முன் கதைக்கு பகுதி 1 படிக்கவும்
பகுதி 2
பகுதி 2
"போகப் போக எல்லாம் சரியாயிடும்னு பாத்தா நீ இப்பிடி இன்னும் பிடிவாதம் பிடிக்கறது நல்லதுக்கில்லைடா"
'ணங்" கென்று காபி தம்ளரை வைத்து விட்டு திரும்பிய சுந்தரா அங்கு
சுமதியைப் பார்த்ததும் ஏற்பட்ட திகைப்பை மறைத்து, "என்ன சுமதி!
காய் வாங்கிண்டு வந்துட்டயா? வா! வந்து நறுக்கி வை" என்றாள் எதுவுமே
நடக்காதது போல.
விசுவோ இவளைக் கண்டதும் விருக்கென்று உள்ளே சென்றான்.
அதிர்ச்சி நீங்காதவளாக மெதுவாக சென்று காய்கறிக் கூடையை
உள்ளே வைத்தவள் சுந்தராவை பார்த்து, "என்ன அத்தை!இதெல்லாம்?"
என்றாள் கலங்கிய கண்களுடன்.
"எதெல்லாம்?" அசராமல் கேட்டாள் சுந்தரா
இப்போ நீங்க ரெண்டு பேரும் பேசிண்டு இருந்தீங்களே நான் வரும்போது?"
"அதுக்கென்ன இப்ப?"
"அவருக்கு இஷ்டமில்லாமலா என்னை பண்ணி வச்சீங்க?"
"என்ன பெருசா இஷ்டம்?கல்யாணம் பண்ணிவச்சா புருஷனை மயக்கி கைக்குள்ள போட்டுக்க உனக்கு துப்பில்லைன்னு சொல்லு.இப்பிடி எல்லாம் நடக்கும்னு நான் கண்டேனா? சாமர்த்தியம்
இல்லாதவ எல்லாம் கேள்வி கேக்க என்ன யோக்யதை இருக்கு?"
இல்லாதவ எல்லாம் கேள்வி கேக்க என்ன யோக்யதை இருக்கு?"
"நான் என்ன செய்ய முடியும் அத்தை?அவர் என் கிட்ட முகம் கொடுத்து கூட பேச விரும்பல" பொங்கிய அழுகையை அடக்கியபடி கூறினாள் சுமதி.
"எல்லாம் என் தலையெழுத்து.ஒண்ணுத்துக்கும் உபயோகப் படாதவளை
கட்டிண்டு மாரடிக்கணும்னு. இத பாரு, இப்பிடி கண்ணைக் கசக்கிண்டு நிக்கறதுக்கு பதிலா அவன் மனசை எப்பிடி மாத்தலாம்னு உருப்படியா
யோசனை பண்ணி நடந்துக்கோ சொல்லிட்டேன்"
அன்றிலிருந்து வாழ்க்கை நரகமாக பட்டது.காலையில் எழுப்பும்போதே
சனியனே! என்று எரிந்து விழுவான்.அவள் கையால் உண்ண மறுத்தான்.
மொத்தத்தில் இந்த இரண்டு வருட கால வாழ்வில் சம்பளமில்லாத
வேலைக்காரி போல் நடமாடிக் கொண்டிருந்தாள்.
"கிர்ரென்று தலைமாட்டில் கதறிய அலாரத்தை தலையில் தட்டி
சமாதானம் செய்து எங்கே அந்த சத்தத்தில் விசு எழுந்து கத்துவானோ என்ற பயத்தில் கட்டிலை திரும்பிப் பார்த்தாள்.
நல்லவேளை,எழுந்து கொள்ளவில்லை என்று எண்ணியவாறு மணியைப் பார்த்தாள்.
ஐந்தைக் காமித்தது கடிகாரம்.
சத்தம் செய்யாமல் மெதுவாக வாசல் தெளிக்க வந்து கதவைத் திறந்தாள்.
சில்லென்று மார்கழி காற்று முகத்தில் பட இந்த இதமாவது வாழ்க்கையில்
அனுபவிக்க முடிகிறதே என்று நினைத்தவாறே தண்ணீரைத் தெளித்து கோலமிடும் சமயம் சிறு முனகல் சப்தம் கேட்க திரும்பிப் பார்த்தாள்.
திண்ணையில் ஏதோ அசைவு தெரிந்தது.அருகில் சென்று உற்றுப்
பார்த்தவள் ஒருகணம் அதிர்ந்தாள்.மறுகணமே அள்ளி கையில் எடுத்துக்
கொண்டு உள்ளே ஓடோடி வந்தவளை சுந்தரா முறைத்துக்
கொண்டு நிற்க,"அத்தை! இங்கே பாத்தீங்களா? "என்றாள் உற்சாகமாய்.
"என்ன பாத்தீங்களா? கையில என்ன?" என்று சுந்தரா கேட்க சுமதியின் கையில், தன்னைச் சுற்றியிருந்த வெள்ளைத் துணியை உதைத்து
'ங்கா' என்ற குரலோடு நெளிந்தது பச்சிளம் குழந்தை ஒன்று.
தொடரும்......
18 comments:
தொடர்கதை எழுத்தாளர்களிடம் உள்ள
சூட்சுமம் உங்களிடம் நிறைய இருப்பது தெரிகிறது
மிகச் சரியான இடத்தில் தொடரும் போடுவதில்
அது தெளிவாகத் தெரிகிறது
வாக்கியங்களை மட்டும் சரியாக அமைத்தால்
படிப்பவர்களுக்கு கொஞ்சம் சிரமமில்லாமல் இருக்கும்
தொடர் சிறப்பாகப் போகிறது
தொடர வாழ்த்துக்கள்
"ங்கா.."..... சூப்பர்...
அது ஆம்பளைப் பிள்ளையா? பொம்பளைப் பிள்ளையா? பொம்பளைப் பிள்ளையா இருந்தா ஆண்டாள்ன்னு பேர் வைங்க... கதை இன்னும் நல்லாப் போகும்..
நல்லா இருக்குங்க.. வாழ்த்துக்கள்.. ;-)
படிச்சாச்சு. அடுத்த பகுதி எப்போ?
இன்றைக்கும் உங்கள் கார் டிரைவிங் ஸ்டைல் (முட்டாமல் மோதாமல் அழகாகக் கதையை ஓட்டிய நளினம்) அருமை.
தலைப்புக்கேற்ற “துணை” யொன்று சுமதிக்குக் கிடைத்து விட்டது நல்லதொரு திருப்பம்.
தொடரட்டும். வாழ்த்துக்கள். ஆவலுடன் அடுத்த பகுதிக்காகக் காத்திருக்கிறோம். அன்புடன் vgk
ஆஹா விசு படம் மாதிரி போகுதே கதை ???? கொஞ்சம் பெருசாதான் போடறது
( அதை யார் சொல்றதுன்னு கேக்கறீங்களா ??)
wishes for 100 followers
100 followers!!!!!!! Congratulations !!!!!
100 ஃபாலோயர்ஸ்க்கு வாழ்த்துக்கள்...
“துணை” கதை விறுவிறுப்பாக செல்கிறது...
முடிவில் வரும் அந்த “ட்விஸ்ட்”காக வெயிட்டிங்..
100க்கு வாழ்த்துக்கள். துணையாக குழந்தை கிடைத்து விட்டதா!
அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன்.
கல்யாணம் பண்ணிவச்சா புருஷனை மயக்கி கைக்குள்ள போட்டுக்க உனக்கு துப்பில்லைன்னு சொல்லு.இப்பிடி எல்லாம் நடக்கும்னு நான் கண்டேனா? சாமர்த்தியம்
இல்லாதவ எல்லாம் கேள்வி கேக்க என்ன யோக்யதை இருக்கு?"//
இது தான் எங்களின் சமூகங்களால் காலாதி காலமாகப் பெண்களை அடக்கவும், பெண்களின் வாய்களை மூடவும் ஏவும் அஸ்திரங்கள். இதனை நீங்கள் கதையினுள் நுழைத்திருப்பது இன்னும் சிறப்பு!
என்ன பாத்தீங்களா? கையில என்ன?" என்று சுந்தரா கேட்க சுமதியின் கையில், தன்னைச் சுற்றியிருந்த வெள்ளைத் துணியை உதைத்து
'ங்கா' என்ற குரலோடு நெளிந்தது பச்சிளம் குழந்தை ஒன்று.//
கதையின் திருப்பு முனை இது தான். இவ் இடத்திலிருந்து கதையின் சுவாரசியமும், வேகமும் அதிகரிக்கப் போவது என்பது உண்மை. கதையை நகர்த்துக்கள்!
அட இரண்டாவது பகுதியில், நல்ல இடத்தில் தொடரும் போட்டு முடித்து விட்டீர்கள்! அப்பத்தானே அடுத்த பகுதிக்கான காத்திருப்பு அதிகரிக்கும்! தேர்ந்த உங்கள் நடை நன்று!
கதையில் விறுவிறுப்பு ஆரம்பமாயிடுச்சு! அடுத்த பகுதியை சீக்கிரமா போடுங்க!
கை தேர்ந்த எழுத்தாளராய் இருக்கிறீர்கள் .
தொடர் அருமையாகப் போகிறது.
கணவன் மனைவி அன்யோன்யமா இருப்பதற்கு வழி சொல்லும் மாமியார் பரவாயில்ல,
அடுத்த பகுதிக்கு
எதிர்பார்ப்புடன்
@ALL
தொடர்ந்து ஊக்கமளித்து எனக்கு
ஆதரவு அளிக்கும் சக பதிவர்கள் நூறு பேர்களுக்கும்
எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
@ரமணி
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்
என் பதிவில் அலைன்மென்ட் சரியாக இல்லை.எனக்கு அதை
சரி செய்ய தெரியவில்லை.அதனால் வாக்கியப் பிரயோகம் டைப் செய்யும்போது
சரியாக அமைத்தாலும் வெளியிடும்போது இவ்வாறே அமைகிறது.அது
பார்ப்பதற்கும் படிப்பதற்கும் நன்றாகவே இல்லை.இதை எப்படி சரி செய்வது என தங்கள் உட்பட
யாராவது தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்கும்,கருத்துக்கு நன்றி சார்
@ஆர் வி எஸ்
ஆண் குழந்தையா பெண் குழந்தையான்னு இன்னிக்கு தெரிஞ்சுடும் வந்து பாருங்க
நன்றி
@கோபி ராமமூர்த்தி
இன்று
@வை கோபாலகிருஷ்ணன்
நன்றி சார்.உங்கள் ஊக்கம்தான் காரணம் சார்
@எல் கே
கருத்துக்கு நன்றி.அடுத்த பகுதியை கொஞ்சம் பெருசா போட்டுடறேன் சார்
வாழ்த்துக்கு நன்றி
@சித்ரா
வாழ்த்துக்கு நன்றி சித்ரா
@ஆர் கோபி
வாழ்த்துக்கு நன்றி,தொடருங்கள்
@கோவை2தில்லி
வாழ்த்துக்கு நன்றி ஆதி
அடுத்த பகுதி இன்று
@நிரூபன்
நன்றி.
@வெங்கட் நாகராஜ்
நன்றி சார்,இன்று அடுத்த பகுதி
@மாதவி
அப்பாடி! மாதவியை முதல் பகுதில காணோமே.மாதவி
வராமலே தொடர் முடிஞ்சுடுமோன்னு கவலையா இருந்தது.
நல்லவேளை! வந்துட்டீங்க
@ சிவகுமாரன்
நன்றி சார்.நூறாவது ஆளாய் வ்ந்து சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி
@திருமதி பி எஸ் ஸ்ரீதர்
இன்னும் காணோமேன்னு நினைச்சேன் வந்துட்டீக.
இன்னைக்கு அடுத்த பகுதி.வந்துருங்க
நன்றாக இருக்கிறது.
முதல் பகுதி படிச்ச சூட்டோடயே ரெண்டாவதுபகுதியும் படிச்சாச்சு. இண்ட்ரெஸ்ட்டிங்க்.
Post a Comment