Friday, April 8, 2011

ரசம்


 
"ஏய்!  மெதுவாப்பா, பாத்து பாத்து.மெல்ல தூக்கிகிட்டு போங்க.ஏதாச்சும்
டேமேஜ் ஆகிடப் போகுது. ரொம்ப காஸ்ட்லி சிலை.முத தடவை லண்டன் போனப்ப வாங்கினது" 
 
சாய்வு நாற்காலியில் அமர்ந்து பழைய நினைவுகளில் மூழ்கியிருந்த கோதண்டம் ரவியின் குரலில் கலைந்து நிமிர்ந்தார்.
 
நீல நிற சட்டைக்கு  கருநீல பேன்ட் அணிந்து சட்டையில் பாக்கெட்
ஓரத்தில் ஃபாஸ்ட் பேக்கர்ஸ் அன்ட் மூவர்ஸ் என்ற எழுத்துக்களோடு குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தனர் ஆட்கள்.ரவி ஏகத்துக்கும் விரட்டிக் கொண்டிருந்தான்.
 
"அதை இரண்டு பேரா தூக்கறீங்க?.போதாது.நாலு ஆட்களா தூக்குங்க.
வெயிட் தாங்காம விட்டுட்டா என்னாறது? அது ஜெர்மன்ல வாங்கினது.
நல்ல கலை நயத்தோட செஞ்ச டைனிங்  டேபிள்.ஜாக்கிரதை"
 
கோதண்டம் பெருமூச்சோடு தன் அறைக்கு சென்று அந்த கண்ணாடியை
மீண்டும் எடுத்துப் பார்த்தார்.கனகத்தின் நினைவுகள் அலை மோதின.
கனகத்தின் தாத்தா தன் பெண்ணுக்கு அளித்த கல்யாண சீர்தான் இந்தக்
கண்ணாடி.அதன் பின் கனகத்தின் தாய் அவளுக்கு இதை சீதனமாக
தந்து விட என்பது ஆண்டுகளைத் தாண்டி ரசமிழக்காது புதுப் பொலிவுடன் விளங்குகிற கண்ணாடி.இதில்தான்... இதில்தான் கனகம் முகம் பார்த்து
வட்ட வடிவமாய் அளந்தெடுத்தாற் போல பளிச்சென சிவந்த குங்குமம் இட்டுக் கொள்வாள்.அவள் உதடு சிவப்பா குங்குமம் சிவப்பா என கண்ணாடிக்கு குழப்பமே ஏற்பட்டிருக்கும்.
 
கனகத்தின் ஞாபகார்த்தமாய் அவள் காலத்திற்குப் பின்னும் கோதண்டம்
இதை வைத்திருக்கிறார்.இன்னமும் இதில்தான் முகம் பார்ப்பார்.இத்தனை வருடங்களில் இந்தக் கண்ணாடி எத்தனை முகங்களைப் பார்த்து விட்டது.ஆனாலும் ரசமிழக்காது பொலிவாய் உள்ளது.ஆச்சரியத்துடனும்
வருத்தத்துடனும் கண்ணாடியைக் கையில் எடுத்தார்.அது கலங்கிய கண்களுடன் நின்ற கோதண்டத்தை பிரதிபலித்தது.
 
"ஹாய்! கிராண்ட்பா! ஹவ் ஆர் யூ?"
 
"ஓ! துளசியா? வா வா! எப்ப வந்த அமெரிக்காலேருந்து?"
 
"ஜஸ்ட் நௌ கிராண்ட்பா! வந்ததுமே உங்களை பாக்காத்தான் ஓடி வந்தேன்.அதுக்குள்ளே வீடு காலி பண்ற வேலையெல்லாம் ஆரம்பிச்சாச்சா? வெரிகுட்.அப்பாடி!இனி நாம எல்லோரும் ஒரே வீட்ல சந்தோஷமா இருக்கப் போறோம்.இத்தனை நாள் நீங்க இங்கயும் நாங்க அமெரிக்காலயும்னு ஒரே போர்.நல்லவேளை,இனி இன்டியாலையே செட்டில் ஆயிடலாம்னு அப்பா முடிவு பண்ணிட்டார்.இல்லேன்னா உங்க கூட இருக்க சான்ஸ் கிடைச்சிருக்காது.ஆமா! அதென்ன கையில?"
 
"இதுவா? இது உங்க பாட்டியோட கண்ணாடிம்மா"
 
"ஓ! அதான் உங்க கண்ணெல்லாம் கலங்கிருக்கா? கிராண்ட்பா! ப்ளீஸ்
ரிலாக்ஸ் பண்ணுங்க.அதை இப்படி கொடுங்க"
 
"அதெல்லாம் ஒன்னுமில்லடா.இந்தா பிடி"
 
"ஹௌ நைஸ்.கிராண்ட்பா! ப்ளீஸ் இதை நான் வச்சுக்கட்டுமா?"
 
"இங்க என்ன பண்ற துளசி? அதென்ன கையில?" கேட்டுக் கொண்டே வந்தான் ரவி.
 
"டாட்! இங்க பாருங்க கிராண்ட்மாவோட கண்ணாடி.சூப்பரா இருக்கு இல்ல?"
 
"இதை  நேத்தே டிஸ்போஸ் பண்ணுங்க,பழசு  எதுவும் கொண்டு
வர வேண்டாம்.புது வீட்டுக்கு தகுந்தாப்பல வேற வச்சுக்கலாம்னு நான்
சொன்னேனே.நீங்க இன்னுமா தூக்கிப் போடாம வச்சுருக்கீங்க?'  என்று
கோபமாகக் கத்தினான் ரவி.
 
கோதண்டத்தின் சுருங்கிப் போன முகம் பார்த்த துளசி நிலைமையைப் புரிந்து கொண்டாள்.
 
"டாட்! இதை கிராண்ட்பா வச்சுக்கறதால உங்களுக்கு என்ன கஷ்டம்?.
இன்ஃபாக்ட் இதை எனக்கு கொடுக்க முடியுமான்னு நானே கிராண்ட்பா கிட்ட கேட்டுக்கிட்டிருந்தேன்.அதுக்குள்ளே நீங்க வந்துட்டீங்க"
 
"என்ன உளர்ற? உனக்கில்லாத புது வகை கண்ணாடியா?இது எதுக்கு
உனக்கு? வீட்டை நல்லா மாடர்னா கட்டிட்டு அதுல இப்பிடி பழசைப்
போட்டு அடைப்பானேன்?"
 
"உங்களுக்குத்தான் டாட் அப்படி தோணுது.எனக்கு அப்படி தோணலை.
இதுல கிரான்ட்பாக்கு ஏதாவது செண்டிமெண்ட்ஸ் இருக்கலாம்.
உங்களுக்கு அம்மா பிரசன்ட் பண்ணின வாட்சைத்தான இன்னமும்   உப்யோகிக்கறிங்க? வேற எத்தனையோ புது மாடல் வந்தாச்சே?"
 
"அது...... "
 
"விடு துளசிம்மா!உங்க பாட்டியே போய் சேர்ந்தாச்சு.இப்ப என்ன?"
விரக்தியாய் குரல் கம்ம சொன்னார் கோதண்டம்.
 
"வருத்தமில்லாம இதை உங்களால சொல்ல முடியுமா கிராண்ட்பா?
டாட்!ப்ளீஸ்! கிராண்ட்பாவோட ஃபீலிங்சை புரிஞ்சுக்க ட்ரை பண்ணுங்க.
உங்க பொருட்கள்ல வெளிநாட்டுல வாங்கின பெருமை இருக்கலாம்.பட்
அதுல ஒரு சந்தோஷ உணர்விருக்காது.இது அப்படி இல்லை.நம்ம பரம்பரை மூலத்தை நமக்கு உணர்த்தற  சந்தோஷம் இதுல உண்டு.
இதுல என்னிக்குமே கிராண்ட்மாவோட ஒரு டச் இருந்துகிட்டே இருக்கும்.அது உங்க பொருட்கள்ல கிடைக்காது டாட்"
 
ஆணித்தரமாய் உணர்த்தும் பதினாறு வயதுப் பெண்ணை ரவி
ஆச்சரியமாய் பார்த்துக் கொண்டிருந்தான்.
 
கோதண்டமோ,  ரசமிழக்காத  மனித  முகங்களும்  மனிதம்  இழக்காத  மனங்களும்  இன்னும் இருக்கிற ஆச்சரியத்தில் பேத்தியைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
 
"என்ன டாட்!ஒன்னும் சொல்ல மாட்டேங்கறீங்க?"
 
"ஓகே டா! உன் விருப்பப்படியும்  அப்பா விருப்பப்படியும் இதை கொண்டு போகலாம்.இப்ப சந்தோஷம்தான உங்க ரெண்டு பேருக்கும்?"
 
"என்ன கிராண்ட்பா!இப்ப உங்களுக்கு சந்தோஷம்தான?"
 
"ரொம்ப சந்தோஷம்டா,ஆனா இப்படி கிரான்ட்பான்னு கூப்பிடாம தாத்தான்னு 
அழகா தமிழ்ல கூப்பிட்டா இன்னும் சந்தோஷமா இருக்கும் எனக்கு" 
 
சரி  தாத்தா! இனிமே உங்களை தாத்தான்னே கூப்பிடறேன்,ஓக்கேவா
தாத்தா? இப்ப உங்களுக்கு ரொம்ப சந்தோஷம்தான தாத்தா?"
 
"டபுள் சந்தோஷமாக்கும்"
 
அடிக்கொரு தாத்தா போடும் பேத்தியை உரத்த சிரிப்புடன் கோதண்டம்
பார்க்க, பேத்தியையும் சிரிப்பு தொற்றிக் கொள்ள அவர்களின் சிரிப்பை
கோதண்டத்தின் மடியிலிருந்த கண்ணாடி பிரதிபலித்துக் கொண்டிருந்தது.

32 comments:

Chitra said...

"ரொம்ப சந்தோஷம்டா,ஆனா இப்படி கிரான்ட்பான்னு கூப்பிடாம தாத்தான்னு
அழகா தமிழ்ல கூப்பிட்டா இன்னும் சந்தோஷமா இருக்கும் எனக்கு"


......உறவு முறைகளை தமிழில் அழைப்பதே ஒரு சந்தோஷம்தான்.

KParthasarathi said...

மனதை தொட்டது. அழகாக எழுதியுள்ளீர்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

ரொம்ப ரொம்ப நல்ல ரஸமான படைப்பு. வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

என்னை மிகவும் கவர்ந்த வரிகள்:

//அவள் உதடு சிவப்பா குங்குமம் சிவப்பா என கண்ணாடிக்கு குழப்பமே ஏற்பட்டிருக்கும்.

ரசமிழக்காத மனித முகங்களும் மனிதம் இழக்காத மனங்களும் இன்னும் இருக்கிற ஆச்சரியத்தில் பேத்தியைப் பார்த்துக் கொண்டிருந்தார்.//

//அவர்களின் சிரிப்பை கோதண்டத்தின் மடியிலிருந்த கண்ணாடி பிரதிபலித்துக் கொண்டிருந்தது.//

Yaathoramani.blogspot.com said...

மிக அருமை
ரத்தினச் சுருக்கமான
வசன கவிதைக்குரிய
இறுக்கத்தைக் கொண்ட
அழகிய சிறுகதை
தொடர வாழ்த்துக்கள்

எல் கே said...

இப்படிதான் பலரும் தங்கள் பெற்றோரை புரிந்து கொள்வதில்லை

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
முதியவர்களின் உணர்ச்சிக்கு மதிப்பு கொடுத்திருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

//ரசமிழக்காத மனித முகங்களும் மனிதம் இழக்காத மனங்களும் இன்னும் இருக்கிற ஆச்சரியத்தில் // நல்ல வரிகள் ராஜி. வாழ்த்துக்கள்.

Yaathoramani.blogspot.com said...
This comment has been removed by the author.
சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

உணர்வுப் பூர்வமான சம்பாஷணைகளோடு கூடிய நிறைவான கதை.

middleclassmadhavi said...

அழகிய கவிதை படித்த மாதிரி இருந்தது ரஸமான கதை!

RVS said...

"நாங் கூட பழசுதான்... என்னையும் கூட தூக்கி வெளியில போட்டுடுங்களேன்! "
இந்த மாதிரி ஒரு வசனம் அந்த தாத்தா கையில கண்ணாடியை வச்சுக்கிட்டு பேசியிருக்கனும். ரசம் இன்னும் வசூல் அள்ளியிருக்கும். இப்பவும் நல்லாத்தான் இருக்கு.
சொந்த ஊர்ல இன்டர்நெட் இருக்கா? ஆச்சர்யமா இருக்கு. ;-))

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கதை ராஜி. மற்றவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாத வரையில் எத்தனை பணம், சொத்து இருந்து பலனில்லை என்பதை அழகாய் புரிய வைக்கும்படி இருந்தது உங்கள் கதை. பகிர்வுக்கு நன்றி.

MANO நாஞ்சில் மனோ said...

//ரொம்ப சந்தோஷம்டா,ஆனா இப்படி கிரான்ட்பான்னு கூப்பிடாம தாத்தான்னு
அழகா தமிழ்ல கூப்பிட்டா இன்னும் சந்தோஷமா இருக்கும் எனக்கு"//

தமிழ் அழகு எங்கும்....

ஆச்சி ஸ்ரீதர் said...

எளிமையா ஆரம்பித்து அழகா முடித்துவிடீர்கள்

சௌந்தர் said...

உங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்தது இருக்கிறேன்

http://blogintamil.blogspot.com/2011/04/blog-post_08.html

r.v.saravanan said...

முதியவர்களின் உணர்வுக்கு மரியாதை தரும் சிறுகதை வாழ்த்துக்கள்

ஆச்சி ஸ்ரீதர் said...

வலச்சரத்தில் இடம்பெற்றுள்ளதற்கு வாழ்த்துகள்,தங்களை அறிமுகம் செய்தவருக்கும் நன்றிங்க.

ராஜ நடராஜன் said...

புதுசா ரசம் ரெசிபி கிடைக்குமோன்னு ஓடி வந்தேன்.

இது மறந்து போன கண்ணாடி ரசம்!

சி.பி.செந்தில்குமார் said...

வலைச்சர நாயகி ராஜிக்கு வாழ்த்துக்கள்...நல்ல பதிவுகளை அறிமுகப்படுத்துங்கள்னு பின்னூட்டம் எல்லாம் வருதே.. இனி ராஜியை கைல பிடிக்க முடியாது.. ஹா ஹா ( ஜஸ்ட் ஜோக்)

சி.பி.செந்தில்குமார் said...

பதிவுக்கான டைட்டில் ரசம் என வைத்ததால் புதிதாக பார்ப்பவர்கள் சமையல் குறிப்போ என நினைக்கக்கூடும்.. எனவே இனி டைட்டில் வைக்கும்போது.. கவனம்...

சி.பி.செந்தில்குமார் said...

>>இந்தக் கண்ணாடி எத்தனை முகங்களைப் பார்த்து விட்டது.ஆனாலும் ரசமிழக்காது பொலிவாய் உள்ளது.ஆச்சரியத்துடனும்

ராஜி பி எஸ் சி சைக்காலஜி போல...

சாகம்பரி said...

இதைத்தான் நான் எதிர்பார்த்தேன். அடுத்தவரை தன் நிலையில் வைத்துப் புரிந்து கொள்வது பக்குவப்பட்ட மனதின் வெளிப்பாடு. பிறக்கும்போது பக்குவப்பட்ட மனதோடுதான் பிறந்திருப்போம். என்றுதான் தோன்றுகிறது. அதுதான் பிள்ளை மனம். வளர வளர அரைவேக்காடாகி, கடைசியில் மறுபடியும் வெந்து பக்குவமடைவோம்போல. நீண்ட நாள் கேள்விக்கு விடையாக உங்கள் கதை ராஜி. கதை சொல்லுவதில் ராஜியை குறை சொல்லவே முடியாது. அருமை

மாலதி said...

இடுகைக்கு பாராட்டுகள். தேவையான செய்திகள் இடுகையை தொடர்க

வை.கோபாலகிருஷ்ணன் said...

வலைச்சரத்தில் அறிமுகம் ஆகியுள்ள தங்களுக்கு என் அன்பான பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.

ADHI VENKAT said...

உணர்வுப்பூர்வமான கதை. நல்ல நடை ராஜி. வலைச்சரத்தில் அறிமுகமானதற்கு வாழ்த்துக்கள்.

மனோ சாமிநாதன் said...

அன்பு ராஜி!

வழக்கம்போல் மன உண‌ர்வுகளை அன்பென்னும் மெல்லிய இழையோட அழகாய் எழுதியிருக்கிறீர்கள்! அருமை!

உங்க‌ளை தொ‌டர் ப‌திவிற்கு அழைத்துள்ளேன்.
விப‌ர‌ங்க‌ள் என் வ‌லைப்பூவில்.
www.muthusidharal.blogspot.com

குறையொன்றுமில்லை. said...

ரொம்ப அழகான கதை பெரியவர்களின் உணர்வுகளை
இந்தக்கால தலை முறைகலும் உனர்ந்து தான் இருக்கிரார்கள்.

பிரபாஷ்கரன் said...

மனதை புரிந்து கொள்ள மனிதர்களுக்கு தெரிய வேண்டும் என்பதை நன்கு வெளிபடுதிய விதம அருமை

raji said...

பின்னூட்டமளித்த அனைவருக்கும் எனது நன்றிகள்

ரிஷபன் said...

ரசமிழக்காத மனித முகங்களும் மனிதம் இழக்காத மனங்களும் இன்னும் இருக்கிற ஆச்சரியத்தில் பேத்தியைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
வரியை ரசித்தேன்
ரசமான பதிவு....

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Heart felt story... too good... I don't want to lessen the feel by adding any other words...:))

சாந்தி மாரியப்பன் said...

கதை ரொம்ப நல்லாருக்குப்பா..

Post a Comment