Showing posts with label அட்டஹாசங்கள். Show all posts
Showing posts with label அட்டஹாசங்கள். Show all posts

Tuesday, March 29, 2011

அலமேலுவின் அட்டஹாசங்கள் - 4

கடந்த இரண்டு தடவையா  கொஞ்சம் சீரியஸ் பதிவாவே  போயிடுச்சு. எல்லார் மனசும் ரொம்ப பாரமாயிடுச்சுன்னு  தோணிட்டதாலயும்
இரண்டு தடவையா படிச்சு நொந்து போறப்பல இருந்ததாலயும் 
(இல்லன்னாலும் உன் பதிவை படிச்சு நாங்க நொந்துதான் போறோம்னு 
உங்க மனசு நினைக்கறது எனக்கு தெரிஞ்சுடுச்சு)  கொஞ்சம் மொக்கை
போட அலமேலுவை வரவழைச்சுட்டேன்.

இந்த பதிவின் மொத்த பலனும் அலமேலுவுக்குத்தான்.
(கம்பு,கட்டை,கல் எதாருந்தாலும் அலமேலு பாத்துப்பாங்க.நான்
ஒதுங்கிக்கறேன்)

அலமேலு ஆப்பரேஷன் செய்த டாக்டரிடம்:

அலமேலு: டாக்டர்.எனக்கு ஆப்பரேஷன் நல்லபடியா முடிஞ்சு 
தையல்லாம் போட்டாச்சா?

டாக்டர்: எல்லாம் நல்லா ஆயாச்சும்மா.

அலமேலு: அப்டின்னா எனக்கு ஒரு டம்ளர் தண்ணி குடுங்க.குடிச்சுப்
பாத்து தையல் வழியா ஒழுகாம  இருக்கா பாக்கணும்

டாக்டர்: ???????????????

                                           *************************************

அலமேலுவும் அவள் கணவர் அழகர்சாமியும்:


அழகர்: கேரட் வாங்கிட்டு வர  சொன்னேனே.வாங்கலையா?

அலமேலு: ஆமாம்.நீங்க நல்லா  இளசா பச்சை கேரட் கேட்டீங்க.
ஒரு கடையிலையும் பச்சை கலரில் கேரட் கிடைக்கவே இல்லைங்க.

அழகர்: ??????????????????

                                           *******************************


அலமேலுவும் அவள் தோழியும்:


தோழி:  நேத்தே உன் கிட்ட ம்யூசிக் அகாதமில இன்னிக்கி மாண்டலின்,
                கேளுன்னு சொன்னேனே கேட்டயா?

அலமேலு:  நீ சொன்னனு நானும் போயி  ஸ்ரீநிவாஸ் கிட்ட கேட்டேன்.அவர்
                       மாண்டலினைக் கொடுக்க முடியாதுன்னு சொல்லிட்டார்.


தோழி:  ????????????????????


                                               *******************************

அலமேலுவும் பத்திரிக்கை ஆசிரியரும்:


ஆசிரியர்: என்ன உங்க எழுத்துல உப்பு சப்பே இல்லை?


அலமேலு:  நீங்க அதை படிச்சு பாக்காம வாயில வச்சா பாத்தீங்க?


ஆசிரியர்:  ????????????????????????

                                                  ******************************

அலமேலுவும் அவள் மகனின் டீச்சரும்:

டீச்சர்: உங்க பையன் கணக்கே சரியா போட மாட்டேங்கறான்

அலமேலு: அதுக்கு காரணம் நீங்கதான்

டீச்சர்: என்னது? நானா?

அலமேலு:  ஆமாம்.ஒருநாளைக்கு அஞ்சும் ரெண்டும் ஏழுன்னு
                        சொல்லி கொடுக்கறீங்க.மறுநாள் நாலும் மூணும் ஏழுன்னு
                        சொல்றீங்க.அதுக்கடுத்த நாளே ஆறும் ஒன்னும் ஏழுன்னு
                        சொல்லி கொடுக்கறீங்க.உங்களுக்கே சரியா தெரியலைன்னா
                        எப்படி என் பையனுக்கு கணக்கு வரும்?


டீச்சர் :     ?????????????????????????

Saturday, February 12, 2011

அலமேலுவின் அட்டஹாசங்கள்-3

அலமேலுவின் இன்றைய அட்டஹாசம் வீணை சம்பந்தப்பட்டது.

அலமேலுவின் கணவர் அழகர்சாமி ஒரு வாரம் ஆபிஸ் டூர் முடிந்து வீடு திரும்ப வீட்டில் வீணை ஒன்று புதிதாய் இடம் பெற்றிருப்பது கண்டு திகைத்தார்.

அழகர்: 
என்னம்மா?வீணை இருக்கு? ஏது இது?

அலமேலு:
அது ஒன்னுமில்லீங்க.பக்கத்து வீட்ல புதுசா ஒரு மாமி குடி 
வந்துருக்காங்கல்ல.அவங்க வீணை கத்து தராங்களாம்.நானும் 
சேர்ந்துருக்கேன்.அஞ்சு நாளா போறேன்.அதான்

அழகர்:     
(புது தலை எழுத்தா என்று மனதில் நினைத்தவாறே)அது சரி.ஆனா
வீணை ஏது?வாங்கிருக்கயா?

அலமேலு: 
சே சே! அதெல்லாம் உங்களை  கேக்காம நான் வாங்குவேனாங்க?
இது அந்த மாமியோடது.அவங்க ரெண்டு மூணு வச்சுருக்காங்க.
சும்மா வாசிச்சுப் பாக்க குடுத்துருக்காங்க.அவ்வளவுதான்

அழகர்:
ஒ!அப்படியா!நான் கூட என்னமோன்னு நினைச்சு பயந்துட்டேன்

அலமேலு: 
என்னங்க! என்னங்க!

அழகர்: ம்... சொல்லு.

அலமேலு: நான் வாசிக்கறேன்.நீங்க கேக்கறீங்களா?

அழகர்:  என்னது?

அலமேலு:
(தரையில்  பாய் விரித்து வீணையுடன் அமர்ந்து)
வாசிக்கறேன் கேளுங்க.(டொய்ங் டொய்ங் என்று சுருதி  சேராமல்
வாசித்துக் கொண்டே)என்னங்க!எப்பிடி வாசிக்கறேன்?நல்லா இருக்கா?

அழகர்:       ம்......ம்......ம்ம்

அலமேலு:
அட! என்னங்க வாயைத் திறந்து சொன்னாதான் என்னவாம்
என்ன யோசனை உங்களுக்கு? என்னங்க இங்க பாருங்களேன்

அழகர்:   சொல்லும்மா

அலமேலு:
நான் இப்ப  பாக்கறதுக்கு சரஸ்வதி மாதிரியே இருக்கேனா?

அழகர்:  என்ன? ம்ம்... ஆமா! ஆமா!

அலமேலு:
என்னங்க எல்லாத்தையும் யோசிச்சு யோசிச்சு சொல்லிக்கிட்டு?
 உங்களுக்கு  என் மேல அன்பே இல்ல.

அழகர்: 
ஐயோ!அப்பிடிஎல்லாம்இல்லம்மா.போட்டோல சரஸ்வதியை  வெள்ளை
ட்ரஸ்ல பாத்துருக்கேனா,நீ நீலக் கலர் புடைவைல இருக்கயா?அதான் கொஞ்சமா கன்ப்யூஸ் ஆகிட்டேன்.மத்தபடி நீ சரஸ்வதியேதான்.

அலமேலு :
போங்க.நீங்க என்னை ரொம்பத்தான் புகழறீங்க.எனக்கு  வெக்கமா
இருக்கு.

அழகர்:     ??????????????????

அலமேலு:  இல்லைங்க.நீங்க பொய் சொல்றீங்க.

அழகர்:
(ஐயோ! இதென்னடா புது குழப்பம்.எப்பிடி கண்டு பிடிச்சு தொலைச்சா)
ஐயோ!அதெல்லாம் இல்லம்மா,

அலமேலு:
பின்ன என்னங்க.நீங்க என்னை சரஸ்வதி மாதிரியே இருக்கறதா      
சொல்றீங்க.ஆனா அந்த போட்டோல பாருங்க.சரஸ்வதி எத்தனை
நகை போட்டுருக்காங்கனு?

அழகர்:  ????????????
(ஆ!இதான் மேட்டரா?)
அதில்லம்மா.அது சாமி.அதான் அத்தனை நகை.நாம மனுஷங்கதானம்மா?

அலமேலு:
ஏங்க!எதுக்கும் ஆசைப்படாத சாமியே அத்தனை நகை போடும்போது
நான் சாதரண மனுஷிதானங்க.நான் ஆசைப்பட்டு போட்டுக்கக் கூடாதா?

அழகர்:  
அப்படி இல்லைம்மா.சாமி படத்துல போட்டுருக்குன்னா நிஜமாவே
சாமியேவா ஆசைப்பட்டு போட்டுருக்கு?அதை வரைஞ்ச மனுஷன்தான்
அத்தனை நகை போட்டுருக்கான்.மனுஷனுக்குதானம்மா நகை மேல
எல்லாம் ஆசை.

அலமேலு:
அதைத்தாங்க நானும் சொல்றேன் .மனுஷனுக்குத்தான நகை மேல
எல்லாம் ஆசை.அப்படின்னா நானும் மனுஷிதானங்க.அதான்    சொல்றேன்
என்ன இன்னிக்கே போய் நகை எல்லாம் வாங்கிடலாமா?

அழகர்:      ????????? ம்ம்....ம்.....
              ( ஏக்கப் பெருமூச்சுடன், டூர்லையே இருந்துருக்கலாம்)


Wednesday, February 2, 2011

அலமேலுவின் அட்டஹாசங்கள்-2

ஊர் சுத்தி பாக்க போயிருந்த அலமேலு திரும்பி வந்தாச்சு .அவங்க
அட்டஹாசத்தையும் ஆரம்பிச்சாச்சு.இந்த தடவை அவங்க அட்டகாசங்கள்
என்னனு பாக்கலாம்.

அலமேலுவும் அவள் கணவர் அழகர்சாமியும்:

அழகர்:        ஏன்மா! இது என்ன ஆபீசுக்கு போட்டுக்க இப்பிடி அழுக்கு
                    சட்டை எடுத்து வச்சுருக்க?

அலமேலு:  நீங்கதானங்க நான் ஊருக்கு போறதுக்கு முத நாள் இந்த சட்டை
                     எடுத்து வச்சப்ப இந்த சட்டை எனக்கு 'சுத்தமா' பிடிக்காதுன்னு
                     சொன்னீங்க?
அழகர் :    ????????????
 
                        ***********************************

அலமேலுவும் அவள் தோழி அமிர்தாவும்:

அமிர்தா:   என்னடி!பேசிக்கிட்டிருக்கும் போதே எதுக்கு நடுவுல
                    நடுவுல சர்க்கரை டப்பாவை தெறந்து தெறந்து பாக்கற?

அலமேலு:  அதுவா!டாக்டர் என்னை அப்பப்ப ஷுகர் இருக்கான்னு
                     செக் பண்ணிக்க  சொன்னார்'

அமிர்தா:    ??????????????????

                *************************************************
அலமேலு சங்கீத கச்சேரிக்கு சென்ற இடத்தில் பாடகருடன்:

அலமேலு:  அத்தனை சபாவை காட்டிலும் இந்த சபால உங்க கச்சேரிதான்
                     காது கொடுத்து கேக்கறாப்ல இருக்கு.

பாடகர்:       அப்படியா!ரொம்ப சந்தோஷம்.

அலமேலு:  எங்களுக்கு வருத்தமால்ல இருக்கு.பின்ன? வேறெந்த சபாலயும்
                      டிக்கெட் கிடைக்காம கூட்டமாருந்ததாலதான இத காது  கொடுத்து
                    கேக்கும்படி ஆயிடுத்து?
பாடகர்:           ????????????

               **************************************************
அலமேலுவும் அழகர்சாமியும்:

அலமேலு:  என்னங்க! என்னங்க! எந்திரிங்க! அட! எந்திரிங்கன்னா!

அழகர்:        என்னம்மா?எதுக்கு இப்டி பாதி தூக்கத்துல எழுப்பற மனுஷன?

அலமேலு: ஐயோ! ஸ்லீப்பிங் டேப்லட் போட்டுக்க மறந்து போய்ட்டிங்க,அதான்

அழகர்:         ?????????????????

                     ***********************************************

அலமேலுவும் அழகர்சாமியும் ஆபிஸ் பார்ட்டியில்:

அழகர்:         (அலமேலுவின் காதருகில் முணுமுணுப்பாய்)
                     எதுக்கு இப்பிடி ஜோக்  சொல்லறேன்னு எல்லாரையும்   உக்காரவச்சு
                     உயிரெடுக்கற?யாருமே சிரிக்கவே இல்லை பாரு.
அலமேலு: (கிசுகிசுப்பாய்) ஐயோ!உங்களுக்கு ஒண்ணுமே தெரியல போங்க.
                    முதல் ஜோக்குக்கு சத்தமா சிரிச்சுட்டாங்கனா அடுத்த ஜோக் காதுல
                    விழாதுல்ல?அதனால அப்டி இருக்காங்க.

அழகர்:        ????????????

                         ********************************************
அய்யய்யோ! ஏன் எல்லாரும் ஒடி வரீங்க?அடிக்கறதுக்கா?
அப்டின்னா நீங்க அலமேலுவைதான் அடிக்கணும்.அவங்கதான் இதுக்கெல்லாம் காரணம்,நானில்லை.என்னை விட்ருங்க...........!

Friday, December 24, 2010

அலமேலுவின் அட்டஹாசங்கள்-1

எப்ப பாத்தாலும் சீரியஸ் பதிவாவே போடறாங்களே இவங்கன்னு எல்லாரும் நம்மள
ஓரங்கட்டிட்டா என்ன பண்ணறதுன்னு யோசிச்சதுல கொஞ்சம் இப்டி காமெடியும்(!)
மொக்கையுமா ஏதாவது போடலாமேனுதான் இநத பதிவு.(பாத்தும்மா,கடைசில 
இத படிச்சிட்டு ஓரங்கட்டிடப் போறாங்க _  இது கணவர் )

சரி காமெடியா என்ன போடலாம்னு யோசிக்கும்போதே அருமை அண்ணன் வந்து, "தனியா எதுக்கும்மா காமெடி பதிவுலாம்?அதான் ஏற்கனவே உன் ப்ரொஃபைல் குடுத்துருக்கயே" என்று கேட்க,

படித்துக்  கொண்டிருக்கும் 'ஹிண்டு' வை லேசாகத் தழைத்து, 'இதையே நான் சொல்லிருந்தா என்ன ஆயிருக்கும்' என்பது போல் கணவர் பார்த்தார்.

சரி சரி கற்பூர வாசனை தெரியாதவங்களை எல்லாம் பக்கத்துல வச்சுகிட்டு எழுதறது கஷ்டம்தான்னு முடிவு பண்ணி அவங்கல்லாம் வேலை பாக்க(?)  ஆபிஸ் போனப்பறம் எழுப்பினேன் என் மூளையை(சத்தியமா எனக்கு மூளை இருக்குதுன்னு எனக்கு சி.டி ஸ்கேன் பண்ணின
டாக்டர் சொனாருங்க)
அதன் விளைவுதான் இநத "அலமேலுவின் அட்டகாசங்கள்"

அலமேலுவும் அவள் தோழியும் சினிமா  பார்க்க தியேட்டர் செல்ல அங்கு உள்ளே நுழைய முடியாமல் ஒரே கூட்டம்.நம்ம அலமேலு அடிச்சி பிடிச்சி உள்ள நுழைய போற சமயம்,

செக்யூரிட்டி: வெயிட் மேடம்
அலமேலு: அறுபது கிலோங்க
செக்யூரிட்டி:  ..?

அலமேலுவின் மெடிக்கல் 'செக்கப்' பின் போது

டாக்டர்: சரியான சாப்பாடில்லாத காரணத்தால வீக்கா இருக்கீங்க.
மார்னிங் ஹெல்த்தி ப்ரேக்பாஸ்ட் எடுத்துக்கங்க.மத்யானமும் சத்துள்ள ஆகாரங்களா சமைச்சதை சாப்டுங்க.
அலமேலு: ஐயோ!அது முடியாதே டாக்டர்!
டாக்டர்: ஏன்?
அலமேலு:அவருக்கு அந்த அளவெல்லாம் சமைக்க தெரியாது டாகடர்.ஏதோ சமைப்பார் அவ்ளதான்

அலமேலுவும் அவள் கணவன் அழகர்சாமியும்:

அழகர்சாமி: என்னது? ஏ டி எம்  லேர்ந்து என் சம்பளப்பணம் மொத்தத்தயுமா டிரா பண்ணிட்ட?சம்பாதிக்கறது நான், செலவழிக்கறது நீயா?
அலமேலு: கடமையை செய், பலனை எதிர்பார்க்காதனு சொல்லிருக்குங்க.நீங்க உங்க கடமையை மட்டும் செஞ்சா போதாதா?

அலமேலுவின் மகனைப் பற்றி புகாருடன் ஆசிரியையும், அலமேலுவும்:

ஆசிரியை: உங்க பையன் இந்த ஹாலிடேஸ் முடிஞ்சு வந்தப்பறம் ரொம்ப வாலா மாறிட்டான்.படுத்தல் தாங்கல.
அலமேலு:  ஸ்கூல் முடிஞ்சு ஹாலிடேஸ் விட்டிங்களே.லீவுல  ஒரு நாளாவது
வந்து உங்க ஸ்டூடண்ட் ரொம்ப வாலா இருக்கான்,படுத்தல் தாங்கலன்னு நான் சொல்லிருப்பேனா?
ஆசிரியை: .....?

இதெல்லாம் படிச்சிட்டு மண்டைய பிச்சிக்கிட்டீங்கன்னா அதுக்கெல்லாம் அலமேலுதான் காரணம்(நானில்ல).
உங்க தலைல மிச்சம் மீதி இருக்கற முடியைப் பொறுத்து அட்டகாசங்களை தொடரலாமாங்கறத யோசிக்கலாம்.அது வரை அலமேலுவின் சார்பில் உங்களிடமிருந்து வடை பெறுகிறேன்,  சீ சீ அது என்னது அது ஆங்.. விடை பெறுகிறேன்