
படகுகள் காத்திருக்கின்றன
கரையோர கனவுகளை
கலைத்து விட்டு
பயணத்தை துவக்கு முன்
பாதை பற்றிய பயமேன்?
படகுகள் காத்திருக்கின்றன
கரை சேர்க்கும்
கடமையுடன்
அசைந்து அசைந்து உனை
அழைக்கையில் அச்சமேன்?
படகுகள் காத்திருக்கின்றன
ஒருவேளை உன் துயர் தீரலாம்
ஒருக்கால் உன் பாரம் குறையலாம்
ஏறிச் சென்றால் ஏற்றம் கிடைக்கலாம்
ஏனில்லை நம்பிக்கை, எதற்கிந்த தயக்கம்?
படகுகள் காத்திருக்கின்றன
உபயோகிக்க கற்றுக் கொள்
உதறி விட்டால்
உன் பயணம்தான் ரத்து.
மற்றபடி படகுகள்
மற்றொருவருக்காய் பயணிக்கும்
அதனால்
பயணித்துத்தான் பார்க்கலாமே!
18 comments:
//படகுகள் காத்திருக்கின்றன
உபயோகிக்க கற்றுக் கொள்
உதறி விட்டால்
உன் பயணம்தான் ரத்து.
மற்றபடி படகுகள்
மற்றொருவருக்காய் பயணிக்கும்//
ஆம் அது தான் உண்மை. வாய்ப்புகள் கிடைக்கும் போது நாம் தான் அவற்றை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இல்லாவிட்டால் நஷ்டம் நமக்குத்தான்.
படகு போலவே தான் காலமும். யாருக்காகவும் அது காத்திருப்பதில்லை.
நல்ல அழகான வாழ்வியல் தத்துவத்தை விளக்கும் கவிதை. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
//ஒருவேளை உன் துயர் தீரலாம்
ஒருக்கால் உன் பாரம் குறையலாம்
ஏறிச் சென்றால் ஏற்றம் கிடைக்கலாம்//
தன்னம்பிக்கையளிக்கும் தலைசிறந்த வரிகள். ;)
படகுத் துறை என்றால் நிறையப் படகுகள் தாம் கண்ணுக்குத் தட்டுப்படுகின்றன. பயணத்திற்காக அவற்றில் பல காத்திருக்கவும் செய்கின்றன. ஒவ்வொரு படகும் ஒவ்வொரு மாதிரி என்றில்லாவிட்டாலும், ஒவ்வொரு படகும் ஒவ்வொரு திசைக்கு; வெவ்வேறு இடத்திற்கு. நம் திசை எதுவென்று தீர்மானிப்பதே எந்தப் படகில் சவாரி என்பதைத் தீர்மானிக்கிறது. அந்த தீர்மானிப்பு இல்லாத பயணம் எங்கெங்கோ இழுத்துச் சென்று அலைக்கழித்து விடலாம். அதனால் தான் எந்தப் படகு என்று தீர்மானிப்பதும் முக்கியமாகிறது.
அந்தத் தீர்மானம் மட்டும் நிச்சயம் ஆகிவிட்டால்,
பாதையும் தெரிந்து பயணமும் சுலபமாகிவிடும்.
//
படகுகள் காத்திருக்கின்றன/
repeat aagama irunthiruntha nalla irunthirukkum
அருமை அருமை
எட்ட நின்று ஏன் ஏங்கியே சாகவேண்டும் ?
முயற்சிக்கு வித்திடும் அருமையான கவிதை
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
நன்று.
படகுகள் காத்திருக்கின்றன
உபயோகிக்க கற்றுக் கொள்
உதறி விட்டால்
உன் பயணம்தான் ரத்து.
மற்றபடி படகுகள்
மற்றொருவருக்காய் பயணிக்கும்
அதனால்
பயணித்துத்தான் பார்க்கலாமே!
பயணிக்காவிட்டால் நஷ்டமொன்றும்
படகுக்கில்லை..
பயணத்திற்கு வித்திட்ட
பயனுள்ள பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
நல்ல கவிதை....
முயற்சி செய்யாமல் எதுவுமே நடந்து விடப்போவதில்லை.... முயற்சி செய்யாது தோல்வியை நினைத்து மருகுவதை விட முயற்சி செய்து தோற்பதே மேல்....
நல்ல கவிதைப் பகிர்வுக்கு நன்றி.
நல்ல அழகான வாழ்வியல் தத்துவத்தை விளக்கும் கவிதை. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
ஆம், பயணித்துத்தான் பார்க்கலாமே! என்று நினைக்க வைக்கிற, ஏன், கிளம்ப வைக்கிற கவிதை! Superb!
என்னுடைய பதிவில் புதிதாக ஆரம்பித்திருக்கிற தொடர் இது.
'அன்புடன் ஒரு நிமிடம்'
முதல் பகுதி.
'எண்ணிச் சிந்திடுவோம்...'
http://kbjana.blogspot.com/2012/03/blog-post.html
அருமையாக இருக்கு கவிதை.
வாய்ப்பு கிடைக்கும் போது பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை தெளிவாக சொல்கிறது.
Opportunity knocks but once...!!
Nalla kavithai. Vaazhthukkal.
மிக அருமை. வாய்ப்புகளை நாம்தான் தவறவிடுகிறோம்
மிக அருமை ராஜி.. பயணித்துப் பார்க்கும் ஆவல் வந்தது.:)
//படகுகள் காத்திருக்கின்றன
உபயோகிக்க கற்றுக் கொள்
உதறி விட்டால்
உன் பயணம்தான் ரத்து.//
தயக்கத்தாலேயே பல செயல்களைத் துவக்காமல் விட்டுவிடுகிறோம். ஒருமுறை முயன்று பார்ப்பதே சிறந்தது.
அருமையான கவிதை.
எல்.கே, குறிப்பிட்டிருப்பது போல இடையிடையே இருக்கும்//படகுகள் காத்திருக்கின்றன// வரியை தவிர்த்திருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
கரை சேர்க்கும்
கடமையுடன்
அசைந்து அசைந்து உனை
அழைக்கையில் அச்சமேன்?
மிக அருமை!
அருமையா வந்திருக்கு கவிதை...
கருத்துக்களும் யோசனைகளும் தந்து பின்னூட்டம் அளித்து ஊக்குவித்த அனைவருக்கும் எனது நன்றிகள்
Post a Comment