Tuesday, May 3, 2011

மாறாத நிமிடங்கள்



உயிரின் அருமை

உணராத நிமிடங்கள்-

காதோரம் கடித்த எறும்பு

கசக்கப் பட்டு விடுகிறது

ஒரு நிமிட வலிக்கு

ஒரு உயிர் பலியாகிறது

தண்டனை இல்லை

தவிப்பு இல்லை

குற்றம் புரிந்ததொரு

குறுகுறுப்பும் இல்லை

சிறிய உயிர் பற்றிய

சிந்தனை இல்லை

மனித உயிர் எனில் பயமுண்டு

மற்ற உயிர் எனினும்

மிருக வதை தடுப்புண்டு

தாவர அழிவிற்கும்

தடை உண்டு

எறும்பே நீ மட்டும்

என்ன பாவம் செய்தாயோ?

வக்காலத்திற்கும்  வழக்கிற்கும்

விதியற்றுப் போனாயே?

உயிரின் அருமை

உணராத நிமிடங்கள்-

மற்றுமொரு எறும்பு

மற்றுமொரு அழிவு  

மாறவில்லை இன்னும்

27 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

சிற்றுயிராகிய எறுப்பின் மீது
இரக்கத்துடன் எழுதியுள்ள
கவிதை குறும்புடன் இருப்பினும்,
யோசிக்கவே வைக்கிறது.

பாராட்டுக்கள்.

[”அட என் ராசாவே ..... சிற்றெறும்பு என்னக்கடிக்குது” ன்னு இனி பாட்டு மட்டுமே பாடுவேன், எறும்பைக்கொல்ல மாட்டேன் என்று உங்களுக்கு உறுதி கூறுகிறேன் ]

வை.கோபாலகிருஷ்ணன் said...

Voted 2 to 3 in INDLI &
Tamilmanam 0/0 to 1/1
vgk

Yaathoramani.blogspot.com said...

அருமை
ஆனாலும் காதோரம் கடித்த எறும்பைத்தான்
கசக்கியிருக்கிறோம்
அது கூட எனக்கு பாவமாகப் படவில்லை
தவறுக்கு தண்டனை என்பது மாதிரிப் போகிறது
ஏது பாவமும் செய்யாத அந்த பிள்ளையார் எறும்புக்கு
தீங்கு செய்கையில்தான் மனதுக்கு கஷ்டமாக உள்ளது
ஒருவேளை அதைத்தான் சொல்ல முயன்று இருக்கிறீர்களோ?
நல்ல படைப்பு
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

ஒரு வேளை காதோரம் ஊறிய எறும்பு என
இருந்தால்சரியாக இருக்குமோ?
ஓட்டையும் பதிவு செய்துவிட்டேன்
இதை தேவையெனில் மட்டும் பின்னூட்டமாக சேர்க்கலாம்

ராமலக்ஷ்மி said...

மிக நன்று.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//காதோரம் கடித்த எறும்பு
கசக்கப் பட்டு விடுகிறது//

கசக்காமல் விட்டால், காது துவாரத்திற்குள் புகுந்து, படாதபாடு படுத்திவிடுமோ, என்ற முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக இருக்குமோ?

பாலா said...

இதற்கு பெயர்தான் ஜீவகாருண்யமா?

வெங்கட் நாகராஜ் said...

நிஜம்தான். கடித்த எறும்பை, கொசுவை அனிச்சையாக உடனே அடித்துக் கொல்வதில் நம்மில் எவருக்குமே வருத்தம் வருவதில்லை. இதை அழகிய கவிதையாக்கிய உங்களுக்கு பரிசாக என்ன தரலாம்? நற் கவிதைக்கு பாராட்டுகள்...

Nagasubramanian said...

இந்த கவிதை கொசுவுக்கும் பொருந்தும் அன்றோ?

வை.கோபாலகிருஷ்ணன் said...

//Nagasubramanian said...
இந்த கவிதை கொசுவுக்கும் பொருந்தும் அன்றோ?//

சிங்கம், புலி, கரடி போன்ற கொடிய விலங்குகளைப் பிடிக்க மனிதன் வலை விரிக்கிறான் (அல்லது ஒரு இரும்புக் கூண்டு வைக்கிறான்).

கேவலம் இந்த மிகச்சிறிய கொசுவுக்கு மட்டும் மனிதன் பயந்து நடுங்கிக்கொண்டு தனக்கு தானே வலைவிரித்துக் கொள்கிறான்.

நகைச்சுவை மேடைப்பேச்சாளர் திரு. அறிவொளி அவர்கள் சொல்லிக்கேட்டது.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

வள்ளலாரின் மேன்மை உங்கள் வரிகளில். சிந்திக்காமல் செய்யும் மாபெரும் பாதகம்.
எத்தனையோ வலிகளைக் கடந்து செல்லும் நமக்கு எறும்பின் கடிதான் சகிக்கமுடியாது போகிறது.அதன் எதிர்ப்பின்மை நமக்கு சாதகமாகிவிடுகிறது.

யோசிக்கத் தூண்டும் பதிவு ராஜி.

வை.கோபாலகிருஷ்ணன் said...

எறும்பு ஊர கல் தேயுமாம்!

இந்தத்தங்களின் எறும்புக்கவிதை
கல்மனதையும் கரைத்திடுமோ!

சாகம்பரி said...

//வக்காலத்திற்கும் வழக்கிற்கும்
விதியற்றுப் போனாயே?//
ராஜி, எறும்பை பற்றி மட்டும்தானா. எனக்கென்னவோ உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் நடக்கின்ற வாழ்வியல் கவிதையாக தோன்றுகிறது.

இராஜராஜேஸ்வரி said...

சிற்றுயிர்க்கும் இரங்கும் தங்கள் கவிதைகுப் பாராட்டுக்கள்.
வாடிய ப்யிரைக் கண்டு வாடிய வள்ளாலார் போல..

r.v.saravanan said...

எறும்புக்கவிதை அருமை

எல் கே said...

யோசிக்க வைக்கிறது ராஜி ..

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Good one.. யோசிக்க வைக்கிறது

ADHI VENKAT said...

எறும்பை இனி பார்த்தால் உங்கள் கவிதை தான் ஞாபகம் வரும். பாராட்டுகள்.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

உங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்... நேரம் உள்ள போது பாருங்கள்... நன்றி... சுட்டி இதோ... http://blogintamil.blogspot.com/2011/05/blog-post_06.html

வை.கோபாலகிருஷ்ணன் said...

வலைச்சரத்தில் அறிமுகம், [அதுவும் ஒரு அப்பாவியின் கனவில் ஆப்பு வைத்து] பாராட்டுக்கள்.

ரிஷபன் said...

ம்ம்.. வார்த்தைகளால் பிறரை வதைக்கும் மாந்தர் படித்துத் திருந்தினால் சரி..

a said...

எறும்பிற்கொரு கவுரவம்....

Unknown said...

உண்மையில் பாவம்தான் இந்த எறும்புகளும்,கொசுக்களும்.
கவிதை நல்லா இருக்குங்க.

vidivelli said...

நல்ல கவிதை........
அசத்தியியிருக்கிறீங்க


நம்ம பக்கமும் உங்க கருத்தை எதிபார்க்கிறேன்.............

Arul Miku Kollang Kondan Ayyanar kovilL.- said...

சகோதரி கொசுவும் அதுபோல் தானே பாவம்.வடிய பயிராய் கண்டல் வாடினேன் என்று சொன்னார் வள்ளலார் .இன்றும் புத்த பிச்சுக்கள் நடக்கும் போது தங்கள் கால்களில் மிதிபட்டு சிறு உயிர்கள் இறந்து விடகூடாது என்பதற்காக மயில் தொகை வைத்து, செல்லும் பதையைய் பெருக்கிகொண்டேசெல்கிரர்கள் .வாயில் அதுபோல் துணி கட்டி இருகிறார்கள்.மனிதுயிருக்கே பாது காப்பு இல்லாதபோது எறும்புக்கு பாதுகாப்பு தேடும் தங்கள் உயர்ந்த மனசு தெரிகிறது வாழ்க வளமுடன்

குறையொன்றுமில்லை. said...

உங்களை வலைச்சரதில் அறிமுகபடுத்தியிருக்கேன்.
நேரம் கிடைக்கும் போது பார்க்கவும்.

http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_6777.html

நன்பேண்டா...! said...

எறும்பே நீ மட்டும்
பாவம்..?

Post a Comment