Thursday, March 3, 2011

ராஜபாளையம் ராஜி

பதிவர் ஆர் வி எஸ் சார்,  பெயர்க் காரணம் எழுத ரிலே ரேசுக்கு என் பெயரை
குறிப்பிட்டிருந்தார். சரி, நம்மளும் நம்ம பெயர் பெற்ற  கதையை எழுதி 
ஏதாவது பெயர்  வாங்க முடியுமா  பாக்கலாம்னு துறு துறுத்த கையை கட்டுப் 
படுத்த முடியாம எழுத ஆரம்பிச்சுட்டேன்

ஆதௌ கீர்த்தனாம்பரத்திலே பல வருஷங்களுக்கு முன்னாடி ஒரு சுப யோக சுப தினத்திலே  ராஜபாளையம்  என்கிற ஊரிலே ஒரு பௌர்ணமி 
தினத்திலே ஒரு அழகான(!!!!!) பெண் குழந்தை பிறந்தது.அந்த குழந்தை
பிறந்த அன்னிக்கு குழந்தையோட அப்பா கோயம்பத்தூரில் இருந்தார்.
அவருக்கு அன்று கோயம்புத்தூரை சேர்ந்த "ராஜலக்ஷ்மி மில்ஸ்" உரிமையாளருடன் சந்திப்பு இருந்தது.

சந்திப்பு முடிஞ்சதும் அந்த "ராஜலக்ஷ்மி மில்ஸ்" உரிமையாளர் அந்த சந்திப்பின் அடையாளமா ஒரு சாவிக் கொத்தை அந்த குழந்தையின் அப்பாவிற்கு பரிசளிக்க, குழந்தை பிறந்த தந்தியும் தந்தையை சென்றடைந்தது.ஒரே 
சமயத்தில் தந்தியும் சாவியும் ஒன்றாக கிடைக்கப் பெற்ற குழந்தையின் 
தந்தை தந்தியை படித்து மகிழ்ந்ததும் கையிலிருந்த சாவிக் கொத்தை 
பார்க்க அதில் "ராஜலக்ஷ்மி மில்ஸ்" என்று பொறிக்கப் பட்ட எழுத்துக்கள் கண்ணில் பட்டது.

ஊர் திரும்பிய தந்தை , ஒரு காலத்தில் தன் மகள் இந்த ராஜ்யத்தையே 
ஆளக் கூடும் என்று கனவு கண்டிருப்பார் போல.எனவே தந்தி கிடைத்த பொழுது கையிலிருந்த சாவிக் கொத்தில் பார்த்த "ராஜலக்ஷ்மி" என்ற 
திரு நாமத்தையே தன் திருக் குமாரத்திக்கு சூட்டி மகிழ்ந்தார்.

குழந்தையின் தாத்தா, பாட்டி, பௌர்ணமி தினத்தன்று பிறந்த பெண் குழந்தை 
என்பதால் பூர்ண லக்ஷ்மி என்று பெயர் வைக்கலாம் என கூற தந்தையோ
பின்னாளில் தன் மகளை எல்லோரும் பூர்ணம் என்று அழைப்பார்கள் 
என்று சொல்லி அந்த பெயரை தவிர்த்ததால் (நல்ல   வேளைடா சாமி!!) பெரியவர்கள்  வேறு பெயரும் ஏதாவது வைக்கலாம் என்று அபிப்ராயப் பட்டதில் குழந்தை பிறந்த தினத்தன்று 
இருந்த நட்சத்திரமான 'ரேவதி' என்ற பெயரும் ஏக மனதாக தேர்ந்தெடுக்கப் பட்டு அந்த பெயர் சூட்டப்பட்டது.

பின்னாளில் பள்ளியில் சேர்க்கும் பொழுது ரெஜிஸ்தரில் "ராஜலக்ஷ்மி" 
என்பதையே தந்தை கொடுக்க அந்த குழந்தைக்கு ஆதார பூர்வ பெயராக 
அதுவே நிலைத்தது

இப்ப உங்களுக்கு என்ன சந்தேஹம்?  அந்த  குழந்தை யாருன்னுதான?
சாட்சாத் அடியேன்தான்!!(இதுக்கா இத்தனை பில்ட் அப் குடுத்தனு தோணுதோ?)

பள்ளியில் நான் சேர்ந்ததும் ராஜலக்ஷ்மி என்று  கூப்பிட்டு நீட்டி முழக்க 
கஷ்டப்பட்டு என்னை பலர் 'ராஜி' ஆக்கி விட்டனர்.அந்த 'ராஜி'யையும் 
ஒழுங்கா சொல்லத் தெரியாமல் நான் 'லாஜி' ஆன கதை நீங்கள் அறிந்ததே.

மூன்று அக்காக்கள், நான்கு அண்ணாக்களுடன்  கடைக்குட்டியாக 
பிறந்த நான் எல்லோருக்கும் செல்லம் என்று ஆனதில் அப்பாவால்
சில சமயம் குட்டிம்மா என குழந்தையாக இருந்த பொழுது அழைக்கப் 
பட்டிருக்கிறேன்.

அதன் பின் விவரம் அறிந்த வயதாகும் பொழுது மற்றவர்கள் முன்னிலையில்
அப்படி அழைப்பதை நான்  விரும்பவில்லை  என்றறிந்ததும் நிறுத்தி 
விட்டார்(வருத்தப் பட்டிருப்பாரோ??)

திருமணத்திற்குப் பின் ஏதாவது சமயங்களில் கணவரின் முழுப் பெயரையும் 
என் பெயரின் பின் சேர்த்து எழுத வேண்டி வந்தால் அந்த பேப்பர் நுனி வரை
எழுத வேண்டி இருக்கும். "ராஜலக்ஷ்மி  வெங்கடக்ருஷ்ணன்" என்று 
எழுதி முடிக்கும் பொழுது அந்த வரி முடியும் இடத்தில்  பேப்பர் முடிந்திருக்கும். 


தந்தை சூட்டிய ராஜலக்ஷ்மி என்ற பெயருக்கேற்றால் போல் நான் எந்த 
ராஜ்யத்தையும் ஆளும் லக்ஷ்மியாக இல்லை.பிறர்  மீது எனது ஆளுமையை செலுத்தியதும் இல்லை.செலுத்த எண்ணியதும் இல்லை.எழுத்தை கையாளும் பெண்ணாக இருப்பதில் எனது தந்தைக்கு மகிழ்ச்சியே.

கஷ்டப்பட்டு வாழ்வில் முன்னுக்கு வந்து கஷ்டம் என்பதை  நான் 
அறியாத வண்ணம் வளர்த்தவர் என் தந்தை.என் மூத்த அக்காக்களும் அண்ணாக்களும் பட்ட கஷ்டங்கள் எதுவும் நான் படவில்லை.அதற்குள் அவர் உயர் பதவிகள்  பெற்று நல்ல நிலைக்கு வந்து விட்டதால் நான் ஒரு குறையுமின்றி வளர்ந்தேன்.

ராஜலக்ஷ்மி என்ற பெயர் சூட்டி கஷ்டம்,குறை என்பதையே 
அறிந்திராத பெண்ணாக என்னை வளர்த்த எண்பத்து ஐந்து வயதாகும் என் தந்தைக்கு இப்பதிவை நான் சமர்ப்பிக்கின்றேன் 


இந்த தொடர் எழுத்தான பெயர்க் காரணத்தை தொடர  சக பதிவர்கள் சிலருக்கு நான் அழைப்பு விடுக்கிறேன்.என் வேண்டுகோளை  கீழிருக்கும் பதிவர்கள் முன் வைக்கிறேன்.



நான் எழுதும்  பதிவுகளில் என்னத்த எழுதறாங்கன்னு 
நினைக்காம எண்ணத்தை என்னமா எழுதறாங்கன்னு ஊக்கம் தருபவர்.



என் பதிவுல முதல் பின் தொடர்பவரா வந்து மாட்டிக்கிட்டவர்.
மாட்டின பாவத்துக்கு எனக்கு இன்றும் நிறைய உதவிகள் செய்து வருபவர்.


புதுசா ஒரு பெண் பதிவர் வந்துருக்காங்களே என்ன ஏதுன்னு பார்ப்போம்னு 
வந்து பாத்துட்டு  நொந்து போனாலும் என் பதிவை தொடரும் ஒரு அப்பாவி.


பதிவுலகுக்கு வந்த புதுசுல இவங்க எனக்கு பின்னூட்டம் போட,
நான் இவங்க ப்ரோபைலையே பாக்காம இவங்களை மிஸ்டர்னு கூப்ட,
இவங்க பதறி போயி நான் மிஸ்டர் இல்லைங்க மிசஸ்  அப்டின்னு 
பரிதாபமா அனுப்பினாங்க.அதுக்கப்பறம்  நான்  வழிஞ்சது தனி கதை.


பதிவுலகத்துல என்னையும் ஒரு பெரிய பதிவர்னு நினைச்சு
என் பதிவுல நல்ல எழுத்துகளை எதிர்பாக்கறவங்க

என்னை ஊக்குவிக்கறவங்கள்ள  இவரும் ஒருத்தர்


என் வேண்டுகோளுக்கிணங்கி இவர்களை இதை தொடர அழைக்கிறேன்

37 comments:

Chitra said...

லாஜி, நீங்களும் பௌர்ணமி தான் பிறந்தீங்களா? அதான் நட்பில் உடனே கிளிக் ஆயிட்டோம். same moon! ஹா,ஹா,ஹா,ஹா....

மதுரை சரவணன் said...

peyar kaaranam arumai.. pakirvukku nanri.

வை.கோபாலகிருஷ்ணன் said...

இது ஒரு நல்ல பதிவு.

எனக்கு மிகவும் பிடித்த ஒரு சில பெண் குழந்தைகள் பெயர்களில் ராஜி என்பதும் ஒன்று.

என் மாமியார் பெயரும் ராஜலக்ஷ்மி என்பது தான். அவர்கள் மிகவும் நல்லவர்கள். எந்தப் பிரதி உபகாரமும் எதிர்பார்க்காமல், ஊரில் உள்ள அனைவருக்கும் தன்னால் முடிந்த அளவு சரீர ஒத்தாசைகள் செய்து எல்லோர் நெஞ்சங்களிலும் அன்பை விதைத்தவர்கள். அவர்கள் மறைந்தாலும் இன்றும் அவர்கள் புகழ் மறையாமல் அந்த கிராமமே அவர்களைக் கொண்டாடி வருகிறது.

//நான் எழுதும் பதிவுகளில் என்னத்த எழுதறாங்கன்னு நினைக்காம எண்ணத்தை என்னமா எழுதறாங்கன்னு ஊக்கம் தருபவர்.//

சிலரை முதன் முதலாகப் பார்த்த மாத்திரத்திலேயே என் மனது ஒரு எடை போட்டு மார்க் போட்டு இவர் இப்படிப்பட்டவராகத் தான் இருப்பார் என்று தீர்மானித்து விடுவதுண்டு.

பல சமயங்களில் அந்த என் கணிப்பு நான் நினைத்தபடியே மிகச் சரியாக அமைந்து விடுவதும் உண்டு.

அது போலத்தான் உங்களை உங்களின் புகைப் படத்திலும், எழுத்துக்களிலும் மட்டுமே பார்த்துள்ள எனக்கு இவர், மிகவும் நல்லவர், வல்லவர் போன்ற பாஸிடிவ் எண்ணங்களை ஏற்படுத்தியது.

அவற்றை எல்லாம் மீறி ஏதோவொரு பாச உணர்வையும் ஏற்படுத்தியது. எனக்கு ஒரு பெண் குழந்தை இருந்திருந்தால் ஒரு வேளை உங்களைப் போலவே உருவத்திலும், படைப்புக்களின் உருவாக்கங்களிலும் இருப்பாளோ என்றெல்லாம் ஏதேதோ கற்பனைகளை என் மனதில் ஏற்படுத்தியது என்பதே உண்மை.

இவ்வாறெல்லாம் நான் மட்டும் நினைத்தால் போதுமா, அதே போன்று தாங்களும் நினைத்தால் தானே, உரிமையுடன் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள முடியும் என்று நினைத்துத் தான், அமைதியாகவே எதையும் அதிகமாக அவசரப்பட்டு வெளிக்காட்டிக் கொள்ளாமலே இருந்து வந்தேன்.

இப்போது என் பெயரை முதன் முதலாகக் கொண்டு வந்து நிறுத்தி ஒரு அன்புக் கட்டளை இட்டு விட்டீர்கள், நானும் உங்களை உயர்வாகவே நினைக்கிறேன் என்று சொல்லுவது போல.

அதற்கு என் நன்றிகள். நிச்சயமாக பெயர் காரணம் மட்டுமல்லாமல் மேலும் ஒரு சில தகவல்களையும், குடும்பம், குழந்தைகள், ஒரு சில சாதனைகள், வேதனைகள் என எழுத நினைத்தால் பக்கம் பக்கமாக எழுதலாம்.

இருப்பினும் சுருக்கமாகவும் சுவையாகவும் இருக்க வேண்டும் என்பதால் மற்றவர்கள் முதலில் எழுதட்டும். பிறகு நானும் கட்டாயமாக எழுதுகிறேன்.

இது போல புதுமையாக ஏதாவது செய்ய வேண்டும் என்று தாங்கள் நினைப்பதே வெற்றிக்கான முதல் படியாகும். அதற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

எல் கே said...

லாஜி உங்க பெயர்க் காரணம் அருமை. ஏற்கனவே நான் கேட்டேன் , உங்க பதிவுகளின் அப்டேட் ரொம்ப லேட்டாதான் என் தேச்போர்டுக்கு வருது. என்னக் காரணம்?

ராம்ஜி_யாஹூ said...

ராஜி நீங்கள் ராஜபாளையமா , நான் ஸ்ரீ வில்லிபுத்தூராக இருக்கலாம் என்று அனுமானித்து இருந்தேன்

R. Gopi said...

\\Chitra said...
லாஜி, நீங்களும் பௌர்ணமி தான் பிறந்தீங்களா? அதான் நட்பில் உடனே கிளிக் ஆயிட்டோம். same moon! ஹா,ஹா,ஹா,ஹா.... \\

அதனால்தான் நீங்க ரெண்டு பெரும் ரொம்ப bright அப்படின்னு தோணுது எனக்கு:-)

Arun Ambie said...

//உங்க பதிவுகளின் அப்டேட் ரொம்ப லேட்டாதான் என் தேச்போர்டுக்கு வருது. என்னக் காரணம்?//
இராசபாளையத்திலிருந்து மெட்ராசுக்கு வரவேண்டாமா? எம்புட்டு தூரம்?

@ ராஜி!
சாவிக்கொத்தும் ராஜலக்ஷ்மியும் சேர்த்து ராஜசாவி இல்லைன்னா லக்ஷ்மிக்கொத்துன்னு பேர் வெச்சிருக்கலாம். வித்தியாசமா இருந்திருக்கும்!!

இராசபாளையத்துக்காரரா நீங்கள்?
சீல்தூர்க்காரருன்னு நெனச்சேன். Me too RJPM!!!

வை.கோபாலகிருஷ்ணன் said...

Gopi Ramamoorthy said...
\\Chitra said...
லாஜி, நீங்களும் பௌர்ணமி தான் பிறந்தீங்களா? அதான் நட்பில் உடனே கிளிக் ஆயிட்டோம். same moon! ஹா,ஹா,ஹா,ஹா.... \\

அதனால்தான் நீங்க ரெண்டு பெரும் ரொம்ப bright அப்படின்னு தோணுது எனக்கு:-)

அன்பு நண்பர் கோபி ராமமூர்த்தி அவர்களுக்கு,
பெளர்ணமி போலவே bright ஆக பளிச்சென்று ஒரு பின்னூட்டம் கொடுத்து அசத்திட்டீங்க! நினைத்து நினைத்து மகிழ்கிறேன். கையைக் கொடுங்கள்..... பாராட்டுக்கள்.

RVS said...

சைதைய்ய்ய்...... தமிழரசி....... கணக்கா டைட்டிலை பார்த்ததும் பயந்துட்டேன்....;-))))))))
பூர்ண லக்ஷ்மிக்கு பரிபூர்ண லக்ஷ்மி/ சம்பூர்ண லக்ஷ்மி அப்படின்னு பெயர் வச்சுருக்கலாம்...
அப்பாக்களுக்கு தன் பெண்கள் எப்போதுமே குட்டிம்மா தான்.. என் பொண்ணை இப்போலேர்ந்தே மரியாதையா கூப்பிடனும் போலருக்கு..
அசத்திடீங்க.. ரிலேக்கு கூப்பிட்ட ஆட்களும் சூப்பர்.. ;-)))))))

RVS said...

உங்கள் அப்பாவிற்கு என் நமஸ்காரங்கள்.. ;-)))

ஆச்சி ஸ்ரீதர் said...

ராஜி அவர்களுக்கு என்னையும் பெயர்க் காரணம் பதிவிட அழைத்தமைக்கு நன்றி.இந்த பெயர்க் காரணம் மேனியா பரவத் தொடங்கியதை நம்ம எல்.கே சார் பதிவில்தான் முதலில் பார்த்தேன்.இப்போ இரண்டாவதாக உங்க பதிவில் அதுவும் எனக்கும் அழைப்பு.


என் அம்மாவிற்கான வலைதளத்தில் என் பெயர் புராணம் இடம் பெற்றாகிவிட்டது,எனினும் “அம்மாவின் நினைவில் “வலைத்தளம் இருவரின் பின்னூட்டங்களுடன் ஒரு மூலையில் கிடந்தது .

அதை எல்.கே.அவர்கள் எங்கயோ கண்டுபிடித்து வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தினார்,பலர் இறக்கமுடன்,கண்ணீருடன்,மனசாட்சியுடன் வலைச்சரத்தில் பின்னூட்டமிட்டு என் பதிவிற்கும் வந்தனர்.வலைசரத்தில்’ மனம் பிசைந்து விட்டது’ என்று பின்னூட்டமிட்ட ராஜி என் மனதில் குடிகொண்ட தினம்.

அப்போது ஆர்வத்தில் அடுத்த வலைதளம் ‘ஆச்சி ஆச்சி’ துவங்கியிருந்த சமயம் சிலருக்கு மெயில் அனுப்பி தெரிவித்தேன்.அதில் ஆதரவு தெரிவித்தவர்கள் கே.அர்.பி.செந்தில் அவர்களும்,ஆதியும்தான். அப்போது தானாகவே முன் வந்து என்னை ஊக்க்கப்படுத்தியவர் நம்ம ராஜி அவர்கள்தான்.நான் என்ன கிறுக்கினாலும் தான் கருத்தை தெரிவிக்கும் ராஜி பின்னூட்டமிடலைனா எனக்கு எதோ மிஸ்ஸான உணர்வு.

இப்படிதான் உணமைய சொல்றேன்னு ஒரு பத்தி பின்னூட்டமிட்டேன் வலைசரத்திற்கு.ஓவரா பீல் பன்னாதனு ஒரே கட் (என் பின்னூட்டந்தான்).ராஜி இந்த பின்னூட்டத்தை கட் செய்யமாட்டங்கனு நினைக்கிறேன்.

சக்தி கல்வி மையம் said...

ஒரு பெயலில் இவ்வளவு விஷயங்களா?

Yaathoramani.blogspot.com said...

என் குடும்பம் ஆன்மீகத்தில் நம்பிக்கையுள்ள குடும்பம்
ரமண மஹரிஷியிடம் இருந்த ஈடுபாட்டால் எனக்கு
ரமணி எனப் பெயரிட்டார் அப்பா.என் அம்மாவின் இஷ்ட தெய்வம்
திருப்பரங்குன்றத்து சுப்ரமணியர்.
குலதெய்வமோ திருப்பதி வெங்கடாஜலபதி
இந்த மூன்றும் இணைந்திருக்கும்படியாக
பள்ளியில் சேர்க்கும்போது வெங்கடசுப்ரமனியன் என பெயரிட்டனர்.
பள்ளி கல்லூரி நாட்களிலேயே ஏதோ கொஞ்சம் எழுதுவேன்
அப்போது என் சொந்த ஊரின் பெயரையும் சேர்த்து
அவனி.எஸ் வி.ரமணி என்கிற பெயரில் பத்திரிக்கைகளில்
கொஞ்சம் எழுதியிருக்கிறேன்.
இப்போது பதிவுலகில் எழுதத் துவங்கும் போது
கொஞ்சம் புதிய எளிய பாணியில் எழுதலாமா என்ற எண்ணம் வர
இதற்கென தனியாக யாதோ ரமணி என்கிற புதிய பெயரை
நான் சூட்டிகொண்டேன்
அந்த பெயருக்கான காரணத்தையும் ஒரு பதிவாக
யாதோ என்கிற படைப்பில் கொடுத்துள்ளேன்
என்னையும் என் படைப்பின் மூலம் புரிந்துகொண்டு
பெயருக்கான விளக்கமளிக்கச் சொன்ன பதிவர் ராஜி அவர்களுக்கு நன்றி

மனம் திறந்து... (மதி) said...

தற்செயலாய் இந்தப் பக்கம் வந்தேன்! உங்கள் வலைத்தளம் நன்றாக, சுவை ஏந்தி இருக்கிறது! பின்னூட்டங்களைப் படிக்கும் போது ஒரு "homely feeling" வருகிறது! பெரியவர் உங்களைப் பெண்ணாகவே ஏற்றுக் கொண்டிருக்கிறார்!
தொடரும் பெயர்க்காரண ஆராய்ச்சி: இப்படி ஒரு சுகமான அனுபவம் தருவதால் உங்கள் வலைத்தள முகவரி, "SUHARAJI" என்று அமைந்தது பொருத்தமாகவும், மகிழ்ச்சியாகவும் ஏன் ஆச்சரியமாகவும் கூட இருக்கிறது என்பேன்!

RVS said...

@Ramani
ஓ...ஓ. நீங்களும் வெங்கடசுப்ரமணினா? போச்சு... ;-))))))

குறையொன்றுமில்லை. said...

பெயர்க்காரணங்களை ஒவ்வொருவருமே அரு மையாகச்சொல்லி வருகிறீர்கள். நல்லா இருக்கு.

middleclassmadhavi said...

உபன்யாச பாணியில் அழகாக்ச் சொல்லியிருக்கீங்க!

ADHI VENKAT said...

என்னையும் அழைத்தமைக்கு மிக்க நன்றி. இரண்டு மூன்று தினங்களுக்குள் எழுதி விடுகிறேன். தங்கள் பெயருக்கான காரணம் சுவையாக இருந்தது – கோயம்புத்தூர் உங்கள் பெயருக்குக் காரணமானதில் மகிழ்ச்சி – ஏனெனில் நான் கோயம்புத்தூருங்கோ!

அப்பாதுரை said...

ராஜபாளையமா நீங்க?! (ராஜலக்ஷ்மி பொதுவாக அந்தப்பக்கப் பெயர் தான்) வாழ்த்துக்கள்.

ராபா மண்வெட்டினா என்ன விசேஷம் சொல்லுங்களேன்? எங்க தாத்தா பாட்டி எப்பவும் என்னையும் என் தம்பியையும் அன்போடு கூப்பிடுவாங்க..

(தடுக்கி விழுந்தா வெங்கடசுப்ரமணி தாங்க, திரு.வெங்கடசுப்ரமணி :)

எல் கே said...

/அப்பாக்களுக்கு தன் பெண்கள் எப்போதுமே குட்டிம்மா தான்.. என் //

அதே அதே ஆர்வீஎஸ் ..எப்பொழுதும் பெண்கள் அப்பாவுக்கு குட்டிமாதான்

எல் கே said...

சேலத்தில் என் நெருங்கிய தோழியின் பெயர் ராஜி (முழு பெயர் வேற )

raji said...

@சித்ரா
நான் மட்டுமில்லை.
எங்க வீட்டில என் கணவர், என் பெண்
எல்லாருமே பௌர்ணமிதான்.
ஒரே ப்ரைட்டோ ப்ரைட்டு போங்க.

இதுல என்ன ஒரு விஷயம்னா நான் மட்டும்தான் நிலா
வானத்துல இருக்கும் போது பிறந்தது.

@மதுரை சரவணன்

நன்றி

@வை கோபாலகிருஷ்ணன்

தங்களது கருத்துக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி

@எல் கே
நன்றி.எனக்கும் காரணம் தெரியலை.யாராவது தெரிஞ்சா
சொல்லுங்களேன்

@ராம்ஜி யாஹூ

எனக்கு யாதும் ஊரே யாவரும் கேளிர்
நிறைய ஊர்ல இருந்துருக்கேன்

@கோபி ராமமூர்த்தி

ரொம்ப நாளா ஓட்டறதுக்கு காத்துண்டிருந்தீங்களோ?
சித்ரா, கொஞ்சம் என்னனு கவனிங்க

@Arun Ambie

ராஜ சாவி? லக்ஷ்மி கொத்து?
பரவாயில்ல, வித்தியாசமா யோசிக்கறீங்க

டாஷ் போர்டு ப்ராப்லம் எனக்கும் விளங்கலை

சீல்தூர்ல இருந்திருக்கேங்கோ

யூ டூ RJPM!! ஹை!

@வை கோபாலகிருஷ்ணன்

கோபி சாருக்கு பதில் போட்டிருக்கேன் பாருங்க

@ஆர் வி எஸ்

முதல்ல தலைப்பு "ராஜபாளையம் ராஜலக்ஷ்மி"னு தான்
வச்சு பாத்தேன்.அது என்னமோ தின மலர்
பேப்பர்ல வர கிரிமினல் டைட்டில் எஃபக்ட் வராப்ல இருந்தது.
சரின்னு தலைப்பை சுருக்கினேன்.அப்பயும் நீங்க கரெக்டா
அந்த எஃபக்ட கண்டு பிடிச்சுட்டீங்க.ஹி ஹி ஹி

ஆமாம்.மரியாதையா கூப்ட்டாதான் நமக்கு மருவாதி

@ஆச்சி

உங்க பதிவுல என் பின்னூட்டம் இல்லாமலா?

அம்மாவிற்கான வலைதளத்திலேருந்து பெயர்க்காரணத்தை
ஆச்சி ஆச்சி பதிவுல மீள் பதிவா போட்டுருங்களேன்

@வேடந்தாங்கல்

இன்னும் இருக்குங்க.போட்டா பதிவு பெரிசாய்டும்

@ரமணி

"யாதோ" படித்து விட்டேன்.கமென்ட்டும் போட்டிருக்கேன்.
இருப்பினும் அதை அனைவரும் கட்டயாம் படிக்க வேண்டும்
என்று நான் விரும்புகிறேன்.எனவே மீள்பதிவு போடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

@மதி

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

@ஆர் வி எஸ்

ஒத்துமை!!!!

@லக்ஷ்மி

நன்றி லக்ஷ்மிம்மா

@மாதவி
நன்றி

@கோவை 2 தில்லி

அடுத்த சுய புராணமா உங்க ஊரு பக்கம்
வந்து கோபி செட்டி பாளையந்தேன் எழுத இருந்தேன்.
அதுக்குள்ள ஆர் வி எஸ் சார் இலக்கிய பணிக்கு கூப்டாரா
சரின்னு வந்துட்டேன்.இப்ப உடனே மறுபடி சுய புராணம்
எழுதினா எல்லாரும் அடிக்க வந்துருவாங்க.அதனால கொஞ்ச
நாளுக்கப்பறம் போடாலாம்னு இருக்கேன்.
உங்க ரிலே க்கு காத்துக்கிட்டிருக்கோம்

@அப்பாதுரை
நன்றி

ராபா மண்வெட்டின்னா என்னனு எனக்கு புரியலைங்க

@எல் கே

ஆமாம்.பெண்கள் வழக்கமா அப்பா செல்லமாதான் இருப்பாங்க.

அட!இப்பயும் அதே பேர்ல ஒரு தோழி!

மனம் திறந்து... (மதி) said...

என் புதிய பதிவு: "தாத்தா, பாட்டி...நிலை என்ன?" உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன்! நேரம் கிடைக்கும் போது படித்துப் பாருங்கள்!

தி. ரா. ச.(T.R.C.) said...

காரணப்பெயர் வந்த விவரத்தை அழகாக தொகுத்துச் சொல்லியிருக்கிறீர்கள். சரளமான எளிமையான நடை.நல்லா இருக்கு.சமீபத்தில் மறைந்த எனக்காவின் பெயரும் ராஜலக்ஷ்மி என்கிற ராஜிதான். அவளை நினவுபடுத்தி விட்டீர்கள்

சாந்தி மாரியப்பன் said...

பெயல்காலணத்தை அழகா சொல்லியிலுக்கீங்க லாஜி :-))))))))

சி.பி.செந்தில்குமார் said...

>>>நான் மட்டுமில்லை.
எங்க வீட்டில என் கணவர், என் பெண்
எல்லாருமே பௌர்ணமிதான்.
ஒரே ப்ரைட்டோ ப்ரைட்டு போங்க.

பதிவை விட இந்த காமெடி செம

வை.கோபாலகிருஷ்ணன் said...

//@வை கோபாலகிருஷ்ணன்
கோபி சாருக்கு பதில் போட்டிருக்கேன் பாருங்க//

கோபி சார் “பெள்ர்ணமி நிலா” போன்ற BRIGHT என்று தங்களைக் குறிப்பிட்டது, உங்களின் எழுத்துத் திறமையில் பளிச்சிடும் புத்திசாலித்தனத்தை மட்டுமே என்று, அடியேன் நினைத்துத் தான், அவருக்கு பாராட்டுத் தெரிவித்தேன் என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். .

[ நல்லாப் படிச்சு நிறைய மதிப்பெண்கள் வாங்கும் குழந்தைகளை BRIGHT STUDENTS என்று தானே சொல்லுவோம். ]

raji said...

@வை.கோபாலகிருஷ்ணன்

//கோபி சார் “பெள்ர்ணமி நிலா” போன்ற BRIGHT என்று தங்களைக் குறிப்பிட்டது, உங்களின் எழுத்துத் திறமையில் பளிச்சிடும் புத்திசாலித்தனத்தை மட்டுமே என்று, அடியேன் நினைத்துத் தான், அவருக்கு பாராட்டுத் தெரிவித்தேன் //

உண்மையில் கோபி சார் குறிப்பிட்டதும் அதைத்தான் என்பது தங்களை
போலவே எனக்கும் நன்றாகவே தெரியும்.அவரும் உங்களைப் போலவே
என்னுடைய வெல் விஷர்தான்.
இருந்தாலும் அவர் குறிப்பிட்ட அளவு நான் ப்ரைட் கிடையாது என்பதாலேயே
நான் அவ்வாறு பதிலளித்தேன்.

ரிஷபன் said...

ராஜி பெயர்க் காரணம் சுவையாய் இருந்தது. என் அம்மா பெயரும் ராஜலக்ஷ்மி தான். படிக்காத என் அம்மா செய்த நிர்வாகம் எங்களால் சாத்தியப்படாமல் போனது விந்தை! அந்தப் பெயரே ஒரு கம்பீரமாய் ஒலிக்க பின்னணியில் எத்தனை சம்பவங்கள் அம்மாவின் வாழ்க்கையில்.
நான்கு வருடங்களாகியும் குழந்தை இல்லை என்று அம்மாவை அந்த நாட்களில் வார்த்தைகளால் இம்சித்தார்களாம். அப்போது பக்கத்து வீட்டு பாட்டிதான் ஆறுதல் சொன்னார்களாம். ‘இந்த வருஷமே உனக்கு புள்ளை பொறக்கும்.. குணசீலம் பெருமாள் பேரை வையி..’ அப்படியே பிறந்த பிள்ளைக்கு ஸ்ரீநிவாசன் என்று பெயர்.. (எழுத்துலகில் ரிஷபன்) உங்கள் பதிவு என்னை பழைய நினைவுகளுக்கு அழைத்துப் போய் விட்டது.. நன்றி.

VELU.G said...

வெங்கடக்ருஷ்ணன் ராஜ்ஜியத்தையே ஆளும் ராஜாபாளையம் ராஜி என்கிற ராஜலட்சுமி என்கிற பூர்ணலட்சுமி என்கிற ரேவதி என்கிற லாஜி என்கிற யப்பா சாமி !!!!!!!!!!!!!!!!!!! கல்யாணப் பத்திரிக்கையில என்ன போட்டிருந்தீங்க

Sriakila said...

பெயர்க்காரணம் பதிவில் உங்கள் அனுபவங்கள் அருமை. 'ராஜி' எனக்கு மிகவும் பிடித்த பெயர். உங்கள் profile photo வில் அழகாக, லட்சணமாக சீதா போல் இருக்கிறீர்கள்.

raji said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீ அகிலா.

அந்த ஃபோட்டோ மைசூரில் உள்ள ஒரு
பறவைகள் சரணாலயமான ஏரியின் அழகை ரசித்து விட்டு
திரும்பும் பொழுது என் மகள் எடுத்தது

Unknown said...

poi solvatharkum(Azhaku), atheetha karpanaikkum (Kuttima, aalumai - paavam ahtna ve.krishnan) alavillama poiruchuda saamy

அப்பாதுரை said...

எங்க தாத்தா என்னை அடிக்கடி 'ராஜபாளையம் மம்முட்டி'னு கூப்பிடுவார்.. அதான் ராபா மண்வெட்டி.. (ஹிஹி.. இப்பத்தான் கவனிச்சேன்)

விச்சு said...

உங்கள் சொந்த ஊர் ராஜபாளையமா? மிக்க மகிழ்ச்சி. என்ன இருந்தாலும் நம்ம ஊர்க்காரங்க ஆச்சே!

Krithi said...

en chiththi, maththavangallam neela keela irukkumbodhu prirandhangala?

Onga lolukku alave illama pochchu

Mala said...

பேரை வைத்து கூட பெரும் பேறு பெற முடியும் போலும்!
பேர் பெற்ற கதை..! பேர் முடியும் இடத்தில் பேப்பர் முடிந்திருக்கும் !! ..நயமான உவமை .
நல்லவேளை...பூர்ணம்ன்னோ..லட்சுமிகொத்துன்னோ வைக்கலை :p
கூப்பிட எளிமையா சின்ன செல்ல பேரு ராஜி..லாஜின்னா கூட லாஜிக் தான் !

Post a Comment