திண்னென்ற தலையணையாய்
தந்தை மடி
மெத்தென்ற பஞ்சணையாய்
தாயின் மடி
சூரியக் கற்றைகளாய்
தந்தைக் கரம்
சந்திரக் கிரணங்களாய்
தாயின் கரம்
தந்தை மடி
மெத்தென்ற பஞ்சணையாய்
தாயின் மடி
சூரியக் கற்றைகளாய்
தந்தைக் கரம்
சந்திரக் கிரணங்களாய்
தாயின் கரம்
ஆகாய விரிவுகளாய்
தந்தை மனம்
பூமியின் தயவினதாய்
தாயின் மனம்
கடலலை ஆரவாரமாய்
தந்தை சிரிப்பு
மழை நீரின் இதமானாதாய்
தாயின் சிரிப்பு
ஆலமர விழுதுகளாய்
தந்தை நட்பு
அழகான மலர் மணமாய்
தாயின் நட்பு
வேரின் உறுதியாய்
தந்தை சொற்கள்
கனியின் சுவையாய்
தாயின் சொற்கள்
எந்தையும் தாயும்
மகிழ்ந்து குலவி
வளர்த்ததும் இவ்வுயிரே
24 comments:
தந்தையையும் தாயையும் இணைத்துச் சென்றவிதமும்
அந்த இணைப்போடு இணைந்து வளரும்
உயிரைச் சொன்னவிதமும்
அருமையாகவும் புதுமையாகவும் இருந்ததது
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்
பாரதியின் படைப்பில் உள்ளதைப்போல
குலாவ(வி) என இருந்தால் இன்னும்
சிறப்பாக இருக்குமோ
Vadai, bajji etc.?
Differences complimenting each other - azhagaana kavithai!
அருமை.
இயற்கையை தாய் தந்தையோடு ஒப்பிடும் அந்த அழகு நன்றாகவே இருக்கிறது..!
நன்றி நினைவூட்டலுக்கு
சூப்பெர்ப்! எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி... அற்புதமான சொற்றொடர்கள். என்ன லீவு முடிஞ்சு வந்தாச்சா? ;-))
மிக அழகாக தாயை, தந்தையை, நேசத்தை கவிதையாக்கி உள்ளீர்கள்.
வெல்கம் பேக் டூ பிளாக் வோர்ல்டு
இன்றே பிறந்த மழலையின் எண்ணங்கள் தங்களின் எழுத்துக்களில் புதிதாய் பிறந்து பூத்துக்குலுங்குகின்றன. வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.
அம்மா அப்பாவுக்கு சமர்ப்பணக்கவிதை?
very nice. come back from the holidays?
வரிகளின் சேர்க்கை அருமை
ஆணாகவும் பெண்ணாகவும் தந்தையையும் தாயையும் பார்த்த பார்வையும் வார்த்தைகளும் அழகு.
மிக அருமையான பாசத்தை விதைக்கும் கவிதை.
ரொம்ப அழகா இருக்கு.
ஆஹா.. என்ன அழகாய் வார்த்தைகள் அப்படியே குண்டு மல்லிகைச் சரமாய்.. எனக்கு உடனே என் அம்மா ஞாபகம் வேறு வந்து விட்டது.. ஒரு பக்கம் கவிதை அழகில் கிறங்க.. இன்னொரு புறம் லேசான கண்ணீரும் அம்மா நினைப்பில் கலங்க.. அருமையான வாசிப்பு
வருக..வருக..
இயற்கையை தாய் தந்தையோடு ஒப்பிடும் வார்த்தைகள்
அருமை
அருமை :)
நல்ல கவிதை. தந்தையுடனும் தாயுடனும் கைக் கோர்த்து செல்வது போல இருந்தது.... பகிர்வுக்கு நன்றி.
விடுமுறை முடிந்து வந்தாயிற்றா?
நான் ஆராரோ என்று பாராட்ட இன்னும் யார் யாரோ வந்து தாலாட்ட. அன்னை மட்டுமா புகழ முடியும். குழந்தையும்தான். இனிய இலக்கியம்.
@ALL
thanks for the comments
@Rvs
@Vidya subramaniyam
@Venkat Nagaraj
leave mudiyalai.naduvula kidaicha
gap la Rangamaniyoda laptop la type
pannina posst idhu
உயிரின் இனிமைக்கு உருகொடுத்த கவிதைக்குப் பாராட்டுகள்.
Post a Comment