Tuesday, March 15, 2011

துணை

முன் கதைக்கு பகுதி 1பகுதி 2 , மற்றும் பகுதி 3  படிக்கவும்


பகுதி 4

பார்க்கில் சென்று அமர்ந்ததும் விசு பேச ஆரம்பிக்கும் வரை பக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

"என்ன சுமி!ஒண்ணுமே பேச மாட்டேங்கற?"

அவன் குரலில் கலைந்தவள், " நான் என்ன பேசணும்? நீங்கதான் ஏதோ
பேசணும்னு கூப்ட்டிருக்கீங்க. என்ன சொல்லணுமோ அதை சீக்கரமா
சொல்லி முடிச்சீங்கன்னா எனக்கு கிளம்ப சௌகர்யமா இருக்கும்"

"ஆல்ரைட். இப்ப புவனா என் கூட இல்லை.அவ என்னை விட்டு
போயிட்டா  தெரியுமா?"

"எனக்கு அடுத்தவங்க வீட்டு விஷயங்களை தெரிஞ்சுக்கறதில ஆர்வமும் இல்லை நேரமும் இல்லை.உங்களுக்கு என்ன சொல்லணுமோ அதை பளிச்சுன்னு  சொல்லிட்டீங்கன்னா தேவலை"

" ஏன் இப்பிடி பிடி கொடுக்காமலே பேசற சுமி?"

" இங்க பாருங்க மிஸ்டர்! உங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இப்ப இல்லை. முதல்ல என்னை சுமின்னு கூப்பிடறதை நிறுத்துங்க.ஏதோ
பேசணும்னு சொன்னீங்களேன்னு  வந்தா சொல்ல வேண்டியதை விட்டு எதுக்கு தேவை இல்லாத பேச்செல்லாம்?"

"புவனா என்னை விட்டு போனதுக்கான காரணத்தை நீ கட்டாயம் தெரிஞ்சுக்கணும்.அப்பத்தான் நான் என்ன சொல்ல வரேன்னு உனக்கு புரியும். கல்யாணமாகி ரெண்டு பெரும் ரொம்ப சந்தோஷமாத்தான் இருந்தோம்.ஆனா அம்மாக்கு சுத்தமா புவனாவை பிடிக்கவே இல்லை.
அவ எந்த வேலையும் பாக்காம சுகவாசியா இருக்கறதா தினமும் ஒரே சண்டை.நாளடைவுல இது பெருசாகி எங்களுக்கு குழந்தை  பிறக்கலைங்கறதுல வந்து நின்னது.சரின்னு டாக்டரை பாத்து செக் அப்
பண்ணினதுல எனக்குத்தான் அந்த தகுதி இல்லன்னு தெரிய வந்தது.
அந்த விஷயம் தெரிஞ்சதும்  என்னோட  இருக்க விருப்பமில்லைனு அவ போயிட்டா.அதுக்கப்பறம் வந்த நாட்கள்ல
உனக்கு நான் பண்ணின கொடுமையை நினைச்சு வருந்தினேன்.இப்ப மனம் திருந்தி உன் கிட்ட வந்துருக்கேன்"

...........................


"என்ன சுமி!ஒண்ணுமே பேச மாட்டேங்கற?  இதை கேட்டதும் நீ சந்தோஷப்படுவேன்னு நான் நினைச்சேன்.அம்மாவும் அப்பிடித்தான்
என் கிட்ட சொன்னாங்க.ஆனா நீ மௌனமா இருக்க?"

"எதை எதிர்பார்த்து என் கிட்ட வந்தீங்க?நான் இதுக்கு என்ன சொல்லணும்னு  நீங்க நினைக்கறீங்க?"

"என்னோட வாழ உனக்கு சம்மதமில்லையா சுமி?"

"ஒருவேளை உங்களுக்கு குழந்தை பிறந்திருந்தாலோ இல்லை புவனா போகாம இருந்திருந்தாலோ நீங்க வந்திருக்க போறதில்லை.இப்ப மட்டும் எப்பிடி ஒரு எதிர்பார்ப்போட வர முடியுது? எனக்கு உங்க கூட வாழ
இஷ்டமில்லை"

"புரியுது சுமி! நீ ஏன்  தயங்கறனு புரியுது.அந்த குழந்தையை நான்
ஏத்துப்பேனோ  மாட்டேனோன்னுதான? அந்த குழந்தையோட சேர்த்து நான் உன்னை ஏத்துக்கறேன் சுமி"

"என்னது?ஏத்துக்கறீங்களா? என் சம்மதம் தேடித்தான் நீங்க வந்துருக்கீங்க.உங்களைத் தேடி  நான் வரலை.உண்மைல இப்ப   ஏத்துக்கறதையும் நிராகரிக்கறதையும் சொல்ல வேண்டியது நான்.
இவ்ளோ நடந்தும் இன்னும் உங்க ஈகோ உங்களை விட்டுப் போகலை".

"ஐயோ! அப்படி எல்லாம் இல்லை சுமி!"

"எனக்கு உங்க துணை வேண்டாம்.என் துணை எனக்கு மகள் ரூபத்துல கிடைச்சாச்சு.உங்க துணை நான் இல்லை.உங்களுக்கு வாழ்க்கைல ஒரு நல்ல துணை வேணும்னு நிஜம்மாவே நினைச்சீங்கன்னா அதுக்கு முதல்ல உங்க மனசு சுத்தமா இருக்கணும்.மனசு சுத்தமில்லாதவங்களுக்கு
எப்பேர்ப்பட்ட நல்ல துணை கிடைச்சாலும் பிரயோசனமில்லை,அதன் அருமையை அவங்க உணரப் போறதில்லை.அதனால ஒருவேளை வேற நல்ல துணையைத் தேடினாலும் அதுக்கு முன்னாடி மனசை சுத்தப்
படுத்திக்க பாருங்க.என் கிட்ட பேச வந்ததால இதை சொன்னேன்.
முடிஞ்சா முயற்சி பண்ணுங்க.நல்ல துணை கிடைக்க வாழ்த்துக்கள்.நான் வரேன்"

விசு அயர்ந்து நின்றான்.


முற்றும்.

23 comments:

சி.பி.செந்தில்குமார் said...

>>
"என்னது?ஏத்துக்கறீங்களா? என் சம்மதம் தேடித்தான் நீங்க வந்துருக்கீங்க.உங்களைத் தேடி நான் வரலை.உண்மைல இப்ப ஏத்துக்கறதையும் நிராகரிக்கறதையும் சொல்ல வேண்டியது நான்.
இவ்ளோ நடந்தும் இன்னும் உங்க ஈகோ உங்களை விட்டுப் போகலை".

ஹா ஹா கரெக்ட்டான கேள்வி..

சி.பி.செந்தில்குமார் said...

>>.மனசு சுத்தமில்லாதவங்களுக்கு
எப்பேர்ப்பட்ட நல்ல துணை கிடைச்சாலும் பிரயோசனமில்லை

கதையின் கருத்து ம் ம்

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமையான முடிவு தான்.
100/100 செண்டம் மார்க் உங்களுக்கு.
பாராட்டுக்கள் + வாழ்த்துக்கள்.

எனக்குப்பிடித்த முத்திரை வரிகள்:

1) "ஒருவேளை உங்களுக்கு குழந்தை பிறந்திருந்தாலோ இல்லை புவனா போகாம இருந்திருந்தாலோ நீங்க வந்திருக்க போறதில்லை.இப்ப மட்டும் எப்பிடி ஒரு எதிர்பார்ப்போட வர முடியுது? எனக்கு உங்க கூட வாழ இஷ்டமில்லை"

2)"என்னது?ஏத்துக்கறீங்களா? என் சம்மதம் தேடித்தான் நீங்க வந்துருக்கீங்க.உங்களைத் தேடி நான் வரலை.உண்மைல இப்ப ஏத்துக்கறதையும் நிராகரிக்கறதையும் சொல்ல வேண்டியது நான்.
இவ்ளோ நடந்தும் இன்னும் உங்க ஈகோ உங்களை விட்டுப் போகலை".

3)"எனக்கு உங்க துணை வேண்டாம்.என் துணை எனக்கு மகள் ரூபத்துல கிடைச்சாச்சு

எல் கே said...

ம்ம்ம். எதிர்பார்த்த முடிவுதான். நடை நன்றாக உள்ளது. தொடர்ந்து கதைகள் எழுதவும்

Yaathoramani.blogspot.com said...

அருமை.ஒரு சமூக அக்கறையுள்ள
சிறுகதையை வழங்கியமைக்கு வாழ்த்துக்கள்
கதைக் களம் சொல்லிப் போகும் நேர்த்தி
முடிவு, அனைத்தும் பிரமாதம்
புலிவாலைப் பிடித்துள்ளீர்கள்
யார் ஜெயிக்கிறார்கள் எனப் பார்ப்போம்
எனச் சொல்லியிருந்தேன்
நீங்கள்தான் ஜெயித்துள்ளீர்கள்
தொடர வாழ்த்துக்கள்

லதானந்த் said...
This comment has been removed by a blog administrator.
ஆச்சி ஸ்ரீதர் said...

//இப்ப புவனா என் கூட இல்லை.அவ என்னை விட்டு போயிட்டா தெரியுமா?//

இதைப் படித்தவுடன் ம் ....நல்லா வேணும்னு சந்தோஷப்பட்டேன்,அதற்கு பின் வந்த காரணங்கள்,கதை அமைப்பு,க்ளைமக்ஸ் சூப்பர்.

raji said...
This comment has been removed by the author.
RVS said...

எத்துனை துன்பம் வந்தாலும் துணை இல்லாமல் முடியுமா? இல்லை.இல்லை.. முடியும் என்று ஒரு குழந்தை கொண்டு சொல்லியிருக்கிறீர்கள். சடசடவென்று முடித்துவிட்டீர்கள். நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள். ;-)))

ரிஷபன் said...

நல்ல துணை அமைவதும் அதைப் புரிதலோடு ஏற்பதுமே வாழ்க்கை ரகசியம்.
அழகாய் விருவிறுப்பாய் அதைச் சொல்லி விட்டீர்கள்.

R. Gopi said...

எனக்கு முடிவு பிடிக்கவில்லை. ஆனால் வேறு வழியில்லை. இப்படித்தான் முடித்தாகவேண்டும் என்று நினைக்கிறேன்.

Visu does not deserve Sumi. But she deserves a much better life partner.

சுமிக்கு ஒரு துணையில்லாமல் முடித்தது எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால் சுமிக்கு ஒரு துணையைக் கொண்டு வருவதில் ஏகப்பட்ட சிக்கல்கள் உள்ளன. அவள் சூடுகண்ட பூனை. ஆண்கள் மேலிருந்த நம்பிக்கை போயே போயிருக்கும். அடுத்த துணை எல்லாவற்றையும் புரிந்துகொண்டவனாக இருக்கவேண்டும். அது நடைமுறையில் சாத்தியமா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

cognitive dissonance!

வெங்கட் நாகராஜ் said...

துணை – நன்றாக இருந்தது உங்கள் குறுந்தொடர். நல்ல முடிவு தான் எடுத்திருக்கிறார் உங்கள் கதை நாயகி! வாழ்த்துகள்.

குறையொன்றுமில்லை. said...

இந்தக்கதைக்கு இந்த முடிவு எதிர் பார்த்ததுதான். ஆனாலும் இப்படி முடிவுதான் சரியாகவும் வரும்.
எப்படி தினம் ஒரு பதிவு போட முடியுது?????

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

முழு கதையும் தாமதமாகவே படித்தேன் ராஜி. நல்ல கதை. இதை சிறுகதை என்று சொல்ல முடியாது. சிறுகதை இலக்கணத்தில் காலக் கணக்கு மிகவும் குறுகியது. இரண்டு வருடங்களுக்குப் பிறகு என்று வராமல் இந்தக் கதையை எழுத முயற்சித்திருந்தால் இன்னும் நச்சென இருந்திருக்கும். சுஜாதாவை நிறைய படியுங்கள். சிறுகதை இலக்கணத்தை சிறப்பாகக் கற்கலாம். வாழ்த்துக்கள்

raji said...

@சி பி செந்தில்குமார்

ஹை!கதையோட கருத்தை கரெக்டா கண்டு பிடிச்சுட்டீங்க!

நன்றி


@வை கோபாலகிருஷ்ணன்

நூறு மார்க்குகளுக்கும் பாராட்டுகள்+ வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி

@எல் கே
ஊக்கத்திற்கு நன்றி

@ரமணி

வின்னிங்க் அவார்ட் தந்தமைக்கு நன்றி
தொடரும் ஊக்கத்திற்கு நன்றி

@ஆச்சி
கருத்துக்கு நன்றி ஆச்சி

@ஆர் வி எஸ்

இந்த கதையை ஒரே ஒரு பதிவுல போட முடியாதே,தொடரா
போடலாமானு யோசிச்சுண்டு இருந்தேன்.ஆமாம்,அப்படியே செய்யலாம்னு
சொல்லறாப்புல நீங்க அப்ப பாத்து ஃபைனான்ஸ் கம்பெனி போட்டீங்க.
அதைப் பாத்ததும் தொடரா போட முடிவு பண்ணி போடவும் போட்டேன்.
இதுக்கு ஒரு வகையில நான் உங்களுக்கு நன்றி சொல்லிக்கறேன்.நன்றி

@ரிஷபன்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

@கோபி ராமமூர்த்தி
உங்கள் கேள்விக்கு நான் சொல்லியிருக்க வேண்டிய பதிலையும் சேர்த்து
நீங்களே தந்து என் வேலையைக் குறைத்து விட்டீர்கள்.
கருத்துக்கும் பதிலுக்கும் நன்றி

@வெங்கட் நாகராஜ்

முடிவைப் பற்றிய பாராட்டுதலுக்கும் தொடர்ந்த ஊக்கத்திற்கும்
நன்றி (ஆமா!முடிவு பகுதிக்கு உங்க பெட்டர் ஹாஃப் வரலையே?எங்கே காணோம்?)


@லக்ஷ்மி

கருத்துக்கு நன்றி

தினமும் ஒரு பதிவுலாம் போட முடியறதில்லை.
நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் டைப் பண்ணி டிராஃப்ட்ல
சேவ் பண்ணி வச்சுப்பென்.அப்பப்ப பப்ளிஷ் பண்ணி உங்க
எல்லாரையும் தலையைப் பிச்சுக்க வைப்பேன்.
இந்த ரகசியத்தை யார்கிட்டயும் சொல்லிடாதீங்க என்ன?

@வித்யா சுப்ரமணியன்

இந்த கதையின் ஆரம்பத்திலிருந்தே உங்க கருத்து இல்லையேனு
கொஞ்சம் வருத்தமா இருந்தது.(அப்பிடி எல்லாம் உங்களை
தப்பிச்சுக்க விட்டுடுவேனா?)

கருத்துக்கும் வழி நடத்தலுக்கும் நன்றி மேடம்.
மேலும் இது போன்ற சந்தர்ப்பங்களில் உங்கள்
வழி நடத்தல் தேவை.நன்றி

middleclassmadhavi said...

நான் நினைத்த முடிவையே கொடுத்ததற்கு நன்றி!
:-))

இராஜராஜேஸ்வரி said...

முடிவு அருமை. பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.

Arun Ambie said...

எழுத்து நடை அருமையாக இருக்கிறது. 1980களில் வந்திருந்தால் அவார்ட் வின்னிங் சிறுகதை. இன்னும் இதே பாணி கதைகள் எனக்குச் சற்றே போரடிக்கிறது. ஆனாலும், உட்கார்ந்து பொறுமையாக எழுதியிருக்கிறீர்கள். பிரபல எழுத்தாளராக மிளிர வாழ்த்துக்கள்.

Arun Ambie said...

1980களின் அமுதசுரபி படித்த ஒரு பீலிங்கு!!

நிரூபன் said...

"என்ன சுமி!ஒண்ணுமே பேச மாட்டேங்கற? இதை கேட்டதும் நீ சந்தோஷப்படுவேன்னு நான் நினைச்சேன்.அம்மாவும் அப்பிடித்தான்
என் கிட்ட சொன்னாங்க.ஆனா நீ மௌனமா இருக்க?"

"எதை எதிர்பார்த்து என் கிட்ட வந்தீங்க?நான் இதுக்கு என்ன சொல்லணும்னு நீங்க நினைக்கறீங்க?"

"என்னோட வாழ உனக்கு சம்மதமில்லையா சுமி?"//

இது அவன் தலையில் சம்மட்டியால் அடிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியிருக்கும். அருமையான் கதையினை, அதுவும் மீண்டும் பெண்மையினை உணர்ந்து பெண்ணின் காலடியில் விழ ஆண் வந்திருப்பது போன்ற வடிவில் தந்திருக்கிறீர்கள்.

ஆனாலும் ஒரு குறை, காலாதி காலமாக இந்தச் சமுதாயம், குழந்தை இல்லை என்பதற்கு/ குழந்தை பிறக்காது என்பதற்கு பெண்ணில் தான் குறை, பெண் தான் மலடி என ஆணில் தவறிருந்தும், ஆணை ஏதோ அரசன் போலக் காட்டித் தான் இலக்கியங்களைப் படைத்துள்ளது. அதனையே நீங்களும் முதல் இரு அங்கங்களில் குழந்தை இல்லை என்பதற்கு கதையின் நாயகி சுமியினூடாகக் காட்டியுள்ளீர்கள், பின்னர் இறுதி அங்கத்தில் நாயகனில் தவறு உள்ளது என்று காட்டியுள்ளீர்கள்.

நானும் ஒரு ஆண் தான், ஆனாலும் காலதி காலமாகப் படைக்கப்படும் எமது இலக்கியங்களில் உள்ளதை விட கொஞ்சம் மாறுதலாக, ஆரம்பத்திலிருந்தே ஆணில் தவறு உள்ளது போல எழுதியிருந்தால், பெண்ணை இவ் இலக்கியத்தினூடாக உயர்ந்த இடத்தில் காட்டியிருக்கலாம். ஒரு காவியம் படித்தது போன்ற உணர்வு. நன்றிகள். தொடர்ந்தும் நிறையக் கதைகளை மாறுபட்ட சிந்தனையில் தர வாழ்த்துகிறேன். இந்தக் கதை கொஞ்சம் நீண்டு விட்டது. எதிர்காலத்தில் கதையின் அளவிலும் கவனம் எடுப்பீர்கள் என உங்களின் கதாரசிகர்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

ADHI VENKAT said...

நல்ல முடிவு. விசுவின் விளக்கத்திற்கு சரியான பதில் கொடுத்திருக்கிறாள் சுமி. நல்ல துணையை தேடிக் கொண்டு விட்டாள். நிறைய கதைகளை எழுத வாழ்த்துகள்.

உடல்நிலை சரியில்லாததால் இரண்டு நாட்களாக வலை பக்கம் வரவில்லை. உங்கள் விசாரிப்புக்கு நன்றி.

சாகம்பரி said...

அழகான கதை. அருமையான நடை. நிமிர்ந்து நிற்கும் பெண்களை பாரதியைப் போலவே எனக்கும் பிடிக்கும். தொடருங்கள்....

சாகம்பரி said...

அழகான கதை. அருமையான நடை. நிமிர்ந்து நிற்கும் பெண்களை பாரதியைப் போலவே எனக்கும் பிடிக்கும். தொடருங்கள்....

Post a Comment