கணக்கெழுத்தாளனில்
கலைந்தது
ஓவியனின் கனவுகள்
ஓடக்காரனில்
ஒதுங்கியது
பாடகனின் கனவுகள்
பலசரக்கு கடை பையனில்
பதுங்கியது
சிற்பியின் கனவுகள்
சீனியர் மேனேஜரில்
சிதைந்தது
கவிஞனின் கனவுகள்
கம்ப்யூட்டர் எஞ்சினியரிங்கில்
கசங்கியது
நாட்டியக் கனவுகள்
நடுவீதி கடைக்காரியில்
நலிந்தது
கிரிக்கெட்காரக் கனவுகள்
கிளார்க் வேலையில்
கிழிந்தது
இசைக்கருவிக் கனவுகள்
இஸ்திரிக்காரனில்
இறந்தது
வயிற்றுப் பிழைப்புக்கென்றும்
வாழ்க்கைத் தேவைக்கென்றும்,-
விழிப்பில் கண்ட கனவுகள்
உறங்கிப் போன அவலமென்ன?

17 comments:
மிகவும் டச்சிங் ஆக உள்ளது மேடம், இந்த உங்கள் கவிதை.
அதுவும் அந்தக் கடைசி நாலு வரிகளில் உள்ள சோகம் கசப்பாகவே இருப்பினும், தங்களின் தேர்ந்தெடுத்த அருமையான சொற்களால் அவைகள் எனக்கு அடிக்கரும்பாக இனிக்குது.
என் மனமார்ந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.
kavithai arumai. விழிப்பில் கண்ட கனவுகள்
உறங்கிப் போன அவலமென்ன?
super.
வயிற்றுப் பிழைப்புக்கென்றும்
வாழ்க்கைத் தேவைக்கென்றும்
விழிப்பில் கண்ட கனவுகள்
உறங்கிப் போன அவலமென்ன?
......Reality Bites!!!!! :-(
நல்ல தலைப்பு.உறங்கிப்போன கனவுகள்தானே
ஓய்ந்து போனவைகள் இல்லையே
உறுதியாய் ஒரு நாள் விழிக்கும் என்ற
எண்ணத்தில்தான் அந்த தலைப்பிட்டிருப்பீர்கள்
என நினைக்கிறேன்நல்ல பதிவு.தொடர வாழ்த்துக்கள்
யதார்த்தமான கவிதை ..ஆனால் இப்படி வந்தால் தான் அர்த்தம் சரியாக வரும் என்று நினைக்கிறன்
"விழிப்பில் கண்ட கனவுகள்"
வயிற்றுப் பிழைப்புக்கென்றும்
வாழ்க்கைத் தேவைக்கென்றும்
உறங்கிப் போன அவலமென்ன?
நிதர்சனம் என்று ஒன்று உள்ளதே ???
சூப்பர்
மனதைத் தொட்டது உங்களது இக்கவிதை. கனவுகளே உறங்கிப்போனது - நிதர்சனம்...
கனவுகளே உறங்கிப் போனது! எதார்த்தமான கவிதை.
யதார்த்தம் கலந்த வரிகளுடன் கவிதை சூப்பர்...
@வை கோபாலகிருஷ்ணன்
நன்றி
@மதுரை சரவணன்
நன்றி
@சித்ரா
யெஸ் சித்ரா
@ரமணி
உங்களின் இந்த பின்னூட்டம்
என்னை இன்னொரு பதிவு போட வைத்துள்ளது
நன்றி
@சுதர்சன்
கருத்துக்கு நன்றி
@எல் கே
ஆமாம் எல் கே சார்
@கோபி ராமமூர்த்தி
நன்றி
@வெங்கட் நாகராஜ்
நன்றி
@கோவை2தில்லி
நன்றி
@மாணவன்
நன்றி
//கதாசிரியக் கனவுகள்
கணக்கெழுத்தாளனில்
கலைந்தது//
என்னை வச்சி காமடி, கீமடி பண்ணலையே??
நல்ல கவிதை, அதை முடித்தவிதம் அருமை.
//வயிற்றுப் பிழைப்புக்கென்றும்
வாழ்க்கைத் தேவைக்கென்றும்,-
விழிப்பில் கண்ட கனவுகள்
உறங்கிப் போன அவலமென்ன//
• ஒவ்வொரு வார்த்தைகளும் அருமை,உண்மை.
அன்புள்ள சகோதரி ராஜிக்கு
நான் எப்போதுமே ஒப்புக்காக பின்னூட்டம் இடுவதில்லை
நன்றாக உள்ளதற்கு பாராட்டி பின்னூட்டம் இடுவேன்
இல்லையெனில் பின்னூட்டம் இடாது இருப்பேன்
உண்மையில் தங்களைப் பாராட்டி 9பேர் பின்னூட்டம்
இட்டு இருக்க ஒரு பின்னூட்டத்திற்கு நீங்கள்
இவ்வளவு மனச்சஞ்சலம் கொள்ளவேண்டியதில்லை
உங்கள் அடுத்த பதிவை ஆவலுடன் எதிபார்த்து
@வசந்தா நடேசன்
காமெடிக்குனு தனி பதிவா
போட்டுடவா?
கருத்துக்கு நன்றி
@திருமதி பி எஸ் ஸ்ரீதர்
நன்றி
@ரமணி
கருத்துக்கு நன்றி
அடுத்த பதிவு தயார்
>>>வயிற்றுப் பிழைப்புக்கென்றும்
வாழ்க்கைத் தேவைக்கென்றும்,-
விழிப்பில் கண்ட கனவுகள்
உறங்கிப் போன அவலமென்ன?
எல்லோரும் பணத்துக்காகவும், சர்வைவல்க்காகவும் தங்கள் விருப்பத்தை மறைத்து வேறு வழி இல்லாமல் ஒரு துறையில் வேலை செய்ய வேண்டிய கட்டாயம். நல்ல கவிதை
உங்களுக்கு சினிமா பார்க்கற பழக்கம் இல்லைன்னு நினைக்கறேன். சான்ஸ் கிடைச்சா அஜித்தின் முகவரி படம் பாருங்க. ஒரு படைப்பாளி எப்படி எல்லாம் அங்கீகாரத்துக்கு ஏங்கறான், அவன் கடைசியில் வாழ்க்கையில் தோற்கிறான் என்பதை நிதர்சனமாக சொன படம். இந்தக்கவிதையின் செல்லுலாயிடு சிற்பமாக அந்தப்படத்தை சொல்லலாம்
Post a Comment