Tuesday, September 6, 2011

இரண்டு காலும் நாலு காலும்

சுய தம்பட்டம் அடிச்சு ரொம்ப நாள்  ஆயிட்டாப்புல ஒரு பீலிங்.அதான் சரி 
நம்ம புராணத்துல ஏதாவது ஒண்ணை எடுத்து விடுவோம்னு இந்த பதிவு.

சின்ன வயசுல எல்லாம் ரொம்ப நாள் வரை எனக்கு தன்னம்பிக்கை அப்டிங்கற
ஒரு சமாசாரமே வாழ்க்கைல கிடையாது (இப்ப மட்டும் ரொம்ப இருந்து  கிழிக்கறாப்லாதான் அப்டின்னு எதுக்கு முணுமுணுக்கறீங்க.நல்லா சத்தமாவே 
சொல்லலாம் :)  )

ப்ளஸ் டூ ல நல்ல மார்க் எடுத்து காலேஜ்ல ப்ரீ சீட் கிடைச்சதால (இந்த
மூஞ்சிக்கெல்லாம் காலேஜ்ல ப்ரீ சீட்டான்னு கேக்கறீங்களா) அப்பா எனக்கு
ஆசையா ஒரு சைக்கிள் வாங்கித் தந்தார்.முதல்ல எனக்கு சைக்கிள் ஓட்ட 
பயமாத்தான் இருந்தது.அப்பறம் அப்படி இப்படின்னு எப்படியோ கத்துக்கிட்டு 
சைக்கிள்ல போக ஆரம்பிச்சேன்.அப்படி போகும்போது ஒரு துரதிர்ஷ்டமான 
வேளையிலே ஒரு வயசான அம்மா சடக்குன்னு குறுக்க வர அவங்க மேலே 
இடிச்சுடப் போறதேன்னு நான் சைக்கிளைத் திருப்ப இதை எதிர்பார்க்காத பக்கத்துல வந்த ஒரு பஜாஜ் சடக் வண்டி,  சடக்குன்னு என் மேல இடிக்க அவ்வளவுதான் .........

வேகமா இடிச்சுட்டதால நான் தள்ளிப் போயி விழுந்துட்டேன்.இடது கை 
பிராக்சர் வித் டிஸ்லோகேஷன் ஆயிடுத்து.வண்டி என்னை இடிச்சதை விட பலமா அப்பா இடிஞ்சு போயிட்டார்.

நேரே என்னை ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி பார்மாலிட்டிஸ்லாம் முடிஞ்சதும் என்னை டெஸ்ட் பண்ணின டாக்டர் இனி எனக்கு கை 
வர வாய்ப்பே இல்லைன்னு தீர்மானமா சொல்லிட்டார்.சிலோன் ரேடியோல 
சொல்ற லிஸ்ட் மாதிரி அப்பா அம்மா அண்ணன் அண்ணி அக்கா அப்படின்னு 
அத்தனை பெரும் (அப்பாடி!இத்தனை அகாரம் போட்டு சொன்னது மூச்சு வாங்குது!!) ஆடிப் போயிட்டாங்க.

எனக்கோ ஒரு பக்கம் வலி உயிர் போகுது.ஒரு வழியா அலோபதி வேண்டாம்னு முடிவு பண்ணி எங்க ஊர் பக்கத்துல இதுக்கெல்லாம் வைத்தியம் பாக்கற எங்களோட ஆஸ்தான வைத்தியரை பார்க்க முடிவு
செஞ்சு ஊருக்குப் போனோம்.அவர் என்னை உக்கார வச்சு கையை இப்பிடி ஒரு
திருப்பு, அப்படி ஒரு திருப்பு. (அப்ப நான் போட்ட சத்தத்துல என்னைப் பிடிச்சுண்டிருந்த இரண்டு அத்திம்பேரும் எந்திரிச்சு ஓடாத குறைதான்)
உடனே கை கொஞ்சம் ஷேப்பா இருக்கற ஒரு பொசிஷனுக்கு வந்தது.அப்பறம் கட்டு போட்டு சரியாக இரண்டு மாசம் ஆச்சு.

இந்த காரணத்தினால எனக்கு ரொம்ப நாள் வரை தெனாலி கமலஹாசன் 
மாதிரி எல்லாத்துக்கும் பயம்தான்.இந்த மாதிரி பயத்துக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கறாப்புல எனக்கு ஒரு நட்பு அமைஞ்சது.

அடி பட்டத்துக்கு அப்பறம் வாசல்ல நின்ன சைக்கிளை நான் தொடவே இல்லை.அப்படிப்பட்ட என்னை வண்டி ஓட்ட கத்துக்கோன்னு என் சிநேகிதி 
கையைப் பிடிச்சு கூட்டிண்டு போயிட்டா.முதல்ல எது ஆக்சிலேட்டர் எது
ப்ரேக்னுலாம் கிளாஸ் எடுத்துட்டு எப்பிடி ஓட்டனும்னுலாம் சொல்லி குடுத்துட்டு,  ம்..எங்க ஒட்டு பாக்கலாம்னு சொல்லிட்டா.

நான் திருதிருன்னு முழிச்சுண்டே ஒரே நடுக்கத்தோட வண்டில உக்காந்து 
ஓட்ட ட்ரை பண்ணினேன்.முதல்ல காலெடுத்து வண்டில வச்சுக்க வரவே இல்லை.வளைஞ்சு நெளிஞ்சு காலால தரையைத் தடவிண்டே ஓட்டினதா 
பேர் பண்ணினேன்.உடனே அவ 'ம்...இன்னிக்கு இது போதும்னு சொன்னா.அப்பாடின்னு இருந்தது

அடுத்த நாளும் வண்டி ஓட்ட கூட்டிண்டு போயிட்டா.இரண்டாவது நாள் 
காலை வண்டில வச்சுக்க வந்துடுத்து.மெதுவா வளைஞ்சு நெளிஞ்சு ஒரு பத்தடி ஓட்டினேன்.பக்கத்துல வந்த பஸ்ஸோட ட்ரைவர் தன் பொன்னான மொழிகளால் வசவு பாடி, 'வந்துட்சு பாரு! வண்டி எட்துக்கினு' என்று அருமையான காம்ப்ளிமென்ட் கொடுத்தார்.

மூன்றாவது நாள் சற்று தைரியம் வந்துவிட பின்னாடி தோழி நடந்து வரும் 
யோசனையற்று கொஞ்சம் வேகமாக ஒட்டிக் கொண்டு சென்று விட்டேன்.
அவள் ரொம்ப தூரம் என்னை காணாமல் பயந்து வழியில் போவோர் வருவோரை எல்லாம் கேட்டுக் கொண்டு வந்திருக்கிறாள்.நானோ நன்றாக ஓட்ட வந்து விட்ட உற்சாகத்தில் வேகமாக ஒட்டிக் கொண்டு போனேன்.

வழியில் ட்ராபிக் கான்ஸ்டபிள் செக்கிங் செய்து கொண்டிருப்பதை பார்த்ததும்தான் நான் ரொம்ப தூரம் வந்து விட்டதை உணர்ந்தேன்.அவ்வளவுதான்.அப்படியே வண்டியை ஓரமாக நிறுத்தி அதன் மேல் சாய்ந்து நின்று கொண்டேன்.நம்ம கிட்டதான் லைசென்ஸ் இல்லையே 
அப்ப.என் சிநேகிதி வந்த பின் நன்றாய் நாலு டோஸ் விட்டாள்.

இப்படியாக டூ வீலர் கற்றுக் கொண்டு அப்பறம் நாலு சக்கர வாகனத்தை மட்டும் சும்மா விடுவானேன்னு அதையும் கத்துக்கிட்டு இன்னிக்கு செருப்பு போடறதுக்கு முன்னாடியே வண்டி சாவியை கை தேடற அளவு ஆகிப் போச்சு.
இப்ப வண்டி இல்லாம முடியாதுங்கற அளவு அது அவசியமான ஒண்ணா ஆயாச்சு.எனக்குள்ள இருந்த பயந்தாங்குளி போயும் ரொம்ப நாள் ஆயிடுத்து.
வாழ்க ஆக்சிலேட்டர்!வளர்க வேகம் (அவ்வப்போது ப்ரேக்குடன்)

23 comments:

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.

RVS said...

பாவம் அந்த ரெண்டு காலும், நாலு காலும்!!

ஒரு சின்ன இன்ஃபர்மேஷன்! எல்லோருமே செருப்பு போடறத்துக்கு முன்னாடியே சாவி தேடுவாங்க!! ஹா..ஹா...

நல்ல சுவையான பதிவு சகோ! :-)

எல் கே said...

எல்லாருமே சைக்கிளி தடுமாறி டூ வீலரில் நிலைபெற்று காரை ஆள்பவர்கள்தான்

Chitra said...

நேரில் இருந்து நீங்கள் பேசுவது போல, கலகலப்பான பதிவு. அசத்திட்டீங்க....

ஆச்சி ஸ்ரீதர் said...

ஓ..உங்களுக்கு காரும் ஓட்டத் தெரியுமா?கலக்குறீங்க ராஜீ.சைக்களில் ஆரம்பிச்சு நாலு சக்கர வாகனம் வரை கத்துக்கிட்டதை பகிர்ந்த விதம் ரசிக்கும்படி உள்ளது.

சுசி said...

அட ! சுய சேதாரத்தோட நிறுத்திகிட்டீங்களா !? வேற யாரையும் பதம் பார்க்கலையா!? என்னங்க நீங்க......அடுத்தவாட்டி வண்டி எடுக்கும் போது மறக்காம try பண்ணுங்க என்ன!

மனோ சாமிநாதன் said...

சிறப்பான பதிவு ராஜி!

பயம் என்பது ஒரு மோசமான அனுபவ‌த்தை அடையும் வரை தான்! அதற்குப்பின் பயமெல்லாம் தெளிந்து தானாகவே தைரியம் வ‌ந்து விடும். எல்லாமே இரு கோடுகள் தத்துவம்தான்!

M.R said...

ஹா ஹா நல்ல அனுபவம் .

Yaathoramani.blogspot.com said...

கல்கண்டில் துவங்கி கணையாழியில்
இப்போது இருக்கிறேன் என எழுத்தாளர்கள் சொல்வார்கள்
அதே போல சைக்கிளில் பழகத் துவங்கி கார்வரை
வந்ததுவரை உள்ள விஷயத்தை மிக மிக சுவாரஸ்யமாக
சொல்லிப் போனது அருமை
மனம் கவர்ந்த பதிவு தொடர வாழ்த்துக்கள்

தி. ரா. ச.(T.R.C.) said...

autobiagraphy part I good. when is next post

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஆணோ பெண்ணோ யாருக்குமே தன்னம்பிக்கை அளிக்கக்கூடிய விஷயம் என்றால் முதலில் சைக்கிள் ஓட்டுவதைத்தான் சொல்ல வேண்டும்.

பிறகு ஸ்கூட்டர்/பைக் அதன் பிறகு கார். கார் ஓட்டுவது கூட, இந்த சைக்கிள் & ஸ்கூட்டர் ஓட்டுவதை விட ஒரு விதத்தில் மிகச்சுலபம் என்றே சொல்லவேண்டும்.

அதில் ரிவர்ஸ் எடுப்பது, நான்கு புறமும் யார் மீதும் இடித்து விடாமல் இருப்பது, கார் ஷெட்டில், இதர பார்க்கிங் இடங்களிலோ கொண்டுபோய் அழகாக கச்சிதமாக அதை பார்க் செய்வது போன்றவற்றில் தான் கொஞ்சம் கஷ்டம் உண்டு. மற்றபடி கார் ஓட்ட பேலன்ஸ் வேண்டியதில்லை. அதுவும் ஆட்டோ கியர் & பவர் ஸ்டெயெரிங் என்றால், இன்னும் வேலை மிகச் சுலபமாகிவிடும்.

சைக்கிள்/ஸ்கூட்டர்/பைக்/கார் ஓட்டக்கற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்குமே இதுபோல எவ்வளவோ முட்டிமோதிய அனுபவங்கள் உண்டு. எனக்கும் நிறைய உண்டு.


இந்த இரண்டு காலும் நாலு காலும் தவிர, சென்னை போன்ற பெரு நகரங்களில், கில்லாடிகளான மூன்று கால் ஓட்டிகள் இருக்கிறார்களே, அவர்களுடனான என் அனுபவங்களை தனியே ஒரு பதிவாகவே போடணும் என்று இருக்கிறேன்.

அதில் பயணம் செய்யும் போது எனக்கு ஏற்படும் திக்..திக்..; நம் உயிர் நம் கையில் இல்லை, கண்ணை மூடிக்கொண்டு, ஹனுமான் ஸ்லோகம் சொல்லிக் கொண்டே செல்வேன். இருப்பினும் சென்னை வந்தால் (ஏன் எங்க ஊரிலுமோ கூட) பஸ்ஸிலோ, எலெக்ட்ரிக் ட்ரைனிலோ, நடந்தோ எங்கும் செல்ல மாட்டேன்.

எக்மோரில் இறங்குவதும் ஏறுவதும் மட்டுமே ரயிலில். மற்றபடி மேற்கு மாம்பலம், T.நகர், வடபழநி, மைலாப்பூர், திருவல்லிக்கேணி, பாடி, வில்லிவாக்கம், சென்ட்ரல்,பெரம்பூர் என்று எந்த இடமானாலும் மூன்று கால் ஆட்டோவிலே தான் பயணிப்பேன்.

திருச்சி-சென்னை-திருச்சி ரயிலுக்கு 500 ரூபாய் பயணச்செலவு என்றால், சென்னையில் உள்ள உறவினர்களை Just flying visit செய்து விட்டு (ஒரு கப் காஃபி சாப்பிட மட்டும்) வர 5000 ரூபாய்க்கு மேல் செலவு செய்ததுண்டு.

ஏதாவது லாட்ஜில் ஏ.ஸி. ரூம் போடுவது, ஹோட்டலில் டிபன் சாப்பாடு முதலியன தனி.

ஒருமுறையல்ல பலமுறை, வடபழநி விஜயா ஹாஸ்பிடலிலிருந்து, நேர் எதிர்புறம் உள்ள ஹோட்டலில் சாப்பிட ஆட்டோவில் ஏறியிருக்கிறேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். அந்த ரோட்டை நடந்து கிராஸ் செய்யவே முடியாது.அவ்வளவு தொடர்ச்சியான வாகன ஓட்டங்கள் இருக்கும். நான் தனியாக வந்தாலாவது கிராஸ் செய்ய முயற்சிக்கலாம். ஒவ்வொரு முறையும் கூடவே வரும் தங்கமணி தவித்துப்போய் விடுவாள் அல்லவா! [என் பயணங்களே அவளுக்காகத் தானே!]

அனுபவப்பதிவை வெகு அழகாக நகைச்சுவையாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
INDLI 4 TO 5; TAMILMANAM ALSO 4/4 TO 5/5. vgk

ADHI VENKAT said...

நல்ல பகிர்வு ராஜி. சைக்கிளில் ஆரம்பித்து கார் வரை வந்தது நல்ல அனுபவம்.

MANO நாஞ்சில் மனோ said...

ஹா ஹா ஹா ஹா கலகல பதிவு சூப்பர் மக்கா....

KParthasarathi said...

நகைச்சுவையுடன் நன்றாக எழுதி உள்ளீர்கள்.மிகவும் ரசித்தேன்

சாந்தி மாரியப்பன் said...

நல்ல கலகலப்பான அனுபவம்தான்.

ரிஷபன் said...

வண்டி ஓட்டக் கற்றுக் கொள்ளும் தினங்கள் வாழ்நாள் முழுவதும் நினைத்து நினைத்து ரசிக்கக் கூடியவை.
அப்படியே பேசும் தொனியில் எழுதி நன்றாகவே ரசிக்க வைத்து விட்டீர்கள்.

குறையொன்றுமில்லை. said...

ஆஹா நல்ல பதிவு, நான் 55 வயதில் கார் ஓட்டக்கத்துண்டப்போ எனக்கு ஆர்வம் மட்டும்தான் இருந்தது.கத்துக்கொடுக்கரவருக்குதான் பய்ம் இருந்தது. இந்த வயசுக்கு காரோட்ட எதுக்கு வ்ரீங்கன்னு கடுப்படிப்பார்.இன்னிக்கு இந்த பாம்பே ட்ராபிக்ல கூட ஈசியா ட்ரைவ் பண்ணமுடியுது.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

தாமதமாய் வந்ததற்கு மன்னிக்கவும். சுவையாக சொல்லி இருக்கிறாய். எனக்கு இந்த விஷயத்தில் இன்னமும் பயம் விட்ட பாடில்லை. ரெண்டு காலும் தெரியாது. நாலு காலும் தெரியாது. சைக்கிளுக்கே டிரைவர் வைத்துக்கொண்டவளாக்கும் நான். வேறு யார் என் கணவர்தான்.

raji said...

@Rathnavel

நன்றி

@ ஆர் வி எஸ்
ஹா ஹா....சூப்பர் ஜோக்

@எல் கே

ஆமாம் சார்

@சித்ரா

நன்றி சித்ரா

@ஆச்சி

நன்றி

@தானைத் தலைவி

செஞ்சுட்டா போச்சு.ஒரு டவுட்டு வழில நீங்க வருவீங்களா? :-))

@மனோ மேடம்

சரியா சொன்னீங்க மேடம்

@எம் ஆர்

நன்றி

@ரமணி சார்

நீங்கள் தரும் ஊக்கம்தான் சார்

@தி ரா ச
சீக்கிரமே போட்டுடலாம்

@வை கோபாலகிருஷ்ணன் சார்

காரைப் பத்தின விஷயங்களை ரொம்ப கரெக்டா சொல்லிருக்கீங்க.

//ஒவ்வொரு முறையும் கூடவே வரும் தங்கமணி தவித்துப்போய் விடுவாள் அல்லவா//

தங்கமணி மேல இப்பிடி அன்பு வச்சுருக்கற உங்களைப் போன்ற ரங்கமணிகள் எல்லாம் வாழ்க!

@கோவை2தில்லி

நன்றி

@நாஞ்சில் மனோ

நன்றி

@KParthasarathi

நன்றி

@அமைதிச்சாரல்

ரசித்துப் படித்ததற்கு நன்றி சாரல்

@ரிஷபன்


நன்றி சார்

@லக்ஷ்மிமா
நீங்க வயசுல பெரியவங்க அதனால நான் உங்களை பாராட்டலாமான்னு தெரியலை
இருந்தாலும் எதைக் கத்துக்கவும் வயசு தடை இல்லைனு நீங்க நிருபிச்சுட்டீங்க


@வித்யா சுப்ரமணியம் மேடம்

தயவு செய்து மன்னிப்பு போன்ற பெரிய வார்த்தைகள் என்னிடத்தில் வேண்டாமே.

ரசித்ததற்கு நன்றி

ஒரு பயமும் இல்லை மேடம்.கத்துண்டா ஈசிதான்.பொண்ணுகிட்ட கத்துக்கோங்க.

ஆனாலும் சைக்கிளுக்கு ட்ரைவர் வச்சுருந்தது சூப்பர்தான்.
இதை ஒரு பதிவா போடுங்களேன்.நாங்களும் ரசிப்போம் இல்லையா.

ஹ ர ணி said...

வாழ்வின் தொடக்கத்திலிருந்தே நமக்கு நம்பிக்கைதான் எல்லாவற்றையும் கற்றுத்தருகிறது. அது நம்பிக்கைதான் அடையாளப்படுத்தறதுக்குள்ளே பலரது வாழ்க்கை முடிந்தே போயிடுது. உங்களோட பதிவு அவங்கஅவங்க சைக்கிள் மற்றும் டூவீலர் கற்றுக்கொண்ட காலத்திற்குக் கொண்டுபோய்விட்டுவிட்டது. நேரில் காட்சிப்படுத்தியது போன்ற பதிவு. சொல்லுகிற முறை அசத்துகிறது. அனுபவமாக இருந்தாலும் கதையாக இருந்தாலும் சொல்லுவது ஒரு கலை. கைவந்திருக்கிறது உங்களுக்கு வாழ்த்துக்கள்.

சி.பி.செந்தில்குமார் said...

>>சுய தம்பட்டம் அடிச்சு ரொம்ப நாள் ஆயிட்டாப்புல ஒரு பீலிங்.அதான் சரி
நம்ம புராணத்துல ஏதாவது ஒண்ணை எடுத்து விடுவோம்னு இந்த பதிவு

. ராஜியாணம்??????

சி.பி.செந்தில்குமார் said...

>>
நான் திருதிருன்னு முழிச்சுண்டே

திருமதி திருமதி ன்னு முழிச்சுண்டே??

சி.பி.செந்தில்குமார் said...

>>>>இப்ப வண்டி இல்லாம முடியாதுங்கற அளவு அது அவசியமான ஒண்ணா ஆயாச்சு.எனக்குள்ள இருந்த பயந்தாங்குளி போயும் ரொம்ப நாள் ஆயிடுத்து.
வாழ்க ஆக்சிலேட்டர்!வளர்க வேகம் (அவ்வப்போது ப்ரேக்குடன்)

இதனால ராஜி சொல்ல வர்றது என்னான்னா மேடம்க்கு கார் ஓட்ட தெரியும்ங்க சாமியோவ்

Post a Comment