தாமதமாகும் என்று அறிந்ததுதான்,ஆனாலும் என்ன செய்ய?இந்த
மனசுக்கு கொஞ்சமும் பொறுமை இல்லையே.பார்வையை சுழல விட்ட படி இருக்கையில் சற்று சாய்ந்து அமர்ந்தாள் மஞ்சரி.
பக்கத்து சீட்டில் ஒரு குழந்தை இவள் பார்த்ததும் வெட்கமாய் சிரித்து
முகம் திருப்பிக் கொண்டது.காரிடாரில் ஒரு வயதானவர் சக்கர நாற்காலியில் கையில் ட்ரிப்ஸ் ஊசியுடன் முகத்தில் வேதனையுடன்
அழைத்து செல்லப்பட்டார்.குறுக்கும் நெடுக்கும் நர்ஸ்கள் வெள்ளை
சீருடையில் அலைந்து கொண்டிருந்தனர்.
கால்களை நீட்டி கை விரல்களில் சொடக்கு எடுத்தாள்.கண்களை சிறிது
நேரம் மூடி திறந்தாள்.லேசாக வலி கிளம்பினாற்போல் இருந்தது. இப்படித்தான் ஒரு மாதமாகஅடிவயிற்றில் ஒரு வலி.முதலில் சற்று அலட்சியப் படுத்தி பின் கை வைத்தியம் செய்து ஒன்றுக்கும் மசியாததால் டாக்டரைப் பார்த்து எல்லா வகை டெஸ்ட்டிலும் வகைக்கு ஒன்றாக செய்து அப்பெண்டிசைடிஸ், சிறுநீர்ப்பாதை கல்,குடலிறக்கம்,மாதாந்தரப்
பக்கத்து சீட்டில் ஒரு குழந்தை இவள் பார்த்ததும் வெட்கமாய் சிரித்து
முகம் திருப்பிக் கொண்டது.காரிடாரில் ஒரு வயதானவர் சக்கர நாற்காலியில் கையில் ட்ரிப்ஸ் ஊசியுடன் முகத்தில் வேதனையுடன்
அழைத்து செல்லப்பட்டார்.குறுக்கும் நெடுக்கும் நர்ஸ்கள் வெள்ளை
சீருடையில் அலைந்து கொண்டிருந்தனர்.
கால்களை நீட்டி கை விரல்களில் சொடக்கு எடுத்தாள்.கண்களை சிறிது
நேரம் மூடி திறந்தாள்.லேசாக வலி கிளம்பினாற்போல் இருந்தது. இப்படித்தான் ஒரு மாதமாகஅடிவயிற்றில் ஒரு வலி.முதலில் சற்று அலட்சியப் படுத்தி பின் கை வைத்தியம் செய்து ஒன்றுக்கும் மசியாததால் டாக்டரைப் பார்த்து எல்லா வகை டெஸ்ட்டிலும் வகைக்கு ஒன்றாக செய்து அப்பெண்டிசைடிஸ், சிறுநீர்ப்பாதை கல்,குடலிறக்கம்,மாதாந்தரப்
பிரச்சனை எதுவுமில்லை என்றாகி இப்பொழுது கடைசியில் ப்ளட் டெஸ்ட்
ரிப்போர்ட்டுடன் காத்திருக்கிறாள் டாக்டரை சந்திக்க.
"நெக்ஸ்ட் நீங்கதான் போகலாம்" எனறாள் நர்ஸ்
"எக்ஸ்க்யூஸ் மீ டாக்டர்" என்ற குரலுடன் உள்ளே சென்றாள்
சோன் பப்டியை தலை முழுதும் கவிழ்த்துக் கொண்டாற்போல் பளபள
வெள்ளை முடியுடன், ரிம்லெஸ் கண்ணாடியின் வழியே நிமிர்ந்து
பார்த்தவர், "எஸ்.கம் இன்" என்றார்.
"உக்காருங்க.கூட யாரும் வந்துருக்காங்களா?"
கேள்வியின் வித்தியாசத்தை உணர்ந்தும் ஆராய முடியாமல்,
"இல்லை டாக்டர்! நான் மட்டும்தான் வந்துருக்கேன்" எனறாள்.
"ஒக்கே! உங்க ப்ளட் ரிப்போர்ட் கொடுங்க" என்று வாங்கி ஆராய்ந்தார்.
அதை வைத்து விட்டு சில நிமிடங்கள் அமைதியாய் இருக்க அந்த நிமிடம்
மஞ்சரியின் வயிற்றில் லேசாக ரங்கராட்டினம் சுழல ஆரம்பித்தது.
"என்ன டாக்டர்,எதுவுமே பேசாம இருக்கீங்க?ஏதாவது பிரச்சனையா?" எனறாள் எச்சில் கூட்டி விழுங்கி.
"ம்....ம் ....... அது வந்து எப்படி சொல்லறதுன்னு தெரியலை பட்
சொல்லித்தான் ஆகணும்.தனியா வேற வந்துருக்கீங்க.ஹஸ்பன்ட்
வரலையா?"
"இல்லை டாக்டர்.சும்மா ரிப்போர்ட் காமிக்கத்தான்னு நான் மட்டும் வந்தேன்.எதாருந்தாலும் பரவாயில்லை டாக்டர்! என் கிட்டே சொல்லுங்க ப்ளீஸ்"
"எப்படி பாத்தாலும் இதை முக்கியமா உங்க கிட்டதான்மா முதல்ல
சொல்லியாகனும்,அப்பதான் ட்ரீட்மென்ட்டுக்கு சௌகர்யமா இருக்கும்.பட்...
உங்க ஹஸ்பென்ட்டால வர முடியாதா?"
"இல்லை டாக்டர்.அவர் இப்ப ஊரில இல்லை.கம்பெனி விஷயமா
வெளிநாடு போயிருக்கார்.வர இன்னும் ரெண்டு மாசமாகும்"
"ஓ.....! வேற யாரும் ....?"
"டாக்டர்!ப்ளீஸ். எனக்கு என்னனு நான்தான் முதல்ல தெரிஞ்சுக்கணும்.தயவு செஞ்சு சொல்லுங்க.நாளைக்கு வேணா நான் யாரையாவது கூட்டிக்கிட்டு வரேன்,ப்ளீஸ் டெல் மீ"
"ஓக்கே! பட் நான் சொல்றது உங்களுக்கு அதிர்ச்சியாத்தான் இருக்கும்.
இருந்தாலும் நீங்க வற்புறுத்தி கேக்கறதாலயும்,தைரியமாவும் சரியாவும்
புரிஞ்சுக்குவீங்கங்கற நம்பிக்கைலையும் சொல்றேன்.
ஏற்கனவே உங்க ப்ளட் ரீடிங் சரியா இல்லங்கறதாலதான்
இருந்தாலும் நீங்க வற்புறுத்தி கேக்கறதாலயும்,தைரியமாவும் சரியாவும்
புரிஞ்சுக்குவீங்கங்கற நம்பிக்கைலையும் சொல்றேன்.
ஏற்கனவே உங்க ப்ளட் ரீடிங் சரியா இல்லங்கறதாலதான்
மறுபடி எடுக்க சொன்னோம்.பட் அதுக்கு முன்னாடியே உங்களுக்கு
எடுத்த "போன் மேரோ பயாப்சி" ரிசல்ட் வந்து கன்பார்ம் ஆயிடுச்சு.அதாவது
உங்க பிளட்ல ப்லேட்லட் கவுன்ட் அப்நார்மலா இருக்கு.அதாவது உங்களுக்கு வந்திருக்கறது "த்ரோம்போசைதிமியா".
"அ.. அப்.. அப்டின்னா...?"
"அதாவது உங்களுக்கு ப்ளட்ல ப்லேட்லட் கவுன்ட் அதிகமா இருக்கறதால,
அது தானே க்ளாட் ஆக வாய்ப்பிருக்கு.இப்போதைக்கு இதுக்கு மருந்து இருக்கு.ஆனா உங்களைப் பொறுத்தவரை இந்த மருந்து எத்தனை
மாசம்,வருஷம் வேலை செய்யும்னு தெரியாது.ஓடற வரை ஓடும்.அதுக்கப்பறம் இதோட முடிவு....... "ப்ளட் கேன்சர்"தான்.ட்ரீட்மென்ட்டுக்கு நீங்க கோ ஆப்பரேட் பண்ணனும்கறதாலயும் உங்க கணவர் வரவரையில் ட்ரீட்மென்ட்
ஆரம்பிக்காம இருக்க முடியாதுங்கறதாலயும் இதை உங்க கிட்ட சொல்றேன்.மனசை திடப் படுத்திக்கோங்க".
"இதுக்கு தீர்வு எதுவும் இல்லையா டாக்டர்?" குரல் கம்மி பிசிறியது.
"இதுவரை எதுவும் கண்டு பிடிக்கலைம்மா.ஆண்டவன் இருக்கான்.
"இதுக்கு தீர்வு எதுவும் இல்லையா டாக்டர்?" குரல் கம்மி பிசிறியது.
"இதுவரை எதுவும் கண்டு பிடிக்கலைம்மா.ஆண்டவன் இருக்கான்.
நமக்கு மேல உள்ள சக்தியை நம்புவோம்.இப்ப மருந்து எழுதிருக்கேன்.
சாப்பிடுங்க.முடிஞ்சா நாளைக்கு யாரையாவது கூட்டிக்கிட்டு வாங்க"
"யாரும் தேவை இல்லை டாக்டர்.இதை என்னை விட பெட்டரா யார் புரிஞ்சுக்கணும்? அடுத்து எப்ப வரணும் டாக்டர்?" கண்களில் வெளி வரத்துடித்த நீரை அடக்கினாள்
"இனி மாசத்துக்கு ஒருதடவை செக் அப் வரதுதான் சரிம்மா.நடுவுல ஏதாவது பிரச்சனைனா கட்டாயம் பாக்கணும்"
"வரேன் டாக்டர்"
"அப்பறம் ஒரு விஷயம்.கூடுமானவரை அடி எதுவும் பட்டுக்காம பாத்துக்கங்க.ரத்தம் நிக்கறது கஷ்டம்"
"புரியுது டாக்டர்.நான் வரேன்"
"அப்பறம் ஒரு விஷயம்.கூடுமானவரை அடி எதுவும் பட்டுக்காம பாத்துக்கங்க.ரத்தம் நிக்கறது கஷ்டம்"
"புரியுது டாக்டர்.நான் வரேன்"
"வார்ட் பாய் யாரையாச்சும் துணைக்கு அனுப்பட்டுமாம்மா?"
"இன்னிக்கே எனக்கொண்ணும் ஆகப் போறதில்லையே டாக்டர்.
என்னை பாத்துக்க கடவுள் இருக்கார்னு நான் நம்பறேன்.அப்படியே
ஏதாவது ஆகப் போறதா இருந்தாலும் இன்னும் இந்த உலகத்துல சில
நல்லதை செய்ய எனக்கு கொஞ்சம் டைம் கொடுப்பார்,அப்படி இல்லைன்னாலும் இதுதான் அவர் விருப்பம்னு எடுத்துக்கறேன் டாக்டர்"
உறுதியும் நம்பிக்கையுமாய் எழுந்த மஞ்சரியை வருத்தமும் வியப்புமாய் பார்த்தவர், "உங்க கிட்ட இருக்கற இந்த தன்னம்பிக்கை,இதுவே உங்களை வாழ வைக்கும்.காட் ப்ளஸ் யூ மை சைல்ட்" என்றார்.
மெலிதான புன்னகையை சிந்தி விட்டு எழுந்து சென்றவளைப்
பார்த்துக் கொண்டிருந்தவரின் கவனத்தை "நல்லதோர் வீணை செய்தே..."
என்று அவரது கைபேசி கலைத்தது.
**************************
இது ஒரு வகை ரத்த குறைபாடு.இதற்கு தீர்வு கிடையாது,இது பற்றிய ஆராய்ச்சிகள் கடந்த 25 ஆண்டுக்காலமாக நடைபெற்று வருகின்றது.எனவே மருந்துகளின் மூலம் இதனை கட்டுப்பாட்டிற்குள்
வைக்கும் அளவு இப்பொழுது நடைமுறையில் உள்ளது.மருந்து கேட்காமல் போய்விட்டால் கீமோதெரபிதான்(chemotherepy ) அடுத்த நிலை.மேலும் இந்த த்ரோம்போசைத்தீமியா முற்றும் நிலையில் ப்ளட் கான்சராகும்(blood cancer ) வாய்ப்பு அதிகம்.ஆனால் த்ரோம்போசைத்தீமியாவாக இருக்கும்
வரை இவர்கள் உடலளவில் திடமாகவே இருப்பார்.எந்த மாறுதலும் உடலில் தெரியாது.எல்லோரையும் போல சுறுசுறுப்புடனும் சக்தியுடனுமே
செயல் பட இவர்களால் முடியும்.உடலில் இதற்கென வலி போன்ற
உபாதைகளும் தோன்றாது.
நான்கு வகை ப்ளட் கான்சரில் ஒரு வகையான க்ரானிக் மைலாய்ட் லுகெமியாவிற்கு(chronic myeloid leukemia ) மட்டும் மருந்து
கண்டு பிடிக்கப்பட்டு அடையாறு கேன்சர் இன்ஸ்டிட்யூட்டில் இலவச சிகிச்சை அளிக்கப் படுகிறது.மற்ற மூன்று பள்ட் கேன்சர் வகைகளுக்கு இன்னும் மருந்து கண்டு பிடிக்கப் படவில்லை.
த்ரோம்போசைத்தீமியாவால் பாதிக்கப் பட்டவர்களை மையமாக வைத்து எழுதப் பட்ட ஒரு சிறுகதை இது.மரணத்தை எதிர்க்க தன்னம்பிக்கையும் இறை நம்பிக்கையும் மருந்துகளை விட முக்கியமானது என்பதற்காக எழுதப்பட்ட சிறுகதை இது.
**************************
பின் குறிப்பு : த்ரோம்போசைதீமியா(thrombocythemia ) என்பது மைலோப்ரோலிஃபெரேடிவ் டிசார்டர் (myeloproliferative disorder ) என்பதன் ஒரு வகை.
இது ஒரு வகை ரத்த குறைபாடு.இதற்கு தீர்வு கிடையாது,இது பற்றிய ஆராய்ச்சிகள் கடந்த 25 ஆண்டுக்காலமாக நடைபெற்று வருகின்றது.எனவே மருந்துகளின் மூலம் இதனை கட்டுப்பாட்டிற்குள்
வைக்கும் அளவு இப்பொழுது நடைமுறையில் உள்ளது.மருந்து கேட்காமல் போய்விட்டால் கீமோதெரபிதான்(chemotherepy ) அடுத்த நிலை.மேலும் இந்த த்ரோம்போசைத்தீமியா முற்றும் நிலையில் ப்ளட் கான்சராகும்(blood cancer ) வாய்ப்பு அதிகம்.ஆனால் த்ரோம்போசைத்தீமியாவாக இருக்கும்
வரை இவர்கள் உடலளவில் திடமாகவே இருப்பார்.எந்த மாறுதலும் உடலில் தெரியாது.எல்லோரையும் போல சுறுசுறுப்புடனும் சக்தியுடனுமே
செயல் பட இவர்களால் முடியும்.உடலில் இதற்கென வலி போன்ற
உபாதைகளும் தோன்றாது.
நான்கு வகை ப்ளட் கான்சரில் ஒரு வகையான க்ரானிக் மைலாய்ட் லுகெமியாவிற்கு(chronic myeloid leukemia ) மட்டும் மருந்து
கண்டு பிடிக்கப்பட்டு அடையாறு கேன்சர் இன்ஸ்டிட்யூட்டில் இலவச சிகிச்சை அளிக்கப் படுகிறது.மற்ற மூன்று பள்ட் கேன்சர் வகைகளுக்கு இன்னும் மருந்து கண்டு பிடிக்கப் படவில்லை.
த்ரோம்போசைத்தீமியாவால் பாதிக்கப் பட்டவர்களை மையமாக வைத்து எழுதப் பட்ட ஒரு சிறுகதை இது.மரணத்தை எதிர்க்க தன்னம்பிக்கையும் இறை நம்பிக்கையும் மருந்துகளை விட முக்கியமானது என்பதற்காக எழுதப்பட்ட சிறுகதை இது.
37 comments:
நல்ல கதை. டாக்டர்கள் கைவிரித்தாலும் ஆண்டவன் கைவிட மாட்டான் என்று தொன்றுகிறது
என்னவோ ஏதோ என்று திகிலாகவே இருந்தது படித்து முடிக்கும் வரை.
படித்து முடிக்கையில் நிஜமாகவே திகிலான விஷயமாகவே ஆகிவிட்டது.
இதுபற்றியெல்லாம் சாமான்யரான நம்மில் பலருக்கும், புரியாத மர்மமான மருத்துவ விஷயங்களே ஆயினும்,மரணத்தை எதிர்க்க தன்னம்பிக்கையும் இறை நம்பிக்கையும் மருந்துகளை விட முக்கியமானது என்ற உண்மையை உணரவைத்துள்ளது இந்தக்கதை.
நல்லதோர் வீணையை,
நல்லதோர் எண்ணத்தில்,
நல்லவராகிய நீங்கள், மிக
நன்றாகவே மீட்டியுள்ளீர்கள்.
நல்லதாகவே நினைப்போம்
நல்லதாகவே நடக்கட்டும்.
பாராட்டுக்கள்.
>>
சோன் பப்டியை தலை முழுதும் கவிழ்த்துக் கொண்டாற்போல் பளபள
வெள்ளை முடியுடன், ரிம்லெஸ் கண்ணாடியின் வழியே நிமிர்ந்து
அடேங்கப்பா.. வர்ணனை எல்லாம் தூக்குதே.. பட்டுக்கோட்டை பிரபாகர் ரசிகை போல...
>>
உறுதியும் நம்பிக்கையுமாய் எழுந்த மஞ்சரியை வருத்தமும் வியப்புமாய் பார்த்தவர், "உன் கிட்ட இருக்கற இந்த தன்னம்பிக்கை,இதுவே உன்னை வாழ வைக்கும்.காட் ப்ளஸ் யூ மை சைல்ட்" என்றார்.
வாங்க போங்க என மரியாதையாக அழைத்த டாக்டர் 5 நிமிடம் கழித்து வா போ நீ என ஒருமையில் அழைக்கிறாரே..அது எப்படி?
ராஜி ஒரு மெடிக்கல் ஸ்டூடண்ட் போல..
இப்படி ஒன்னு இருக்கானு கேட்கலானு கீழ வந்தா உங்க பின் குறிப்பு ஹ்ம்ம்.. ஓகே
@சி.பி.செந்தில்குமார்
//சி.பி.செந்தில்குமார் said...
வாங்க போங்க என மரியாதையாக அழைத்த டாக்டர் 5 நிமிடம் கழித்து வா போ நீ என ஒருமையில் அழைக்கிறாரே..அது எப்படி? //
தவறினைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.சரி செய்து விட்டேன்
தன்னம்பிக்கைக் கதை.
சோன்பப்டித்தலை சிரித்தேன்.
கேன்சர் பற்றி ஒரு தொடர் எழுதலாமே நேரமும் விருப்பமும் இருப்பின்.
அட... மருத்துவ பின்னணி கதை கூட அழகா எழுதி இருக்கீங்களே!!
இது வைட்டமின் கே குறைப்பாடால் வருவது.. பரம்பரையாக வரவும் வாய்ப்புண்டு...
இந்த கதைக்கும் நாங்கள் சமீபத்தில் எடுத்துள்ள குறும்படமான “விதை”க்கும் ஒரு சூப்பர் ஒற்றுமை உண்டு... அதிலும் கதையின் நாயகனுக்கு இதே போல் ஒரு ரத்த சம்பந்தப்பட்ட நோய் என்றிருக்கும்.. முடிவில் நல்லதோர் வீணை பாடல் போட்டிருப்போம்..
நீங்கள் அந்த “விதை” குறும்படத்தை பார்த்தீர்களா ராஜி?
"விதை” – குறும்படம் http://jokkiri.blogspot.com/2011/03/blog-post_22.html
டாக்குடரு ராஜி வாழ்க! ;-))
வர்ணனைகள் சூப்பர்!
ஒரு வியாதியை வச்சு கதை.... ம்.. ம்ம்ம்... நடத்துங்க.. நல்லா இருக்கு.. ;-))
நல்லதொர் வீணை செயதே & மஞ்சரி என்றவுடன் இசை சம்பந்தமான பதிவு என்றே நினைத்தேன்.த்ரோம்போசைதீமியா பற்றியும்,சார்ந்த சிறுகதையும் அருமை.
உன் கிட்ட இருக்கற இந்த தன்னம்பிக்கை,இதுவே உன்னை வாழ வைக்கும்.காட் ப்ளஸ் யூ மை சைல்ட்" என்றார்.
சரியாக எழுதிவிட்டு ‘சரி’ செய்த எழுத்தாளர் நீங்க மட்டும்தான்! உணர்வுபூர்வமாக கதை வாசித்தால் அவர் ஏன் அப்படி ஒருமைக்கு தாவினார் என்று புரிந்து விடும். தன்னம்பிக்கை ஊட்ட அவர் உரிமையுடன் அவளை ஒருமையில் அழைக்கிறார். அவ்வளவுதான். அவர் ஏஜுக்கு அது தவறில்லை.. மரியாதைக் குறைவுமில்லை.
மரணத்தை எதிர்க்க தன்னம்பிக்கையும் இறை நம்பிக்கையும் மருந்துகளை விட முக்கியமானது //
ஆழ்ந்த கருத்து. நம்பினோர் கெடுவதில்லை. நான்கு மறை தீர்ப்பு.
@ரிஷபன்
தாங்கள் கூறிய அடிப்படையில்தான் முதலில் 'உன்' என்று எழுதி இருந்தேன்.ஆனால்,
நான் நினைத்த விதத்தில் அது வாசகர்களை சென்றடைய வாய்ப்பில்லாதது போல் தோன்றியதால்
பின் மாற்றி விட்டேன்
@ ஆர் கோபி
பாராட்டிற்கு நன்றி
எனக்கு தெரிந்த வரையில் இது பரம்பரை வியாதி அல்ல.
இது ஏதாவதொரு காரணத்தால் ஜீன் தொந்தரவு அடைவதால்
ஏற்படுகிறது.ஜீன் என்றதும் பரம்பரை வியாதி என தோன்றி விடுகிறது.ஜீன் குறைபாடு
என்றால்தான் பரம்பரை வியாதி.இது சில குறிப்பிட்ட காரணிகளால் ஜீன் தொந்திரவு அடைவது.
சரியாக சிகிச்சை செய்ய்ப்படாத ம்லேரியா,நிமோனியா, எலும்பில் ஏற்படும் அடிகள், ஹீட் ரேடியேஷன்,
மற்றும் சுற்றுப்புற சூழல் பாதிப்பு போன்றவற்றால் ஏற்படுவதாக இது வரை நம்பப் படுகிறது.இன்னும் ஆராய்ச்சிகள்
நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
இன்னும் தங்களது குறும்படமான 'விதை' பார்க்கவில்லை.நேரம் கிடைக்கும் பொழுது பதிவு போட்டு விடுகிறேன்.
கட்டாயம் பார்க்கிறேன்.
இந்த சிறுகதை இந்த நோயால் பாதிக்கப் பட்டவர்களை மையமாக வைத்தே எழுதப் பட்டது.
இம்மாதிரி பாதிக்கப் பட்டவர்களை பார்க்கும் பொழுது எனக்கு 'நல்லதோர் வீணை செய்தே' பாடல்
என்னையறியாமல் ஞாபகம் வரும்.என்வேதான் இந்த தலைப்பு
த்ரோம்போசைத்தீமியாவால் பாதிக்கப் பட்டவர்களை மையமாக வைத்து எழுதப் பட்ட ஒரு சிறுகதை இது.மரணத்தை எதிர்க்க தன்னம்பிக்கையும் இறை நம்பிக்கையும் மருந்துகளை விட முக்கியமானது என்பதற்காக எழுதப்பட்ட சிறுகதை இது.
...... I salute you!
அருமையான தகவல்
வெளிபடுத்திய விதம்
மிகவும் அற்புதம்.
நல்ல தன்னம்பிக்கையூட்டும் கதை.நல்லா இருக்குங்க.
நம்பிக்கைப் பதிவு! வாழ்த்துகள்!
தன்னம்பிக்கைக் கதை.
நல்ல கதை சாவைக்கண்டு பயப்படவேண்டாம்னு அழுத்தமாக மனதில்பதியும் விதமாக சொல்லி இருக்கீங்க.
நல்ல பதிவு. நோயை எதிர்த்து போராட தன்னம்பிக்கையூட்டும் பதிவு.
வாழ்த்துக்கள்.
ஒவ்வொருவருடைய தன்னம்பிக்கையையும் தட்டியெழுப்புற ஒரு நல்லக்கதை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி!
த்ரோம்போசைதீமியாவை எதிர்கொள்ளக்கூடிய புரோட்டின் ஆராய்ச்சி உலகின் பல பகுதிகளிலும் நடைபெறுகிறது . ஸ்டெம் செல்கூட இதற்கு உதவும் என்றும் ஆராய்ச்சி இருக்கின்றது. மேலும் இந்த வகை கேன்சர் அரிதானது. ஆனால் இறை நம்பிக்கை வெல்லும் என்பதில் நான் உங்கள் கட்சி ராஜி.
@சாகம்பரி
நீங்கள் சொல்வது சரிதான் சாகம்பரி.
இதற்கான ஸ்டெம் செல் ஆராய்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இதைத் தவிர 'போன் மேரோ ட்ரான்ஸ்ப்லான்டேஷன்' (எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை)
கூட நடை பெறுகிறது.ஆனால் இவற்றில் வெற்றி வாய்ப்பு முப்பது சதவிகிதம் மட்டுமே.
அதுவும் தவிர இந்த சிகிச்சைக்கு உடன் பிறந்தோர் அல்லது மிக நெருங்கிய
உறவினர்களின் ரத்த வகை ஒன்றாக இருத்தல் அவசியம்.அவர்களிடமிருந்துதான்
இந்த எலும்பு மஜ்ஜை எடுக்கப் படுகிறது.அதுவும் பொருந்துதல் அவசியம்.பொருந்திய பின் ஒத்துக் கொள்ளுதல்
அதாவது சிகிச்சை செய்து கொண்டவரின் உடல் அதை ஒத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
இவற்றை எல்லாம் தாண்டிதான் வெற்றி வாய்ப்பு இருக்கிறது.குறைந்தது மூன்று மாத காலமாவது
இன்டென்சிவ் கேர் யூனிட்டில் இருந்த பிந்தான் உறுதியாகக் கூற இயலும்.
சமீபத்தில் "தலசமியா" என்ற ரத்த குறைபாடு உள்ள சிறு பெண்ணிற்கு
டாக்டர் ரேவதி ராஜ் அவர்கள் செய்த ஸ்டெம் செல் சிகிச்சை வெற்றி பெற்றதாக
கேள்வியுற்றேன்.
"தலசமியா" பற்றி மேலும் அறிய எனது இந்த பதிவிற்கு செல்லவும்.
http://suharaji.blogspot.com/2010/12/blog-post.html
என் சொந்தக் கதை இதை விட சோகமானது சகோதரி. தன்னம்பிக்கையும் , இறை நம்பிக்கையும் தான் எங்களை வழி நடத்துகிறது. மருத்துவம் கைவிட்டவர்களையும் கை தூக்கி காப்பற்றும் - நம்பிக்கை . அதைவிட சிறந்த மருந்து உலகில் இல்லை
@சாகம்பரி
ஸ்டெம் செல் பற்றி ஒரு தகவல்.இது நமது வேர் செல்களை
வைத்து செய்யப்படும் ஒரு சிகிச்சை முறையாகும்.இந்த வேர் செல்கள் பெண்களின்
கர்ப்பப் பையில் குழந்தை உருவாகும் பொழுது, கூட உருவாகும் placenta வில் இருந்து
எடுக்கப் பட்டு சிகிச்சைக்கு பயன் படுத்தப் படுகிறது.
தற்போது இந்த வேர் செல்களை placenta விலிருந்து மட்டுமல்லாமல்
பெண்களின் மாத விலக்கு சமயத்தில் வெளியேறும் ரத்தப் போக்கிலிருந்தும்(அதனை உடனடியாக
கிருமிகளற்று சேமித்தல் அவசியம்) எடுக்க இயலும் என்றும் அது இன்னும் பல மடங்கு இம்மாதிரி நோய்களை
குணப் படுத்த வல்லது என்றும் மும்பையை சேர்ந்த டாக்டர் இந்துஜா என்பவர்
தனது ஆராய்ச்சிக் கட்டுரையில் வெளியிட்டுள்ளார்.இந்த ஆராய்ச்சிக் கட்டுரை நடைமுறையில்
வெற்றி பெற்றால் இதனால் பல நோய்களுகுத் தீர்வு கிடைக்கும்.பலரது வாழ்வு காப்பாற்றப்படும்.
நல்ல பொருத்தமான தலைப்பு ராஜி... விஷயம் உள்ள கருப்பொருளும் கூட... இதை பத்தி நான் நெறைய படிச்சு இருக்கேன்... நீங்க விளக்கின விதம் எளிமையா புரியராப்ல இருந்ததுப்பா... நன்றி
@கோபி ராமமூர்த்தி
நீங்கள் சொல்வது சரிதான்
@வை கோபாலகிருஷ்ணன் சார்
//நல்லதாகவே நினைப்போம்//
சரியாக சொன்னீர்கள்.பாராட்டிற்கு நன்றி
@சி பி செந்தில்குமார்
பாராட்டிற்கு நன்றி
அடுத்ததாக ஒரு கோர்ட்டில் நடக்கும் கேசை மையமாக வைத்து
எழுதலாம்னு இருக்கேன்.அப்ப நான் வக்கீல்னு தோணும்னு நினைக்கறேன்
@எல் கே
நன்றி
@கலாநேசன்
கட்டாயம் எழுதுகிறேன் சார்.கொஞ்சம் டைம் வேண்டும்
@ஆர் வி எஸ்
'வாழ்க' என்று வாழ்த்தியமைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி சார்.
@திருமதி பி எஸ் ஸ்ரீதர்
பாராட்டிற்கு நன்றி ஆச்சி.விரைவில்
இசைப்பதிவும் ஒண்ணு போடலாம்னு இருக்கேன் ஆச்சி
@இராஜராஜேஸ்வரி
//நம்பினோர் கெடுவதில்லை//
மிக சரியான கூற்று
@சித்ரா
:-)
@கமலேஷ்
நன்றி
@ஜிஜி
நன்றி
@மாதவி
நன்றி
@சே குமார்
நன்றி
@லக்ஷிமிமா
ஆமாம் லக்ஷ்மிமா
@ரத்னவேல்
நன்றி
@ஸ்ரீஅகிலா
நன்றி
@சிவகுமாரன்
தங்களது சோகம்.துன்பம் எதுவாக இருந்தாலும்
அதிலிருந்து தாங்களும் தங்களை சேர்ந்தவர்களும்
முழுமையாக வெளி வந்து மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும்
வாழ எல்லாம் வல்ல இறைவனைப் ப்ரார்த்திக்கிறேன்.
@அப்பாவி தங்கமணி
கருத்துக்கும் பாராட்டிற்கும் நன்றி புவனா
@ALL
கூட்டுப் பிரார்த்தனைக்குப் பலன் அதிகம்.எனவே
நாம் அனைவரும் இம்மாதிரி பாதிக்கப் பட்டவர்களுக்காகவும்,
திரு சிவகுமாரன் அவர்களின் துன்பம் தீரவும் பிரார்த்திப்போம்
என வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
பலருக்கும் பயனளிக்கக்கூடிய அரிய தகவல்கள் ராஜி!
தற்போது வெளியிட்டிருக்கும் என் பதிவான ‘ நம் உயிர் நம் கையில்’ ப்ளேட்லெட்டுக்கள் குறைவால் ஏற்படும் பாதிப்புக்களை விவரிக்கிறது. உங்கள் பதிவு ப்ளேட்லெட்டுக்கள் அதிகமாயிருப்பதால் ஏற்படும் பாதிப்புகளை விவரிக்கின்றது.
எந்த துன்பமாயிருந்தாயிலும் நோயாக இருந்தாலும் அதிலிருந்து மீண்டு வர மனதளவில் ‘நான் இதிலிருந்து நிச்சயம் மீண்டெழுவேன்’ என்ற தன்னம்பிக்கை அவசியம்.
‘ நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ? ’
இது புகழ்பெற்ற பாடலின் வரிகள் மட்டும்தான்.
நல்லதோர் வீணை என்றுமே இனிய ராகங்களைத்தான் தந்து கொண்டிருக்கும்!
அதற்கு என்றுமே முடிவில்லை!
இது தான் சிறுகதையின் முடிவாக நான் நினைக்கிறேன்!
>>அடுத்ததாக ஒரு கோர்ட்டில் நடக்கும் கேசை மையமாக வைத்து
எழுதலாம்னு இருக்கேன்.அப்ப நான் வக்கீல்னு தோணும்னு நினைக்கறேன்
ஹா ஹா யுவர் ஆனர்.. எதிர்க்கட்சி வக்கீலாக நான் வந்துடறேன்... ஹி ஹி
Anbu Sagodhari, unnudaya march padhivugal anaithaium padithen.Idhigasangalum, Ilakkiyangalum, samoogapaarvayum, yellavatrilum unnudaya tholai nokkupaarvayum, unnudaya arivaattralum yennai viyakka vaikindrana. Unnudaya kadaisi padhivu yennai migavum baadhithadhu. Unnudaya padhivirku vaazhthiya anaivaradhu vaazhthukalum palithu, peran pethiyudan 80 aandugal vaazha vaazhthugiren.
நல்ல தன்னம்பிக்கையூட்டும் கதை.
எலும்பு மஞ்ஞை - ஸ்டெம் செல் - இரத்த சம்பந்தமான சிகிச்சைக்கு
தொப்புள்கொடி - ஸ்டெம் செல் - கல்லீரல் போன்றவற்றிற்கு
எம்ப்ரியோ - ஸ்டெம் செல் - மூளை சம்பந்தபட்ட சிகிச்சைக்கு
பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியிலிருந்து எடுத்த ஸ்டெம் செல் பல வருடங்களுக்கு சேமித்து வைக்க முடியும் . எதிர்கால பிரச்சினையை சரி செய்ய பயன்படும். இந்தியாவிலும் இதற்கான சேமிப்பு நிலையங்கள் உள்ளன.
very informative story with strong message. Faith is god.
தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாக இருந்திருக்கிறார் மஞ்சரி. தெரியாத ஒரு நோயினைப் பற்றி தகவல்கள் தந்ததுக்கும் நன்றி ராஜி.
நம்பிக்கைதானே எல்லாம்! தெம்பூட்டும் ஒரு நல்ல கதை. வார்த்தைப் பிரயோகங்களும் அருமையாக வருகிறது உங்களுக்கு.
Post a Comment