Friday, February 25, 2011

நார் எடுப்போம்,போர் விடுப்போம்


                            
                         
                               Christmas Wreath with Golden Bow
                                   

வார்த்தைகளை வாட்களாய் உருவி

வீசுகின்ற பொழுதினிலே

சிரிப்புக் கேடயங்கள்

சிதறித்தான் போகின்றன


குருதி துளிக்கு பதிலாய்

கண்ணீர்த் துளிகள் விழ

மொட்டவிழ்ந்த மகிழ்வுகள்

கட்டவிழ்ந்த கோபத்தில் கரைகின்றது.


உணர்வுகளின் மோதல்களால்

உதிரவிருக்கும் உறவுகளை

உறுதியான நார் கொண்டு

உன்னதமான மாலை செய்வோம்.


அமைதியெனும் நார் எடுப்போம்- நாம்

அழகான உறவு  மாலை தொடுப்போம்.


நார் எடுப்போம் - நாம்

போர் விடுப்போம்.


சாடல்களும் தேடல்களும்

சொந்தங்களில் சகஜமன்றோ??!!

22 comments:

Vijay Periasamy said...

///சாடல்களும் தேடல்களும்

சொந்தங்களில் சகஜமன்றோ??!!
///
சூப்பர்ங்க !!

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமையாய் உள்ளது.
எனக்கு மிகவும் பிடித்த வரிகள்:

//உணர்வுகளின் மோதல்களால்
உதிரவிருக்கும் உறவுகளை
உறுதியான நார் கொண்டு
உன்னதமான மாலை செய்வோம்.//

உள்ளத்தில் வெல்லமாய்
உண்மையாய் இனிக்கிறது !

santhanakrishnan said...

இது .. இதுதான்
இப்பொழுது அனைவருக்கும் தேவை.

சி.பி.செந்தில்குமார் said...

>>>>சாடல்களும் தேடல்களும்

சொந்தங்களில் சகஜமன்றோ??!!

நுணுக்கமான வரிகள் ராஜி

middleclassmadhavi said...

பொருள் பொதிந்த கவிதை!

சக்தி கல்வி மையம் said...

பல உண்மைகள் சொல்லும் கவிதை அருமை அக்கா..

ராம்ஜி_யாஹூ said...

கவிஞர் ராஜி கலக்கல்

குறையொன்றுமில்லை. said...

ரொம்ப நல்லா இருக்குங்க.வாழ்த்துக்கள்.

R. Gopi said...

Very nice

r.v.saravanan said...

ரொம்ப நல்லா இருக்கு வாழ்த்துக்கள்.

தமிழ்வாசி பிரகாஷ் said...

வலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில்

ஆச்சி ஸ்ரீதர் said...

***************
****சபாஷ்*****
***************

RVS said...

கவிதாயினிக்கு வாழ்த்துக்கள்.. உலக ஷேமத்திற்காக எழுதியிருக்கீங்களா இல்ல இப்ப எதுக்காக இதை சொல்றீங்க.. ஆக மொத்தம் நல்லா இருக்கு.. ;-))))))))

Yaathoramani.blogspot.com said...

அருமை.

வெங்கட் நாகராஜ் said...

அர்த்தம் பொதிந்த கவிதை வரிகள். தற்போது மிகவும் தேவையான ஒன்று!!

எல் கே said...

வார்த்தைகளே பல சமயம் பல பிரச்சனைகள் உண்டாகக் காரணம். நாவடக்கம் தேவை

ADHI VENKAT said...

அர்த்தமுள்ள கவிதை. வாழ்த்துக்கள்.

Anonymous said...

வரிகள் வாளாக சுழல்கிறது.

இராஜராஜேஸ்வரி said...

சாடல்களும் தேடல்களும்

சொந்தங்களில் சகஜமன்றோ??!!
அனுபவம் நிறைந்த வரிகள். அருமை.

Chitra said...

சாடல்களும் தேடல்களும்

சொந்தங்களில் சகஜமன்றோ??!!


.....விட்டுகொடுத்தலும் சகிப்புத்தன்மையும் கொண்ட அன்புக்கண்ணால் உறவுகளை கான்பதின் அவசியத்தை அழகாக சொல்லி இருக்கீங்க. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லையே!

raji said...

பின்னூட்டம் அளித்த அனைவருக்கும் எனது நன்றிகள்

நம்பிக்கைபாண்டியன் said...

வார்த்தைகளை வாட்களாய் உருவி

வீசுகின்ற பொழுதினிலே

சிரிப்புக் கேடயங்கள்

சிதறித்தான் போகின்றன

ஆரம்பமே அருமை!
பிரச்சனைக்கு காரணத்தையும்(வார்த்தை) சொல்லி அதற்கு தீர்வையும்(அமைதி) சொல்லியிருக்கிறீர்கள்!

Post a Comment