Friday, July 27, 2012

என் வாழ்வில் ஸ்ரீ ராகம்

பதினெட்டு வருஷத்துக்கு முன்னாடி................

நீங்க நினைக்கறது ரொம்ப சரி.இதுஒரு கொசுவத்தி பதிவுதான்

சரி!மேட்டருக்கு வரலாமா? சுயபுராணமான்னு ஓடிடாதீங்க.இதுல கொஞ்சம் ரொமான்ஸும் கலந்துருக்கறதா வச்சுக்கலாம்.

பொண்ணு கல்யாண வயசை நெருங்கிட்டாளே.நல்ல மாப்பிள்ளை அமையணுமேன்னு அப்பாவும் அம்மாவும் கவலையோட வரன் பாக்க ஆரம்பிச்சாங்க.ஊர் உறவு அக்கம் பக்கம் எல்லார் கிட்டயும் நல்ல வரனா வந்தா சொல்லுங்கோன்னு இதே ஸ்மரணைதான்

டெல்லி பெங்களூருன்னு வரன் வந்தாலும் அம்புட்டு தூரத்துல  (?!) பொண்ணை எப்பிடி குடுக்கறதுன்னு ஒரே தயக்கம்.

இந்த சமயம் பாத்துதான் ஒரு வரன் வந்தது.  நாலு தெரு தள்ளி. விட்ருவாங்களா? பையன் எப்பிடி, குடும்பம் எப்பிடி எல்லாம்விசாரிச்சு திருப்தியானப்பறம் சம்பந்தம் பேசி  ஏற்பாடும் ஆயாச்சு.

அந்த வருஷம் ஏ ஆர் ரகுமான் "அந்தி மாலை" அப்படிங்கற ஆல்பம் ஒண்ணு போட்டிருந்தார்.அதுல எஸ் ஜானகி அம்மா 'அந்தி மாலை கோவில் வந்தேன்  அந்த வேளை உன்னைக் கண்டேன்' அப்பிடின்னு பாடின பாட்டுஒண்ணு உண்டு.எனக்கு அந்தப் பாடல் மிகவும் பிடிக்கும்.அதை பாடவும் செய்வேன்.
அந்த பாடலின் ராகம் ஸ்ரீ ராகம்

இந்த நேரத்துல வழக்கம் போல ஒரு நாள் சாயங்காலம் கோவிலுக்கு போயிருந்தேன்.எப்பவும் கொண்டு போற மாதிரி பூவும் கொண்டு போயிருந்தேன்,என்னுடன் என் மன்னியும் வந்திருந்தார்கள்

உள்ளே போனதும் மன்னி ஆச்சர்யமான குரலில் என்னைக் கூப்பிட்டு
என்னை திரும்பி பார்க்க சொன்னார்கள்.திரும்பினா நம்மாளு நிக்கறார்,
அந்த சமயம் பாத்து ஒரு பொடிப் பயல் ஓடி வந்தவன் என் மேல மோதி பூவெல்லாம் கொட்டிப் போச்சு.சார்தான் எடுத்துக் கொடுத்தார்.கோவில்ல இருக்கற முக்கால்வாசிப் பேரும் ரெண்டு குடும்பத்துக்கும் தெரிஞ்சவங்கதான்.அத்தனை பேரும் பண்ணின கிண்டலுக்கு அளவே இல்ல.
பெருமாள்தான் பாவம் நம்பளை யாரும் கண்டுக்கலையோன்னு கொஞ்சம் வருத்தப் பட்டிருப்பாரோ என்னவோ ( அவர் நம்பளை கண்டுக்கிட்டா போறாதோ?)

வீட்டுக்கு நான் வரதுக்குள்ள விஷயம் எப்பிடித்தான் முன்னாடி போச்சோ தெரியலை.உள்ள நுழையும் போதே என் அண்ணாக்கள் எல்லாரும் சேர்ந்து கோரஸா "அந்தி மாலை கோவில் வந்தேன் அந்த வேளை உன்னைக் கண்டேன் நாளையும் வருவேன் உன்னைக் காண பொன் பூக்கள் கொண்டு"
அப்பிடின்னு பாட ஆரம்பிச்சுட்டாங்க.

அதுக்கப்பறம் அந்த பாட்டை சுதந்திரமா போட்டு கேக்க முடியல .பாட முடியல.போக வர நண்டு நசுக்கு எல்லாம் நம்பளை கலாய்க்க ஆரம்பிச்சுடுத்து.

அந்த பாட்டுல "பூக்கள் நான் தவற விட்டேன் எடுத்துக் கொடுத்தாய் தொடவும் இல்லை" அப்படின்னு ஒரு லைன் வரும். என் இன்னொரு மன்னி " நிஜமாவே  தொடலையாடி"ன்னு கேட்டு என்னை ஓட்டினது இருக்கே, தாங்கலடா சாமி!

இப்படி ஒரு பாட்டு இருக்கு.அது எனக்கு பிடிக்கும்.அதை வச்சு என்னை ஓட்டறாங்கன்னு இது எதுவுமே தெரியாத, அந்த பக்கத்துல ஒரு மனுஷர் ரொம்ப சாதாரணமா வீட்டுக்கு வந்துட்டார்.வேற யாரு?பூவை எடுத்துக் கொடுத்தவரேதான்.

மாப்பிள்ளை இருங்கோ பூ வாங்கிண்டு வரணும்.என்ன பூ வேணும்? மல்லி ஓக்கேயா? இல்ல ஜாதியா? அப்படின்னு கேட்டு அவர் எதுவும் புரியாம திருதிருன்னு முழிச்சார்.

கல்யாண நாள் வரை இந்த  பாட்டை வச்சு ஓட்டாத ஆளே இல்லங்கலாம்.இந்த பாட்டு ஸ்ரீ ராகம் அப்படிங்கறதால ஸ்ரீ ராகத்துல எந்த பாட்டு கேட்டாலும் (முக்கியமா எந்தரோ மஹானுபாவுலு) எல்லாரும் அர்த்தபுஷ்டியா ஒரு சிரிப்போட ஒரு பார்வை பார்ப்பாங்க..இப்பவும் இந்த பாட்டு என் கிட்ட இருக்கு.இப்ப சுதந்திரமா கேக்கறேன் பாடறேன்.ஆனாலும் பக்கத்துல யாருமிருந்தா இன்னும் கேலிதான் கிண்டல்தான்.இப்படியாக என் வாழ்வில் ஸ்ரீ ராகம் ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்தது.

நீங்களும் அந்த பாட்டை கேட்டு ரசிக்க வேண்டாமா? அதான் இங்க அந்த பாட்டையும் இணச்சுருக்கேன்  :-))))))))))))


அந்தி மாலை கோவில் வந்தேன்







31 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஆஹா! மிகவும் அருமையான பதிவாகக் கொடுத்து அசத்தி விட்டீர்கள்!! மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

தொடரும்....

வை.கோபாலகிருஷ்ணன் said...

பதினெட்டு வருஷங்களுக்கு முன் தாங்கள் கோயிலுக்குச் சென்று பாடிய அந்த ஸ்ரீராகமே, தங்களுக்கு ஸ்ரீராமன் போன்ற அருமையான மாப்பிள்ளையைத் தேடித்தந்துள்ள்து என்பது கேட்க எவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது, தெரியுமா! ;)))))

தொடரும்....

வை.கோபாலகிருஷ்ணன் said...

//உள்ளே போனதும் மன்னி ஆச்சர்யமான குரலில் என்னைக் கூப்பிட்டு என்னை திரும்பி பார்க்க சொன்னார்கள்.திரும்பினா நம்மாளு நிக்கறார்//

ஆஹா அண்ணலும் நோக்கினார் ....
அவளும் நோக்கினாள் .............

என்ற மிக அருமையான கட்டத்தை எவ்வளவு நாசூக்காகச் சொல்லி விட்டீர்கள்.! ;)))))

வை.கோபாலகிருஷ்ணன் said...

//அந்த சமயம் பாத்து ஒரு பொடிப் பயல் ஓடி வந்தவன் என் மேல மோதி பூவெல்லாம் கொட்டிப் போச்சு. சார்தான் எடுத்துக் கொடுத்தார்.//

அடடா! பொடிப்பயலுக்கு மானஸீகமாக நன்றி கூறியிருப்பீர்களே, நீங்கள் இருவரும். அந்தப் பொடியனுக்கு என் நன்றிகளும்..... ;)))))

தொடரும்....

குறையொன்றுமில்லை. said...

ஆஹா கொசு வத்தி பதிவு சுவார்சியம் கண்டின்யூ.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//பெருமாள்தான் பாவம் நம்பளை யாரும் கண்டுக்கலையோன்னு கொஞ்சம் வருத்தப் பட்டிருப்பாரோ என்னவோ

( அவர் நம்பளை கண்டுக்கிட்டா போறாதோ?)//

அதானே, சூடிக்கொடுத்த சுடர் கொடியாளான ஆண்டாளுக்கே, அனுக்கிரஹம் செய்து ஏற்றுக்கொண்டவர் ஆச்சே; அவருக்குத் தெரியாததா என்ன?

ஆண்டாளுக்கு அவள் அணிந்து அழகு பார்த்து ஸ்வாமிக்குக் கொடுத்த பூமாலையால் அருள். தங்களுக்கு தாங்கள் கொண்டுசென்ற பூக்கூடையால் கைமேல் பலன். மகிழ்ச்சியின் உச்சக்கட்டமல்லவோ! ;)))))

தொடரும்....

வை.கோபாலகிருஷ்ணன் said...

”அந்தி மாலை கோவில் வந்தேன்” வெகு அழகான பாடல்.

அதை இந்தப்பதிவினில் வெகு அழகாக இணைத்துச் சொல்லியுள்ளதும், இதுவரை குடும்பத்தினரும், உறவினர்களும் மட்டுமே தங்களை ஓட்டி வந்ததை, இன்று இந்த பதிவுலகமே ஓட்டும் படியாகச் செய்துள்ளது சிறப்பாக உள்ளது.

ஆமாம்.18 வருடங்களாக தங்களை ஓட்டி வந்துள்ளதால் அவர்கள் இப்போது ஓய்ந்து போய் இருப்பார்கள்.

இனி தங்களுக்கு ஓர் மாப்பிள்ளை வரும்வரை, நாங்களும் ஓட்டுவோம் அல்லவா? ;)))))

சாந்தி மாரியப்பன் said...

செம ரொமான்ஸு போங்க :-))

சம்பந்தப்பட்டவருக்கு இந்த ஸ்ரீராகம் விஷயம் தெரியுமோ?..

Yaathoramani.blogspot.com said...

அஹா அருமையான நிகழ்வாகவும்
பதிவாகவும் இருக்கே
சொல்லிச் சென்ற விதம் அருமை
என் கண் முன்னால சன்னதி கோவில் எல்லாம்
வந்து போனது மனம் கவர்ந்த சுவாரஸ்யமான பதிவு
தொடர வாழ்த்துக்கள்

இராஜராஜேஸ்வரி said...

ஸ்ரீ ராகம் தந்த ஸ்ரீராமன் !!!!

தி. ரா. ச.(T.R.C.) said...

Poojaikku vantha malare vaa kovilukkul vanthe malare vaa

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லதொரு பாட்டை பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி சகோதரி...
பாராட்டுக்கள்.... நன்றி....

ஆச்சி ஸ்ரீதர் said...

மணக்கும் மென்மையான மலரும் நினைவுகள்.படிக்கும் அனைவருக்கும் எதோ ஒரு துள்ளல் நிகழுமென நினைக்கிறேன்.

RVS said...

அந்திமாலை ரொமான்ஸ் கலக்கல். இதுல இணைச்சிருக்கிற பாட்டு ஜானகியம்மா பாடினதா இல்ல நீங்க பாடினதா மேடம்? :-)

வை.கோபாலகிருஷ்ணன் said...

எப்போதும் தன் வக்ஷஸ்தலத்தில் லக்ஷ்மிதேவிக்கு இடமளித்து பெருமைப்படுத்தியுள்ள பெருமாள் போலவே, மாப்பிள்ளை அவர்கள், தங்கள் கைகளிலிருந்து நழுவிய பூக்களை, பூப்போல எடுத்துக் கொடுத்து உதவியுள்ளார்.

உன்னைத்திருமணம் செய்து கொண்டு நானும் உன்னைப் பூப்போல என்றும் பாதுகாப்பேன் என, அன்றே கோயிலில் பெருமாள்+தாயார் சாட்சியாக, சிம்பாலிக்காக சொல்லாமல் சொல்லிவிட்டார் போலும்.

அழகிய இனிய தருணங்கள். என்றும் நீங்காத நினைவலைகள். படிக்கும் போதே பரவஸம் ஏற்படுத்திய வரிகள். சபாஷ்!

=====

சென்ற தீபாவளிப்பண்டிகையன்று, தங்களையும், மாப்பிள்ளையையும் முதன்முதலாக நான் சேர்ந்து பார்த்தபோதே ”ஆண்டாளும், ரங்கமன்னாரும்” போல நல்ல ஜோடிப் பொருத்தம் தான் என்று நினைத்து மனதுக்குள் மகிழ்ந்து கொண்டேன்.

இப்போது தான் கொஞ்சூண்டு தெரிகிறது, அதில் உள்ள பின்னனிக்கதை, அந்த ஆண்டாளின் அழகிய கதை போலவே !

மனம் நிறைந்த பா ரா ட் டு க் க ள்.

அகம் மகிழ்ந்த அன்பு வா ழ் த் து க ள்.

அருமையான இந்தப் பகிர்வுக்கு ந ன் றி க ள்.

ஒற்றுமைக்கும், பிரேமைக்கும், பாசத்திற்கும் எடுத்துக்காட்டான உத்தம தம்பதியான என் பெண்ணும், மாப்பிள்ளையும், அருமைப்பேத்தியும், எல்லா வளங்களும், நலங்களும் பெற்று, இன்றும் போல் என்றும், மிகச்சந்தோஷமாக வாழ எங்கள் இருவரின் மனப்பூர்வமான அன்பான ஆசிகள்.

பிரியமுள்ள
vgk and Mrs. vgk


[இடையிடையே நெட் கிடைக்காமல் செர்வர் ப்ராப்ளம் இருந்ததால் தொடர்ச்சியாக பின்னூட்டம் இட முடியாமல் போய்விட்டது]

தி. ரா. ச.(T.R.C.) said...

இப்போதான் தெரியறது அந்த "எந்தரோ மஹானுபாவலு " நம்ம சார்தான்னு.

MANO நாஞ்சில் மனோ said...

ஆஹா செமையா இருக்கே......அசல் சினிமா அங்கே அரங்கேற்றம் நடந்துருக்கு மச்சான்தான் பாவம்...!

வை.கோபாலகிருஷ்ணன் said...

//thirumathi bs sridhar said...
மணக்கும் மென்மையான மலரும் நினைவுகள். படிக்கும் அனைவருக்கும் எதோ ஒரு துள்ளல் நிகழுமென நினைக்கிறேன்.//

ஆமாம் மேடம். மிகச்சரியாகவே சொல்லி விட்டீர்கள். நம்மையெல்லாம் துள்ளிக்குதிக்கவே தான் செய்து விட்டார்கள்.

நீண்ட நாட்களுக்குப்பின் வலைப்பதிவுக்கு வந்து இதை முதன்முதலாகப் படித்ததும், உங்களுக்கே ஒரு துள்ளல் ஏற்பட்டிருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

பச்சை உடம்பு என்பார்கள். அதிகத் துள்ளல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கோ. ;)))))

நல்லவேளையாக நம்மை இதுசம்பந்தமான அனுபவங்களைத் தொடர்பதிவாக எழுத வேண்டும் என அழைக்காமல் விட்டார்கள். அதுவரை நாமும் தப்பித்தோம். ;)))))

அன்புடன்
vgk

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

உங்க குடும்பம் சூப்பர் குடும்பம் ராஜி.செம கலகலப்பு. இந்த அன்பும் சந்தோஷமும் என்றென்றும் நிலைக்கட்டும்

மனோ சாமிநாதன் said...

உண்மை தான் ராஜி, சகோதரர் ரமணி அவர்கள் சொன்னது போல ஒரு பாரதிராஜாவின் கோவில் ஷூட்டிங் கண்முன் வந்தது! மெல்லிய காதல் கலந்த உணர்வுகளைக் கொட்டி அருமையான பதிவைக் கொடுத்திருக்கிறீர்கள்!
எனக்கும் இந்தப் பாடல் மிகவும் பிடிக்கும். எங்கள் காரில் எப்போதும் இந்தப் பாடல் ஒலித்துக்கொண்டிருக்கும்! இனி இந்தப் பாடல் கேட்கும்போதெல்லாம் உங்கள் நினைவு வந்து விடும்!

அம்பாளடியாள் said...

மிகவும் ரசிக்க வைத்த அனுபவப் பகிர்வு .
பாட்டைக் கேட்டதும் உங்களை நினைத்து
மனம் தானாகவே சிரிக்குது சகோ :).வாழ்த்துக்கள்
அடிகடி இந்தப் பாடல் உங்கள் வாழ்வில் மகிழ்வை வாரி
வழங்கட்டும் .மிக்க நன்றி பகிர்வுக்கு .

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

மனமகிழ்ச்சி தந்த பதிவு.
சுவையான சம்பவங்கள் ரொம்ப சுவாரஸ்யம்.

வாழ்க வளமுடன்!

ரிஷபன் said...

ஸ்ரீராகம் அத்தனை அழகாய் உங்கள் அனுபவத்தில் பதிவாகி எங்கள் மனசிலும் இடம் பிடித்து விட்டது.

KParthasarathi said...

எல்லோருக்கும் இந்த இனிய அனுபவம் கிடைப்பதில்லை.நீங்கள் அதிர்ஷ்டசாலி தான்.
அழகாகவும் எழுதி உள்ளீர்கள்

எல் கே said...

நல்ல கொசுவர்த்திதான். நான் பொண்ணு பார்த்த சமயத்தில் "உன்னை பார்த்த முதல் நாளே " பாட்டு பிரபலம்... அதை வைத்து என் தங்கமணியை அவர்கள் ஓட்டியதாக சொல்வார்கள்

raji said...

@வை கோபாலகிருஷ்ணன் சார்

தங்களது கமென்ட்டுகளைப் பார்த்தாலெ பதிவைப் படித்தும் பாடல் கேட்டும் உங்கள் மனக்கண் முன் காட்சிகள் விரிந்து அதில் தாங்கள் எந்த அளவு மகிழ்வடைந்திருக்கிறீர்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.

பதிவுலகமே ஓட்டுவார்கள் என்று தெரிந்தும் தான் நான் இந்தப் பதிவை போட்டேன்.ஆனாலும் ஒரு மகிழ்வான அனுபவப் பதிவு என்பதால் :-)
எனக்கு மட்டுமன்றி படித்தவர்களும் (தாங்கள் உட்பட)மகிழ்ந்துதான் பின்னூட்டம் அளித்திருக்கின்றனர் இல்லையா?
தங்களின் கடைசி கமென்ட் தாங்கள் மிகவும் உணர்வு பூர்வமாக அனுபவித்து அளித்திருப்பதாக உணர்கிறேன்

தங்கள் மற்றும் மாமியின் ஆசிர்வாதங்களுக்கு எங்களது நன்றிகள் :-)

@லக்ஷ்மிம்மா

கைவசம் இன்னும் சுவாரசியமான கொசுவத்திகள் நிறைய உண்டு.தொடர்ச்சியா உடனே போட்டா
பதிவுலகில் நம்மளை ஓட்டும் சான்ஸ் அதிகம் என்பதால் அவ்வப்போது எடுத்து விடுகிறேன்.:-)

@அமைதிச்சாரல்

ஹை! வந்துட்டீங்களா? அதான பாத்தேன்.நம்மள ஓட்டற சான்ஸ் கிடைச்சா சாரல் நல்லா அடிக்குமேன்னு நினைச்சேன் :-)
பின்னூட்டம் போட முடியாத பிரச்சனை எப்படி தீர்ந்தது? ராஜியை ஓட்டக் கூடிய பதிவு வந்திருக்குன்னு யாராச்சும் சொன்னதும் கமென்ட் பாக்ஸ் தன்னாலயே ஓப்பன் ஆயிடுச்சா?சும்மா தமாஷு .. ஹி... ஹி...

சம்பந்தப் பட்டவருக்கு திருமணத்துக்குப் பின் இந்த விஷயம் தெளிவாக விம் போட்டு விளக்கப் பட்டது.

@ரமணி சார்

ஆஹா! கற்பனை அம்புட்டு தூரம் வர்றாப்புல ஜானகி அம்மா பாடிட்டாங்களே :-)

@இராஜராஜேஸ்வரி

ஆமாம் மேடம்.பேர் மட்டும்தான் வேங்கடக்ருஷ்ணன் :-)

@ தி ரா ச

நீங்க எப்பவுமே வேங்கடக்ருஷ்ணன் சைடுதான்.இப்ப அவருக்கு மவுத் பீசா? :-)

உங்களுக்கு எப்பவுமே வெங்கட் 'எந்தரோ மஹானுபாவுலு'தான் :-)

"நாபை நீக்கபிமானமு லேதா?"

@திண்டுக்கல் தனபாலன்

பாராட்டிற்கு நன்றி

@thirumathi bs sridhar

துள்ளல்? யூ மீன் ... உங்களுக்கு உங்க மலரும் நினைவுகள் ஏதாச்சும் ஞாபகம் வருதோ? :-)

@RVS

எங்கடா ஆளைக் காணோமேன்னு பாத்தேன்.நம்மளை ஓட்டறதுன்னு சகோதரருக்கு அல்வா சாப்பிடறாப்புல ஆச்சே.ஆமாம் அதென்ன சகோதரர்கள் எல்லாருக்கும் சகோதரிகளை கிண்டல் செஞ்சு பாக்க ரொம்ப பிடிக்குது?
ஜானகி அம்மா என் கஷ்டம் தெரிஞ்சு எனக்கு மவுத் பீசா இருக்க ஒத்துக்கிட்டாங்க :-)

@mano நாஞ்சில் மனோ

எல்லாரும் ஓட்டினது என்னவோ என்னைத்தான்.ஆனா பாவம் அவரோ?

@வித்யா சுப்ரமணியம் மேடம்

ஆமாம் மேடம்.தங்களின் ஆசிர்வாதத்திற்கு நன்றிகள்.குடும்பம் மட்டும் சூப்பர் என்பதில்லை.உங்களைப் போன்ற நட்புக்களும் எனக்கு சூப்பரோ சூப்பர்தான் :-)

மனோ சாமிநாதன்

மிக நீண்ட இடைவெளிக்குப் பின் தங்களது பின்னூட்டம் மகிழ்வைத் தருகிறது.
தங்களுக்கும் பிடித்த பாடல் என்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.இதைக் கேட்கும் போதெல்லாம் என் நினைவு வரும் என்பது இரட்டிப்பு மகிழ்வே :-)

@அம்பாளடியாள்

உங்களுக்கே பாடலை கேட்டதும் என்னை நினைத்து சிரிப்பு வருகின்றது என்றால் என் கூடப் பிறந்தவர்களிடம் இந்த பாட்டால் நான் பட்டிருக்கும் பாட்டை நினைத்துப் பாருங்கள்.தங்களது வாழ்த்திற்கு என் மனமார்ந்த நன்றி :-)

@NIZAMUDEEN

கருத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றி

@ரிஷபன்

ஸ்ரீ ராகத்தை இனி மறக்கவே மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்

@KParthasarathi

பாராட்டிற்கு நன்றி

@எல் கே

அட! உங்க தங்கமணி வாழ்க்கையிலும் இப்படிப் பட்ட நிகழ்வு உண்டா? சுவாரசியம்தான் :-)

பால கணேஷ் said...

ஆஹா... மலரும் நினைவுகள் ரொம்பவே சுவாரஸ்யம். அதிலும் உங்கள அண்ணாக்கள். மன்னிகள் கலாய்ச்சதைப் பத்திப் படிக்கறப்போ... எனக்குள்ள ஒரு ஏக்கமே வந்திடுச்சு. மறக்க முடியாத ஸ்ரீராகம்தான்.

வெங்கட் நாகராஜ் said...

அடடா இனிய மலரும் நினைவுகள்! உங்கள் வாழ்வில் வந்த ஸ்ரீராகம்.... :)

மிக மிக அருமை சகோ.

சனி-ஞாயிறு வெளியூர் சென்று விட்டதால், இன்று தான் ஒவ்வொரு பதிவாகப் படிக்க முடிந்தது... தாமதமான வருகைக்கு மாப்பு கொடுங்க!

ADHI VENKAT said...

ஹாய் ராஜி ,

ஸ்ரீராகம் உங்கள் வாழ்வில் இனிமையாய் மலர்ந்த தருணத்தை படிக்கும்போதே அருமையாக இருந்தது.
மலரட்டும் வாழ்வில் சந்தோஷங்கள்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ஸ்ரீ ராகமே அருமை தான்! இந்த அற்புதமான பதிவைப் போல!

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளார்கள் வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரிhttp://blogintamil.blogspot.com/2014/02/blog-post_16.html?showComment=1392506757030#c2810563175120508250

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Post a Comment