Tuesday, March 29, 2011

அலமேலுவின் அட்டஹாசங்கள் - 4

கடந்த இரண்டு தடவையா  கொஞ்சம் சீரியஸ் பதிவாவே  போயிடுச்சு. எல்லார் மனசும் ரொம்ப பாரமாயிடுச்சுன்னு  தோணிட்டதாலயும்
இரண்டு தடவையா படிச்சு நொந்து போறப்பல இருந்ததாலயும் 
(இல்லன்னாலும் உன் பதிவை படிச்சு நாங்க நொந்துதான் போறோம்னு 
உங்க மனசு நினைக்கறது எனக்கு தெரிஞ்சுடுச்சு)  கொஞ்சம் மொக்கை
போட அலமேலுவை வரவழைச்சுட்டேன்.

இந்த பதிவின் மொத்த பலனும் அலமேலுவுக்குத்தான்.
(கம்பு,கட்டை,கல் எதாருந்தாலும் அலமேலு பாத்துப்பாங்க.நான்
ஒதுங்கிக்கறேன்)

அலமேலு ஆப்பரேஷன் செய்த டாக்டரிடம்:

அலமேலு: டாக்டர்.எனக்கு ஆப்பரேஷன் நல்லபடியா முடிஞ்சு 
தையல்லாம் போட்டாச்சா?

டாக்டர்: எல்லாம் நல்லா ஆயாச்சும்மா.

அலமேலு: அப்டின்னா எனக்கு ஒரு டம்ளர் தண்ணி குடுங்க.குடிச்சுப்
பாத்து தையல் வழியா ஒழுகாம  இருக்கா பாக்கணும்

டாக்டர்: ???????????????

                                           *************************************

அலமேலுவும் அவள் கணவர் அழகர்சாமியும்:


அழகர்: கேரட் வாங்கிட்டு வர  சொன்னேனே.வாங்கலையா?

அலமேலு: ஆமாம்.நீங்க நல்லா  இளசா பச்சை கேரட் கேட்டீங்க.
ஒரு கடையிலையும் பச்சை கலரில் கேரட் கிடைக்கவே இல்லைங்க.

அழகர்: ??????????????????

                                           *******************************


அலமேலுவும் அவள் தோழியும்:


தோழி:  நேத்தே உன் கிட்ட ம்யூசிக் அகாதமில இன்னிக்கி மாண்டலின்,
                கேளுன்னு சொன்னேனே கேட்டயா?

அலமேலு:  நீ சொன்னனு நானும் போயி  ஸ்ரீநிவாஸ் கிட்ட கேட்டேன்.அவர்
                       மாண்டலினைக் கொடுக்க முடியாதுன்னு சொல்லிட்டார்.


தோழி:  ????????????????????


                                               *******************************

அலமேலுவும் பத்திரிக்கை ஆசிரியரும்:


ஆசிரியர்: என்ன உங்க எழுத்துல உப்பு சப்பே இல்லை?


அலமேலு:  நீங்க அதை படிச்சு பாக்காம வாயில வச்சா பாத்தீங்க?


ஆசிரியர்:  ????????????????????????

                                                  ******************************

அலமேலுவும் அவள் மகனின் டீச்சரும்:

டீச்சர்: உங்க பையன் கணக்கே சரியா போட மாட்டேங்கறான்

அலமேலு: அதுக்கு காரணம் நீங்கதான்

டீச்சர்: என்னது? நானா?

அலமேலு:  ஆமாம்.ஒருநாளைக்கு அஞ்சும் ரெண்டும் ஏழுன்னு
                        சொல்லி கொடுக்கறீங்க.மறுநாள் நாலும் மூணும் ஏழுன்னு
                        சொல்றீங்க.அதுக்கடுத்த நாளே ஆறும் ஒன்னும் ஏழுன்னு
                        சொல்லி கொடுக்கறீங்க.உங்களுக்கே சரியா தெரியலைன்னா
                        எப்படி என் பையனுக்கு கணக்கு வரும்?


டீச்சர் :     ?????????????????????????

28 comments:

raji said...

@ALL

சில சொந்த வேலைகளுக்காக இந்த பதிவிற்கு
ஒரு வாரம் விடுமுறை விடப்படுகிறது.

(ஹையா!ஜாலின்னு குதிக்கறீங்களா? அப்பறம் சேர்த்து வச்சு
நிறைய பதிவா போட்டுடுவேனாக்கும்,தாங்க மாட்டீங்க! :-) )

அதுவரைக்கும் என் பதிவை பத்திரமா பாத்துக்கங்க!

Chitra said...

அலமேலுவும் பத்திரிக்கை ஆசிரியரும்:


ஆசிரியர்: என்ன உங்க எழுத்துல உப்பு சப்பே இல்லை?


அலமேலு: நீங்க அதை படிச்சு பாக்காம வாயில வச்சா பாத்தீங்க?


ஆசிரியர்: ????????????????????????


.....ha,ha,ha,ha,ha,ha... good one.

Chitra said...

அதுவரைக்கும் என் பதிவை பத்திரமா பாத்துக்கங்க!

..... garnier Fructis! :-)))))

Have a safe and fun trip!

வை.கோபாலகிருஷ்ணன் said...

அலமேலுவின் அட்டஹாசங்கள் - 4 ன்னு போட்டுட்டு 5 ஜோக் தவறாகப் போடப்பட்டுள்ளது. இது அலமேலு பாணியிலேயே எழுதப்பட்டுள்ள ஒரு ஜோக். அதனால் பதில் தர வேண்டாம். (அப்போ மொத்தம் 6 ஜோக் என்கிறீர்களா=அதுவும் கரெக்ட் தான்)

5 ஜோக்குகளுமே ஜோக்கா இருந்திச்சு. பாராட்டுக்கள்.

எல் கே said...

ஜோக்ஸ் எல்லாம் சூப்பர் .. சீக்கிரமா ஊருக்கு போயிடு வாங்க. பயணம் நன்றாக அமைய வாழ்த்துக்கள்

RVS said...

மாண்டலின் வயலின் வச்சு சொல்லுவோம்...

தையல் சரியா இருக்கான்னு அந்த தையல் பார்த்தது கொஞ்சம் ஓவர் தான்... ;-))))

அட்டஹாசம்.. அட்டஹாசம்... ;-))

எல்.கே ... ஜோக்கு சூப்பெர் ன்னு சொல்லிட்டு ஊருக்கு போயிட்டுவாங்க அப்படின்னு சொல்றீங்க... போதும்ன்னு அர்த்தமா? ;-))))

middleclassmadhavi said...

போன பதிவை நான் படிக்கறதுக்குள்ளேயே அடுத்த பதிவான்னு பார்த்தேன்!! உங்கள் பொறுப்பான வேலைகளைப் பார்த்து விட்டு வாருங்கள்! ஆல் த பெஸ்ட்!

சக்தி கல்வி மையம் said...

Nice.,

MANO நாஞ்சில் மனோ said...

//அலமேலு: ஆமாம்.ஒருநாளைக்கு அஞ்சும் ரெண்டும் ஏழுன்னு
சொல்லி கொடுக்கறீங்க.மறுநாள் நாலும் மூணும் ஏழுன்னு
சொல்றீங்க.அதுக்கடுத்த நாளே ஆறும் ஒன்னும் ஏழுன்னு
சொல்லி கொடுக்கறீங்க.உங்களுக்கே சரியா தெரியலைன்னா
எப்படி என் பையனுக்கு கணக்கு வரும்?//


அதானே டீச்சருக்கே கணக்கு தெரியலையே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

Nagasubramanian said...

கடைசி ஜோக் அருமை

ஆச்சி ஸ்ரீதர் said...

எல்லாமே சிரிக்க வச்சுது,சூப்பர்.

R. Gopi said...

:-)

r.v.saravanan said...

ஜோக்ஸ் எல்லாம் சூப்பர்

குறையொன்றுமில்லை. said...

அலமேலுவை அடிக்கடி கூட்டிட்டுவாங்க.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

சரியான மொக்கை....இதை என் ஜோக்குன்னு வீட்ல சொல்லி விசிறி கட்டையால.....

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ஹி..ஹி...தப்பா எதுவும் நடந்துடல...விசிறி கட்டையால முதுகை சொறிஞ்சுண்டேன்னு சொல்ல வந்தேன்!!!!!!!

சாந்தி மாரியப்பன் said...

தையல் மட்டும் போறுமா.. எம்ப்ராய்டரி வேணாமா
:-))

raji said...

அனைவரின் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி

logu.. said...

ஹி ஹி..

ஒரே சிப்பு சிப்பா வருது..

ரிஷபன் said...

ஒரு வாரம் வரைக்கும் சிரிச்சுகிட்டு இருக்கோம்

Unknown said...

அனைத்தும் அருமையான ஜோக்குகள்.
//அலமேலுவும் அவள் மகனின் டீச்சரும்:

டீச்சர்: உங்க பையன் கணக்கே சரியா போட மாட்டேங்கறான்

அலமேலு: அதுக்கு காரணம் நீங்கதான்

டீச்சர்: என்னது? நானா?

அலமேலு: ஆமாம்.ஒருநாளைக்கு அஞ்சும் ரெண்டும் ஏழுன்னு
சொல்லி கொடுக்கறீங்க.மறுநாள் நாலும் மூணும் ஏழுன்னு
சொல்றீங்க.அதுக்கடுத்த நாளே ஆறும் ஒன்னும் ஏழுன்னு
சொல்லி கொடுக்கறீங்க.உங்களுக்கே சரியா தெரியலைன்னா
எப்படி என் பையனுக்கு கணக்கு வரும்?


டீச்சர் : ?????????????????????????
//

எனக்கு ரொம்பப் பிடித்த ஜோக்.அடிக்கடி இது போல எழுதுங்க.
வாழ்த்துக்கள்.

Unknown said...

நீங்க ராஜபாளையம்னு உங்க ராஜபாளையம் ராஜி http://suharaji.blogspot.com/2011/03/blog-post_03.html பதிவு மூலம் தெரிந்து கொண்டேன்.
உங்களுக்கு நேரம் இருந்தால் இந்தப் பதிவை படிங்க.
http://vaarthaichithirangal.blogspot.com/2011/04/blog-post.html

ADHI VENKAT said...

அலமேலுவின் அட்டஹாசம் தாங்கலை. HAVE A NICE TRIP RAJI.

இராஜராஜேஸ்வரி said...

அட்டஹாசம்... super!!

Arun Ambie said...

ஜோக்ஸ் எல்லாம் சூப்பர்

சி.பி.செந்தில்குமார் said...

ராஜி.. சாரி டூ சே திஸ்.. எல்லா ஜோக்ஸூம் ஏற்கனவே பத்திரிக்கைகளில் வந்தவை

சி.பி.செந்தில்குமார் said...

<>>அலமேலுவின் அட்டஹாசங்கள் - 4

அலமேலுவின் அட்டஹாஸ்யங்கள் - 4 என போடலாமே?

வெங்கட் நாகராஜ் said...

”அலமேலுவின் அட்டஹாஸ்யங்கள்” இது நல்ல யோசனையா இருக்கே! டீச்சர் ஜோக் ஐந்தில் மிகவும் ரசித்தது. பகிர்வுக்கு நன்றி.

Post a Comment