இது எனது ஐம்பதாவது பதிவு. எனவே இந்த பதிவு எனது எண்ணங்கள் அடங்கிய பதிவாக இல்லாமல் உலக ஷேமத்திற்காக நமக்கு வரமாக
இறைவன் அருளிய மகானின் உயரிய நெறிகள் கொண்ட பதிவாக
அமைக்க எண்ணி இதனை பகிர்கிறேன்.மகான்களைப் பற்றி எழுதவோ
பேசவோ கூட ஒரு தகுதி வேண்டும்.ஆனால் இந்த பகிர்வை
எனது பாக்கியமாக நான் எண்ணுகிறேன்.இப்பதிவை ஸ்ரீ காஞ்சி மகா பெரியவாளின் அனுக்ரஹத்துடன் துவங்குகிறேன்.
ஸ்ரீ காஞ்சி மகா பெரியவாளின் அற்புத தத்துவம் சகலத்திடமும் சமமான
அன்புதான்.அவரது சாஸ்வத சத்யமான அன்புதான் அவரை
உலக நாடுகளின் பேரவைக்கு "மைத்ரீம் பஜத" என்ற கீதத்தை அருளச்
செய்தது.
சகல நாடுகளுக்கும் அவர் வழங்கிய இந்த கீதம் மக்களுக்கு மற்றுமோர் கீதோபதேசம்.
மறைந்த ஸ்ரீமதி எம் எஸ் சுப்புலக்ஷ்மி அம்மாள் அவர்களின் இசைப்பணிக்கும் ,இசையின் மூலம் இறைப்பணி மற்றும் உலகப்பணிக்கும் உலக நாடுகளின் முன் ஒரு நிகழ்ச்சி ஒரு விஜயதசமி நன்னாளில் 1966 , அக்டோபர் மாதம் 23 -ம் தேதி ஏற்பாடாயிற்று.அவரது சார்பில் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு
செவி மடுத்து ஸ்ரீ மகா பெரியவாள் உலக சபைக்கு ஒரு ஆசி கீதம்
இயற்றினார்.இன்று பள்ளிகளிலும் மற்றவர்களுக்கும் இது ஒரு
வழி நடத்தும் கீதமாயிற்று.
"மைத்ரீம் பஜத அகில ஹ்ருத் - ஜேத்ரீம்
ஆத்மவதேவ பராநபி பஷ்யத
யுத்தம் த்யஜத, ஸ்பர்தாம் த்யஜத
த்யஜத பரேஷ்வக்ரமம்-ஆக்ரமணம்
ஜநநீ ப்ருத்வி காமதுகாஸ்தே,
ஜநகோ தேவ சகல தயாளு:
தாம்யத, தத்த, தயத்வம் ஜநதா:
ச்ரேயோ பூயாத் சகல ஜநாநாம்.
( அனைத்து இதயங்களையும் வெல்வதான அன்பை பயிலுங்கள்,
அன்னியர்களையும் தன்னிகராகக் காணுங்கள்.
போரினை விடுங்கள், போட்டியை விடுங்கள்.
பிறனதை பறிக்கும் பிழையை விடுங்கள்.
அருள்வாள் புவித்தாய், காமதேனுவாய்.
அப்பன் இறைவனோ அகில தயாபரன்.
அடக்கமும்,ஈகையும், தயையும் பயிலுங்கள்.
அனைத்து மக்களுக்கும் உயர்நலம் விளைவதாக)

மித்திரன் என்றால் நண்பன்.நட்பு என்பது பலனற்ற பிரியமாக மட்டுமே
முடிந்து விடாமல் நட்புக்குரியவனை நல்வழிப்படுத்திக் காக்கும் சக்தியாகவும் இருப்பதே "மைத்ரீ" .அதாவது ஒரு சத்குரு செய்யும் பணியே
மித்திரன் செய்கிறான்.ஆனால், உச்ச ஸ்தானம் ஏறாமல் ஒட்டி உடன்
நின்று செய்கிறான்.
ஆனால் நமது இந்த சத்குருவோ தாமே, உச்ச ஸ்தானம் பாராட்டாது
உடனொட்டி உறவாடி மித்ரனாக வாழ்ந்து காட்டியவர்.
இங்கு ஆண்டவனுடன் நம்மைச் சேர்க்கும் உபாயமான யோகமாக
நட்பை பயில வேண்டும் என்பதால் "பஜத" என்ற பதம் சேர்க்கப்பட்டுள்ளது.
"மைத்ரீம் பஜத" என்பது ஒரு தோழமை யோக மந்திரம்.
மித்திரன் என்பது சூரியனையும் குறிக்கும் ஒரு சொல்.உயிர்கள்
அனைத்திற்கும் ஸ்தூலத்தில் (உடம்பு) ஜீவ சாரம் அளித்து, சூக்ஷ்மத்தில்
அறிவுப் பிரகாசத்தையும் தூண்டி விடும் உற்ற நண்பன் அல்லவா?
பசுமரங்கள் நிழலளித்து உணவளித்து காற்றளித்து நம்மைக் காக்கும்
மித்ரனல்லவா?
ஜீவநதிகள் உயிர்களின் தாகம் தீர்த்து உடலை சுத்தம் செய்யும்
மித்திரனல்லவா?பாலமுது பொழியும் பசுக்கூட்டம் நமது மித்திரனே
இந்த மித்திரர்களான அனைத்தும் தன்னலமற்று பிறர் நலனுக்கென்றே இருப்பவை.
இந்த மித்திரர்களிடத்திலிருந்து எல்லாம் உயரிய நலன்களைப் பெறும்
நாம் நமக்குள்ளும் மித்திரர்களாய் இருந்து அனைவரும் உயரிய நலன் பெற பிரார்த்திப்போம்.
மகான்களின் ஆசிகள் பெறுவோம்.
"எந்தரோ மகானுபாவுலு
அந்தரிகி வந்தனமுலு
24 comments:
இன்று இப்போது அதிகாலை மணி 3.12 (ஸ்திர வாரம் - சனிக்கிழமை) திடுக்கிட்டு என்னை ஏதோ ஒரு சக்தி எழச்செய்தது. கம்ப்யூட்டரை ON செய்தேன். என் ஸத்குருநாதர் தரிசனம். ’மைத்ரீம் பஜத’ என்ற அடி எடுத்துக்கொடுத்த அந்த மஹாஸ்வாமிகளையும், தன் தேன் குரலால் அதை உலகுக்கு எடுத்துச்சென்ற எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்களையும் ஒரே இடத்தில் நான் நேரில், என் அன்புத் தாயாருடன் தரிஸித்த/சந்தித்துப்பேசிய நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது. கண்ணில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தோடியது. பகிர்வுக்கு நன்றி. இன்று அதிகாலை என்னைத்தட்டி எழுப்பி இந்தப்பதிவைப் பார்க்க வைத்தது யார் என்பது எனக்கு மட்டுமே உணரமுடிந்த ஒரு தெய்வானுக்கிரஹம். அந்த அனுக்கிரஹம், அன்பைப்பற்றி எழுதியுள்ள, என் அன்புக்குரிய ராஜி மூலம் கிடைக்க்ச்செய்திருக்கிறார் என்பது எனக்கு கூடுதல் மகிழ்ச்சியளிக்கிறது.
50 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள். இதற்கு மேல் எனக்கு இப்போது எதுவும் சொல்லவராமல் உள்ளது என் பரவச நிலை. அன்புடன் ...... vgk
உங்களுக்கு சகல க்ஷேமங்களும் ஏற்பட்டு, தீர்க்காயுஷுடன், தீர்க்க சுமங்கலியாக எல்லா வளங்களும், நலங்களும் ஏற்பட்டு மேன்மேலும் இதுபோன்ற நல்ல பல பதிவுகள் தந்து அன்பினால் அனைவரையும் கட்டிப்போடும் காந்த சக்தி ஏற்பட, இன்றும் என்னுடன் வாழும் என் வழிகாட்டியான, அந்த மஹாஸ்வாமிகள் அனுக்கிரஹம் செய்ய வேண்டுமாய் ப்ரார்த்திக்கிறேன்.
அன்புடன்,
vgk (ஸ்ரீ மஹாபெரியவாளின் மீளா அடிமை)
//ஆனால் நமது இந்த ஸத்குருவோ தாமே, உச்ச ஸ்தானம் பாராட்டாது, உடனொட்டி உறவாடி மித்ரனாக வாழ்ந்து காட்டியவர்.
மித்திரன் என்பது சூரியனையும் குறிக்கும் ஒரு சொல். உயிர்கள் அனைத்திற்கும் ஸ்தூலத்தில் (உடம்பு) ஜீவ சாரம் அளித்து, சூக்ஷ்மத்தில் அறிவுப் பிரகாசத்தையும் தூண்டி விடும் உற்ற நண்பன் அல்லவா?
ஜீவநதிகள் உயிர்களின் தாகம் தீர்த்து உடலை சுத்தம் செய்யும் மித்திரனல்லவா? பாலமுது பொழியும் பசுக்கூட்டம் நமது மித்திரனே
பசுமரங்கள் நிழலளித்து உணவளித்து காற்றளித்து நம்மைக் காக்கும் மித்ரனல்லவா?
இந்த மித்திரர்களான அனைத்தும் தன்னலமற்று பிறர் நலனுக்கென்றே இருப்பவை. இந்த மித்திரர்களிடத்திலிருந்து எல்லாம் உயரிய நலன்களைப் பெறும் நாம் நமக்குள்ளும் மித்திரர்களாய் இருந்து அனைவரும் உயரிய நலன் பெற பிரார்த்திப்போம்.//
வைரமென ஜொலிக்கும் இவ்வரிகளை கையாண்டுள்ள உங்கள் கைகளை கண்ணில் ஒத்திக்கொள்ள வேண்டுமென நினைக்கிறது என் மனது.
என் மனப்பூர்வமான இதயம் கனிந்த வாழ்த்துக்களும், ஆசிகளும் தங்களுக்கு. அன்புடன் vgk
ஐம்பதுக்கு வாழ்த்துக்கள் லாஜி
மகா பெரியவாளைப் பற்றியும் சுப்புலக்ஷ்மி அம்மைவைப் பற்றியும் பேச ஒரு தகுதி வேண்டும். அது எனக்கு கிடையாது .
அரை செஞ்சுரிக்கு வாழ்த்துக்கள்...
மென் மேலும் பல சதங்கள் அடிக்க ஆண்டவன் அனுக்ரஹம் புரியட்டும்... ;-))
50 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
தாங்கள் மேலும் மேலும் பல நல்ல படைப்புகளை வெளியிட்டு புகழின் உச்சிக்கே செல்ல என் அன்பான வாழ்த்துக்கள்.
ஐம்பதாவது பதிவிற்கு மனம் கனிந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
இனிமையான அமைதியான பாடல்.
ஐம்பதுக்கு வாழ்த்துக்கள்!
பாடலின் பொருள் தெரிஞ்சுக்கனும்ன்னு நினைச்சிட்டிருந்தேன்.. நன்றி ராஜி.
ஐம்பதுக்கு வாழ்த்துக்கள். மேன் மேலும் பல பதிவுகளை தந்து எங்களை மகிழ்விக்க இந்த தோழியின் மனமார்ந்த பிரார்த்தனைகள். புகைப்படங்கள் அருமை.
ஐம்பதாவது பகிர்வுக்கு வாழ்த்துகள். மேலும் பல பதிவுகள் எழுதவும் சகோ.
ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்
ஐம்பதாவது பதிவு அருமையான பதிவாக அமைந்தது,
வாழ்த்துக்கள்.
@வை கோபாலகிருஷ்ணன் சார்
ஆசிர்வாதத்திற்கும்,கருத்துக்களுக்கும்,வாழ்த்துக்களுக்கும் மிக்க
நன்றி சார்
@எல் கே
வாழ்த்துக்கு நன்றி
மகா பெரியவாளைப் பற்றியும் சுப்புலக்ஷ்மி அம்மாளைப் பற்றியும்
எழுத எனக்கும் எந்த தகுதியும் இல்லைதான்.ஆனால் இந்த கைகள்
எத்தனையோ பாவச்செயல்களை செய்திருக்க கூடும்.
இப்படி ஒரு பதிவு எழுதி கொஞ்சமாவது இம்மாதிரி பெரியவர்களைப்
பற்றி நினைத்து நம் மன அழுக்குகளையும்,கைகளின் கறைகளையும் தீர்த்துக்
கொள்ள முடியுமானால் அது என் பாக்கியம் என கருதியே இதை எனது
ஐம்பதாவது பதிவாக இணைக்க எண்ணினேன்.
@திருமதி பி எஸ் ஸ்ரீதர்
நன்றி
@ஆர் வி எஸ்
வாழ்த்துக்கும் ஆசிர்வாதத்துக்கும் நன்றி சார்
@வேடந்தாங்கல்-கருண்
வாழ்த்துக்கும் ஆசிகளுக்கும் நன்றி சார்
@இராஜராஜேஸ்வரி
பாராட்டுக்கும் வாழ்த்திற்கும் நன்றி
@மாதவி
கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி மாதவி
@முத்துலெட்சுமி
நன்றி
@கோவை2தில்லி & வெங்கட் நாகராஜ்
தம்பதி சமேதரா வந்து வாழ்த்தினதற்கும் ப்ரார்த்தனைக்கும் நன்றி
@ஷண்முகவேல்
நன்றி
@லக்ஷ்மிமா
கருத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றிமா
>>இது எனது ஐம்பதாவது பதிவு.
50க்கு வாழ்த்துக்கள்.. சராசரியாக ஒரு பதிவுக்கு 2 ஃபாலோயர்ஸ்.. ம் ம் நல்ல முன்னேற்றம்
வாழ்த்துக்கள்
மிக அருமை ராஜி மேடம். பேச ஒன்றுமில்லை.
எந்தரோ மஹானுபாவுலு...
ஓ, ஐம்பதாவது பதிவும் கூட. சிறப்பாகவே அமைந்துவிட்டது. இது போல இன்னும் பல மைல் கற்களை நீங்கள் கடந்து செல்வீர்கள். வாழ்த்துகள்
ஐம்பது ஐ நூறாக ஆயிரமாக வளர பெருக
என் மனங்கனிந்த நல்வாழ்த்துக்கள்
ராஜி...
தங்களின் ஐம்பதாவது பதிவு அசத்தலாக அமைந்தமைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
மகாப்பெரியவாளின் தரிசனம் கிட்டியது... ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு...
வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்..!
http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_24.html
தங்களின் இந்தப்பதிவு இன்று 24.12.2013 வலைச்சரத்தில் புகழ்ந்து பேசப்பட்டுள்ளது. இது தங்கள் தகவலுக்காக.
50= வது பதிவுக்கு பாராட்டுக்கள். வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்
Post a Comment