்தாவனத்திர்க்கு வெளியே மதுராவிலோ, துவாரகையிலோ, ஹஸ்தினாபுறத்திலோ ஸ்ரீ கிருஷ்ணரிடம் புல்லாங்குழல், மயிலிறகு இல்லை. ஏனெனில் அங்கெல்லாம் அவர் மாடு மேய்க்கும் இடையர் அல்ல. அங்கே அவர் இளவரசர், அரசர்.

Post a Comment