ஊர் சுத்தி பாக்க போயிருந்த அலமேலு திரும்பி வந்தாச்சு .அவங்க
அட்டஹாசத்தையும் ஆரம்பிச்சாச்சு.இந்த தடவை அவங்க அட்டகாசங்கள்
என்னனு பாக்கலாம்.
அலமேலுவும் அவள் கணவர் அழகர்சாமியும்:
அழகர்: ஏன்மா! இது என்ன ஆபீசுக்கு போட்டுக்க இப்பிடி அழுக்கு
சட்டை எடுத்து வச்சுருக்க?
அலமேலு: நீங்கதானங்க நான் ஊருக்கு போறதுக்கு முத நாள் இந்த சட்டை
எடுத்து வச்சப்ப இந்த சட்டை எனக்கு 'சுத்தமா' பிடிக்காதுன்னு
சொன்னீங்க?
அழகர் : ????????????
***********************************
அலமேலுவும் அவள் தோழி அமிர்தாவும்:
அமிர்தா: என்னடி!பேசிக்கிட்டிருக்கும் போதே எதுக்கு நடுவுல
நடுவுல சர்க்கரை டப்பாவை தெறந்து தெறந்து பாக்கற?
அலமேலு: அதுவா!டாக்டர் என்னை அப்பப்ப ஷுகர் இருக்கான்னு
செக் பண்ணிக்க சொன்னார்'
அமிர்தா: ??????????????????
*************************************************
அலமேலு சங்கீத கச்சேரிக்கு சென்ற இடத்தில் பாடகருடன்:
அலமேலு: அத்தனை சபாவை காட்டிலும் இந்த சபால உங்க கச்சேரிதான்
காது கொடுத்து கேக்கறாப்ல இருக்கு.
பாடகர்: அப்படியா!ரொம்ப சந்தோஷம்.
அலமேலு: எங்களுக்கு வருத்தமால்ல இருக்கு.பின்ன? வேறெந்த சபாலயும்
டிக்கெட் கிடைக்காம கூட்டமாருந்ததாலதான இத காது கொடுத்து
கேக்கும்படி ஆயிடுத்து?
பாடகர்: ????????????
**************************************************
அலமேலுவும் அழகர்சாமியும்:
அலமேலு: என்னங்க! என்னங்க! எந்திரிங்க! அட! எந்திரிங்கன்னா!
அழகர்: என்னம்மா?எதுக்கு இப்டி பாதி தூக்கத்துல எழுப்பற மனுஷன?
அலமேலு: ஐயோ! ஸ்லீப்பிங் டேப்லட் போட்டுக்க மறந்து போய்ட்டிங்க,அதான்
அழகர்: ?????????????????
***********************************************
அலமேலுவும் அழகர்சாமியும் ஆபிஸ் பார்ட்டியில்:
அழகர்: (அலமேலுவின் காதருகில் முணுமுணுப்பாய்)
எதுக்கு இப்பிடி ஜோக் சொல்லறேன்னு எல்லாரையும் உக்காரவச்சு
உயிரெடுக்கற?யாருமே சிரிக்கவே இல்லை பாரு.
அலமேலு: (கிசுகிசுப்பாய்) ஐயோ!உங்களுக்கு ஒண்ணுமே தெரியல போங்க.
முதல் ஜோக்குக்கு சத்தமா சிரிச்சுட்டாங்கனா அடுத்த ஜோக் காதுல
விழாதுல்ல?அதனால அப்டி இருக்காங்க.
அழகர்: ????????????
********************************************
அய்யய்யோ! ஏன் எல்லாரும் ஒடி வரீங்க?அடிக்கறதுக்கா?
அப்டின்னா நீங்க அலமேலுவைதான் அடிக்கணும்.அவங்கதான் இதுக்கெல்லாம் காரணம்,நானில்லை.என்னை விட்ருங்க...........!

15 comments:
படித்ததில் எனக்கு மிகவும் பிடித்தது, தூக்கத்தில் இருந்தவரை எழுப்பி ஸ்லீப்பிங் டேப்லெட், போட்டுக்கச் சொன்னது தான்.
நானே கேட்கணும்னு இருந்தேன், எங்கே இந்த அலமேலுவைக் காணோமேன்னு! இப்ப அதிரடியா வந்துட்டாங்க! தூக்கத்தில் எழுப்பியது பற்றி - என்னுடைய அறை நண்பன் ஒருவர் இப்படித்தான் - “நல்ல தூங்கிக் கொண்டு இருப்பவரை எழுப்பி, இல்லை தூங்கிட்டியான்னு பார்த்தேன்!”னு சொல்லுவான்! அப்ப நிஜமாவே கொலைவெறி வரும்!
தங்களின் நகைச்சுவை எழுத்துக்கள் மனதை இலேசாக்குகின்றன்..
கடைசி ஜோக் சூப்பர்! என்னா லாஜிக்கு! :))
அசத்தல் அலமேலு:-)
அலமேலுவின் அட்டஹாசங்கள் எல்லாமே ”அட்டகாசமாய்” இருந்தது.
very funny! :-)))
எல்லா ஜோக்குகளும் சூப்பர்
.கச்சேரி ஜோக்கில் மட்டும்
வார்த்தைப் பிரயோகம்
சரியாக அமைத்திருக்கலாமோ ?
நான் அலமேலு ரசிகன் ஆகிவிட்டேன்
. வாழ்த்துக்கள்
ஜோக் எல்லாம் சூப்பர்.. சரி உங்க ரங்க்ஸ் பத்தி நினைச்சாதான் பாவமா இருக்கு :(
அட்டகாசம்... .ம்ம்ம். அருமை.
ஸ்லீப்பிங் டாப்லெட் ஜோக் சூப்பர் :))
என் ஓட்டு ஸ்லீப்பிங் டாப்லட் ஜோக்குக்கே!
@வை.கோபாலகிருஷ்ணன்
நன்றி சார்
@வெங்கட் நாகராஜ்
கருத்துக்கு நன்றி
@சக்திஸ்டடி கருண்
நன்றி
@நன்றி
@கோபி ராமமூர்த்தி
நன்றி சார்
@கோவை2தில்லி
நன்றி
@சித்ரா
நன்றி
@நன்றி
கவனம் செலுத்துகிறேன்
@ எல் கே
நன்றி
உண்மையில நாந்தான் பாவம் தெரியுமா?
@வசந்தா நடேசன்
நன்றி
@மாதவி
நன்றி
@மோகன்ஜி
நன்றி
nice jokes alamelu.
ஸ்லீபிங் ரபெலேட் ஜோக்கு சூப்பெர்
Post a Comment