பிப்ரவரி மாதத்தில் வை மு கோதைநாயகி அம்மாளைப்

இவரை பற்றி எழுதியிருப்பவர் புருஷோத்தம் யஷ்வந்த் தேஷ்பாண்டே.
பற்றி "அம்மாளைத் தந்த அம்மாள்" என்ற பதிவு ஒன்று போட்டிருந்தேன்.
சமீபத்தில் அதை படித்த சக பதிவர் கபீர் அன்பன் அவர்கள் 'இந்திய இலக்கியச் சிற்பிகள்' புத்தக வெளியீட்டாளர் யார் என கேட்டு
பின்னூட்டமிட்டிருந்தார்.
அதன் விளைவே இந்த பதிவு.
உண்மையில் "இந்திய இலக்கியச் சிற்பிகள்" என்ற புத்தகம் வை மு கோதைநாயகி அம்மாளை பற்றி மட்டுமான ஒரே ஒரு புத்தகம் மட்டும் அன்று.
"இந்திய இலக்கியச் சிற்பிகள்" என்ற தலைப்பில் பல புத்தகங்கள்
வெளியிட பட்டுள்ளன.ஒவ்வொன்றும் ஒவ்வொரு இலக்கிய
ரீதியானவர்களைப் பற்றிய அற்புதமான பொக்கிஷங்கள்.
இதன் வெளியீட்டாளர்கள் சாகித்ய அகாதமி,எல்டாம்ஸ் ரோட், தேனாம்பேட்டை.இதன் கிளைகள் மும்பையிலும் டெல்லியிலும் கூட உள்ளது.
"இந்திய இலக்கியச் சிற்பிகள் " என்ற தலைப்பில் மீரா பாய்,
சரோஜினி நாயுடு, பங்கிம் சந்திர சட்டர்ஜி,ஈஸ்வர் சந்திர வித்யா சாகர்,
கம்பர், பாண பட்டர், கபீர்,ஜெய தேவர்,ராஜா ராம் மோகன் ராய்,
ஸ்ரீ அரவிந்தர்,நம்மாழ்வார்,மாணிக்க வாசகர் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது.
ஒவ்வொருவரை பற்றியும் ஒவ்வொரு எழுத்தாளர் எழுதிய தனி தனி
புத்தகங்கள்.
இந்த வரிசையில் நான் படித்து வியந்த ஐந்து புத்தகங்களின்
இலக்கியச் சிற்பிகளையும் அவர்களை பற்றி எழுதிய எழுத்தாளர்களின் பெயர்களையும் கீழே குறிப்பிட்டிருக்கிறேன்.இது இன்னும் பிறரை படிக்க
தூண்டலாம் என்பதற்காகத்தான் இந்த பதிவு.
1 . ஹேமச்சந்திர பரூவா -
இவர் அஸ்ஸாம் இலக்கியத்தின் தந்தையாக கருதப் படுபவர்.
இவரைப் பற்றி எழுதிய எழுத்தாளர்- ஐதீந்த்ரநாத் கோஸ்வாமி.
இவர் சிறந்த திறனாய்வாளர்,வாழ்க்கை வரலாற்று ஆசிரியர் மற்றும் கட்டுரையாளர் ஆவார்.
2 .ஞான தேவர் - இவர் மராட்டிய உலகின் சிறந்த இலக்கியவாதி.

இவரை பற்றி எழுதியிருப்பவர் புருஷோத்தம் யஷ்வந்த் தேஷ்பாண்டே.
இவர் ஒரு சிறந்த நாவலாசியர் மற்றும் சிந்தனையாளர் ஆவார்.
1962 ல் சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.
3 . பம்மல் சம்பந்த முதலியார்- சிறந்த நாடகக் கலைஞர்
இவரை பற்றி எழுதியவர் ஏ என் பெருமாள்.இவர் சம்பந்த முதலியாரின்
நாடகங்களைப் பற்றிய ஆராய்ச்சிக்காக கலைமாமணி விருதும் டாக்டர் பட்டமும் பெற்றவர்.
4 . மகரிஷி தேவேந்திரநாத் தாகூர்- இவர் பெங்காலியில் பல
சமய நூல்களை எழுதியுள்ள ஒரு இலக்கியவாதி.
இவரைப் பற்றி எழுதி இருப்பவர் நாராயண் சௌத்ரி.
நாராயண் சௌத்ரி பற்றிய குறிப்புகள் எதிலும் காணப்படவில்லை.
5 . கோவர்த்தன் ராம்- இவர் குஜராத்தி மொழியின் சிறந்த இலக்கியவாதி
இவரைப் பற்றி எழுதியவர் ரமன்லால் ஜோஷி.
இவர் குஜராத்தின் அகமதாபாத் யுனிவர்சிட்டியின் பேராசிரியர்.
சிறந்த திறனாய்வாளர்.திறனாய்வுத் துறையில் மட்டும் பன்னிரண்டு
புத்தகங்கள் எழுதி இருப்பவர்.
இந்திய இலக்கியச் சிற்பிகள் என்ற தலைப்பில் நம் நாட்டின்
பொக்கிஷ இலக்கிய கலைஞர்களை நாம் அறிய வேண்டிய அவசியத்தை
உணர்ந்து புத்தக களஞ்சியங்களை சாகித்ய அகாதமி வெளியீட்டாளர்கள்
வெளியிட்டுள்ளனர்.
இவற்றை படித்து இவர்களை அறிய நமக்குத்தான் பொறுமை ஆர்வம் நேரம் எல்லாம் வேண்டும்.
விருப்பமிருப்பவர்கள் அறிந்து கொள்ளவே இந்த பதிவு.
மற்றவர்களுக்கு இது கொஞ்சம் நகர்த்த வேண்டிய பதிவு.
நன்றி
20 comments:
இந்திய இலக்கிய சிற்பிகள் என்ற தலைப்பில் நம் நாட்டின்
பொக்கிஷ இலக்கிய கலைஞர்களை நாம் அறிய வேண்டிய அவசியத்தை
உணர்ந்து புத்தக களஞ்சியங்களை சாகித்ய அகாதமி வெளியீட்டாளர்கள்
வெளியிட்டுள்ளனர்.
இவற்றை படித்து இவர்களை அறிய நமக்குத்தான் பொறுமை ஆர்வம் நேரம் எல்லாம் வேண்டும்.
.....உண்மையில் இவர்களை பற்றி மேலும் தெரிந்து கொள்ள ஆவலைத் தூண்டுகிறது. வரலாற்றை மதித்து போற்ற வேண்டியதன் அவசியத்தை உணர்த்தி இருக்கும் பதிவு.
பகிர்வுக்கு நன்றிங்க.
சிறிய கேள்விக்கு ஒன்றுக்கு ஒரு பதிவையே பதிலாகக் கொடுத்து விட்டீர்கள். அருமையான தகவல்.
அவசியம் வாங்கிப் படிக்க வேண்டிய பொக்கிஷங்கள்.
தேவேந்திரநாத் தாகூர் ரவீந்திரநாத் தாகூர் அவர்களின் தந்தையார் ஆவார். அவருக்கு ஆன்மீகத்தில் மிக்க நாட்டமிருந்தது என்பதை ரவீந்திரரின் எழுத்துகளில் படித்திருக்கிறேன். ஆனால் அவரும் தனிப்பட்ட முறையில் ஒரு இலக்கியவாதி என்பது அறிந்திராத தகவல்.
மிக்க நன்றி
//இவற்றை படித்து இவர்களை அறிய நமக்குத்தான் பொறுமை ஆர்வம் நேரம் எல்லாம் வேண்டும்.
///
சரியா சொன்னீங்க
நல்ல அறிமுகங்கள்...
ராஜி மேடத்துக்கு இலக்கியவியாதி புடிச்சிடுச்சி:-)
ஜஸ்ட் ஜோக்கிங். நல்ல பதிவு.
இந்த ஐந்து இலக்கியவாதிகளின் புத்தகங்கள் பெயரும் எழுதுங்களேன்
அருமையான தொரு வரலாற்று நாயகர்கள் பற்றிய பதிவு. ஆர்வமும், படிக்கப் பொறுமையும் உள்ள யாராவது ஒருத்தருக்காவது நிச்சயம் பயன்படும்.
//2 .ஞான தேவர் - இவர் மராட்டிய உலகின் சிறந்த இலக்கியவாதி.
(இவரது புகைப்படம் கிடைக்கவில்லை)
இவரை பற்றி எழுதியிருப்பவர் புருஷோத்தம் யஷ்வந்த் தேஷ்பாண்டே. இவர் ஒரு சிறந்த நாவலாசியர் மற்றும் சிந்தனையாளர் ஆவார்.
1962 ல் சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.//
ஞானேஸ்வரர் என்ற ஒரு மஹானைப் பற்றி, (பக்த துக்காராம் போல மராட்டிய மாநிலத்தில் வாழ்ந்தவர்) உபன்யாஸக் கதை கேட்டிருக்கிறேன்.
அவரின் பிருந்தாவனம் கூட புனேவுக்கு அருகில், 15 கிலோ மீட்டரில் ”தேகு” என்ற மிகச் சிறிய குக்கிராமத்தில் உள்ளது.
இந்த தேகு என்ற குக்கிராமத்தில் தான் பாண்டுரங்க பக்தரான துக்காராம் அவர்கள், வெகு சமீபத்தில் (ஒரு 300 ஆண்டுகளுக்கு முன்பு) வாழ்ந்ததாக சரித்திரம் உண்டு.
நீங்கள் குறிப்பிட்டுள்ள அந்த ஞான தேவரும், நான் சொல்லும் ஞானேஸ்வரரும் ஒன்று தானா என்று எனக்குத் தெரியவில்லை.
மிகச் சிறந்த புகழ்பெற்ற எழுத்தாளர்களைப் பற்றி படத்துடன் பல தகவல்களைச் சொல்லியுள்ள தங்களுக்கு என் வாழ்த்துக்கள். தொடரட்டும் இது போன்ற தங்களின் இலக்கியப்பணிகள்.
பயனுள்ள நல்ல பதிவு ராஜி. தொடரட்டும் இலக்கியப்பணி
பயனுள்ளநல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்
ஆரம்பத்தில் பதிவு போடும் பொழுது ஞான தேவரின் புகைப்படம் கிடைக்கவில்லை.
தற்போது இணைத்துள்ளேன்
@சித்ரா
நன்றி
@கபீர் அன்பன்
தேவேந்த்ரநாத் தாகூர் இலக்கியவாதி மட்டுமல்ல.
சிறந்த சொற்பொழிவாளரும் கூட.
இவர் குடும்பத்தில் இவர், மற்றும் ரவீந்த்ரநாத் தாகூர்
மட்டுமல்லாது இவரது பிற புதல்வர்களான த்விஜேந்த்ரநாத்,
ஜ்யோதீந்த்ரநாத் மற்றும் புதல்விகள் சௌதாமினி,ஸ்வர்ணகுமாரி ஆகியோரும்
எழுத்திலக்கியத்தில் பங்கு பெற்றவர்களே
(ஹூம்.....! கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும்னு சும்மாவா சொன்னாங்க!)
@எல் கே
நன்றி
@மாதவி
thank u
@கருண்
@கோபி ராமமூர்த்தி
ஜோக்குனு சொன்னாதான் புரியும்னு முடிவே பண்ணிட்டீங்களா?
ஆமாம் சார்.ஆனாலும் என் வாழ்நாளெல்லாம் என்ன படிச்சாலும் எத்தனை புத்தகம்
படிச்சாலும் நீங்க படிச்சு முடிச்சிருக்கற அளவை reach பண்ணவே முடியாது
போலருக்கே.
என்ன இருந்தாலும் இந்த இலக்கியவியாதி
உங்க அளவுக்கு எனக்கு முத்தாதுதான் சார்
@ராம்ஜி யாஹூ
1. ஹேமச்சந்திர பரூவா--
1.Axomiya Byakaran (assamese grammer)
2.kaniya kiran(1861)
(குடிபோதை அடிமைத்தனத்தை மையக் கருவாகக் கொண்டது)
2.ஞான தேவர்-- 1. ஞானேஸ்வரி(கீதை உரை)
2.அம்ருதானுபவம்
3.சங்கதேவ பசஷ்டி
3.பம்மல் சம்பந்த முதலியார்--1.மனோஹரா
2.சாரங்கதாரா
4.மஹரிஷி தேவேந்த்ரனாத் தாகூர்-- 1.பிரம்மோதர்மம்
2.ஆத்மதத்வவித்யா
5.கோவர்த்தன்ராம்-- 1.ஸ்னேஹ் முத்ரா
2. சரஸ்வதி சந்த்ரா
3.classical poets of gujarat
@வை கோபாலகிருஷ்ணன்
ஆமாம் சார்.அவரேதான் இவர்.இவரேதான் அவர்.
புகைப்படம் இணைத்து விட்டேன்
@வித்யா சுப்ரமணியம்
நன்றி மேடம்.எங்க பக்கம் வரதுக்கு பேரக் குழந்தைகள்
கிட்ட அனுமதி வாங்கியாச்சா?
@ரமணி
நன்றி
நீங்கள் பதிவிட்டபடி யாதோவை
மீண்டும் பதிவு செய்துள்ளேன்
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி
(பயங்கரமான படிப்பாளியா இருக்கீங்களே !)தெரியாத புது விசியங்களை பகிர்ந்துருக்கீங்க
பொக்கிஷ இலக்கிய கலைஞர்களை நாம் அறிய //
அவசியம் படிக்கும் ஆவலைத்தூண்டும் பதிவு.
அவசியமான அறிமுகங்கள்..
//வெளியிட பட்டுள்ளன//
வெளியிடப்பட்டுள்ளன
//கருதப் படுபவர்//
கருதப்படுபவர்
தேவையற்ற இடைவெளிகள், பிழை இன்றி எழுதவும்.
தமிழ் காப்போம்.
@ரமணி
என் வேண்டுகோளுக்கிணங்கி மீள்பதிவிட்டதற்கு
நன்றி
@ஆச்சி
அதெல்லாம் இல்லீங்க.ஏதோ கொஞ்சம் படிச்சதை
பகிர்ந்து கொண்டேன்.அவ்வளவுதான்.
கருத்துக்கு நன்றி
@இராஜராஜேஸ்வரி
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி
@ரிஷபன்
நன்றி
@தமிழ் ஈட்டி
தேவையற்ற இடைவெளிதான்,ஆனால்
பிழையினால் அல்ல.நான் தட்டச்சு செய்யும் பொழுது
இருப்பது, வெளியிடும் பொழுது தேவையில்லாத இடங்களில்
வார்த்தைகள் துண்டிக்கப்பட்டு காணப்படுகிறது.
என்னுடைய அலைன்மென்ட் சரியாக இல்லை என முன்பே ஒருமுறை
திரு சி பி செந்தில்குமார் அவர்கள் கூறியுள்ளார்.அதை எப்படி சரி செய்வது
என்றும் அவர் கூறியிருந்தார்.எனினும் எனக்கு அதை சரி செய்ய தெரியவில்லை.
எழுதுவதில் பிழை என்றால் சரி செய்யலாம்.கணிணியைக் கையாளும் முறையில்
சில தவறுகள் நேர்ந்தால் அதை சரி செய்வது கொஞ்சம் கடினம்தான்.ஏனென்றால்
எல்லோருமே ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து தமிழில் மாற்றுகிறோம்.
எதை அழுத்தினால் என்ன தமிழ் எழுத்து வரும் என்பது புரிபடவே நேரம் எடுக்கிறது
என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது
சுட்டிக்காட்டியமைக்கு நன்றி
படிக்க வேண்டிய புத்தகங்கள். அறிமுகங்களுக்கு நன்றி
படிக்க வேண்டியது எவ்வளவோ இருக்கிறது என நினைத்தால் , பிரமிப்பாகவும் இருக்கிறது.,உங்கள் மேல் சற்று பொறாமையாகவும் இருக்கிறது..
நல்ல பதிவு...
நல்ல பல மனிதர்களையும் அவர்களை பற்றிய தகவல்களையும் தெரிந்து கொண்டேன்.
Post a Comment